அன்பின் நண்பர்களுக்கு, இனிய மாலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி இரண்டு பதிவினையும் இன்று காலை வெளியிட்ட காசி விஸ்வநாதர் கோயில் பதிவையும் படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.
*******
நம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு, அதிலும் நாம் மதிப்பு வைத்திருக்கும் ஒருவருக்கு பிறந்த நாள் என்றால் அனைவருக்கும் மகிழ்ச்சி தானே. இப்படியான மகிழ்ச்சியான தருணத்தில் பிறந்த நாள் கொண்டாடும் நபருக்கு ஒரு வாழ்த்துப்பா எழுதுவது அவருக்கு மட்டுமல்ல, நமக்கும் சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சி தரக் கூடியது. திருமணங்களில் கூட இப்போதெல்லாம் அழகிய வாழ்த்துப்பா எழுதி, அதனை அழகிய வடிவில் Frame செய்து தருவது கூட நிறைய நடக்கிறது. அப்படி சில நாட்கள் முன்னர், தனது எழுபதாவது பிறந்த நாளைக் கொண்டாடிய உறவினர் திரு நரசிம்மன் அவர்களின் பிறந்த நாளுக்காக திருமதி விஜி வெங்கடேஷ் எழுதிய ஒரு வாழ்த்துப்பாவை நம்முடனும் பகிர்ந்து கொள்கிறார் - ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.
******
ஊர் முழுதும் உங்களைப் பற்றியே புகழ்ச்சி;
உறவினர் மனதிலோ சொல்லொண்ணா நெகிழ்ச்சி!
ஒருவர் தன் தங்கை, தம்பிகளுக்கு தகப்பனாகலாம் நடக்கும்!
மனைவியின் தங்கை,தம்பிகளுக்கும் தகப்பனாவது நடக்குமா? நடக்கும்!
உணர்ந்தோர் மனமூலையில் அது என்றும் கிடக்கும்!
நாமும் இப்படி இருக்கமாட்டோமா எனும் ஏக்கம் பிறக்கும்;
அதை செயல்படுத்த நல் வகையும் பிறக்கும்;
பாசமெனும் இனிப்பை அள்ளிக் குடுப்பார்;
கண்டிப்பெனும் மருந்தையும் ஊட்டி விடுவார்!
சிரம காலங்கள் வந்தபோதும் அதை சிரசில் பாரமாய்க் கொண்டதில்லை;
கொண்டவள் மனதை ஒருபோதும் சிதைத்ததில்லை!
வெறுப்பெனும் விதையை மனதில் விதைத்ததில்லை;
விரக்தியெனும் விஷத்தை அண்ட விட்டதுமில்லை;
கடும் உழைப்பின் மறு உருவம்!
வெறும் பிழைப்புதானே என சலியாத உள்ளம்!
நகைச்சுவை உணர்வு இவர் தொப்பியில் இன்னொரு சிறகு;
அனுபவித்தோர் அசைபோடுவது அதனினும் சிறப்பு!
இவர் வாழ்க்கைப் பெட்டகத்தில் மின்னும் தங்கநகையாய் துணை, ஜொலிக்கும் வைரக் கற்களாய் மகள்கள்; முத்து முத்தாய் நல் மருமகன்கள்! அரிய பவளங்களாய்ப் பேத்திகள்; மேலும் நவ மணிக் கற்களாய் உற்றோர் உறவினர்!
இவை எல்லாம் இவர் குணத்திற்குக் கடவுளின் பரிசு!
அந்த பரோபகார சிந்தை ரொம்பப் பெருசு!
அதைச் சொல்லப்புகும் என் எழுத்தாற்றல் ரொம்ப சிறுசு;
ஆனாலும் நெகிழ்ச்சியில் நிறைகிறது மனசு🙏🏻
எளிமையான தோற்றம்;
புன்னகை அணிந்த முகம்;
எளியோரிடம் கரிசனம்;
எவரிடமும் அன்பு;
அளவிளாத குடும்பப் பற்று;
அவைகளை முயல்வோம் இவரிடம் கற்று!
தீர்க்க ஆயுள் ஆரோக்யம் சகல ஐஸ்வர்யங்களையும் இவர் மற்றும் இவர் குடும்பத்தார் மேல் பொழிய எல்லாம் வல்ல அந்த முருகனை வேண்டுகிறேன்🙏🏻🙏🏻🙏🏻
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்🙏🏻🙏🏻
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய நாளின் இரண்டாம் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
24 ஜூலை 2024
எங்கள் வணக்கங்களும். மனமார்ந்த வாழ்த்துகள்! பல்லாண்டு வாழ இறைவன் துணை!
பதிலளிநீக்குகீதா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
நீக்குமிக அருமையான வாழ்த்துப்பா
பதிலளிநீக்குவாழ்த்துகள் .
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.
நீக்குவிஜி உங்கள் வாழ்த்துப்பாவும் நல்லாருக்கு. ஆத்மார்த்த வெளிப்பாடு!
பதிலளிநீக்குகீதா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
நீக்குநன்றி உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும்.
பதிலளிநீக்குஇந்தப் பக்கத்திலும் தொடரட்டும் உங்கள் எழுத்து! நன்றி விஜி.
நீக்குவாழ்த்துப்பா நன்று.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.
நீக்குவாழ்த்துப்பா நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குஎங்கள் இனிய வாழ்த்துகள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.
நீக்கு