அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட மல்லிகார்ஜுன மஹாதேவ் மந்திர் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கு மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
பல வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் நிறைய நெகட்டிவ் விஷயங்கள் உண்டு என்றாலும் ஒரு சில பாசிட்டிவ் விஷயங்களும் உண்டு. அடுத்தவர்களிடம் எப்படி பழகுகிறோம், என்பதைப் பொறுத்தே அங்கே நட்புகள் உருவாகின்றன. இன்றைக்கு பல அடுக்கு மாடி குடியிருப்புகளில் அடுத்த வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று கூட தெரியாத நிலைதான் இருக்கிறது. யாரும் யாருடனும் பேசுவது கூட இல்லை. பேசுவதற்கே காசு கேட்பார்கள் போல என்று கூட மனதில் எண்ணம் வரலாம். அவரவர் வேலையில் மூழ்கி இருப்பதே நடக்கிறது. இத்தனைக்கும் முன்பு இருந்தது போலவே நாளொன்றுக்கு இருபத்தி நான்கு மணி நேரம் தான் இப்போதும்! ஆனாலும் யாரைக் கேட்டாலும் நேரம் இல்லை என்றே சொல்கிறார்கள். இதில் எங்கே சக குடியிருப்புவாசிகள் உடன் பேசுவது? இப்படி இருக்கும் குடியிருப்புகளில் இருந்து சற்றே மாறுபட்டு சில குடியிருப்புகள் இருக்கிறது. அவ்வப்போது சந்தித்து பேசுகிறார்கள், நாள் கிழமைகளை கொண்டாடுகிறார்கள், சிறு சிறு போட்டிகள் நடத்துகிறார்கள். இது ஒரு சில இடங்களில் மட்டுமே நடக்கிறது.
அப்படி ஒரு நிகழ்வு குறித்த தனது அனுபவங்களை திருமதி விஜி வெங்கடேஷ் நம்முடன் இன்று பகிர்ந்து கொள்கிறார் - ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.
******
ஜவ்வரிசி
சமீபத்தில் எங்கள் complex-இல் food items competition. Base item ஜவ்வரிசி. என்னையும் இன்னொரு பெண்ணையும் ஜட்ஜ் ஆக போட்டார்கள். ஜவ்வரிசியை பற்றி ஒரு கவிதை மாதிரி எழுதி படித்தேன். அந்த கவிதை கீழே!
ஜவ்வரிசி
இதனிடமிருந்து கற்க வேண்டியது இரண்டு;
உருவம் போலவே உள்ளமும் வெள்ளை;
ஒன்று சேர்ந்து இருப்பதால் ஒற்றுமை;
ஜவ்வரிசிதான் ஆனால் ஜவ்வாக இழுக்காது;
அரிசியைப் போல் தனியாகவும் நில்லாது;
சர்க்கரை, பால் சேர பாயசமாகும்;
உப்பு, கடலை சேர உப்புமாவாகும்;
உருளை, மிளகாய் சேர வடையாகும்;
உபவாசத்திற்கு ஏற்ற உணவாகும்;
கஞ்சி வைத்தால் மருந்தாகும்;
காய வைத்தால் வடகமாகும்;
உனைப் பார்க்க பார்க்கப் பரவசம்;
உண்ண உண்ண ருசி நம் வசம்;
வாழ்க உன் சேவை!
வளர்க உன் புகழ்!
ஜெய் ஜவ்வரிசி!
*****
என்னை ஜட்ஜ் ஆகக் கூப்பிட்டதற்கு அவர்களுக்கு ஒரு தண்டனையை judgement ஆகக் குடுத்தேன்😜 இங்கேயும் பகிர்ந்து இருக்கிறேன் - அது உங்களுக்கு தண்டனையா இல்லையா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்!
மீண்டும் வேறு ஒரு பகிர்வுடன் சந்திக்கும் வரை…
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
30 ஜூலை 2024
ஜவ்வரிசி அறிமுகக் கவிதை இருக்கிறது. ஜட்ஜமென்ட் எங்கே? கவிதையை ரசித்தேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.
நீக்குஜவ்வரிசி கவிதை சூப்பர்!
பதிலளிநீக்குஅது சரி எந்த ஐட்டம் வென்றது? உங்கள் தேர்வு எந்த ஐட்டம்!? ஜவ்வரிசி யை இப்படிப் புகழ்ந்துவிட்டு ரெசிப்பி ஒன்னுமே போடாம விட்டுட்டீங்களே!
கீதா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
நீக்குஜவ்வரிசி கட்டோரி சாட் வெற்றி பெற்றதோ?!! display அலங்காரம் ரொம்ப நல்லாருக்கு! செய்தவருக்கு வாழ்த்துகள்!
பதிலளிநீக்குகீதா
வாயில போடுவதற்கு முன்னர் கண்ணைக் கவரணுமே!!!!!
நீக்குகீதா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
நீக்குகண்களைக் கவர்வதும் முக்கியமே! நன்றி கீதா ஜி.
நீக்குவாசகம் அருமை.
பதிலளிநீக்குஜவ்வரிசி கவிதை அருமை.
படங்கள் அருமை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.
நீக்குகவிதை சிறப்பு
பதிலளிநீக்குதீர்ப்பு யார் பக்கம் ?
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.
நீக்குகவிதையைப் படித்து ரசித்ததற்கு நன்றிகள் பல.ஜவ்வரிசி வடையை குருவிக்கூடாக செய்து அதன் நடுவில் cheese balls ஐ முட்டை போல் வைத்து சுற்றிவர முட்டைகோசைத் துருவி வைக்கல் போல் வைத்து உருளை + கேரட்டில் இரு குருவிகளைச் செதுக்கிய சிற்பிக்கு முதல் பரிசு( Pink colour dress - Mrs.Kanagam Krishna Kumar). ஜட்ஜ் என்பதால் எல்லாவற்றையும் சிறிதளவு எடுத்து ருசிக்க வேண்டுமே தவிர ஒரு கட்டு கட்ட முடியலை என்பது வருத்தம்😒ஆனாலும் மூன்றாம் பரிசு(மூன்று cup களில் குணுக்கு மாதிரி இருந்தது) பெற்ற ஐட்டத்தை சற்று கூடுதலாக(!!??) சுவைத்து mark போட்டோம்.ஒன்றும் சாப்பிடாமல் போனது சௌகரியமாக இருந்தது!இரண்டாம் பரிசு இலை அடைக்குள் ஜவ்வரிசி பூரணத்தை பொதிந்து வைத்து சுற்றிவர நிறைய ஷோ items வைத்து அலங்கரித்திருந்தார்கள்.அது ஆவியில் வெந்த item என்பதால் healthy category இல் பரிசை வென்றது.
பதிலளிநீக்குஎனக்கும் இன்னொரு ஜட்ஜ் க்கும் கோட் மற்றும் மேடையில் தட்ட சுத்தி இவைகள் கொடுத்து கனம் கோர்ட்டார் அவர்களே என்று அழைப்பார்கள் என்று எதிர்பார்த்தேன்.
கனவு பலிக்கவில்லை😢
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி விஜி. தொடர்ந்து எழுதுங்கள்.
நீக்குமேற்கண்ட என் பதிலில் சிறு திருத்தங்கள்:
பதிலளிநீக்கு"மூன்று cup என்பதற்கு பதில் முக்கோண dish என்று வந்திருக்கணும்"
அதுபோல் சுத்தி மேடையைத் தட்ட அல்ல. மேஜையைத் தட்ட!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி விஜி.
நீக்குஅருமையான கவிதை .(நான் ஜவ்வரிசியை பற்றி சொன்னேன் ) மூன்றாவது கட்டுரை முழுவதும் எழுத்தின் எழுச்சி தெரிகிறது . தொடரட்டும் உங்களின் இந்த பயணம் .நீண்ட இடைவெளி இல்லாமல் அடிக்கடி உங்களின் இலக்கிய தாகத்தை வெளிப்படுத்த வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நண்பரே.
நீக்குசிறப்பு
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குஜவ்வரிசிக் கவிதை அழகாக இருக்கின்றது..
பதிலளிநீக்குவாழ்க நலம்..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துரை செல்வராஜூ ஐயா.
நீக்குஜவ்வரிசி சமையல் படங்கள், கவிதை நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.
நீக்கு