செவ்வாய், 22 அக்டோபர், 2024

கதம்பம் - பொறியாளர் தினம் - வேண்டும் வேண்டும் - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட நடை நல்லது - பகுதி பத்து பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்த வாரமும் விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய கதம்பம் பதிவு ஒன்று உங்கள் பார்வைக்கு - வெங்கட், புது தில்லி. ஓவர் டு விஜி வெங்கடேஷ். 


******


பொறியாளர் தினம் - 15 செப்டம்பர் 2024:



பொறியாளர் என்பது வெற்றுச் சொல் அல்ல, ஒரு வெற்றிச் சொல்!

எதிலும் மாற்றி யோசிக்கும் திறமை;

இறங்கி செயலாற்றும் எளிமை ;

பார்த்தவுடன் பொறி தட்டும் அறிவு;  

வேலையில் நேர்த்தி எனும் செறிவு;


கண்டுபிடிப்பு விஞ்ஞானியில் தொடங்கும்; பொறியாளரிடம் அடங்கும்!


விண்வெளி முதல் சமையலறை வரை சகல கருவிகளுக்கும் இவர்கள் தந்தை!


அது செயலாற்றும் விதம் அவர்களுக்கே புரியும் விந்தை;

ராக்கெட் முதல் எலக்ட்ரிக் சாக்கெட் வரை;

கணினி முதல் luxury கார் வரை;

அனைத்தும் இவர்களின் கை வண்ணம்;

அவற்றின் மூலம், அவர்தம் எண்ணம்!

எந்த நேரத்திலும் எல்லா இடத்திலும் இவர்கள் பணி தேவை;

இவர்கள் பார்த்ததில்லை தங்கள் சுயத் தேவை!

வேலையில் காலம் நேரம் எனும் எல்லையில்லை.

அதைப் பற்றி இவர்களுக்கு கவலையுமில்லை;

தொழில் நுட்பம் இவர்களால் சிறப்பாய் மலரும்;

பொருளாதாரம் அதனால் அபாரமாய் வளரும்;


வாழ்க பொறியாளர்; வளர்க அவர்தம் பணி!💐💐💐


Happy Engineer's Day!🌹🌹🌹


******


*வேண்டும் வேண்டும்*🙏🏻🙏🏻 - 22 செப்டம்பர் 2024:



தெய்வ அருள், உடல் பலம், மன நலம் வேண்டும்.

யாரையும் மனதாலும் நிந்திக்காதிருக்க வேண்டும்.

பழைய குப்பைகளை சிந்திக்காதிருக்கவெண்டும்;

மன்னிக்கவும் மறக்கவும் பழக வேண்டும்;

யாரிடமும் எதையும் யாசிக்காமல் இருக்க வேண்டும்;

தர்மம் ஒருபோதும் யோசிக்காமல் செய்ய வேண்டும்;

எந்நேரமும் கடவுளை  மனதில் இறுத்தவேண்டும்;

நல்லவைகளை நினைவில் நிறுத்த வேண்டும்;

அல்லவைகளை வெறுத்து ஒதுக்க வேண்டும்;

பிறர் குற்றங்களை பொறுக்க வேண்டும்;

தன் குற்றங்களை அகற்ற வேண்டும்;  

தான் எனும் எண்ணத்தைக் களைய வேண்டும்;

நல்ல சொற்பொழிவுகள் கேட்க வேண்டும்;

நல்ல இலக்கியங்கள் படிக்க வேண்டும்;

தர்ம காரியங்கள்  செய்து முடிக்க வேண்டும்;

கோவில்கள் செல்ல அருள் கிடைக்க வேண்டும்;

மனம் வாக்கு காயத்தால் (உடல்) சேவை செய்ய முடிய வேண்டும்.

பிறந்த பயனை அடைய வேண்டும்;

உன் தாளை மறவாதிருக்க வேண்டும்;

இனி பிறவாதிருக்க வேண்டும்;

இது அனைத்தும் உன்னிடம் வேண்டும் எனக்கு இன்றே

விரைவாய்

வருவாய்

அருள்வாய்

மஹா பெரியவா 🙏🏻🙏🏻🙏🏻


மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


பின்குறிப்பு: தனது பிறந்த நாளை கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி கொண்டாடிய திருமதி விஜி வெங்கடேஷ் அவர்களுக்கு இந்தத் தளத்தின் வழியே பிறந்த நாள் வாழ்த்து… - இங்கே வெளியிட ஒரு மாதம் தாமதம் ஆகிவிட்டது என்றாலும் வாழ்த்திவிடுவோம் என வாழ்த்தி இருக்கிறேன் - உங்கள் அனைவரின் சார்பிலும்…


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

22 அக்டோபர் 2024

16 கருத்துகள்:

  1. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், வாழ்க வளமுடன்
    கதம்பம் நன்றாக இருக்கிறது.

    வேண்டும் வேண்டும் கவிதை நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  2. பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. திருமதி விஜி வெங்கடேஷ் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.  காஞ்சி மகான் கருணை அவருக்கு பரிபூரணமாகக் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிறந்த நாள் இதே நாளில் - அதாவது 22-ல். ஆனால் மாதம் செப்டம்பர்! இங்கே ஒரு மாத தாமதம்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. பொறியாளர் தின வாழ்த்து சொல்லி இருப்பதால், அவர் ஒரு பொறியாளராக இருக்கக் கூடும் என்கிற யூகத்தில் அவருக்கு பொறியாளர் தின வாழ்த்தையும் சொல்லிக் கொள்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விஜி அவர்களே பதில் சொல்லியிருக்கிறார் உங்களுக்கு ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. வாழ்த்துக்களுக்கு நன்றி.நான் பொறியாளர் அல்ல.I worked in a manufacturing unit attached office for so many years.so happened to work & move with Engineers.
    விஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து எழுதுங்கள் விஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. விஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    காஞ்சி பெரியார் அருள் அவருக்கு கிடைக்க வேண்டுகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு
  7. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    பொறியாளருக்கான கவிதை சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. தங்களது பொறியாளர் தினக் கவிதை நன்றாக உள்ளது. தங்களது பிறந்த நாள் கவியும் அருமை. தங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.🎉 இதே மகிழ்வோடு நீங்கள் என்றும் வாழ்ந்து தங்களது சிறப்பான பகிர்வுகளை தரும்படி இறைவன் அருளச் செய்ய வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....