ஞாயிறு, 13 ஜனவரி, 2019

ஜார்கண்ட் உலா – நிழற்படத் தொகுப்பு




சவாரி போலாமா?... 
சோடியா வந்தாதான் ஏத்திக்குவேன்னு சொல்லிட்டாரு படகோட்டி. அதுவும் காதல் சோடியா இருக்கணுமாம்...  
எங்களுக்கு வேற படகு தான்!
 
இந்த ஞாயிறில் ஜார்கண்ட் மாநிலத்திற்குச் சென்ற போது எடுத்த சில நிழற்படங்கள் உங்கள் பார்வைக்கு. பீஹார் டைரி முடிஞ்சுடுச்சா என்ன என்ற கேள்விக் கணைகளைத் தொடுப்பவர்களுக்கு – இல்லை இன்னும் முடியவில்லை. அதுவும் வரும். எப்படியும் தொகுப்பாக, வரிசைக் கிரமமாக எழுதப் போவதில்லை என முடிவு செய்தாயிற்று! அதனால் இப்படி அங்கேயும் இங்கேயுமாக எழுதி வருகிறேன். இப்படி எழுதுவதில் ஒரு வசதி – எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். வாருங்கள் ஜார்கண்ட் மாநிலப் பயணத்தின் போது எடுத்த சில நிழற்படங்களைப் பார்க்கலாம். 


வளைந்து நெளிந்து போகும் பாதை... 
மங்கை மேகக் கூந்தலோ....


சவாரி போக இந்தப் படகு தான் உங்களுக்குன்னு சொல்லிட்டாரு ஓடக்கார மச்சான்....



வாங்க துடுப்பு போடுவோம்...



அப்படியே ஒரு ரவுண்டு - ரவுண்டு ரவுண்டா போலாம் வாறீகளா?



படகிலிருந்து படித்துறைப் பார்வை...



சும்மா இருப்பது சுகம்....
அதுவும் இப்படி தண்ணியில் மிதப்பது அலாதியான விஷயம்!
நான் சொல்றது ஆத்துத் தண்ணிங்க....



இந்த ஆளை ஃபெவிகால் போட்டு ஒட்டி வச்சுருப்பாங்களோ...



தினம் தினம் இப்படி தொத்திக்கிட்டு தான் பள்ளிக்கூடத்துக்கு போறோம்.... படிப்பு தான் முக்கியம் இல்லையா....



பச்சைப் பசேலென சாலையோர மரங்கள்...  
பயணிப்பது எவ்வளவு சுகமானது...



நானும் அருவிதான்...  மழைக்காலத்துல பாறை தெரியாம பாய்வேன் தெரியுமா....



கோடாலி வைச்சு மரம் வெட்ட மட்டுமே முடியும்னு யாரு சொன்னா.... மரக்கரண்டி, பொம்மைகள் கூட செய்யலாம்.



என் பக்கத்துல நீங்க வர முடியாது....
அதான் நானே உங்க பக்கத்துல வந்துட்டேன்!



மனம் இருந்தால் மார்க்கமுண்டு....
கல்லில் கூட படரும் வேர்...



கிராமிய வீடு 
இந்த வீடு இரண்டு அடுக்கு வீடுங்க...

என்ன நண்பர்களே, படங்களை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். 

நாளை வேறு ஒரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

32 கருத்துகள்:

  1. குட்மார்னிங் வெங்கட். காதல் சோடிகள் மட்டும் என்று காத்திருப்பவர் காதலில் தோல்வியுற்றவராக இருப்பாரோ! ஹா.. ஹா.. ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்....

      காதலில் தோல்வியுற்றவராக இருப்பாரோ? ஹாஹா.... இருக்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    2. காதல் ஜோடிகள்னா ரொம்ப பேரம் பேசாம காசை எடுத்துக் கொடுப்பாங்க. அதுதான் காரணமாயிருக்கும்.

      நீக்கு
    3. ஹாஹா... அதுவும் காரணமாக இருக்கலாம். பொதுவாக உழைப்பாளிகளிடம் நான் பேரம் பேசுவது கிடையாது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  2. சாலைகள் காட்டும் கோடுகள் ஒரு காட்சி என்றால் மரங்கள் காட்டுவது வர்ணஜாலம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வர்ணஜாலம்.... உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. //நான் சொல்றது ஆத்துத்தண்ணிங்க..//

    ஹா.. ஹா.. ஹா...

    சாலையோர மரங்களுடன் கூடிய சாலை... மிக மிக மிக அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. வற்றாத ஜீவ அருவி எதைப்பார்த்து ஆறுதலடையும்! பாறையில் படரும் வேர்... அற்புதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படரும் வேர் - ஒரு வாழ்க்கை பாடம்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. படங்களும் விளக்கமும் மிக மிக அருமை தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணிஜி.

      நீக்கு
  6. இரண்டடுக்கு வீடும் அருமை. அனைத்துப்படங்களும் அதற்கான வரிகளும் ரசிக்க வைத்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  9. படங்கள் அழகு கோடரி ஐயா ஸூப்பர் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  11. படங்கள் அனைத்தும் அருமை. படரும் வேர் அழகாக இருக்கிறது.ஜார்கண்ட் ரோடு மற்றும் மரங்கள் காட்சி அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  12. முதல் படம் அட்டகாசம்...அருவி அழகோ அழகு!

    அந்த வளைந்து செல்லும் பாதை படம் செமையா இருக்கு...இரண்டடுக்கு வீடா?!! ஆஹா அழ்கா இருக்கே...ரொம்பவே/

    எல்லா ஃபோட்டோஸும் அழகா இருக்கு ஜி...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  13. போட் ஓட்டிப் போகும் ஃபோட்டோவும் சூப்பர்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

      நீக்கு
  15. படங்கள் அனைத்தும் அருமை.

    எனக்கென்னவோ அலங்கரிக்கப்பட்ட படகை விட சாதாரணப் படகுதான் காதல் ரசத்தின் சுவையை கூட்டும் என்று நினைக்கிறேன். (நினைப்புதான் பொழப்பே கெடுக்குது).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நினைப்பு தான்..,. ஹாஹா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....