இந்த இடுகையில் பாலக் பனீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம். ஹிந்தியில் ”பாலக்” என்றால் பசலைக் கீரை. பசலைக் கீரையில் விட்டமின் A, K, C, B2, B6 போன்ற பலவிதமான சத்துக்கள் இருக்கின்றன. அதில் போடும் மற்ற பொருளான பனீரிலும் சுண்ணாம்புச் சத்து கிடைக்கும்.
ஆங்கிலத்தில் பாலக் கீரையை Spinach என்று சொல்வார்கள். “THE POPEYE SHOW” பார்த்து ரசிக்காத யாரும் உண்டோ. அதில் பாலக் சாப்பிட்ட உடன் அவருக்கு அப்படி ஒரு சக்தி வரும் இல்லையா, அது போல இந்த பாலக் பனீர் சாப்பிடுங்க, நல்ல சக்தி கிடைக்கும்!
தேவையான பொருட்கள்:
பாலக் [பசலைக்கீரை] : 1 கட்டு.
வெங்காயம் : 2
தக்காளி : 2
பச்சை மிளகாய் : 1 அல்லது 2
இஞ்சி : 1 துண்டு
மிளகாய்த் தூள் : அரை டீ ஸ்பூன்
மல்லித் தூள் : 1 டீ ஸ்பூன்
கரம் மசாலா : ½ டீ ஸ்பூன்
சீரகம் : ½ டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி : ¼ டீ ஸ்பூன்
உப்பு : தேவைக்கேற்ப
எண்ணை : சிறிதளவு [வதக்க]
பனீர் : 200 கிராம்
செய்முறை:
”பாலக்” கீரைக் கட்டினைப் பிரித்து, இலைகளைத் தனியாக ஆய்ந்து, தண்ணீரில் நன்கு சுத்தம் செய்யவும். குக்கரில் வெயிட் போடாமல் 10 நிமிடங்களுக்கு ஆவியில் வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்சியில் மைய அரைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு, சீரகம் போட்டு தாளித்து அரைத்து எடுத்த விழுதினைப் போட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கவும். வதக்கிய பின் அதில் மிளகாய்த் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு நன்கு வதக்கவும்.
வெந்து இருக்கும் பாலக் கீரையை எடுத்து ஆற வைத்து மிக்சியில் நன்கு அரைக்கவும். அரைத்து எடுத்த பாலக் கீரை விழுதை வாணலியில் வதங்கி உள்ள க்ரேவியில் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
பிறகு பனீரை நன்கு தண்ணீரில் சுத்தம் செய்து, சின்னச் சின்னத் துண்டுகளாய் வெட்டி எடுத்து கொதித்துக் கொண்டு இருக்கும் பாலக் கலந்த க்ரேவியில் போடவும். போட்டு ஒரு கொதி வந்த பிறகு இறக்கி வைத்து சூடாகப் பரிமாறவும். பனீர் போட்ட பிறகு நிறைய கொதிக்க விட்டால், பனீர் கெட்டிப்பட்டு சுவை மாறிவிடக்கூடும். இந்த பாலக் பனீர் ஃபுல்கா ரொட்டி, சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.
மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திப்போம் .
ஆதி வெங்கட்
குறிப்பு: கோவை2தில்லி வலைப்பூவில் எழுத ஆரம்பித்த காலத்தில் எழுதிய சில பதிவுகள், இங்கே இந்த வலைப்பூவில் ஒரு சேமிப்பாகவும், மீள் பதிவாகவும் வெளி வர இருக்கிறது. பெரும்பாலான பதிவுகள் உங்களில் பலர் வாசிக்காத பதிவுகள் தான். படித்துப் பார்த்து உங்கள் கருத்துகளைச் சொல்லலாமே!
இனிய மகிழ்வான காலை வணக்கம் ஆதி அண்ட் வெங்கட்ஜி.
பதிலளிநீக்குஆஹா பாலக் பனீர்!!! பார்க்கவே சுவையாக இருக்கே!!!
வரேன் ரெசிப்பி பார்க்க....
கீதா
இனிய காலை வணக்கம் கீதாஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
குட்மார்னிங் திரு அண்ட் திருமதி வெங்கட். பசலைக்கீரையை வைத்து நாங்கள் பாசிப்பருப்புக்கூட்டு மட்டுமே செய்வோம் - சின்ன வெங்காயத்துடன்!
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.
நீக்குபசலைக்கீரை பாசிப்பயறு கூட்டு சின்ன வெங்காயம் சேர்த்து... நல்ல காம்பினேஷன். தில்லி சென்ற பிறகு சின்ன வெங்காயம் சாப்பிட முடிவது இல்லை. கிடைப்பது கஷ்டம். கிடைத்தாலும் அதர்கென தமிழ்க் கடைக்குச் செல்ல வேண்டும்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
குறித்துக் கொண்டுள்ளேன். பசலைக்கீரை கிடைக்கும்போது ஒருமுறை செய்துவிடுகிறேன்....
பதிலளிநீக்குகிடைத்தால் செய்து பாருங்கள். சப்பாத்தி உடன் நன்றாக இருக்கும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
இதில் தயிர் கூட ஒரு ஸ்பூன் சேர்க்கலாமோ....
பதிலளிநீக்குதயிர் சேர்ப்பதை விட ஃப்ரெஷ் க்ரீம் மேலே ஊற்றி அலங்கரிப்பார்கள் ஸ்ரீராம்
நீக்குஇறக்குவதற்கு சற்று முன் ஊற்றவேண்டும், இல்லையா? அல்லது இறக்கியபின்?
நீக்குஅடுப்பை அணைத்ததும் ஊற்றலாம், தெரியணும்னா! ருசி அதில் போய் இறங்கணும்னா அடுப்பை அணைக்கும் முன்னர் ஊற்றிக் கலந்து விடலாம். பெரும்பாலும் ஓட்டல்களில் அலங்காரமாகத் தான் மேலே ஊற்றிக் கொண்டு வந்து தருவார்கள். நாம் சாப்பிடும்போது கலந்து கொள்ளலாம். நான் பெரும்பாலும் வெண்ணெய் சேர்த்துடுவேன்.
நீக்குவட இந்திய தரி சப்ஜி அனைத்திலும் ஃப்ரெஷ் க்ரீம் சேர்ப்பது தான் வழக்கம். அது சுவையைக் கூட்டும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
கீதாம்மா உங்கள் சந்தேகங்கள் அனைத்தையும் தீர்த்து வைத்து விட்டார்...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
இப்போல்லாம் பாலக் அதிகம் கிடைக்காததால் நம்ம முளைக்கீரை, அரைக்கீரையிலேயே இப்படிச் செய்துடுவேன். ஒரு கட்டு வாங்கினால் எங்களுக்கு 2 நாட்கள் வந்துடும். ஒரு நாள் நம்ம முறைப்படி கீரை மசியல், அல்லது தேங்காய் அரைத்துவிட்டு அல்லது மோர்க்கீரை, அல்லது புளிவிட்ட கீரைனு பண்ணிட்டு இன்னொரு நாள் இப்படிச் செய்யலாம். கீரை கொஞ்சமா மிச்சம் இருந்தால் அடை அல்லது வடை மாதிரிப் பண்ணித் தீர்க்கணும். :) காய்களை வாங்குவதை விட அதைச் செலவு செய்வது தான் பெரிய விஷயமா இருக்கு! :)))))
பதிலளிநீக்குதில்லியில் தனியாக இருக்கும்போது ஒரு கட்டு பாலக் வாங்கி அதை இரண்டு நாட்கள் சமைக்க வேண்டியிருக்கும்...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
பாலக் பாக்கிஸ்தானியர்கள் நன்றாக செய்வார்கள்.
பதிலளிநீக்குஹரியானா பெண்கள் மிகவும் சுவையாகச் செய்வார்கள் - மண் அடுப்பில்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
நானும் செய்வேன் ஆனால் குக்கரில் வைக்க மாட்டேன்.
பதிலளிநீக்குகீரைகளை மூடி வேக வைக்க கூடாது என்பார்கள்.
படங்கள் செய்முறை விளக்கம் எல்லாம் நன்றாக இருக்கிறது.
டெல்லியில் பச்சை பசேல் என்று கிடைக்கும் இங்கு நன்றாக இருக்க மாட்டேன் என்கிறது.
ஆமாம் வடக்கே ஃப்ரெஷாக கிடைக்கும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
ஆமாம்,கோமதி, பொதுவாகவே கீரைகளை மூடி போட்டு வேக வைக்கக் கூடாது. வேகும்போது உப்பும் சேர்க்கக் கூடாது. மசிக்கிற கீரைவகைகளுக்கு மசித்த பின்னரே உப்புச் சேர்க்கலாம். அதே போல் பாலக்கும் நான் வேக வைக்கையிலேயே நன்கு வதக்கி விட்டு வேக வைப்பேன். வெந்ததும் மசித்தால் போதும். மிக்சியில் அரைக்கத் தேவை இருக்காது. ஆனால் பாலக் கீரை இங்கே போணி ஆவது கஷ்டம்! :))))) எல்லாக் காய்களுமே தனியாக வேக வைத்தால் நல்லது எனச் சில ஆயுர்வேத மருத்துவர்களும், சித்த மருத்துவர்களும் கூறுகின்றனர். சுமார் பதினைந்து வருஷம் முன்னர் ஆயுர்வேத மருத்துவர் எல். மஹாதேவன் சாதத்தை வெண்கலப்பானை அல்லது மண் பானையில் வடித்துச் சாப்பிடுங்கள் என்றார். அது முதல் குக்கர் சாதமே இல்லை. அவசரத் தேவைக்கு அல்லது வீட்டில் விருந்தினர் வரும்போது. அவங்கல்லாம் குக்கர் சாதம் இல்லையா என்பார்கள்! :)))
நீக்குவடக்கே பெரும்பாலும் வ்ரெக வைத்து தான். கிராமங்களில் இரவு குமுட்டி அடுப்பில் வைத்து காலையில் மசிப்பார்கள். அதன் சுவையே தனி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
நான் சமையல் கத்துக்க ஆரம்பித்ததே குமுட்டி அடுப்பில் தான். ஆனால் வடக்கே உள்ள மாதிரி பெரிய குமுட்டிகள் இல்லை. நம்ம ஊர் இரும்புக் குமுட்டி! விரிந்து போனதை இப்போத் தான் கடையில் போட்டோம்.
நீக்குநெய்வேலி நகரில் இருந்த வரை நானும் குமுட்டி பயன்படுத்தி இருக்கிறேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
நல்ல ரெசிப்பி ஆதி. சூப்பரா இருக்கு...
பதிலளிநீக்குநான் வெங்காயம் தக்காளி இரண்டையும் முதலில் வதக்கிவிட்டு பின்னர் அரைத்த பின்னும் வதக்குவதுண்டு. எல்லா க்ரேவிகளுக்கும் அப்படியே.
வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும் என்பதால் செய்வதுண்டு.
கீதா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
நீக்குபயனுள்ள ரெசிப்பி... மிகவும் பிடிக்கும்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குவணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபாலக் கீரை செய்முறை நன்றாக உள்ளது. நான் கீரைகளை பொதுவாக உப்பு சேர்த்து வேக வைத்துக்கொண்டு கீரை மசிக்கும் மத்து கொண்டு மசித்து விடுவேன். மிக்ஸியில் போட்டதில்லை. தங்கள் செய்முறை நன்றாக உள்ளது. இங்கும் கீரைகள் நிறைய கிடைக்கின்றன. இந்த கீரை கிடைக்கும் இம்மாதிரி செய்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குசாதாரணமாக பாலக் கீரையை blanch செய்தபின் தான் கடைவார்கள்.அதாவது கொதிக்கும் நீரில் 2நிமிடம் முக்கி எடுத்து பின்னர் உடனடியாக குளிர்ந்த நீரில் அலசி எடுப்பது.பாலக் கீரையும் நம் ஊரில் கிடைக்கும் பசலிக்கீரையும் வேறுவேறு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.
நீக்குபாலக் கீரை கொஞ்சம் வழு வழுப்பாக இருக்கும் அல்லவா
பதிலளிநீக்குஆமாம்.... கொஞ்சம் வழுவழுப்பானது தான்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
முன்னலாம் நிறைய வீட்டு வாசல்ல இந்த கீரை இருக்கும் . பசலைக்கீரையா இருக்கும்போது இதன் அருமை தெரில. ஆனா, பாலக் கீரையானப்பின் இதன் அருமை இப்ப எல்லாருக்கும் புரிய ஆரம்பிக்குது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.
நீக்கு@ராஜி, நம்ம ஊர் பசலைக்கீரை வேறே பாலக் வேறே! பசலைக்கீரை பல வியாதிகளுக்கு நல்லது. முக்கியமாக் குழந்தைகளுக்கு மசிச்சுக் கொஞ்சமாப் பருப்பு சாதத்தோடு நெய் சேர்த்துக் கொடுக்கலாம். பாலக் இலையின் தன்மை, ருசி எல்லாமே மாறுபடும் என்றாலும் பசலைக்கீரைக் குடும்பம் என்றே சொல்கின்றனர்.
நீக்குஒரே குடும்பம் என்றாலும் சுவையில் மாறுபாடு தெரிகிறது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
arumaiyana samayal aththudan idahayum satru paarungal nanbargale
பதிலளிநீக்குhttps://www.youtube.com/channel/UCrcWVWtaaYuKR0w1PkZik1Q
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நீக்குhttps://www.youtube.com/watch?v=fYmfPm5VE6s&t=26s
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்கு