அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை முயன்றது குறித்து முன்னர் இந்தப் பக்கத்தில் சில பதிவுகள் வெளிவந்தது. அந்தப் பகுதிகளுக்கான சுட்டி கீழே!
அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஒன்று
பகுதி இரண்டு பகுதி மூன்று பகுதி நான்கு பகுதி ஐந்து
பகுதி ஆறு பகுதி ஏழு பகுதி எட்டு பகுதி ஒன்பது பகுதி பத்து
பகுதி பதினொன்று பகுதி பன்னிரண்டு
அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.
*******
அம்மா உனக்குத் தெரியுமா அந்த நாலாவது வீட்டு மாமி சமைக்கறதே இல்ல, தினமும் swiggy தானாம்.
அங்க வெண்ணெய் இருக்கான்னு பாக்கப் போனபோது தெரிஞ்சுதா கிருஷ்ணா!
*******
கிருஷ்ணா நான் சொல்லித் தரதை திருப்பி சொல்லு, இந்த வெண்ணையை ஊட்டி விடறேன்.
அதுக்கு முன்னாடி என் பக்கத்திலிருக்கற பால் கோவாவை வேணா இப்போதைக்கு சாபிட்டுக்கவாம்மா?
*******
பூ பூவா பறந்து போகும் பட்டு பூச்சி அக்கா நீ பள பளன்னு போட்டிருப்பது யாரு குடுத்த சொக்கா?
Mmmm, உங்கக்கா! தொடாத nack ஆ
*******
நாம சேர்ந்து அடிக்கற லூட்டி அம்மாக்கு தெரியாம பாத்துக்கணும், மத்தபடி மாம்பழத்தை நீயே வெச்சுக்கோ அண்ணா. எனக்கு ரசகுல்லா போதும்
*******
என்னோட பிக்னிக் அனுபவங்களை சொல்லவே ஆரம்பிக்கலை, அதுக்குள்ள தூங்கற மாதிரி நடிக்காத கிருஷ்ணா
*******
அடடா பாத்து நடக்கக் கூடாதா ராதா சரி சரி எழுந்திரு.
நான் அந்த angel ஐப் பாத்துண்டிருந்தேன் கிருஷ்ணா
நான் உன்னைத் தான் பாத்துண்டிருந்தேன் ராதா (விழுவேன்னு தெரியும்)
*******
என் செல்லம், தங்கம், வைரம்,
பட்டுக் குட்டி😘 இனிமே எனக்கு சொல்லாம வெளில போ மாட்ட இல்ல?
அம்மா அடுப்புல பால் பொங்கற வாசனை வருது.
*******
படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
27 அக்டோபர் 2024
இந்த முறை வரிகள் இன்னும் சுவாரஸ்யம். ரசித்தேன்.
பதிலளிநீக்குஉங்கள் ரசிகத்தன்மைக்கு ஒரு salute.
பதிலளிநீக்குவிஜி.
__/\__
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. இன்றைய பதிவுக்கான சகோதரி விஜி வெங்கடேஷ் அவர்களின் அழகான தேர்ந்தெடுத்த படங்களும், அவற்றிற்கு பொருத்தமான வாசகங்களும் அருமையாக உள்ளது.
ராதே கிருஷ்ணா படமும் வாசகமும் ரசித்தேன். எல்லாமும் தெரிந்தவர்தானே அவரும்.அவருக்குப் பிடித்தமான ராதை விழுவதற்கு முன் ஒரு எச்சரிக்கை விட்டிருந்தால் என்னவாம்..? ஆனால் விழுந்து எழுபவளை அவர் சமாதானப்படுத்த வேண்டுமென்பதும் அப்போது நடக்க வேண்டியதே என்பதையும் உணர்ந்தவர். சகலமும் கிருஷ்ணார்ப்பணம். பரந்தாமனே சரணம். 🙏🙏.
பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாசகங்கள் ரசிக்க வைத்தன..ஹா...ஹா....
பதிலளிநீக்குநன்றிகள் ரசித்த அனைவருக்கும்.
பதிலளிநீக்குவிஜி
வரிகள் அனைத்தும் சூப்பர்.....அதுவும் முதல் படத்துக்கான வரி பார்த்து சிரித்துவிட்டேன்!!!
பதிலளிநீக்குகீதா
வாசகம் அருமை.
பதிலளிநீக்குபடங்களும் விஜி கொடுத்த வரிகளும் அருமை.