அம்மா
இரவே சர்ப்ரைஸாக செய்து வைத்திருக்கும் இனிப்புடன், இரவே வைத்துக் கொண்ட மருதாணிக்
கைகளுடன் தான் விடியும் என் பிறந்த நாட்கள். புத்தாடை வருடத்துக்கு ஒன்றே! அதுவும்
தீபாவளிக்கே! புத்தாடை இல்லையென்றாலும் என் மகிழ்ச்சிக்கு குறைவு இருந்ததில்லை :)
இருக்கும்
உடைகளில் நல்லதாக அணிந்து கொண்டு, அம்மா கொடுத்தனுப்பும் இரண்டு ரூபாயை எடுத்துக் கொண்டு
பக்கத்து பிள்ளையார் கோவிலுக்குச் செல்வேன். அங்கே அர்ச்சனையை முடித்துக் கொண்டு வீட்டுக்கு
வந்ததும் அக்கம் பக்கத்தினருக்கும், பள்ளியிலிருக்கும் சக மாணவர்களுக்கும் சாக்லேட்டுகள்
விநியோகம்.
இப்படியாக
இருந்த பிறந்தநாட்கள் சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் மாற்றம் கண்டது. திருமணமானதும் கணவரின்
வாழ்த்தே முதல் வாழ்த்தாக மாறியது. புகுந்த வீட்டினரின் வாழ்த்துகளும் அலைபேசி வழியே
கிடைத்தது. மகள் பிறந்து பேசத் துவங்கியதும் அவளின் வாழ்த்து அமிர்தமாய் இருந்தது.
இணையத்தில்
எழுதத் துவங்கிய நாள் முதலாய் நட்புக்களின் வாழ்த்துகளும் நெஞ்சை நிறைக்கிறது.
பரிசுகளும்
அவ்வப்போது மனதை மகிழ்ச்சி கொள்ளச் செய்கிறது. இம்முறை பிறந்த நாளுக்காக கணவர் புடவை
எடுத்துக் கொள்ளச் சொன்னதும், மகள் தன் சேமிப்பிலிருந்து புடவை வாங்கித் தந்ததும் மகிழ்ச்சியை
தந்தது.
ஒவ்வொரு
வருடமும் கடக்கும் போதும் வயதும் கூடிக் கொண்டே தான் போகிறது. கேசத்தில் ஆங்காங்கே
எட்டிப் பார்க்கும் வெள்ளிக் கம்பிகள் :) எனக்கான பொறுப்புகள், கடமைகள், விருப்பு,
வெறுப்புகள் எல்லாவற்றையும் நினைவூட்டுகின்றன. மனதை பக்குவப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
அம்மாவும்,
அப்பாவும் என்னால் பெருமை கொண்டார்களா?? கணவரை இத்தனை வருடங்களில் தொல்லை எதுவும் தராமல்,
இருப்பதை வைத்து குடித்தனம் செய்கின்றேனா? மகளுக்கு அம்மா என்ற முறையில் என் கடமைகளை
சரிவர செய்கின்றேனா? என்று என்னை நானே கேள்விகள் கேட்டுக் கொள்கிறேன்.
படித்திருந்தும்
குடும்பம், குழந்தை என்று முழுதாக செலவிட்டதால் வேலைக்கு செல்ல முடியவில்லை, எனக்கான
அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை என்ற வருத்தம் உண்டு. ஆனால் சமுதாயத்திற்க்கு
என்னால் ஆன பங்களிப்பை தர வேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே உண்டு.
அப்பா
அம்மாவின் ஆசிகளுடன், உடல் ஆரோக்கியமும், மன பலமும் தர இறைவனை அனுதினமும் பிரார்த்திக்கிறேன்.
இந்த
நாளை இனிய நாளாக்கி, முகநூலில் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த
நன்றிகள்.
நட்புடன்
ஆதி
வெங்கட்
பின்
குறிப்பு: இன்றைக்கு நம் சக பதிவர் இன்னும் ஒருவருக்கும் பிறந்த நாள்!
இன்று பிறந்த
நாள் காணும் நண்பர் தில்லையகத்து துளசிதரன் அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள்
வாழ்த்துகள். இன்று போல் என்றும் இனிதாக அமைந்திட எனது பிரார்த்தனைகள்.... –
வெங்கட், புது தில்லி.
ஆதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குமகள் சேமிப்பிலிருந்து புடவை வாங்கி கொடுத்தது மகிழ்ச்சி.
//அப்பா அம்மாவின் ஆசிகளுடன், உடல் ஆரோக்கியமும், மன பலமும் தர இறைவனை அனுதினமும் பிரார்த்திக்கிறேன்.//
இறைவன் அருள்வார் ஆதி.
சகோ துளசிதரன் அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள் ! வாழ்க வளமுடன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
நீக்குமகள் சேமிப்பில் கிஃப்ட் ..படிக்க சந்தோஷமா இருக்கு . அன்பான குட்டி மகளுக்கு ஆசீர்வாதங்கள் மற்றும் பாராட்டுக்கள் .
பதிலளிநீக்குஇனிய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆதி .
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏஞ்சல்.
நீக்குதுளசிதரன் அண்ணாவுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏஞ்சல்.
நீக்குவணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஇன்று இனிய பிறந்த நாள் கண்ட தங்களுக்கு என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஆமாம்.! அப்போதெல்லாம் தீபாவளிக்குதான், வருடத்துக்கு ஒரு முறைதான் நமக்கு புது உடைகள் கிடைக்கும். அதனால்தான் அந்த தீபாவளி நாட்கள் நன்றாக இனித்தது என நான் நினைக்கிறேன். அப்போதிருந்த ஒரு சுவாரஸ்யம் இப்போது வருகின்ற பண்டிகைகளில் தென்படவில்லை. இந்த வருடம் தங்கள் மகள் கைகளினால் புடவை வாங்கி தந்தது மிகவும் மகிழ்வான விஷயம்.தங்களுக்கும் மிகுந்த மகிழ்வை தந்திருக்கும். தங்கள் மகள் ரோஷிணிக்கும் மனமார்ந்த பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள்.
இந்த நாளில் பிறந்த நாள் கண்ட நம் சகோதரர் துளசிதரன் அவர்களுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!
நீக்குஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆதி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.
நீக்குஆதி இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குநேற்று வேறு சில பணிகள் வந்துவிட்டதால் பார்க்காமல் விட்டிருக்கிறேன் ஆதி! ஸாரி தாமதமாகிவிட்டது. பரவாயில்லிய எல்லா நாளும் பிறந்தநாள்தானே!.
துளசியிடம் சொல்லுகிறேன். அவர் சார்பில் நான் உங்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
எனக்கான அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை என்ற வருத்தம் உண்டு. // எனக்கும் இந்த வருத்தம் நிறையவே உண்டு. இருந்தாலும் சந்தோஷம்தானே முக்கியம் என்று மனதைப் பக்குவப்படுத்திக் கொண்டுவிட்டேன்!!!
கீதா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!
நீக்குமகள் ரோஷிணிக்குட்டியின் சேமிப்பில் பரிசு!! எத்தனை மகிழ்வான விஷயம்!!! ரோஷினிக்குட்டிக்கு வாழ்த்துகள்! காட் ப்ளெஸ்!
பதிலளிநீக்குகீதா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!
நீக்குஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆதி!
பதிலளிநீக்குபிறந்த நாள் வாழ்த்துக்கள் துளசி சார்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன் ஜி!
நீக்குசகோதரர் துளசிதரனுக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.
நீக்குநம் உறவுகள் நம் பிறந்த தினத்தை நினைவில் வைத்து வாழ்த்தினால் பெரு மகிழ்ச்சிதான்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
நீக்குரோஷ்ணிக்கு வாழ்த்துகள். பணம் சேர்த்து அம்மாவுக்குப் பரிசு வாங்கிக் கொடுத்ததுக்கு. இனிய தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள். ஆசிகள். இந்த முறையாவது வெங்கட் நினைவு வைத்துக் கொண்டு வாழ்த்தினாரா? :)))))
பதிலளிநீக்குதிரு துளசிதரனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
நீக்குஅண்ணிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்,
பதிலளிநீக்குஇருவருக்கும் முகநூலில் வாழ்த்து சொன்னேன். இங்க இப்பதான்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.
நீக்குகொஞ்சம் தாமதமான வாழ்த்து ...
பதிலளிநீக்குஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆதி..
மற்றும் துளசி சார்.....
என்றும் தங்கள் நாட்கள் மகிழ்வுடன் அமையட்டும் ...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!
நீக்கு