செவ்வாய், 1 ஜனவரி, 2019

புத்தாண்டுக்கான சில தீர்மானங்கள்...





அன்பிற்கினிய நண்பர்கள் அனைவருக்கும், இனிய புத்தாண்டு வாழ்த்துகள். நமக்குக் கிடைத்த எல்லா நாட்களுமே நல்லவை தான். நமக்குக் கிடைத்திருக்கும் நாட்களை நல்வழியில் பயன்படுத்திக் கொள்வது நம் கையில் தானே. ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு சமயத்தில் சில தீர்மானங்களைச் செய்வது வழக்கம். அந்த தீர்மானங்களை செயல்படுத்துகிறோமோ இல்லையோ, வருடா வருடம் தீர்மானம் செய்வது தவறுவதில்லை! இந்த வருடம் என்ன தீர்மானங்களை எடுக்கப் போகிறீர்கள் என முடிவு செய்து விட்டீர்களா? இந்தப் பதிவு அதற்கு உதவியாக இருக்கலாம்!

பலரும் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்து கொள்ளும் வேளையில், எனக்கு வந்திருந்த, கருத்துச் செறிவுள்ள ஒரு தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. இந்த தகவலை நீங்களும் படித்திருக்கலாம். இருந்தாலும், படிக்காத சிலர் இருக்கலாம் என்பதால் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். பகிர்ந்து கொண்ட கல்லூரித் தோழிக்கு நன்றி. 

இந்தப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்  கூச்சல்களுக்கு நடுவே, எது புத்தாண்டு என்று ஒரு நிமிடம் யோசியுங்கள். எப்போதெல்லாம் புதிய வளர்ச்சி வருகிறதோ, அப்போதெல்லாம் புத்தாண்டுதான். புத்தாண்டு வார்த்தைகளால் கொண்டாட வேண்டியதல்ல. வாழ்க்கையால் கொண்டாட வேண்டியது.

பத்து நிமிடங்கள் முன்னதாக: காலை 6 மணிக்கு எழுபவரா நீங்கள்? 5.50-க்கு எழுந்து பழகுங்கள். கூடுதலாகக் கிடைக்கிற பத்து நிமிடத்தில், அமைதியான காலை நேரத்தில் உங்களின் அன்றைய வேலைக்கான ஆற்றலின் கதவுகள் அகலத் திறப்பதை உணர்வீர்கள்.

பத்து நிமிடங்கள் மௌனமாக: நீங்கள் தியானப் பயிற்சி மேற்கொள்ளாதவராக இருந்தால், விரைவில் சரியான இடத்தில் தியானம் பழகுங்கள். அதுவரை ஒரு நாளின் மத்தியில், பத்து நிமிடங்களாவது மௌனத்தில் இருங்கள்.

முப்பது நிமிடங்கள்: ஒரு நாளின் முப்பது நிமிடங்களை உங்கள் ஆரோக்கியத்திற்காகப் பயன்படுத்துங்கள். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா என்று உங்கள் வழக்கம் எதுவாக இருந்தாலும் சரி.

உணவிலும் ஒழுங்கு: வேலைச் சுமையைக் காரணம்காட்டி உணவு நேரத்தை அடிக்கடி தள்ளிப் போடுவது, உங்கள் உடலியக்கத்துக்குள் பிரச்சினையை ஏற்படுத்தும். உணவுப் பழக்கத்திலும் இதமான முறைகளைக் கையாளுங்கள், வயதுக்கேற்ப சாப்பிடுங்கள்.

Day Task: மறுநாளின் டைரியை முதல் நாளே எழுதுங்கள்.

அடைசல்கள் அகற்றுங்கள்: அடைசல்கள், குப்பைகள், குவிந்துகிடக்கும் கோப்புகள் ஆகியவற்றில் பிரபஞ்ச சக்தி தேங்கிவிடுகிறது. அத்தகைய இடங்களில் செயலாற்றல் தூங்கிவிடுகிறது. 

மனிதர்களை நெருங்குங்கள்: இந்த உலகில் காரணத்துடனோ காரணம் இன்றியோ மனிதர்களை வெறுக்கும்போது, அந்த வெறுப்பு நமக்குள்ளே வேண்டாத சுரப்பிகளைத் தூண்டி பதட்டம் சுரக்க வைக்கிறது. மனிதர்களை நிறைகுறைகளுடன் ஏற்றுக்கொண்டு அவர்களை நேசிக்கத் தொடங்குங்கள். எல்லோரையும் நேசிப்பது அவர்களுக்கு நல்லதோ இல்லையோ, உங்களுக்கு ரொம்ப நல்லது.

அடுத்து என்ன? இதுவே தாரக மந்திரம்: வெற்றியோ தோல்வியோ, சாதனையோ சவாலோ, எது நேர்ந்தாலும் அடுத்தது என்ன என்று கேளுங்கள். அப்போதுதான் அடுத்த கட்டம் நோக்கி நகர முடியும். குழந்தை கண்ணாடியை உடைத்துவிட்டதா? அடுத்தது என்ன? அள்ளிப்போட வேண்டியதுதான். (WHAT NEXT?) இது வெற்றியின் மந்திரங்களில் முக்கியமானது.

நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றுங்கள்: ஒவ்வொருநாள் விடியலிலும் உங்கள் மீது நீங்களே நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றுங்கள். “இதே உற்சாகத்துடன் வேலையில் இறங்கலாம். இன்றைய வேலைகளை சரியாக முடிக்கலாம்” என்று உங்கள் மீது நீங்களே நம்பிக்கை வைத்து நாளைத் தொடங்குங்கள்.

நன்றி அறிவிப்புத் தீர்மானமும் போடுங்கள்: ஒவ்வொருநாள் இரவும் உறங்கப் போவதற்கு முன்னால், (நீங்கள் பி.பி.ஓ. ஆசாமியாய் இருந்தால், ஒவ்வொரு பகலும் உறங்கப் போவதற்கு முன்னால்) நடந்து முடிந்த வேலைகளுக்காக, கடவுளுக்கும் துணை நின்றவர்களுக்கும் மனசுக்குள்ளேயே நன்றி சொல்லுங்கள்.

பணத்துக்கு வேலை கொடுங்கள்: உங்கள் வருமானம் எவ்வளவாக இருந்தாலும் அந்தப் பணத்துக்கு வேலை கொடுங்கள். பணம், தன்னைத்தானே பலமடங்கு பெருக்கிக்கொள்கிற பேராற்றல் உடையது. ஈட்டிய பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். அது தானாகவே பெருகும்.

கடிகாரத்தை மட்டுமல்ல நேரத்தையும் கையில் கட்டுங்கள்: உங்கள் நேரம் உங்கள் பொறுப்பிலும் கண்காணிப்பிலும் இருக்கட்டும். அரட்டை – அவதூறு – அனாவசியமான பேச்சு என்று அடுத்தவர்கள் உங்கள் நேரத்தைக் கொள்ளையடிக்க இடம் கொடுக்காமல் விழிப்புடன் இருங்கள்.

நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்: இறுக்கமாய் இருப்பதால் நாம் எதையும் சாதிக்கப் போவதில்லை – மன இறுக்கத்தையும் மன அழுத்தத்தையும் வளர்த்துக் கொள்வதைத் தவிர!! வெற்றியாளர்களும் வரலாற்று புருஷர்களும் நகைச்சுவை உணர்வு நிறைந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். நகைச்சுவை உணர்வு, வாழ்வின் பூட்டப்பட்ட பல கதவுகளைத் திறந்துவிடும்.

மனிதத்தன்மையே கடவுட் தன்மையின் ஆரம்பம்: மற்றவர்களின் சிரமங்களைப் புரிந்துகொள்வதும், மனித நேயத்துடன் உதவுவதும், மற்றவர்களை மன்னிப்பதும், மனிதர்களின் பகுதிநேர வேலை. கடவுளுக்கோ, முழுநேர வேலை. முதல் உங்களையும், பிறகு மற்றவர்களையும் முழுமனதோடு மன்னித்து, மலர்ச்சியாய் – மகிழ்ச்சியாய் – வாழ்க்கை என்கிற கொண்டாட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுங்கள்.

நல்வாழ்த்துகள்... புத்தாண்டில் தொடங்கும் உங்கள் புதிய வாழ்க்கைக்கு!

மீண்டும் சந்திப்போம்... சிந்திப்போம்..... 

என்றென்றும் அன்புடன்,

வெங்கட்
புது தில்லி.


44 கருத்துகள்:

  1. இனிய புத்தாண்டு காலை வணக்கம் வெங்கட்ஜி!

    மகிழ்வான புத்தாண்டு வாழ்த்துகள் வெங்கட்ஜி, ஆதி, ரோஷினிகுட்டி

    பதிவுக்கு வரேன் நல்லாருக்கே.. விளக்கம் படிச்சுட்டு வரேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாலை வணக்கம் கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. இந்தப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் கூச்சல்களுக்கு நடுவே, எது புத்தாண்டு என்று ஒரு நிமிடம் யோசியுங்கள். எப்போதெல்லாம் புதிய வளர்ச்சி வருகிறதோ, அப்போதெல்லாம் புத்தாண்டுதான். புத்தாண்டு வார்த்தைகளால் கொண்டாட வேண்டியதல்ல. வாழ்க்கையால் கொண்டாட வேண்டியது.//

    உண்மை! அருமையான வரிகள் ஜி!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  3. ஹப்பி நியூ இயர்ர்.. 1ம் திகதி தீர்மானங்கள் எடுப்பதுதான் ஆனால் நிறைவேற்ற நினைப்பது அடுத்த வருடத்தில:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைவேற்றுவதில் சில சிரமங்கள் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா...

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி...

      நீக்கு
  5. அருமையான தீர்மானங்கள். நடத்தினால் நாலாதுதான். குட்மார்னிங் வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. நல்லதுதான் நல்லதுதான் நல்லதுதான் நல்லதுதான்....(இம்போசிஷன்!!!)

    வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் உங்கள்குடும்பத்தாருக்கும் மற்றும் நம் நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் வெங்கட் ஜீ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  8. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  9. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஜி.

    தாங்கள் குறிப்பிட்ட விடயங்களை இனியாவது நான் கடைப்பிடிக்க முயல்வேன் நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல விஷயங்கள்..... கடைபிடிக்க நானும் முயற்சி செய்வேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    அருமையான புத்தாண்டு தீர்மானங்கள். டைட்டில் அனைத்தையும் வாசித்தேன். பிறகு நிதானமாக வாசித்து விட்டு வருகிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  11. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் வெங்கட்ஜி தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்

    புத்தாண்டுத் தீர்மானங்கள் எல்லாமே அருமை. ஆனால் பின்பற்றுவது என்பதுதான் பல நேரங்களில் முடியாமல் போகிறது.

    இடையில் விடுமுறை விருந்து என்று பதிவுகள் விட்டுப் போயிற்று. இனி தொடர்கிறேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புத்தாண்டு தீர்மானங்களை பின்பற்றுவது கடினமான விஷயம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  12. தங்களனைவருக்கும்
    அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  13. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    புத்தாண்டு தீர்மானங்கள் எல்லாம் அருமை.
    க்டைபிடித்தால் நல்லது தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  14. என் தளத்தில் நான் ஒரு சிந்தனையில் என்ன செய்ய வேண்டுமென்று எழுதி இருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பதிவினையும் படிக்க வேண்டும் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  15. Wish you and your family a very happy new year. All the resolutions look easy to implement into a habit. But change behaviour one by one.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

      நீக்கு
  16. அருமையான பகிர்வு.

    தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  17. வாய்ப்பில்லைண்ணே வாய்ப்பில்லை..

    உங்களுக்கும், அண்ணிக்கும், ரோஷிணி பாப்பாவுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்ண்ணே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  18. கண்டிப்பாக முடியும்... நன்றி ஜி...
    HAPPY NEW YEAR 2019

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  19. பெரியவர்களே கண்ணாடியை உடைச்சுட்டாலும் அள்ளித்தான் போடவேண்டி இருக்கு! வீட்டைச் சுத்தி இருக்கும் விளக்குகள் அமைப்பை பெயிண்ட் செய்யப்போனவர், அதை கழட்டி மாட்டும்போது உடைச்சுட்டார். கிட்டத்தட்ட 14 வருசத்துக்கு முந்திய மாடல் என்பதால் தேடும் வேட்டை ஆரம்பம். புதுவருஷப் பாய்ச்சல் :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  20. இனிய புத்தாண்டு வாழ்த்துகள். நல்ல விஷயங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  21. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    மிக அருமையான பகிர்வு ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா பிரேம்குமார் ஜி.

      நீக்கு
  22. நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் வலைப்பதிவையும் தமிழ் வலையுலகையும் புதுப்பித்துள்ளேன் இதுவே எனது தீர்மானங்களில் முக்கியமான ஒன்று.

    அதில் நான் வாசித்த பதிவு தங்களது தான் ஐயா. புத்தாண்டு வாழ்த்துகளும் நன்றிகளும் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வைசாலி செல்வம்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....