ஞாயிறு, 6 அக்டோபர், 2024

நிழற்பட உலா - சுரங்கப் பாதையில் யோகா ஓவியங்கள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட பன்முகத்தன்மையின் பிறந்த நாள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 




******


சற்றே இடைவெளிக்குப் பிறகு இந்த ஞாயிற்றுக் கிழமையில் ஒரு நிழற்பட உலாவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமீபமாக நகர்வலம் சென்று வருவது குறித்து எழுதிக் கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். அப்படி நகர்வலம் வந்தபோது தில்லியின் கனாட் ப்ளேஸ் பகுதியில் உள்ள சுரங்கப் பாதையை பயன்படுத்த வேண்டியிருந்தது. முன்பும் அந்தப் பாதையை பயன்படுத்தி இருக்கிறேன் என்றாலும் சுவர்களில் குட்கா/பான் கரைகளும் குப்பைகளுமாக இருக்கும்! இந்த முறை பார்த்தால் சிறப்பானதொரு ஒரு மாற்றம். எல்லா இடங்களும் சுத்தமாக இருந்தது. அது மட்டுமல்லாது சுவர்களில் வரிசையாக ஓவியங்கள் - யோகாசன முறைகள் குறித்தான அழகான ஓவியங்கள் - பெரிய அளவில் சுவர்களில் மாட்டி இருந்தார்கள். ஓவியங்களுக்கு அருகிலேயே அந்த யோகாவின் பெயர், கொஞ்சம் விளக்கம் ஆகியவற்றையும் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதி வைத்திருந்தார்கள்.  ஓவியங்களின் பின்னணியில் தலைநகர் தில்லியின் பிரபலமான சுற்றுலாத் தலங்களும் வரைந்திருப்பது அழகு! இந்த ஓவியங்களை வரைந்தது தில்லி ஸ்ட்ரீட் ஆர்ட் குழுமத்தினர்!


நல்ல ஒரு முயற்சி இது! இது போன்ற சுரங்கப் பாதைகள் சிறப்பாக பராமரிக்கப்பட்டால் பயன்படுத்துபவர்களுக்கு நல்ல அனுபவம் கிடைக்குமே!  இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கும் புது தில்லி மாநகராட்சிக்கு பாராட்டுகள்.  அங்கே எடுத்த நிழற்படங்கள், இந்த வார நிழற்பட உலாவாக! 



வ்ருக்‌ஷாசன்


ஷஷாங்காசன்


சேதுபந்தாசன்


த்ரிகோணாசன்


பவன்முக்த் ஆசன்


தாடாசன்


வக்ராசன்


புஜங்காசன்


த்யான்


ஷவாசன்


பத்ராசன்


கபால்பாதி


சூர்ய நமஸ்கார்


ப்ராணாயம்



அர்த் உஷ்டாசன்


ஷல்பாசன்


பாதஹஸ்தாசன்


மகராசன்


சுரங்கப்பாதை செல்லும் படிகள்

*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

6 அக்டோபர் 2024


15 கருத்துகள்:

  1. நல்ல யோசனை. சில வருடங்களுக்கு முன் நான் இப்படியாக செய்த ஒரு செயல் நினைவுக்கு வருகிறது! படங்களை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. ஓவியங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. ஓவியங்கள் அனைத்தும் மிகவும் சிறப்பாக இருக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓவியங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. முதல் ஆசனம் வஜ்ராசன் இல்லை. வ்ருக்‌ஷாசன் (மரம் pose) அடுத்தது தாடாசன். இன்று வ்ருக்‌ஷாசன் மற்றும் சேதுபந்தாசன் பண்ணனும்னு நினைத்து மறந்துவிட்டேன். நாளை பண்ணணும். கபால்பாதியும் ப்ராணாயமும் ஆசனத்தில் வராது. ஓவியங்கள் அருமை. அதன்மேல் பான் பராக் துப்பாமல் இருந்தால் சரிதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற்றி விட்டேன். பான் பராக் - ஓவியங்கள் வரைந்து சில மாதங்கள் ஆகிவிட்டன. இதுவரை பான் பராக் கரையில்லாமல் இருக்கிறது. இனிமேலும் தொடரவேண்டும். பார்க்கலாம். ஓவியங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. தினமும் 45-55 நிமிடங்கள் ஆசனங்கள் பண்ணறேன் (ஓரளவு சுமாரா வரும்). 25 சூர்யநமஸ்கார் செய்ய ஆரம்பித்து இரு வாரங்கள் ஆகின்றன. யோகா உடலுக்கு நல்லது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில வருடங்கள் முன்னர் நானும் யோகப் பயிற்சிகள் பழகினேன் நெல்லைத் தமிழன். கொஞ்சம் கொஞ்சமாக அப்படியே விட்டுப்போயிற்று.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. ஜி, கனாட் ப்ளேஸ் சுரங்கப்பாதை படு மோசமாக இருக்கும். அவை இப்போது இப்படி அழகாக அதுவும் நல்ல படங்களுடன் அலங்கரிக்கப்பட்டிருப்பது வெகு அருமை. இதற்காகவே அங்கு வரும் போது இந்தச் சுரங்கப்பாதையில் சென்று பார்க்க வேண்டும் போல இருக்கிறது.

    நன்றாக இருக்கின்றன வரைந்தவர்களுக்குப் பாராட்டுகள்.

    இந்த ஆசனங்களில் ஓரிரண்டைத் தவிர மற்றவை செய்கிறேன்.

    சுவாசப் பயிற்சிகளும் கொடுத்திருக்காங்க. அதுவும் செய்வது ண்டு.

    நடக்கும் போதும், வண்டி ஓட்டினாலும் கூட conscious breathing செய்து பழகலாம் பழகினால் நல்லது என்று என் யோகா மாஸ்டர் சொல்வார். அது நன்றாகவே இருக்கிறது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  7. இதையும் மக்கள் பான் பராக் துப்பி கெடுக்காமல் இருந்தால் சரி. பெங்களூரிலும் இப்படிச் செய்தால் நல்லது. சென்னையிலும் இப்படி சென்ட்ரல் ஸ்டேஷனிலிருந்து பூங்கா ஸ்டேஷனுக்குச் செல்லும் சுரங்கப்பாதை சுத்தமாக இருக்கிறது சென்ட்ரல் ஸ்டேஷனே இப்ப மிக அழகாக இருக்கிறது குறிப்பாக வெளிப்புறம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  8. வாசகம் அருமை. சுரங்க பாதையில் ஓவியங்கள் அருமை.
    நல்லதை சொல்வதும் அதைப்பார்த்து கடைப்பிடிப்பதும் நல்ல விஷயம்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....