செவ்வாய், 23 ஜூலை, 2024

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி இரண்டு - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட வாரணாசியில் ஒன்பது நாட்கள் - கால பைரவர் கோவில் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை முயன்றது குறித்து சில நாட்களுக்கு முன்னர் கண்கவர் படங்களும் அதற்கேற்ற சில வரிகளும் என்ற தலைப்பில் எழுதி இருந்தேன்.  அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கான எனது வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது எனது முயற்சி என்று சொல்லுங்களேன்!



ராதா! படித்து தெரிந்து கொள்ள வேண்டிய உலக விஷயங்கள் ஏராளம் இருக்க, நீ என்னைப் பற்றி மட்டுமே  சிந்தித்துக் கொண்டிருக்கிறாய்!!


கிருஷ்ணா! என் உலகமே நீயாயிருக்க அதிலேயே என் உயிர் மூச்சை பிணைத்துக் கொண்டு உழன்று கொண்டிருக்கும்  எனக்கு வேறு என்ன தெரிந்து கொள்ள இருக்கிறது!!!


*******



ராதா! என் மனதைத் தான் உன் புன்னகையால்  கட்டியிழுத்து  உன் வசமே  வைத்திருக்கிறாய் என்றால் இந்த விளையாட்டிலாவது சற்றே உன் பிடியை தளர்த்திக் கொள்ளக்கூடாதா??


*******



கண்ணே! கூடை கூடையாய் மாங்கனிகள் இருப்பினும் உன் கன்னக் கதுப்பின் தித்திப்புக்கு ஈடாகுமோ!!?


*******



முருகா! நீ  மொதல்ல கீழே இறங்கு! நான் தான் அம்மா செல்லம்!


அண்ணா! இன்னைக்கு ஒருநாள் நம்ம ஃபேமிலி ஃபோட்டோ எடுக்கற வரைக்குமாவது நான் அம்மாட்ட இருக்கிற மாதிரி போஸ் குடுக்கிறேனே!


*******



உன் அரவணைப்பில் கட்டுண்டு தென்றல் காற்றில் ஊஞ்சலாடும் இந்த சுகத்தை விட இந்த ராதைக்கு என்ன வேண்டும் கிருஷ்ணா! 


இப்படியே நாமிருவரும் இருந்து விட மாட்டோமா என்று தான் இந்த பேதைக்கு தோன்றுகிறது!


*******



இது நமக்கான நேரம்! அரண்மணை வாழ்வை விட இந்த அடர்வான கானகத்தில் உன்னோடு நேரத்தை செலவிடவே நான் விரும்பறேன் சீதா!


நீ என்ன நினைக்கிறாய்??


என் மனதின் பிரதிபலிப்பைத் தான் நான் இப்போது கேட்டுக் கொண்டிருக்கிறேன் சுவாமி!!


சீதா! சீதா!


*******



நான் உன்னிடம் சொல்லத் துடிக்கும்  ஓராயிரம் விஷயங்களும் உன் சின்ன புன்னகையை கண்டதும் நாணத்தால் ஒளிந்து கொள்கின்றன கிருஷ்ணா! என்ன மாயம் செய்கிறாய்!


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்


28 கருத்துகள்:

  1. படங்களுக்கான உங்கள் வரிகளை ரசித்தேன். படங்களும் அற்புதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. இரண்டாவது படத்தில் கொஞ்சம் லாஜிக் இடிக்கிறது.  ராதாவும் கிட்டு பக்கமே...  மன்னிக்கவும் கிருஷ்ணன் பக்கமேதானே இழுக்கிறாள்?  பின் ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்?  இணைந்து இழுக்கலாமே...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் இதே எண்ணம் தோன்றியது ஜி

      நீக்கு
    2. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  3. எனக்குத் தோன்றியவை  : !!!!

    1.  பத்து நாள்ல புக்கை லெண்டிங் லைப்ரரில திருப்பிக் கொடுத்துடணுமாம்...  காலச்சக்கரம் நரசிம்மா புக்குக்கு ஏக டிமாண்டாம்... நோ எக்ஸ்டென்க்ஷனாம்...   வா..  சேர்ந்தே படிச்சுடலாம்....

    2.  கயிற்றை இழுக்கச்சொன்னா இப்படி போஸ் கொடுக்கறியே ராதே..  ஏற்கெனவே உன் அழகுல விழுந்திருக்கேன்..  அப்புறம் இதுலயும் விழுந்துடுவேன்...

    3.  ஒண்ணொண்ணா எடுத்து சாப்பிடக்கூடாதா கண்ணா..  கைல ஆறு மாம்பழம் ஒரே நேரத்துல ..  என் கையை விட்டா விழுந்திடும் கண்ணா...  என்ன விஷமம்...  ம்ம்...

    4. அப்பா..   அம்மா முருகனை தூக்கி வச்சுருக்கா...  நீ என்னை தூக்கவில்லையேப்பா....

    தூக்கற உருவமாடா நீ...  கணேசா...


    5. கைல இருக்கற கோன் ஐஸை சாப்பிட விடாம இதென்ன விளையாட்டு ராதா..  புல்லாங்குழலை உன் கைல கொடுத்து வஞ்சிருக்கேன்னு (G)காண்டா?  ஐஸ் உருகி காத்துல பறக்குது பார்...

    6.  அஞ்சு மானும் நாணும், அஞ்சுகமே சீதா உன் அழகைக் கண்டு...

    ஐயே...   போறுமே...  வழியாதீங்க...

    7. தேனிலவுக்கு மெஸபடோமியா போவோமா கண்ணே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் உங்க வரிகள் பார்த்து சிரிச்சுட்டேன்!!!

      அப்பா கைல, அதுவும் ஒத்தைக் கையால பிள்ளையாரைத் தூக்கித்தானே வைச்சிருக்கார் பாருங்க!!!

      கீதா

      நீக்கு
    2. பின்னே தூக்காம?  அப்படி சொல்லிட்டு தூக்கிகிட்டு நிக்கறார்.  தூக்கலைன்னா பிள்ளையார் அப்பாவை பிடிச்சு ஜெயில்ல போட்டுட்டா என்ன பண்றது!!

      நீக்கு
    3. விஜி வெங்கடேஷ்23 ஜூலை, 2024 அன்று 10:48 AM

      உங்கள் வாசகங்கள் வித்யாசமாக நினைத்து ரசிக்க சிரிக்க வைக்கின்றன.அருமை.

      நீக்கு
    4. நன்றி விஜி வெங்கடேஷ்...   எங்கள் பக்கமும் வரலாமே....

      நீக்கு
    5. அருமை. படங்களுக்கு ஏற்ற உங்கள் வரிகளை ரசித்தேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  4. வாசகம் அருமை.
    படங்களுக்கு உங்கள் வரிகள் மேலும் அழகு சேர்க்கிறது.
    ஸ்ரீராம் சொன்னவை சிரிக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  5. ஆதி, படங்களும் அதற்கான உங்கள் வரிகளும் அசத்தல்

    அதிலும் சிவன் குடும்பத்துக்கான வரியாய் வாசித்து சிரித்துவிட்டேன்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  7. பொருத்தமான வசனங்கள் சிறப்பு ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  8. படங்களும் அதற்கான வரிகளும் மிக அருமை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் சார்.

      நீக்கு
  9. படங்கள் ஒரு பக்கம் அழகு என்றால் அதற்கேற்ற வசனங்கள் இன்னும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க கீதா.

      நீக்கு
  10. படங்களும் வாசகங்களும் நன்று.

    ஸ்ரீராம் வாசகங்கள் தற் காத்துக்கு ஏற்றவை ரசித்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு
  11. மாம்பழக் கன்னம், சிவ குடும்பம் வரிகளை மிகௌம் ரசித்தேன். ஸ்ரீராமும் கற்பனையும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....