ஞாயிறு, 14 ஜூலை, 2024

நிழற்பட உலா - சரஸ் ஆஜீவிகா மேளா 2024 - பகுதி ஒன்று


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


தலைநகர் தில்லி மற்றும் National Capital Territory of Delhi என்று அழைக்கப்படும் அதன் தொட்டடுத்த நோய்டா, காசியாபாத், ஃபரிதாபாத், குருகிராம் போன்ற பகுதிகளில் குளிர் நாட்களில் நிறைய விழாக்கள், கண்காட்சிகள் போன்றவை நடப்பது வழக்கம். வெளியில் சுற்றி வருவது இந்த நாட்களில் அலுப்பு தராத விஷயம் என்பதால் அப்படியான நாட்களில் நானும் நண்பர்களும் வார இறுதிகளில் தேடித்தேடி இப்படியான நிகழ்வுகளுக்குச் செல்வது வழக்கம். முன்பு பத்மநாபன் அண்ணாச்சியும் நானும் சென்று வந்தோம் என்றால் தற்போது அலுவலகத்தில் உடன் பணிபுரியும் இரு நபர்கள் என்னுடன் சேர்ந்து சுற்றுகிறார்கள்.  அப்படி சென்று வந்த ஒரு நிகழ்வு SARAS AAJEEVIKA MELA என்ற நிகழ்வு.  


இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த கலைஞர்கள், உழைப்பாளிகள் என பலரும் அவரவர் கை வண்ணங்களில் உருவான ஓவியங்கள், பொருட்கள் என பலவற்றை விற்பனைக்கும் காட்சிக்கும் வைத்திருந்தார்கள். அந்த மேளாவில் எடுத்த நிழற்படங்கள் இன்று முதல் வரும் சில ஞாயிறுகளில் வெளிவர இருக்கிறது.  முதல் பகுதியாக சில படங்கள் உங்கள் பார்வைக்கு… 























******


இந்த வாரத்தின் நிழற்பட உலா பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

14 ஜூலை 2024


18 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  2. பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. வாசகம் அருமை. தில்லி நிகழ்வுகள் படங்கள் எல்லாம் அருமை.கெட்டில், மரநாற்காலி, டீப்பாய் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் மற்றும் பதிவு வழி படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      நீக்கு
  4. படங்கள் அனைத்தும் மிகவும் சிறப்பாக இருக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      நீக்கு
  5. விஜி வெங்கடேஷ்14 ஜூலை, 2024 அன்று 11:32 AM

    அழகான ஓவியங்கள்.எழுத்தும் சரளமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி விஜி.

      நீக்கு
  6. சுமார் இரண்டு ஆண்டுகளாக என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் (முதலில் தமிழில், தொடர்ந்து ஆங்கிலத்தில்) நூல் பணி காரணமாக வலைப்பூ பக்கம் வர இயலா நிலையில் இருந்தேன். தமிழ்ப்பதிப்பு வெளிவந்துவிட்டது. ஆங்கிலம் இம்மாத இறுதிக்குள் வரவுள்ளது. இனி வலைப்பூவில் நண்பர்களின் பதிவுகளைப் பார்ப்பேன் என எண்ணுகிறேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களது அயராத உழைப்பு பிரமிக்க வைக்கிறது. உங்களது பணி மேலும் சிறக்க வாழ்த்துகள் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  7. உங்களுடன் உலா வந்த உணர்வு. வழக்கம்போல படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் படங்கள் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  8. அழகிய படங்கள் ஜி. அந்த டீ கெட்டில் மிக அழகு! ஓவியங்கள் செம. நாற்காலி யும் டீப்பாயும் சூப்பரா இருக்கு,

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  9. மதுபனி ஓவியங்கள் மற்றும் கலைப் பொருட்கள் அனைத்தும் அருமை. படங்களுக்கு நன்றி. வாசகம் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....