செவ்வாய், 12 மார்ச், 2019

கதம்பம் – ஃப்ரூட் புட்டிங் – நாளும் தாம்பூலம் – மெஹந்தி – அஞ்சாங்கல் ஆட்டம்



சாப்பிட வாங்க – ஃப்ரூட் புட்டிங் – 8 மார்ச் 2019



மகளிர் தினம் ஸ்பெஷலாகச் செய்த ஃப்ரூட் புட்டிங்…. சாப்பிடலாம் வாங்க!
 
365 – மார்க் நினைவுபடுத்திய விஷயம் – 10 மார்ச் 2019



இன்று தோழியின் வீட்டில் வைபவ லஷ்மி பூஜை செய்து சாப்பிட அழைத்திருக்கிறார்கள். அழைக்க வரும் போதே என்ன பூஜை என்று முதலில் பாய்ந்து கொண்டு கேட்டுவிட்டேன். ஏனென்றால் அதற்கு ஒரு காரணமும் உண்டு.

எத்தனையோ வீடுகளில் தாம்பூலம் வாங்கிக் கொண்டிருக்கிறேன். ஆனால் தில்லியில் ஒருவர் வீட்டுக்கு தாம்பூலம் வாங்கிக் கொள்ள சென்றது. மறக்க இயலாது. சிரிப்பையும் அடக்க இயலாது. அந்த பெண்மணிக்கு ஒரு பழக்கம், தினமும் ஒருவருக்காவது தாம்பூலம் தருவது போலும். தலைப்பின் காரணம் உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும்.

நான் அப்போது பிரசவம் முடிந்து மகளை மூன்றரை மாத குழந்தையாக தில்லிக்கு எடுத்துச் சென்றிருக்கிறேன். என்னையும் குழந்தையையும் கொண்டு விட என் மாமனாரும் மாமியாரும் வந்திருந்தார்கள். என்னையும் மாமியாரையும் தாம்பூலம் வாங்கிக் கொள்ள அழைப்பு விடுத்தார் அந்தப் பெண்மணி. என்ன பூஜை?? எதற்காக என்று ஒன்றும் சொல்லவில்லை!!! நாங்களும் ஒருநாள் செல்ல, பின்னியிருந்த எங்களின் தலை முடியை அவிழ்த்து அவரே பின்னி விட்டு, கண்களில் புணுகு என்னும் வஸ்துவை வைத்து, இன்னும் பல சடங்குகள், பின்பு தாம்பூலம் தந்து கூடவே இரண்டிரண்டு ஊதுபத்திகளும், ஆளுக்கொரு ஒரு தம்ளர் பாலும்!! வீட்டிற்கு எடுத்துப் போய் கணவனிடம் தந்து தானும் பருகும் படி!!!

என் மாமியார் பாவம்!! அவரிடம் மாட்டிக் கொண்டு எல்லாவற்றையும் செய்து கொண்டார். நான் குழந்தை அழும் என்ற காரணத்தை காட்டி, ஒருசிலவற்றிலிருந்து தப்பித்துக் கொண்டேன். வீட்டிற்கு வந்த பின்பு இருவரும் என்னவரிடம் நன்கு வாங்கிக் கட்டிக் கொண்டோம். அதன் பின்பு அந்தப் பெண்மணியை எங்கு பார்த்தாலும் தலை தெறிக்க ஓட்டம் தான். சில மாதங்களுக்கு முன்னால் அவரை திருவரங்கத்தில் பார்த்து பயந்து போய் ஒளிந்து கொண்டேன்.

மாமியாரிடம் பார்த்ததைப் பற்றிச் சொல்ல, "ஐயோ!! என்னால ஆகாதுடிம்மா!! கண்களில் காட்ராக்ட் பண்ணிண்டாச்சு" என்றார்.

கல்யாண வரவேற்பு – 8 மார்ச் 2019



நேற்று நட்புவட்டத்தில் ஒரு திருமண வரவேற்பு! அவர்களது பக்கத்து வீட்டில் மூன்று வருட வாசம். கொடுக்கல், வாங்கல் மற்றும் அன்பு பரிமாற்றங்கள். வீட்டிற்கு வந்து அழைப்பிதழ் கொடுத்து விட்டுச் சென்றார்கள்.

நான் போட்டுக் கொடுத்த தேநீரிலும் "இன்னும் கொஞ்சம் சர்க்கரைப் போடுங்க புவனா!" டப்பா எது?? நானே போட்டுக்கறேன்! நான் கொஞ்சம் தூக்கலா சர்க்கரை போட்டுப்பேன்னு மறந்திடுச்சா!! என்று உரிமையுடன் உரையாடல்.

என் புத்தக வாசிப்பிற்கு வித்திட்டவர். போட்டி போட்டுக் கொண்டு புத்தகங்களை பரிமாறி வாசித்திருக்கிறோம். என்னிடமிருந்து அவரும் அவர்களிடமிருந்து நானும் கற்றுக் கொண்டது ஏராளம்.

அவர்களது மகளுக்குத் தான் திருமணம். அவளை எனக்கு மிகவும் பிடிக்கும். அன்பான, அடக்கமான, புத்திசாலிப் பெண். கல்லூரியில் படித்த போதும் எந்த பந்தாவும் இருக்காது. ஆடம்பரங்களை விரும்ப மாட்டாள். எல்லோரிடமும் மரியாதை. நன்றாகப் படித்தாள், நல்ல வேலைக்கு தேர்வானாள். சில காலம் பணிபுரிந்து தன் குடும்பத்தை முன்னேற்றி, இன்று திருமணம் செய்து கொண்டிருக்கிறாள்.

மணமேடையில் நின்ற போதும் எங்களுடன் அன்புடன் பேசினாள். புகைப்படம் எடுத்துக் கொள்ள நிற்கச் சொன்னாள். அன்பளிப்பை கொடுத்து விட்டு வாழ்த்தி உணவருந்தச் சென்றேன்.

விடைபெறும் போது அங்கு தந்த துளசிச் செடிகளை இன்று வாட்ச்மேனிடம் கொடுத்து ஊன்றி விடச் சொன்னேன்.

இன்று திருமண வாழ்வில் இணைந்துள்ள அபிநயாவுக்கும் அகிலனுக்கும் எல்லா நலனும் வளமும் கிடைக்கப் பெறட்டும்.

பி.கு.... மெனு என்னவென்று சொல்லாமல் விட்டுவிட்டால் என் ஜென்மம் சாபல்யம் அடையாது! குலாப்ஜாமூன், அசோகா ஹல்வா, ஊத்தாப்பம் சட்னி சாம்பாருடன், சப்பாத்தி சன்னா மசாலா, வெஜிடபுள் புலாவ் வெங்காய தயிர்பச்சடியுடன், அடை அவியலுடன், குழிப்பணியாரம் மற்றும் தயிர்சாதம்.  மாலை வரவேற்புக்கு சென்ற உடனே வெயிலுக்கு இதமாய் தர்பூசணி ஜூஸ் தரப்பட்டது.

ஐந்தாங்கல் ஆட்டம் – 9 மார்ச் 2019



நேற்று பெரிய மாமியார் வீட்டிற்குச் சென்ற போது ஆடிய ஐந்தாங்கல் ஆட்டம்! – எத்தனை வருடம் ஆகிவிட்டது. இந்த விளையாட்டெல்ல்லாம் போயே போச்! Its gone!

ரோஷ்ணி கார்னர் – மெஹந்தி – 10 மார்ச் 2019



மகள் தன் கையில் போட்டுக் கொண்டது!! நன்றாக இருக்கிறதா???


என்ன நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட கதம்பம் பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்....

நட்புடன்

ஆதி வெங்கட்

42 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    இப்பதான் காபி சாப்பிட்டிருக்கேன். ப்ரூட் புடிங் கொஞ்ச நேரம் கழித்து எடுத்துக் கொள்கிறேன்!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம்.

      ஹாஹா... பரவாயில்லை. பொறுமையாக எடுத்துக் கொள்ளலாம்! படத்திலிருந்து எடுத்தால் ஃப்ரூட் புட்டிங் குறையவா போகிறது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. தாம்பூலம் வாங்கும் கதை புன்னகைக்க வைக்கிறது. என்னென்ன வழக்கங்கள் வைத்திருக்கிறார்கள்... சொல்லியாவது அழைக்கவேண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எத்தனை எத்தனை வழக்கங்கள்.... சொல்லி அழைத்திருந்தால் பரவாயில்லை. ஆனால் இத்தனையும் சொன்னால் வர மாட்டார்கள் என்று எண்ணியிருக்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. திருமண நிகழ்வு முகநூலில் படித்தேன். ஐந்தாங்கல் ஆட்டம் கேள்விப்பட்டதில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏழாங்கல் மாதிரியே ஐந்தாங்கல். இதற்கெல்லாம் பாட்டு கூட உண்டு. முன்பொரு பதிவில் எழுதி இருக்கிறேன்...

      http://venkatnagaraj.blogspot.com/2016/09/blog-post_20.html

      நீங்களும் அந்தப் பதிவில் கருத்து சொல்லி இருக்கிறீர்கள்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. அழகான ஃப்ரூட் புட்டிங்கோடு வரவேற்பு...

    இனிய காலை வணக்கம் ஆதி அண்ட் வெங்கட்ஜி!!!

    இப்பல்லாம் ஸ்ரீராம் ஓடி வந்துவிடுகிறார்!!! ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கீதா ஜி.

      ஸ்ரீராம் ஓடி வந்து விடுகிறார். ஹாஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. மகிழ்ச்சி...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. மெஹந்தி அணிந்த கைகள்... ரசித்தேன். முகநூலிலும் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மெஹந்தி அணிந்த கைகள் - ரசித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. தில்லி தாம்பூலம் ஹா ஹா ஹா ஹா ஹ கடைசி வரை சிரித்து முடியலை!! எனக்கும் இப்படியானவை எலலம் அலர்ஜிதான். அது போல தாம்பூலத்தில் சிலர் பணம் வைத்துக் கொடுப்பதும் கிஃப்ட் எதுவும் மனம் ஏற்பதில்லை என்பதால் பொலைட்டாக மறுப்பது வழக்கம். வாங்கிக் கொள்ள மாட்டேன்..சில இடங்களில் தவிர்க்க முடியாமல் ஆகிவிடுவதும் உண்டு....தாம்பூலம் மட்டும் எடுத்துக் கொள்வேன்...அதற்காகவே பல சமயங்களில் கஷ்டமாக இருக்கும்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த நிகழ்வு நடந்த அன்றைக்கு நாங்களும் ரொம்ப நேரம் சிரித்துக் கொண்டிருந்தோம். அதுவும் அம்மா தனக்கு அலங்காரம் செய்ததைச் சொல்லிச் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார்.

      தாம்பூலம் கொடுப்பதும் வாங்கிக் கொள்வதும் தவறல்ல. ஆனால் எதற்கும் ஒரு முறை இருக்கிறதே. அதைத் தவறிச் செய்யும்போது தான் பிரச்சனை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  7. திருமண மெனு அம்மாடியொவ்!!! நிறைய இருக்கே...

    அஞ்சுகல் ஆட்டாம் பழைய நினைவுகள் மீக்கு..

    மெஹந்தி வாவ் சூப்பரா இருக்கு ரோஷினிக் குட்டி கலக்குகிறார்!!! ப்ரொஃபெஷனலா போடறாரே...வாழ்த்துகள் பாராட்டுகள்! சொல்லிடுங்க!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருமண மெனு - இப்போதெல்லாம் ரொம்பவே அதிகமாக இருக்கிறது. அளவாக இருந்தால் ரசித்து ருசிக்கலாம்! எல்லாவற்றையும் சாப்பிடப் பிடிப்பதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  8. இன்றைய கதம்பம் அருமை... அருமை...

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  9. அருமையான கதம்பம். தெலுங்கு, கன்னடக்காரர்கள் இம்மாதிரி அழைத்து உபசரித்துத் தாம்பூலம் தருவார்கள். இதை ஏற்கெனவே சொல்லி இருக்கேனோ? நினைவில் இல்லை. ஃப்ரூட் புட்டிங்க், ரிசப்ஷன் சாப்பாடெல்லாம் ஏற்கெனவே சாப்பிட்டாச்சு! மெஹந்தி டிசைன் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். ஏற்கனவே முகநூலில் வந்தது தானே....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  10. தாம்பூலப் பெண்மணி சிரிக்க வைத்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  11. கதம்பம் ரசிக்கும்படி இருந்தது. ரோஷ்ணியின் மெஹந்தி சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி!

      நீக்கு
  12. கதம்பம் அருமை
    மனமக்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  13. அனைத்தும் அருமை.
    கண்ணில் மை வைத்து தாம்பூலம் இப்போதுதான் கேள்வி படுகிறேன்.
    துளசி செடி கல்யாணவீட்டில் கொடுத்தது அருமை.
    ரோஷ்ணியின் கை வண்ணம் அருமை.
    7 கல் விளையாடுவோம். ஐந்து கல்லும் விளையாடுவார்கள் போலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐந்தாங்கல்லும் விளையாடுவதுண்டும்மா... சிறு வயதில் அம்மா, சகோதரிகளுடன் நானும் விளையாடி இருக்கிறேன்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  14. பதில்கள்
    1. அருமையான மெனு - ஆனால் கொஞ்சம் அதிகமான மெனு! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  15. மெனு என்னன்னு சொல்லலைனா எனக்கும் ஒரே நினைப்பா இருந்திருக்கும். நல்லவேளை எழுதிட்டீங்க (வெங்கட் பங்கலா ஸ்வீட்ஸ்ல என்ன சாப்பிட்டேன் என்று சொல்ல மறந்ததைப் போல் இல்லாமல்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பங்களா ஸ்வீட்ஸ் மெனு! :) இரண்டு நான், கொஞ்சம் புலாவ், தால் மக்கனி, ஷாஹி பனீர், பூந்தி ராய்த்தா, மிக்ஸ் வெஜிடபிள் சப்ஜி, சலாட் மற்றும் ஒரு குலோப்ஜாமூன்! ஸ்பெஷல் தாலி! விலை 180 ரூபாய் + வரிகள்!

      உங்களுக்காகவே இங்கே சொல்லி விட்டேன்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  16. மெஹந்தி முழுசா பதியறதுக்கு முன்னாலயே அலம்பிவிட்ட மாதிரி இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மெஹந்தி - கோன்களில் போடும்போது பதிவதில்லை. சிலரின் கை வாகும் அப்படி இருக்கும்! ஒரு சிலருக்கு ரொம்பவே கருப்பாகி விடுவதுண்டு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  17. முகப்பு படம் வெகு அழகு ...அன்றே கூற மறந்தேன்


    மகிழ்ச்சியான கதம்பம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகப்பு படம் - நீங்களும் ரசித்ததில் மகிழ்ச்சி. கீதாஜி மற்றும் உங்களைத் தவிர வேறு யாருமே இது வரை இந்த முகப்புப் படம் பற்றிச் சொல்லவில்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார்.

      நீக்கு

  18. கதம்பம் அருமை
    மனமக்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை. மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

      நீக்கு
  19. திருமணச் சடங்குகளில் இபோதெல்லாம்மெஹந்தி இடுவதுதவிர்க்க முடியாததாகி இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மெஹந்தி இடுவதற்கெனவே வட இந்தியாவில் கல்யாணத்திற்கு முன்னர் ஒரு விழா உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  20. அந்த தாம்பூல பெண்மணியின் செயல் சிரிப்பை வரவழைத்தது. பின்னிட்டாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னிட்டாங்க! :))))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....