ஹைதை சாலையோர உணவு – தவா இட்லி - 1 ஜனவரி 2019
நெடுநாட்களாக ஹைதராபாத்தின் சாலையோர உணவான தவா இட்லியை
செய்து பார்க்க நினைத்திருந்தேன்..இன்று தான் செய்ய முடிந்தது...ரெசிபியை
பகிர்ந்து கொண்ட Kala Sriram க்கு நன்றி.
செய்வது சுலபம் தான். சூடான தவாவில் வெண்ணெய் சேர்க்கவும். உருகும் போது இட்லி மிளகாய்ப்பொடியும் பொடியாக நறுக்கிய
வெங்காயம் சேர்த்து பிரட்டவும்..அதில் இட்லியை போட்டு இருபுறமும் திருப்பி போட்டு
எடுக்கவும். அவ்வளவு தான்.
பிளாஸ்டிக் அரக்கன் - 27 ஜனவரி 2018
ஜனவரி முதல் பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை முற்றிலும்
தவிர்த்து மாற்றுப் பொருட்களை பயன்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் சிறப்பாக செயல்பட்டால் பழைய முறையில்
அண்ணாச்சி கடையில் பொட்டலம் கட்டித் தரும் மளிகைப் பொருட்களும், வாழை இலையில்
கட்டித் தரும் உணவுப் பண்டங்களும், பூக்களும், கடைகளுக்கு எடுத்துச் செல்ல மஞ்சப்பைகளும், துணிப்பைகளும் என
உலா வரலாம்.
இது மக்கள் கைகளில் தான் இருக்கிறது.. நம் பூமியை பாதுகாக்க
ஒவ்வொருவரும் முன் வர வேண்டும்.. பிளாஸ்டிக் என்னும் அரக்கனால் மண்வளம் கெட்டு, உடல்நலன் கெட்டது
போறும்!!! மாற்றுப் பொருட்களின் உபயோகம் அதிகமாகும் என்பதால் அது குறித்த
தொழில்கள் பெருகும். சிறு தொழில் புரிவோருக்கு நல்ல வாய்ப்பு. அது நல்லது தானே!!
வாங்க சாப்பிடலாம்:
ரொட்டியுடன் ஆலு மட்டர் – 30 டிசம்பர் 2018
ரொட்டியும் ஆலு மட்டர் சப்ஜியும்!!! ( சப்பாத்தி், உருளை, பச்சை பட்டாணி
தொட்டுக்கையுடன் )
ரோஷ்ணி கார்னர் : ஓவியம் –
1 ஜனவரி 2019
மகள் வரைந்த
ஓவியம் ஒன்று….
இதே நாளில் என் வலைப் பூவில்....
இதே நாளில், நான் முதலில் எழுதி வந்த கோவை2தில்லி
வலைப்பூவில், 2011-ஆம் வருடம் எழுதிய பதிவு ஒன்று... தில்லி வந்த புதிதில் கிடைத்த
முதல் பனி அனுபவம்....
என்ன நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட கதம்பம் பதிவு
உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்....
நட்புடன்
ஆதி வெங்கட்
இனிய காலை வணக்கம் ஆதி, வெங்கட்ஜி!
பதிலளிநீக்குஆஹா! முதல் படமே இப்படி சாப்பாட்டை காமிச்சு காலைல 5.30 மணிக்கு நாக்கு ஊற வைச்சு உசுப்பேத்தறீங்களே!!! ஹா ஹா ஹா ஹா ஹா
கீதா
இனிய காலை வணக்கம் 🙏 கீதாஜி.
நீக்குமுதல் படம்.... ஹாஹா..... மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
ஆதி! குண்டூரில்/விஜயவாடாவில் இந்த இட்லி செய்யறதைப் பார்த்துட்டு செஞ்சும் பார்த்துட்டேன் நானும் ஹா ஹா ஹா...நீங்களும் இப்படி புதுசா முயற்சி செய்யறது சுப்பர்....ரொம்ப அழகா இருக்கு நீங்க செஞ்சுருக்கறது...பார்த்ததும் இப்பவே நாக்கு ஊறிடுச்சு...
பதிலளிநீக்குகீதா
புதிதாக முயற்சி செய்வதில் எனக்கும் விருப்பம் உண்டு ஜி. விதம் விதமான ருசிகளில் உணவு!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
குட்மார்னிங். தவா இட்லி இட்லி உப்புமாவின் மாறுபட்ட வடிவம் போலிருக்கிறது. சிம்பிள். இட்லி ஃப்ரை தருவார்கள். அதுபோலவும் இருக்கிறது.
பதிலளிநீக்குஅதேதான் ஸ்ரீராம்...இதே போல பொடி இட்லின்னும் சென்னைல இருக்கே...இட்லி மீது பொடி தூவி என்று...
நீக்குகீதா
காலை வணக்கம் 🙏 ஸ்ரீராம்.
நீக்குதவா இட்லியை உதிர்த்தால் உப்புமா ஆகலாம்! இட்லி ஃப்ரை முதற்சி செய்தது உண்டு.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஹோட்டலிலிருந்து இட்லி ஃப்ரை வாங்கி சாப்பிட்டு விட்டு நாங்களும் வீட்டில் அதுபோலவும் முயற்சி செய்திருக்கிறோம். ஆவியில் வெந்த இட்லியைக் கூட ஃப்ரை செய்து சாப்பிட வைக்கும் வியாபாரம்!!!!
நீக்குபொடி தோசை சாப்பிட்டது உண்டு. பொடி இட்லி முயற்சி செய்ய வேண்டும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
ஃப்ரை இட்லு - விதம் விதமாக செய்து மக்களை ஈர்க்க வேண்டிய தேவை இருக்கிறது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
ப்ளாஸ்டிக் ஒழிப்பு நல்ல விஷயம். இங்கு பங்களூரில் நான் இருக்கும் ஏரியாவில் குப்ப வண்டி வந்து மக்கும் குப்பை ப்ளாஸ்டிக் தனி தனியாகத்தான் எடுத்து செல்கிறார்கள்.
பதிலளிநீக்குவாழை இலைப்பயன்பாடு மீண்டும் வந்தால் வாழை வியாபாரிகளும் பயன்பெருவார்கள் விவசாயம் மர்றும் இயற்கை நல்லாருக்கும்...
கீதா
வாழை இலை பயன்பாடு மீண்டும் வந்தால் மகிழ்ச்சி தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
பிளாஸ்டிக் தடை எத்தனை நாட்களுக்கு செயல்படுத்தப்படும் என்பதில் சந்தேகம் உண்டு. பார்ப்போம்!
பதிலளிநீக்குஎத்தனை நாட்களுக்கு? பார்க்கலாம்.... தலைநகர் தில்லியில் கூட சொல்லிச் சொல்லி பார்க்கிறார்கள். ஆனாலும்.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
ஆலு மட்டர், ரொட்டி கவர்கிறது. ரோஷ்ணி அசத்துகிறார்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குபழைய பதிவு - இப்போதுதான் படித்தேன்.
பதிலளிநீக்குகுளிர்கால அனுபவங்கள் சுவாரஸ்யம். அம்புட்டு குளிரா என்று கேட்கத் தோன்றுகிறது. இந்த வருட சென்னையின் குளிர் அதிகமோ என்று எண்ண வைக்கும் அளவு இருக்கிறது.. இதுவே இப்படி என்றால் அங்கு எப்படி இருக்கும் என்றும் தோன்றுகிறது.
ஹாஹா.. நம் ஊர் குளிரைவிட இங்கே அதிகம். கொஞ்சம் கடினம் தான். எனக்கு பழகிவிட்டது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
ரொட்டியுடன் ஆலு மட்டர்!! ஆஹா குளிருக்கு சூப்பரா இருக்கும் வந்தாச்சு சாப்பிட!!!
பதிலளிநீக்குரோஷினி ரொம்ப அழகா வரைஞ்சுருக்கார் வாழ்த்துகள் பாராட்டுகள்! நல்ல திறமை...
முதல் பனி அனுபவம் வாசிக்கிறேன்...
கதம்பம் நல்லாருக்கு
கீதா
கீதா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
நீக்குதவா இட்லி எங்கள் ஊரில் சாப்பிட்ட அனுபவம் இருக்கிறது.பிளாஸ்டிக் உபயோகத்தை குறைக்கும் முயற்சி நல்ல ஆரம்பம்.வழக்கம்போல ரோஷ்ணி கை வண்ணம் மிகவும் அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.
நீக்குதவா இட்லி - எளிய செய்முறை நன்றி...
பதிலளிநீக்குஷாம்பு, சாக்லேட், பிஸ்கட், சமையல் ஆயில், மற்றும் தின்பண்டங்கள் போன்றவை...?
பிளாஸ்டிக் - லிஸ்ட் பெரியது. நல்ல தொடக்கமாக இருக்கும் என நம்புவோம்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
//இது மக்கள் கைகளில் தான் இருக்கிறது.. நம் பூமியை பாதுகாக்க ஒவ்வொருவரும் முன் வர வேண்டும்//
பதிலளிநீக்குஉண்மை சகோ இதற்கு நான் ரெடி இப்பொழுதும் நான் கறிக்கடைக்கு போனால் தூக்குச்சட்டி எடுத்து செல்கிறேன்.
மக்களின் ஆதரவு இருப்பது அவசியம்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
பிளாஸ்டிக் உபயோகம் தவிர்ப்போம் என்று எழுதிவிட்டு பிளாஸ்டிக் தட்டுகளில் இட்லியை வைத்து போட்டோ போடுகிறீர்கள் !!!
பதிலளிநீக்குஅறுபதுகளில் உபயோகித்த மஞ்சள் பையும் கண்ணாடி ஹார்லிக்ஸ் பாட்டில்களும் சணல் சாக்குகளும் பேப்பர் பைகளும் நினைவுக்கு வந்தன. கூடவே எண்ணெய் பாட்டிலை எண்ணெயோடு உடைத்துவிட்டு அடிவாங்கியதும்.
Jayakumar
எவர்சில்வர் தட்டில் வைத்து படம் எடுத்தால் சரியாக வருவதில்லை.
நீக்குபாட்டில் உடைத்து நானும் அடி வாங்கியது உண்டு.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.
இட்லியை சற்றே வித்தியாசமாக உள்ளே தள்ளஒரு வழி
பதிலளிநீக்குஹாஹா. எதையாவது சாப்பிட வேண்டுமே.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
Super easy tawa ldly. Must try. Most Indian states have banned plastic bags. Nice drawn. Roshini explored color and emotion. Congrats.
பதிலளிநீக்குமுயற்சி செய்து பாருங்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.
தவா இட்லி நல்ல இருக்கு. பண்ணிப் பார்க்கலாம்னா இட்லியைத் தவிர மீதி எல்லாம் கைவசம் இருக்கு.
பதிலளிநீக்குரோஷ்ணியின் கைவண்ணம் அருமை.
இட்லி தவிர எல்லாம் இருக்கு! ஹாஹா....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.
தவா இட்லி அருமை .....நானும் செஞ்சு பார்கிறேன் ...
பதிலளிநீக்குரோஷ்ணியின் கைவண்ணம் சூப்பர்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா பிரேம்குமார் ஜி.
நீக்குதங்கள் மகளின் ஓவியம் அருமை
பதிலளிநீக்குவாழ்த்துகள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குமுகநூலில் படித்தேன், பார்த்தேன்.
பதிலளிநீக்குஇங்கும் பார்த்து, படித்து ஆதி, ரோஷ்ணியை வாழ்த்துகிறேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்குஇப்போதைய கல்யாண ரிசப்ஷன் உணவில் இந்த இட்லியும் இடம்பெறுகிறது. ஹார்லிக்ஸ் பாட்டிலில் என் அம்மா வெண்ணெய் எடுக்க பால் ஏடுகளைப் போட்டுக் குலுக்குவார். எனக்குக் கொஞ்சம் பயம். வெண்ணெய் வருதோ இல்லையோ, பாட்டில் கை நழுவி விழ வாய்ப்பு அதிகம். நான் அப்போதும் இப்போதும் எப்போதும் வெண்ணெய் கடைந்தே எடுக்கிறேன்.
பதிலளிநீக்குஎங்கள் வீட்டிலும் கண்ணாடி பாட்டிலில் தான் குலுக்குவோம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.