வியாழன், 18 ஜூலை, 2024

கதம்பம் - Social Media Day - அப்பாவி - வகுப்புகள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட புதிய காசி விஸ்வநாத் மந்திர் (BHU) பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கு மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


Social Media Day - 30 ஜூன் 2024:




காலை முதல் fmல் social media day என்று சொல்லிக் கொண்டிருக்க பின்னோக்கி சற்றே யோசித்து பார்த்தேன்! சராசரி குடும்பத்தலைவியாக ஒரு சிறு வட்டத்துக்குள் வலம் வந்து கொண்டிருந்த நான் 2010ஆம் ஆண்டு வலைப்பூ (blogspot) ஒன்றை என்னவர் உருவாக்கித் தரவே அதில் என் எண்ணங்களை, எனக்கு கிடைத்த அனுபவங்களை, சென்று பார்த்த இடங்கள், கற்றுக் கொண்ட சமையல் என்று ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றை மடிக்கணினியில் தட்டச்சு செய்து பகிர்ந்துக் கொள்ளத் துவங்கினேன்!


சிறிது சிறிதாக விரிவடைந்தது அதில் கிடைத்த நட்புவட்டமும் என் கற்பனை வளமும்! தொடர்ந்து ஐந்து வருடக் காலங்கள் வலைப்பூவில் கோலோச்சிய பின்னர் Android phoneக்கு மாறியதும் முகநூல் கணக்கு (facebook) ஒன்றைத் துவக்கி அதிலும் வலம் வரத் துவங்கினேன்! 


வலைப்பூவில் இரண்டு பக்கத்திற்கும் குறையாமல் தட்டச்சு செய்து பதிவிட்டுக் கொண்டிருந்த நான் இதில் இரண்டு வரியிலும் பதிவிடலாம் என்ற ரகசியத்தை தெரிந்து கொண்டதால் அவ்வப்போது சில இற்றைகளை மட்டும் பதிவிட்டுக் கொண்டிருந்தேன்..🙂 பின்பு சிறுகதைகள், தொடர்கள் என்று விலாவரியாகவும் எழுதத் துவங்கினேன்..🙂



லாக்டவுன் காலத்தில் தான்  வாட்ஸப்பில் (WhatsApp) status வைக்கவும் கற்றுக் கொண்டேன்! இன்று வரையிலுமே அதில் என்னுடைய சொந்த சரக்குகள் அதாவது என்னுடைய பதிவுகளுக்கான இணைப்பு, இற்றைகள் மற்றும் ரெசிபிகளைத் தான் ஸ்டேட்டஸாக வைத்துக் கொண்டிருக்கிறேன்! 


லாக்டவுன் சமயத்தில் தான் வரிசையாக என்னுடைய மின்னூல்களும்(E books) வெளிவந்து கொண்டிருந்தன! உலகின் ஏதோ ஒரு மூலையில் வசிக்கும் ஒருவரும் என்னுடைய எழுத்துக்களை வாசிக்கிறார் என்று தெரிந்த போது மிகவும் மகிழ்வாக இருந்தது!


எல்லோரும் யூட்டியூபில்(YouTube) சேனல் ஒன்றைத் துவக்கி என் சமையல் ரெசிபிகளை பகிர்ந்து கொள்ள தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கவே ஒரு நன்னாளில் அதையும் ஒரு கை பார்த்து விடலாம் என்று செயலில் இறங்கி விட்டேன்..🙂 வாரம் ஒரு ரெசிபியாக வீடியோ எடுப்பதும் அதை எடிட்டிங் செய்வதும் குரல் கொடுப்பதுமாக சென்று கொண்டிருந்தது!


சமூக வலைத்தளங்கள் ஆதிக்கம் செலுத்தும் காலமிது! நம்மை உலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒருவருக்கு அடையாளம் காட்டிக் கொள்ள சமூக வலைத்தளங்கள் பெரிதும் உதவுகின்றன என்பதை நிச்சயமாக மறுக்க இயலாது! இப்போது என் வகுப்புகளில் கூட என் அடையாளமாக 14 வருடங்களாக சமூக வலைத்தளங்களில் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று தான் சொல்கிறேன்!


*******


ரோஷ்ணி கார்னர் - அப்பாவி - 5 ஜூலை 2024:



அந்த புவனாவுக்கு break up ஆயிடுச்சு தெரியுமா! 


அப்படியா??


ஆமாடீ! கல்யாணம் முடிவு பண்ணியிருக்காங்களாம்! மாப்பிள்ள பூர்விகா மொபைல்ஸ்ல வேலை பார்க்கிறானாம்!


நீ போவியா??


பார்க்கணும்டீ! 


இன்னிக்கு பஸ்ல என் பக்கத்துல இருந்த ரெண்டு பொண்ணுங்க இப்படித்தாம்மா பேசிண்டாங்க! உடனே எனக்கு உன் ஞாபகம் தான் வந்தது!!


ஏன்! 


இப்படியும் ஒரு புவனா!!! நம்ம வீட்டுலயும் தான் ஒரு அப்பாவி புவனா இருக்கா! அவளுக்கு இந்த break up, patch upனா என்னன்னே தெரியாதேன்னு நெனைச்சேன்...🙂


ம்ம்ம்ம்ம்...!!??


கடைசில என் நிலைமை இப்படி ஆயிடுச்சே...:))


******

வகுப்புகள் - 5 ஜூலை 2024:


Adhi maatha அதுக்கு என்ன ஆன்ஸர்னு சொல்லுங்களேன்!


இதோ சொல்றேன் மேம்!


வாசலில் காலிங் பெல்லின் ஒலி!


வகுப்பை விட்டு ஓடி யாரென பார்த்தால்…


Primary health centreல் பணிபுரியும் இரண்டு நர்ஸ்கள்…


என்னம்மா! வேணும்??


மேடம் உங்க வீட்டுல சின்ன குழந்தைங்க இருக்காங்களா?


இல்லம்மா!


யாராவது மாசமா இருக்காங்களா??


அப்படியெல்லாம் யாரும் இல்லம்மா! 


???????


@@@@@@@


வகுப்பில் டெஸ்ட் எழுதிக் கொண்டிருந்த நேரம்...!


வாசலில் அழைப்பு மணியின் ஒலி...🙂


டெஸ்ட்டை பாதியில் விட்டுவிட்டு ஓடினேன்!


தண்ணீர் கேன் டெலிவரி செய்யும் தம்பி!


ஒரு கேன் தம்பி!


இதோ போய் எடுத்துட்டு வரேன்க்கா!


அவன் கொண்டு வரும் நேரத்திற்குள் எழுதிக் கொண்டிருந்த டெஸ்ட் நினைவில் வர....🙂


பின்பு ஒரு கையில் காசை வைத்துக் கொண்டு டெஸ்ட்டை தொடர்ந்தேன்...🙂


அந்த தம்பி கொண்டு வந்ததும் போடச் சொல்லி விட்டு எழுதிக் கொண்டிருந்தேன்..🙂


ஹா...ஹா..ஹா....🙂


@@@@@@@


மளிகை சாமானை எல்லாம் 12 மணிக்கு மேல கொண்டு வாங்களேன்! அதுக்கு முன்னாடி வேண்டாம்! நான் இருக்க மாட்டேன்!!!


படிப்புக்கு நடுவே இப்படித்தான் சென்று கொண்டிருக்கிறது என் நாட்கள்..🙂


*******


இன்றைய கதம்பம் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்




16 கருத்துகள்:

  1. சுவாரஸ்ய நிகழ்வுகளின் தொகுப்புகள்...   ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  3. வாசகம் அருமை.

    14 வருடங்களாக சமூக வலைத்தளங்களில் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று தான் சொல்கிறேன்!//

    வாழ்த்துகள் ஆதி.

    அனைத்தையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  4. வாசகம் நன்று.

    வாழ்த்துகள் ஆதி! இவ்வளவு வருஷம் எழுதிக் கொண்டிருப்பதற்கு தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி!

    ஆமாம் நாம் வகுப்புகள், ஆன்லைன் வேலைகள் செய்து கொண்டிருக்கும் போதும் இப்படி வாசலில் வருபவருக்கு நாம் தான் சென்று பதில் அளித்து நம் கடமைகளையும் ஆற்ற வேண்டும். தடங்கல்கள் வந்தாலும் நீங்க கண்டிப்பாக உங்களால் சிறப்பாகச் செய்ய முடியும். செய்வீங்க!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள்.

      நீக்கு
  6. சுவாரஸ்யம். Keeping oneself busy என்பதுதான் வாழ்க்கையின் தாரக மந்திரம். என் பையன் ஓவியங்கள் வரைய. ஆரம்பிக்கச் சொல்கிறான். கலர் போடத் தெரியாது என்று சொன்னால், கற்றுக்கொள்ளுங்கள் என்கிறான். சில நேரங்களில், நான் பிஸியாக இருந்தால் மனைவி என்ன பண்ணுவாள் என்றும் தோன்றும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரைவில் ஓவியம் வரைய ஆரம்பியுங்கள் சார். மனைவிக்கு உதவும் எண்ணமும் அருமை. மற்றவர் இடத்திலிருந்து யோசித்து பார்க்கும் எண்ணத்திற்கும் பாராட்டுகள்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  8. ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு எழுத்தாளர் இருக்கிறார். அதை நீங்கள் கண்டறிந்து 14 வருடங்களாக எழுதி வருவது அருமையான ஒன்று. தொடர்ந்து எழுதுங்கள்.

    உங்களை நீங்கள் ஆக்கபூர்வமாக வைத்துக் கொள்வது மிகச் சிறந்த விஷயம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் சார்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....