மாலை வேளை என் மகளின் டிவி நேரம். அதில்
அவள் ஒரு மழலைகளின் தொடரை பார்த்துக் கொண்டிருந்தாள். நானும் தேநீரை பருகிக் கொண்டே
அவளுடன் பார்த்துக் கொண்டிருந்த போது அதில் ஒரு காட்சி.... இந்த வருடத்தின் விடுமுறை வேலையாக ஆசிரியர் என்ன
தரப் போகிறார் என வகுப்பில் உள்ள மாணவர்கள் பேசிக் கொள்கிறார்கள். ஆசிரியர் இந்த முறை
வித்தியாசமாக அவரவர் வீட்டில் இல்லாமல் சக நண்பரின் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து
அவர்களின் பழக்கவழக்கங்களை தெரிந்து கொள்ளச் சொல்கிறார். மாணவர்களும் ஆசிரியர் சொல்வது
போல் செய்கின்றனர். மற்றவரின் வீட்டு விதிமுறைப்படி இருக்க முடியாமல் திணறிப் போகின்றனர்.
இதை நகைச்சுவையாக காட்டியிருந்தனர்.
இதை பார்த்த பின்பு எனக்கு வேறு ஒன்று
தோன்றியது. இதைப் பற்றி எவ்வளவோ பேர் பேசியும் எழுதியும் உள்ளனர். ஆனால் எனக்கு இந்த
சிந்தனை தோன்றிய சந்தர்ப்பம் வேறு என்பதால் இங்குஎழுதுகின்றேன். அது என்னவென்றால் வேறு
ஒருத்தரின் வீட்டில் இரண்டு நாட்களுக்கே ஒன்றிப் போக முடியாமல் திணறிப் போகிற போது,
பெண் என்பவள் திருமணம் என்ற ஒன்று ஆனவுடன் இத்தனை வருடம் பிறந்து வளர்ந்த வீட்டை விட்டு
வேறு வீட்டிற்கு செல்ல நேருகிறது.
அப்படிச் செல்லும்போது அங்கு உள்ள உறவுகளை
தன்னுடைய உறவுகளாக நினைத்து, அவர்களைப் புரிந்து
கொண்டு அங்கு உள்ள பழக்கவழக்கங்களையும், சம்பிரதாயங்களையும் பின்பற்றுகிறாள். கணவர்
அவருடைய உறவுகளை எப்படி அழைக்கிறாரோ அதே மாதிரி தானும் அம்மா, அப்பா, அத்தை, மாமா என்று
உரிமையோடு அழைத்து அந்த குடும்பத்தோடு ஒன்றாகிப் போகிறாள். ஆண்களால் இப்படி இருக்க முடிவதில்லை. மனைவியின்
உறவுகளோடு ஒன்றிப் போக முடிவதில்லை. மாமனாரை “சார்” என்று அழைக்கும் மாப்பிள்ளைகளும்
இருக்கின்றனர்.
ஒரு பத்திரிகையில் வாசித்தது நினைவுக்கு
வருகிறது. பெண்ணானவள் பிறந்த வீட்டிற்கு சென்றாலும் கணவனைப் பற்றியும் வீட்டை பற்றியுமே
எண்ணுகிறாள். ஆண்கள் பிரயாணம் செல்வதானாலும் நினைத்த போது கிளம்பிவிடுகின்றனர். ஆனால்
ஒரு பெண் பிரயாணம் செய்யும் போது ஆமை ஓட்டை சுமப்பது போல் பெண் வீட்டைச் சுமக்கிறாள்! இது எவ்வளவு உண்மை!!.
இன்னமும் கூட நம் கிராமங்களில் பெண்
குழந்தை பிறந்தாலே பாவம் என்று பலபேர் நினைக்கின்றனர். பெண் சிசுவதை என்பது இன்னமும்
பல மாநிலங்களில் நடந்து கொண்டு இருக்கிறது.
இவர்களிடமிருந்து தப்பித்து வந்த பின்பும், பெண்களுக்கு எதிராய் தினம் தினம்
எதாவது பிரச்சனைகள் வந்து கொண்டே தான் இருக்கிறது. என்றாலும் ”மங்கையராய் பிறக்க மாதவம் செய்ய வேண்டும்
அம்மா” என்ற கவிஞனின் பாடல் போல, நான் பெண்ணாய்
பிறந்ததற்கும் எனக்கும் பெண் குழந்தை பிறந்ததற்கும் எனக்குப் பெருமையே.
அனைத்து மகளிர்க்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள்!
மீண்டும் சந்திப்போம்….
ஆதி வெங்கட்,
டிஸ்கி-1:- மார்ச் 8ம் தேதியான இன்று
எங்களுடைய வாழ்விலும் சிறப்பான ஒரு நாள். நாங்கள் முதன்முதலாக சந்தித்துக் கொண்டதும்
இந்த நாளில் தான்....:))
டிஸ்கி-2: கோவை2தில்லி வலைப்பூவில் நான் எழுதிய பதிவு, இன்றைக்கு இங்கே மீள் பதிவாக....
எல்லாப் பெண்களுக்கும் நம் வலையுலக சகோதரிகளுக்கும் மகிழ்வான பெண்கள் தின வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஎன்றும் நம் பெண் குழந்தைகள், பெண்கள் எந்தவிதக் கொடுமைகளும், துன்பங்களும் இல்லாமல் மகிழ்வாக வாழ்ந்திடவும் வாழ்த்துவோம், பிரார்த்திப்போம்.
கீதா
ஆதி உங்களுக்கும் மகிழ்வான பெண்கள் தின வாழ்த்துகள்!
நீக்குகீதா
மகளிர் தின வாழ்த்துகள் கீதா ஜி!
நீக்குஎல்லா நாளும் சிறப்பான நாளே என்றாலும் இப்படி ஒரு நாள் கொண்டாடுவதும் நல்லது!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
நீக்குஅது என்னவென்றால் வேறு ஒருத்தரின் வீட்டில் இரண்டு நாட்களுக்கே ஒன்றிப் போக முடியாமல் திணறிப் போகிற போது, பெண் என்பவள் திருமணம் என்ற ஒன்று ஆனவுடன் இத்தனை வருடம் பிறந்து வளர்ந்த வீட்டை விட்டு வேறு வீட்டிற்கு செல்ல நேருகிறது.//
பதிலளிநீக்குயெஸ் ஆதி இது எனக்குப் பல சந்தர்ப்பங்களின் தோன்றிய ஒன்று.
ஆதி அதற்கு அடுத்த பாரா நச்!!! ஹைஃபவ்!! அப்படியே டிட்டோ.
பதிவு அருமை ஆதி!!! என் எண்ணங்கள் பலவற்றின் பிரதிபலிப்பு. ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு அனுபவம்.
இன்னமும் கூட நம் கிராமங்களில் பெண் குழந்தை பிறந்தாலே பாவம் என்று பலபேர் நினைக்கின்றனர்.//
பாவம் என்பதை புண்ணியத்துடன் வருவது அல்லாமல் மற்ற பாவத்தை எடுத்துக் கொண்டால் பாவமே ஏனென்றால் சமீபகாலத்தில் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு மிகவும் குறைந்து வருகிறது.
என்றாலும் என் மகன் எனக்குப் பெண்ணாகப் பிறந்திருக்கக் கூடாதோ என்று நினைத்ததுண்டு. ஆனால் அவனிடம் சொல்ல மாட்டேன் பாவம் மிகவும் வருந்துவான் என்பதால்...
நான் பெண்ணாகப் பிறந்ததற்கு எனக்குப் பெருமை உண்டு!!!!
கீதா
டிஸ்கி ஒன்று முன்னரே வெங்கட்ஜி குறிப்பிட்ட நினைவு இருக்கே!! அட என் நினைவுத் திறன் முன்னேறி இருக்கு போல!! ஹா ஹா ஹா
நீக்குஉங்கள் மீள் பதிவு எனக்குப் புதிய பதிவு!!
கீதா
பெண்ணாகப் பிறந்ததில் பெருமை கொள்வோம்! அதே அதே....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
ஹாஹா... நினைவில் இருந்தால் நல்லது! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
மகளிர் தினத்தில் முதல் சந்திப்பு
பதிலளிநீக்குஅருமை
மகளிர் தின நல் வாழ்த்துகள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குஎங்கெங்கும் நலம் பெருகட்டும்...
பதிலளிநீக்குஅன்பின் மகளிர் தின நல்வாழ்த்துகள்..
எங்கெங்கும் நலம் பெருகட்டும்.... நல்லதே நடக்கட்டும்...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!
அருமை...
பதிலளிநீக்குமகளிர் தின நல்வாழ்த்துகள்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குமகளிர் தின நல் வாழ்த்துகள் சகோ
பதிலளிநீக்குஇன்றைய விடயங்கள் அருமை
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குநாமும் பெண்மையை பேணுவோம் ...போற்றுவோம்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!
நீக்குவாழ்த்துகள். முகநூலிலும் உங்கள் பதிவைப் பார்த்தேன். ஆனால் எல்லா ஆண்களும் இப்படி இருப்பார்கள் எனச் சொல்ல முடியாது, படிப்பு, வேலை இவற்றின் காரணமாக வெளி ஊரில், வேறு மனிதர்களுடன் தங்கிப் படித்த அனுபவங்கள் உள்ள ஆண்களும் பலர் இருக்கின்றனர். பெண்களால் எந்த வீட்டில் தங்கினாலும் சமையலறை வரை செல்ல முடியும்! ஆண்களால் அது முடியாது என்பதோடு அவர்கள் அதில் விருப்பமும் காட்ட மாட்டார்கள். ஆனால் இலங்கையில் மகளைத் திருமணம் செய்து கொடுத்தால் மாப்பிள்ளை தான் மாமனார் வீட்டோடு வந்து தங்க வேண்டும். மகள் மாமியார் வீட்டிற்குப் போக மாட்டார்! :))))) இங்கேயும் இப்படி இருந்திருக்கலாமோ என நான் நினைப்பது உண்டு. :)))))
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
நீக்குமகளிர் தின வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநீங்கள் சொல்லி இருப்பது முற்றிலும் உண்மை. திருமணத்துக்குப் பிறகு பெண்ணின் வேர் இடம் வேறிடம் ஆகிவிடுகிறது. ஆணால் செய்ய முடியாத மாற்றம்.
உங்கள் இந்த வரிகளை படித்ததும் எனக்கு இந்த வரிகள் நினைவுக்கு வந்தன.
கொடியோடு தோன்றிய மலர்கள் குழலோடு சேருவதென்ன
ஒரு வீடு தோன்றிய பெண்கள் மறு வீடு தேடுவதென்ன
பந்தமும் பாசமும் நேசமும் அன்னை இல்லத்திலே
சொந்தமும் காதலும் இன்பமும் கொண்ட உள்ளத்திலே
கொடியோடு தோன்றிய மலர்கள் குழலோடு சேருவதென்ன!
நீக்குஆஹா... அருமை....
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
//நான் பெண்ணாய் பிறந்ததற்கும் எனக்கும் பெண் குழந்தை பிறந்ததற்கும் எனக்குப் பெருமையே.//
பதிலளிநீக்குஅதே அதே .100% உண்மை .எங்கம்மா உயிரோட இருந்தா என் கணவரின் அம்மா உயிரோட இருந்தா எப்படி கவனிப்பாங்களோ அப்படிதான் எங்கள் மகள் எங்களை கவனிக்கிறா . எங்களுக்கு தாயுமானவள் எங்க மகள்தான் .(தப்பு செய்யும்போது அடிக்கடி எனக்கு ஸ்பெஷல் திட்டும் கிடைக்கும் )
அனைவருக்கும் மகளிர்தின வாழ்த்துக்கள் .
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏஞ்சல்.
நீக்குமகளிர் தின வாழ்த்துகள் அனைத்து சகோதரிகளுக்கும்
பதிலளிநீக்குதுளசிதரன்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!
நீக்கு