அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
சென்ற ஞாயிறு அன்று தலைநகர் தில்லியின் ஒரு பகுதியான நோய்டா பகுதியில் நடந்த சரஸ் ஆஜீவிகா மேளாவில் எடுத்த சில நிழற்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டது நினைவில் இருக்கலாம். முதல் பகுதியை இதுவரை வாசிக்கா/பார்க்காவிட்டால் பார்த்து விடுங்களேன். இது போன்ற மேளாக்களில் நம் நாட்டின் பல பகுதியிலிருந்து கலைஞர்கள் வந்து தங்கள் திறமையால் உருவான பொருட்களை காட்சிக்கு வைப்பதோடு விற்பனையும் செய்யமுடிகிறது என்பது பாராட்டுக்குரிய விஷயம். இந்த வருடத்தின் பிரதான Theme - ஆக இருந்தது இந்திய அரசாங்கத்தின் LAKHPATI DIDI (லட்சாதிபதி அக்கா) என்கிற திட்டத்தின் கீழே பெண்கள் உருவாக்கிய பொருட்கள், அவர்களுக்கு கிடைக்கும் வரவேற்பு என்பதாக இருந்தது. நிறைய பொருட்கள், வித்தியாசமான கலைகள் என நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும் திறமைகளை வெளிக்கொணர இது போன்ற நிகழ்வுகள் ஒரு வாய்ப்பாக அமைகிறது என்பதில் சந்தேகமில்லை. நாங்கள் பார்த்த விஷயங்களை நிழற்படங்கள் வாயிலாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடிவதில் மகிழ்ச்சி. இதோ இந்த வார ஞாயிறில் மேலும் சில படங்களை பார்க்கலாம் வாருங்கள்…
******
இந்த வாரத்தின் நிழற்பட உலா பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
21 ஜூலை 2024
இந்திய அரசாங்கத்தின் LAKHPATI DIDI (லட்சாதிபதி அக்கா) என்கிற திட்டத்தின் கீழே பெண்கள் உருவாக்கிய பொருட்கள், //
பதிலளிநீக்குமிக மிக நல்ல விஷயம்.
லட்சாதிபதியானாங்களா என்ற கேள்வி ஒரு புறம் இருந்தாலும், அவர்களுக்குத் தங்கள் திறமைகளைக் காட்டவும் இப்படி நாங்கள் செய்கிறோம் என்று உலகிற்குத் தெரியப்படுத்தும் வகையில் அமைப்பதும், அவர்களின் வாழ்வாதாரத்திற்கேனும் வழிவகுக்கும் என்பதும் மிகவும் பாராட்டிற்குரியது.
உலகிற்கும் நம் இந்திய கலைஞர்களின் திறமை தெரியவருமே! எவ்வளவு பெருமைக்குரிய விஷயம்!
கீதா
இந்த திட்டத்தின் மூலம் லட்சாதிபதி ஆனவர்களும் உண்டு. அப்படி ஒரு சிலரை இந்த இடத்தில் சந்தித்தேன்.
நீக்குபதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.
அந்த அக்கா வரைவது செமையா இருக்கு. என்ன திறமை நுணுக்கமாக வரையும் திறன்.
பதிலளிநீக்குகேமலின் water proof drawing ink பார்த்துக் கொண்டேன். வரைந்ந்த காலம் போய் நான் வரைந்திருந்த படங்கள் எல்லாம் வீடுகள் மாறியதில் அதுவும் இங்கு வாடகை வீடுகளில் ஷெல்ஃப் அல்லது ஷோகேஸ் என்பதே பல வீடுகளில் இல்லை என்பதால் எல்லாம் போச்!! பராமரிக்க முடியாமல். இப்போது வரைவதில்லை என்பதால் அந்தப் பக்கம் சென்று புதிய அறிமுகங்களைப் பார்க்கவில்லை. இருந்தாலும் நம் வீட்டுக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கலாமே! என்று குறித்துக் கொண்டேன்.
கீதா
அவர் வரைவதை பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றியது. அத்தனை வேகமும், நுணுக்கமான வேலையும் அவரிடத்தில்...
நீக்குவரைவது பெரிதல்ல, அதனை பாதுகாப்பதும் பெரிய வேலை தான். எங்கள் வீட்டிலும் பாதுகாப்பது கடினமாகவே இருக்கிறது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
பெண்களின் கலைத்திறனையும், கைத்திறனையும் நாம் எல்லோரும் அறிவோம். மிக அருமையாக இருக்கிறது.
பதிலளிநீக்குகலைத் திறமை அவர்களிடம் நிறையவே இருக்கிறது என்பது உண்மை. இப்படியான வேலைகளுக்குத் தேவையான பொறுமையும் அதிகமே.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.
அந்த இங்க் பார்த்ததும் என்னுள்ளே பதுங்கியிருக்கும் படங்கள் வரையும் ஆசை எட்டிப் பார்க்கிறது!
பதிலளிநீக்குமண்பாண்டங்கள் மனதைக் கவர்க்கின்றன.
கீதா
நேரமும் வாய்ப்பும் கிடைத்தால் நீங்களும் வரைந்து பார்க்கலாம்.
நீக்குமண் பாண்டங்கள் - எனக்கும் பிடித்திருந்தன - ஆனாலும் வாங்கி வரவில்லை - எனக்கு பராமரிப்பது கடினம் என்பதால்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
வெங்கட்ஜி, நீங்க தலைல அந்த சுளகை வைத்துக் கொண்டு எடுத்திருக்கும் புகைப்படம் பார்த்து சிரித்துவிட்டேன்!! ஆனா அந்த ஷாட் அருமையான ஷாட். உங்க டீ ஷர்ட்ல வரையப்பட்டிருக்கும் கோடு கரெக்ட்டா அங்க சுவர்ல இருக்கும் பெண்ணின் படத்துக்கு போய் முடிவதும், அந்தப் பெண் பாப் அப் ஆகி ஏதோ விளம்பரத்துக்கான பொருள்? அதைக் காட்டுவதும் செம ஷாட்!!!! நல்ல கற்பனை வளம் பொருந்தியவர் எடுத்திருக்கும் ஷாட்! மிகவும் ரசித்துப் பார்த்தேன் எடுத்த உங்க நண்பருக்குப் பாராட்டுகளைச் சொல்லிடுங்க!
பதிலளிநீக்குகீதா
இது சுளகு போல இருந்தாலும், அந்த ஊரில் இதை மழைக்கு குடை போலவும் பயன்படுத்துவார்களாம். பெரிய அளவில் இருக்கும் - இங்கே பார்ப்பது ஒரு சிறு மாதிரி மட்டுமே.
நீக்குபடம் எடுத்தவருக்கு உங்கள் பாராட்டுகளைச் சொல்லி விட்டேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
காதணிகள் செமையா இருக்கு.
பதிலளிநீக்குஎல்லாப் படங்களையும் ரசித்தேன்.
கீதா
காதணிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
நீக்குபடங்களை ரசித்தமைக்கு நன்றி கீதா ஜி.
நிழற்பட உலா உண்மையிலேயே கண்கவரும் வண்ணமாக இருக்கின்றன.
பதிலளிநீக்குநம் கலைஞர்கள் எவ்வளவு நுணுக்கமாக ஒவ்வொன்றையும் செய்கிறார்கள். இவர்களின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கிறதா என்றால் அது கேள்விக்குறிதான். அவர்கள் செய்யும் கலைப்பொருட்களும் சரி, உபயோகப் பொருட்களும் சரி எல்லாமே மனதையும் கண்களையும் கவர்கின்றன.
துளசிதரன்
நிழற்பட உலா உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
நீக்குநுணுக்கமான வேலைப்பாட்டுக்கு உண்டான ஊதியம் கிடைப்பது இல்லை என்பது நிதர்சனம். அங்கே தான் பலரும் பேரம் பேசுவார்கள் என்பதும் காணக் கிடைத்தது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துளசிதரன் ஜி.
ரசனையான படங்கள் ஜி
பதிலளிநீக்குபடங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குபெண் கலைஞர்களின் கைத்திறனில் உருவானவற்றைச் சந்தைப் படுத்தும் திட்டம் சிறப்பு. படங்கள் அனைத்தும் அருமை.
பதிலளிநீக்குபதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குகலைத்திறன் மிகுந்த பொருட்கள் செய்வதை ஊக்கப்படுத்துவது நன்று.
பதிலளிநீக்குபொருட்கள் அனைத்தும் மிகுந்த அழகாக இருக்கின்றன.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.
நீக்கு