ஞாயிறு, 28 ஜூலை, 2024

நிழற்பட உலா - சரஸ் ஆஜீவிகா மேளா 2024 - பகுதி மூன்று


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


கடந்த இரண்டு வாரங்களாக ஞாயிற்றுக் கிழமைகளில் தலைநகர் தில்லியின் ஒரு பகுதியான நோய்டா பகுதியில் நடந்த சரஸ் ஆஜீவிகா மேளாவில் எடுத்த சில நிழற்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டது நினைவில் இருக்கலாம். அந்த பதிவுகளுக்கான சுட்டி கீழே…


சரஸ் ஆஜீவிகா மேளா - 2024 -  பகுதி ஒன்று 


சரஸ் ஆஜீவிகா மேளா - 2024 -  பகுதி இரண்டு


மேலே தந்திருக்கும் இரண்டு பகுதிகளை இதுவரை வாசிக்கா/பார்க்காவிட்டால் பார்த்து விடுங்களேன்.  இந்த மேளாவில் எல்லா மாநிலங்களிலிருந்தும் தங்களது கலையும், கலை குறித்த தகவல்களும், அவர்களது கலையால் விளைந்த பொருட்களை காட்சிக்கு வைத்திருந்தார்கள் என்றால், நம் ஊரில் இருந்து வந்தவர்கள் குறித்து அதிகம் சொல்வதற்கில்லை.  மூன்று நான்கு கடைகளே நம் தமிழகத்திலிருந்து இருந்தது.  நெசவுத் தொழில் செய்பவர்கள் தங்களது கைவண்ணமாக புடவைகள், கைலி, துண்டுகள் போன்றவற்றை காட்சிக்கும், விற்பனைக்கும் வைத்திருந்தார்கள்.  இரண்டாவதாக பார்த்த கடை தஞ்சையிலிருந்து வந்திருந்த ஒரு நபருடையது - வளையல் மற்றும் காதணிகள் விற்பனைக்கு வைத்திருந்தார்கள்.  மூன்றாவது கடை, தற்போது தமிழகத்தில் அதிக பிரபலம் அடைந்திருக்கும் கருங்காலி மாலைகள் கடை! நிஜமாகவே கருங்காலி மாலையா, அவற்றை அணிவதால் கிடைக்கும் பலன் எனச் சொல்வது உண்மையா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்! நான்காவது கடையாக பார்த்தது பன்ரூட்டி நகரிலிருந்து வந்திருந்த முந்திரி விற்பனையாளர்கள்! நம் ஊரில் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றது, அவற்றை எல்லாம் இங்கே காட்சிப் படுத்த யாருமே தயாராக இல்லையே என்ற வருத்தத்துடன் தான் வலம் வந்தேன்.  நம் மாநிலத்தைத் தொட்டடுத்த ஆந்திராவிலிருந்தும், தெலுங்கானாவிலிருந்தும் எத்தனை கடைகள், எத்தனை பொருட்கள் எனப் பார்த்தபோது இந்த எண்ணம் வலுப்பெற்றது.  ஒன்றும் சொல்வதற்கில்லை.


நிழற்படங்கள் உலா வரிசையில் இதோ இந்த வார ஞாயிறில் மேலும் சில படங்களை பார்க்கலாம் வாருங்கள்…























 ******


இந்த வாரத்தின் நிழற்பட உலா பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

28 ஜூலை 2024

18 கருத்துகள்:

  1. வண்ணமிகு படங்கள்.  சுவாரஸ்யம்தான்.  நீங்கள் நிற்கும் ஒரு படம் இரண்டு முறை வந்திருக்கிறது போல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. படங்கள் அனைத்தும் பளிச்சென்று இருக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  3. மிகவும் ஆழமான செய்தி சொல்லும் தத்துவார்த்தமான வாசகம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      நீக்கு
  4. மூன்றாவது கடை, தற்போது தமிழகத்தில் அதிக பிரபலம் அடைந்திருக்கும் கருங்காலி மாலைகள் கடை! நிஜமாகவே கருங்காலி மாலையா, அவற்றை அணிவதால் கிடைக்கும் பலன் எனச் சொல்வது உண்மையா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்!//

    அதை சொல்லுங்க!!!!!

    நீங்கள் சொல்லிருக்காப்ல நம்ம மக்கள் அங்கு அதிகம் கடைகள் வைக்காதது குறையே. காரணம் ஒரு வேளை மொழிப் பிரச்சனையோ? தமிழ்நாடு வடக்கோடு இணைவது கொஞ்சம் குறைவுதான் என்றும் தோன்றுகிறது. பல காரணங்கள் உண்டு.

    படங்கள் எல்லாமே மிக அழகு. அந்த மூங்கில் ட்விஸ்ட் செய்து தொங்கவிடப்பட்டிருப்பது கவர்கின்றது.

    படங்களையும் காணொளியையும் ரசித்தேன, ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  5. மிக அழகிய புகைப்படங்கள்!
    முகப்பு புகைப்படம் மிக மிக அழகு!
    //நம் ஊரில் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றது, அவற்றை எல்லாம் இங்கே காட்சிப் படுத்த யாருமே தயாராக இல்லையே என்ற வருத்தத்துடன் தான் வலம் வந்தேன். நம் மாநிலத்தைத் தொட்டடுத்த ஆந்திராவிலிருந்தும், தெலுங்கானாவிலிருந்தும் எத்தனை கடைகள், எத்தனை பொருட்கள் எனப் பார்த்தபோது இந்த எண்ணம் வலுப்பெற்றது.//
    உங்கள் ஆதங்கம் எனக்கு நன்றாகவே புரிகிறது. தமிழகம் தாண்டி தொலைதூர நகரிலோ அல்லது நாட்டிலோ இருப்பவர்களுக்கு இந்த ஆதங்கம் அடிக்கடி தோன்றும்! உலகிலேயே மிகச் சிறந்த ஏர்போர்ட் உள்ள துபாயில் வசிக்கும் எனக்கு, நம் ஊர் ஏர்போர்ட்டுகளில் தென்படும் சுத்தமின்மையைப்பார்க்கும்போது இந்த ஆதங்கம் அவ்வப்போது ஏற்படும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு
  6. இதைப்படித்தவுடன் தற்போது (மோடி ஆட்சிக்கு வந்த காலங்களிலிருந்து) இரயில்வே நிலையத்தில் ஒரே நாடு ஒரே பொருள் (மாதிரி) ஒரு கடை இருக்கிறது. அதில் அந்தப் பகுதியைச் சார்ந்த பொருட்களை (உதாரணமா தஞ்சாவூரில் தலையாட்டிப் பொம்மைகள், ஓவியங்கள் போன்று. சென்னை செண்ட்ரலில் காஞ்சீபுர புடவைகள்). அவங்கள்ட பேசிக்கிட்டிருந்தபோது, ஏன் பொருட்கள் விலை அதிகம் என்று கேட்டால், அவங்களுக்கு இரண்டு மூன்று வாரங்கள்தாம் லீசுக்குக் கொடுக்கறாங்களாம். அவங்களைப்போல ஒவ்வொரு இரயில் நிலையத்திலும் குறைந்த பட்சம் 100 தயாரிப்பாளர்கள் தங்கள் பொருட்களை விற்க கியூவில் இருக்கிறார்களாம்.

    நம்ம ஆட்கள் கடை விரிக்காததற்குக் காரணம் ஹிந்தி என்பது அந்நிய மொழியாகிவிட்டதுதான். ஹிந்தி மாத்திரம் தெரிந்திருந்தால், நிச்சயம் இன்னும் ஏகப்பட்ட கடைகள் தமிழகத்திலிருந்து போயிருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  7. விதம் விதமான கலைப்பொருட்களின் அணிவகுப்பு. அனைத்தும் அருமை. வாசகம் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  8. வாசகம் அருமை, படங்கள் , காணொளி அருமை.
    ஒரு படம் மட்டும் (மரகைவினை பொருள் கடை படம்) இரண்டு முறை வந்து இருக்கிறது.
    கடைக்காரர் எல்லோர் இடமும் பேசினீர்கள் போலும்.
    கலைப்பொருட்கள் எல்லாம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  9. கைப்பணிப் பொருட்கள் நன்றாக உள்ளன.

    அந்தக் குழந்தை ரசித்துப் பார்ப்பது அழகிய படம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....