புதன், 10 ஜூலை, 2024

ஜெய் துவாரகாதீஷ் ஜெய் சோம்நாத் - பயணத் தொடர் - விஜி வெங்கடேஷ் - பகுதி ஐந்து


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


த்வாரகா மற்றும் சோம்நாத் பயண அனுபவங்களை திருமதி விஜி வெங்கடேஷ் கடந்த திங்களன்று இப்பக்கத்தில் எழுத ஆரம்பித்தது நீங்கள் அறிந்திருக்கலாம். இத்தொடரின் முந்தைய பகுதிக்களான சுட்டிகள் கீழே! அப்பகுதிகளை நீங்கள் படித்திருக்காவிட்டால், படித்து விடுங்களேன்.


த்வாரகா - சோம்நாத் - முதலாம் பாகம் 


த்வாரகா  - சோம்நாத் - இரண்டாம் பாகம் 


த்வாரகா  - சோம்நாத் - மூன்றாம் பாகம்


த்வாரகா  - சோம்நாத் - நான்காம் பாகம்


இதோ இன்றைக்கு, பயணத் தொடரின் கடைசி பகுதி உங்கள் பார்வைக்கு! வாருங்கள் த்வாரகா மற்றும் சோம்நாத் பயண அனுபவங்களை திருமதி விஜி வெங்கடேஷ் அவர்களின் வார்த்தைகளில் படித்து ரசிக்கலாம்! - நட்புடன் - வெங்கட் நாகராஜ், புது தில்லி! ஓவர் டு விஜி!


******


இந்தப் பயணத் தொடரின் முந்தைய பகுதிகளுக்கு நீங்கள் தந்த ஆதரவிற்கும், உங்கள் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்து கொண்டதற்கும் மனம் நிறைந்த நன்றி. 




 

நாங்கள் பார்த்தவரை குஜராத்திக் காரர்களின் உணவு முறை ரொம்ப வித்தியாசமாக இருந்தது. நல்ல மதிய வேளையில் தட்டில்  Fafda, khakra, ghatiya, jilebi போன்ற வரட்டுத்தனமான  கரமுரா தீனிகள் (ரிப்பன் பக்கோடா, காராசேவு மாதிரி), ஆனால் முழுக்க முழுக்கக் கடலை மாவு பண்டங்கள், ஜிலேபி தவிர. ஆனால் சூடான ஜிலேபி அருமை. நாங்கள்  சுடச் சுட (ஒரு 2 round)  வாங்கி ருசித்தோம்),  இவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு பக்கத்தில் ஒரு டீ-யையும் சுவைத்துக்கொண்டே மதிய உணவை முடித்து விடுகின்றனர். எங்களுக்கு சாதம், சாம்பரைப் பார்ப்போமா என்றாகிவிட்டது. 


விமான நிலையத்தில் எங்கள் குழு baggage checking ஐ அடைந்தது. அங்கிருந்த சேவகி எங்களின் ஒரு பையின் ஜிப்பை ஹிரண்யகசிபு வயிற்றைப் பிளப்பது போல் சர் ரென்று பிரித்து கொஞ்சம் கூட தயவு தாட்சண்யம் இல்லாமல் உள்ளிருந்து ஒரு சிறிய பொட்டலத்தை சரக்கென்று எடுத்து உயர்த்திக் காண்பித்து 'இது என்னது' என்றாள். அருகில் இருந்தோர் எங்களைத் திரும்பிப்பார்க்க, அதுவரை, விமானப் பயணம், அற்புத தரிசனங்கள், அருமையான அனுபவங்கள், உள்ளூர் கார் பயணம், போன்றவற்றால் ஏற்பட்ட சற்று மதர்ப்பான, மிதப்பான எண்ணங்கள் அக்கணமே பூண்டோடு (பூண்டால்) அழிந்தன. சேவகி உயர்த்திப் பேசியது (காட்டியது😁) தேப்லாவுக்காக அக்கடைக்காரன் குடுத்த சட்னி. தேப்லாவில் போட முடியாததைச்  சேர்த்து வைத்து இவற்றில் பூண்டை அள்ளித் தெளித்திருந்தான். நாங்கள் அதைக் கவனிக்காமல் flight பிடிக்கும் அவசரத்தில் வாங்கி அள்ளிப் போட்டுக் கொண்டு வந்துவிட்டோம். சும்மா சொல்லக்கூடாது,  பூண்டின் முழு ம(பரிமா)ணத்தையும் சட்னியின் வாயிலாக  வெளிக்கொண்டு வருவதில், புது முகங்களின் முழுத் திறமையையும் வெளிக்கொண்டு வரும் இயக்குனர் KB sir ஐ ஒத்திருந்தான் அந்த குஜராத்தி cook. உடனேயே சேவகி கையிலிருந்த பாக்கெட்டோடு  மீதமுள்ள அனைத்து சட்னி பாக்கெட்டுகளும் விமான நிலைய  trash bin ஐத் தஞ்சமடைந்தன. அப்போது பரவிய சட்னி மணத்தால் ஏற்கெனெவே ரொம்ப சுமாராக இருந்த ராஜ்கோட் விமான நிலையம் (நம்ம சென்னை, மும்பை ஏர்போர்ட் எல்லாம் வேற லெவல்👍🏻) மேலும் தன் சோபையை இழந்தது !


ஒருவழியாக விமானம் ஏறி மும்பை வந்து சேர்ந்தோம்.எங்களுக்காக எங்கள் boss அனுப்பியிருந்த காரில் ஏறி, வரும் வழியில் எல்லா அனுபவங்களையும் அசை போட்டுக் கொண்டும் சிரித்துக் கொண்டும் வீடு வந்து சேர்ந்தோம். இரவு, சொல்லமுடியாத மனம் முழுக்க நிறைந்திருந்த ஆனந்தப் பெருக்கினால் தூக்கம் வரவில்லை.🙏🏻


நன்றி சொல்லும் நேரம்🙏🏻:


எங்கள் முழு பயணச் செலவையும் (வீட்டிலிருந்து கிளம்பி யாத்திரை முடிந்து திரும்ப வீடு வந்து சேரும்வரை) ஏற்றுக்கொண்டு மறக்க முடியாத அனுபவங்களை எங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு,  புண்ணியம் அனைத்தையும் (பிரதிபலன் எதிர்பாராமலேயே) சேர்த்துக்கொண்ட எங்கள் employer/ Boss க்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் போதாது. அவர்தம் குடும்பம் முழுதும் அனைத்து நலன்களோடும் சகல சௌபாக்கியங்களோடும் இருக்கவேண்டும் என்று அந்த துவாரகா நாதரையும், சோமநாதரையும் வேண்டுவதைத் தவிர வேறு ஒன்றறியோம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻


என் கூடவே பயணித்து, எல்லா நேரத்திலும், விதத்திலும் உற்ற துணையாக இருந்து யாத்திரையை சிறப்பித்த, முழுமையாக்கிய என் தோழிகளுக்கு நன்றிகள்🙏🏻


கூப்பிட்டுக் கூப்பிட்டுத் திகட்டத் திகட்ட தரிசனத்தை வாரி வாரி வழங்கிய துவாரகா நாதருக்கும், சோமநாதருக்கும்  நன்றி கூறி முடித்துவிட முடியுமா? அம்மையப்பா, நாராயணா, நின் பாத மலர் பணிய, அதைப் பற்றிக்கொள்ள உனக்கே யான் அடிமையாக, நீயே அருள் செய்வாய் அப்பனே😓😓😓😓😓🙏🏻🙏🏻🙏🏻🙏🏻


எங்கும் சிவாய

எதிலும் சிவாய

யாதும் சிவாய

யாவும் சிவாய

உடலும் சிவாய

உயிரும் சிவாய

வேதம் சிவாய

கீதம் சிவாய

காற்றும் சிவாய

ஊற்றும் சிவாய

நீரும் சிவாய

நெருப்பும் சிவாய

மண்ணும் சிவாய

விண்ணும் சிவாய

ஒலியும் சிவாய

ஒளியும் சிவாய

பிரணவம் சிவாய

பிரம்மம் சிவாய

நாளும் சிவாய

கோளும் சிவாய

சர்வம் சிவாய

சகலம் சிவாய

சிவாய சிவ சிவாய

சிவ சிவ சிவாய ஓம் நமச்சிவாய

ஓம் நமச்சிவாய

ஓம் நமச்சிவாய🙏🏻🙏🏻🙏🏻


பயணத்தில் தொடர்ந்து இணைந்திருந்த உங்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி. வேறொரு பதிவில் மீண்டும் சந்திப்போம். அதுவரை… நட்புடன் விஜி வெங்கடேஷ்.


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

10 ஜூலை 2024


8 கருத்துகள்:

  1. நிறைவுப் பகுதியை சுருக்கமாக சொல்லியிருந்தாலும், சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறீர்கள்..  அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பயணத்தொடரில் தொடர்ந்து வந்து கருத்துக்களை வழங்கி, புதிய பதிவருக்கு ஆதரவு தந்த உங்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. வாசகம் அருமை.
    த்வாரகா மற்றும் சோம்நாத் பயண அனுபவங்களை பகிர்ந்து கொண்ட விஜி அவர்களுக்கு நன்றி. விமான நிலைய அனுபவத்தை நல்ல நகைச்சுவை உணர்வுடன் சொல்லி இருக்கிறார்.
    உணவு படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் மற்றும் படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      இந்தப் பயணத்தொடரில் தொடர்ந்து வந்து கருத்துக்களை வழங்கி, புதிய பதிவருக்கு ஆதரவு தந்த உங்களுக்கு நன்றி.

      நீக்கு
  3. உங்களுக்குப் பின்னால வந்தவங்க, ஆஹா ஏர்போர்ட் லவுஞ்ச்லருந்து நல்ல வாசனைன்னு நினைச்சுருப்பாங்க!!!!!!!!

    பயண அனுபவங்களைப் பகிர்ந்ததற்கு நன்றி விஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பயணத்தொடரில் தொடர்ந்து வந்து கருத்துக்களை வழங்கி, புதிய பதிவருக்கு ஆதரவு தந்த உங்களுக்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  4. இறுதியில் முடித்த வாக்கியங்கள் வெகு சிறப்பாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....