ஞாயிறு, 3 மார்ச், 2019

ஐம்புலன்களுக்கு விருந்து – நிழற்பட உலா - பகுதி இரண்டு




சென்ற ஞாயிறன்று தலைநகரின் சாகேத் பகுதியில் உள்ள பூங்காவில் [Garden of Five Senses] நடந்த தோட்டத் திருவிழா சென்ற போது எடுத்த நிழற்படங்களின் முதல் பகுதியாக பதினைந்து நிழற்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டது நினைவில் இருக்கலாம். அந்தப் பதிவினைப் பார்க்காதவர்கள் சென்ற ஞாயிறு வெளியிட்ட பதிவினை இங்கே பார்க்கலாம்! அதன் பிறகு இந்தப் பதிவில் வெளியிட்ட நிழற்படங்களையும் ரசிக்கலாம்! படங்களைப் பார்ப்பதற்கு முன்னர் தலைநகர் பூங்காக்கள் பற்றிய ஒரு தகவல்….


தில்லியில் நிறையவே பூங்காக்கள் உண்டு. அழகாகவும் பராமரிக்கிறார்கள். ஆனால் இங்கே ஒரு தொல்லை என்னவென்றால் குடும்பத்துடன் பூங்காவிற்குச் செல்வதென்றால் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கிறது. தோட்டத் திருவிழா நடந்த பூங்காவிலும் அப்படித்தான். பூங்காவின் உள்ளே சில இடங்களில் “Please maintain decency in the park” என்ற பதாகைகள் வைக்கும் அளவிற்கு நடந்து கொள்கிறார்கள்.  தோட்டத் திருவிழா நடந்த சமயத்தில், திருவிழாவினைக் காண நிறைய மக்கள் கூட்டம் இருந்தது. அதற்கு நடுவிலும், சில ஜோடிகள் தங்கள் லீலைகளை நடத்திக் கொண்டிருந்தார்கள் – ஐம்புலன்களுக்கு விருந்து என்பதை தப்பாக புரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு – ஒரே ”இச் இச்” சப்தம்!

கைகளில் காமிராவுடன் பூக்களை படம் எடுக்கப் போனால், ஒரு ஜோடி எங்களை முறைக்க, நானும் பத்மநாபன் அண்ணாச்சியும் தமிழில் பேசியது கேட்டு ‘கோவிந்த்சாமி, ராம்சாமி” என்று கிண்டல் செய்தார் ஒருவர்! எனக்குத் தெரிந்த வசை மொழிகளை உதிர்த்து நகர வேண்டியிருந்தது! அது சரி நாங்கள் அவர்களுக்குத் தொந்தரவாக இருந்தால் கோபம் வரத்தானே செய்யும்! பூங்காவில் திருவிழா நடந்த இடங்களில் மட்டும் பார்த்து, பூங்காவின் மற்ற பகுதிகளைத் தவிர்ப்பது தான் நல்லது! திருவிழா எல்லா நாட்களிலும் இல்லை என்பதால் பூங்காவிற்கு குழந்தைகளுடன் செல்வதைத் தவிர்ப்பது நலம்! அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு யார் பதில் சொல்வது!





























வழக்கம் போல, பூக்களையும் இசைக் கலைஞர்களையும், படம் எடுத்துக் கொண்டு அங்கே இருந்த உணவுக் கடையில் ஒரு தேநீரும், சூர்மா லட்டுவும் வாங்கிச் சாப்பிட்டோம். இனிப்பில் சூர்மா லட்டு மட்டுமே இருந்தது. இல்லையென்றால் குல்ஃபி! குளிரில் குல்ஃபி வேண்டாம் என லட்டு! நன்றாகவே இருந்தது. ஐம்புலன்களுக்குக் கிடைத்த விருந்தினை ரசித்து, நானும் நண்பரும் அங்கிருந்து புறப்பட்டோம். 

என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் நிழற்பட உலா உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில நிழற்படங்களோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

28 கருத்துகள்:

  1. மகிழ்வான காலை வணக்கம் வெங்கட்ஜி!

    படங்கள் செமையா இருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்வான வணக்கம் கீதா ஜி!...

      படங்கள் ரசித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  2. கடைசிப் படம் அந்த வண்டு உள்ளே இருப்பது ரொம்ப அழகாக இருக்கிறது...

    அதற்கு முந்தைய படம் அந்தக் குவிந்திருக்கும் பூ மொட்டும் அழகு...

    அதற்கும் மேல் அந்த டெலியாவில் ஒரு சின்ன வண்டு/பெரிய ஈ? இருப்பதும் செமையா இருக்கு...

    சூரியகாந்தி போன்று இருப்பதில் நுனி குச்சி குச்சியாக இதழ்கள் வாவ் என்ன அழகு!

    எல்லாமே மனதைக் கொள்ளை கொள்ளுகிறது. இயற்கை இயற்கைதான்...

    படங்கள் அனைத்தும் அழகு!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா படங்களையும் ரசித்து சில படங்கள் பற்றிய உங்கள் எண்ணங்களைச் சொன்னதில் மகிழ்ச்சி.

      இயற்கையை அடித்துக் கொள்ள ஏதுமில்லை இங்கே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  3. குட்மார்னிங் வெங்கட்.

    பதாகைகள் வைக்கவேண்டிய அளவுக்கு ஜோடி ஜோடியாக... நான் நம்ப மாட்டேன். நீங்கள் பொய் சொல்கிறீர்கள்! படம் எடுத்துக் போட்டிருந்தால்தான் நம்பி இருப்பேன்!!!!!

    ஹிஹிஹி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம்.

      //படம் எடுத்துப் போட்டிருந்தால் தான் நம்பி இருப்பேன்!// ஹாஹா... எனக்கும் அண்ணாச்சிக்கும் நல்ல பூஜை கிடைத்திருக்கும்! ஜோடிகள் எண்ணிக்கை அதிகம்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. எல்லாப் பூக்களின் படங்களும் துல்லியம், அழகு. கடைசிப்பூப்படம் வெகு அழகு. இரண்டாவதும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைத்துப் படங்களையும் ரசித்திருப்பதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. அருமையான படங்கள். அதிலும் கடைசிப்படம் மிக அழகு! தேர்ந்த புகைப்பட நிபுணர் என்பதை நிரூபிக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தேர்ந்த புகைப்பட நிபுணர்!// மகிழ்ச்சி. கற்றது கைமண் அளவில் கால் பங்கு மட்டுமே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  7. பதில்கள்
    1. நேரில் பார்த்தால் இன்னும் அழகு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  8. எல்லா படங்களும் அழகு.
    அதிலும் குறிப்பாக அந்த தண்ணீர் படமும் கடைசி படமும் ரொம்பவே அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களை ரசித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  9. மலர்களின் படங்கள் எல்லாம் அழகு.
    மாதுளை முத்துக்கள் போண்ற பூக்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாதுளை முத்துக்கள்! நல்ல குறிப்பு! படங்கள் அனைத்தையும் ரசித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  10. மாதுளை முத்துக்கள் போன்ற பூ அழகு.
    அனைத்து பூ படங்களும் அழகு.
    கடைசி படம் வெகு அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    அத்தனைப் பூக்கள் படமும் கண் கொள்ளா அழகு. பவுண்டேஷன் படமும் பூக்களின படங்களும், மனதை கொள்ளை கொள்கின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....