காஃபி வித் கிட்டு – பகுதி – 19
ராஜா காது கழுதைக் காது:
இரண்டு பெண்களுக்கு நடுவில் மாட்டிக்
கொண்ட இளைஞனைச் சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. ஒரே அலுவலகத்தில் பணி புரிபவர்கள்
போலும். அந்த இளைஞன் தன் முதுகுச் சுமையுடன் சற்றே முன்னர் நடக்க, பெண்களை விட்டு
விலகி நடக்க, பின்னால் வந்த இரண்டு பெண்களும் இளைஞரை அழைத்து, “என்ன, எங்களை விட்டுட்டு ஓடிலாம்னு
பார்க்கறியா? உன் முதுகுல மாட்டி இருக்க பையைப் பிடிச்சு இழுத்து நிறுத்துவோம், பை
கிழிஞ்சாலும் விடமாட்டோம் தெரியும்ல, ஒழுங்கு மரியாதையா எங்க கூடவே நடக்கணும் –
நாங்க இரண்டு பேர் பேசிட்டே வருவோம்! கேட்டுக்கோ!” அவர்களைக் கடந்து
செல்கையில் அந்த இளைஞனைக் கவனித்தேன். பரிதாபமாக முகத்தினை வைத்துக் கொண்டு கூடவே
நடந்தான்!
கோலங்கள் – இந்த வாரத்தில்…:
இன்றைக்கு ஒரு மாறுதலுக்காக,
கதம்பம் பதிவில் வெளி வராமல் இங்கே காஃபி வித் கிட்டு பதிவில்!
இந்த வாரத்தில்… –
முகநூலில் இருந்து:
அர்த்தமில்லாத சில சண்டைகளால்,
அர்த்தமுள்ள ஆயிரம் சந்தோஷங்கள் வாழ்வில் தொலைந்து போகின்றன.
ரசித்த காணொளி – பெற்றோர் கடமை:
ஒவ்வொரு பெற்றோரும் பார்க்க
வேண்டிய காணொளி என்ற Tagline-உடன் பார்த்த ஒரு காணொளி. நீங்களும் பாருங்களேன்.
படித்ததில் பிடித்தது – கண்கெட்ட பின்னே சூரிய உதயம்:
பெரிய ஞானி ஒருவர் இருந்தார்.
அவருக்கு ஏகப்பட்ட சீடர்கள். தினமும் அவரது ஞானத்துளிகளால் அவர்கள்
பெரும்பயனடைந்து வந்தனர். அப்படிப்பட்ட மஹாஞாநிக்கு ஒரு கெட்டப்பழக்கம் இருந்தது.
அதுதான் kleptomania, சிறிய பொருட்களைத் திருடும் பழக்கம். சீடர்களுக்கு, அவரால்
அந்தப் பழக்கத்தை ஏன் விட முடியவில்லை, என்று புரியவில்லை.
ஒரு நாள் அந்த ஞானியின் நண்பர்
ஒருவர் அவரைக்காண வந்திருந்தார். சீடர்கள் அவரிடம் சென்று தங்கள் குருவின் இந்தப்
பழக்கத்தைப்பற்றிக் கூறி தங்கள் மனவருத்தத்தைக் கூறினர். அவரும் அதைப்பற்றி
அவர்களது குருவிடம் கேட்பதாக வாக்களித்தார்.
மறுநாள் காலை அவர்கள் நடந்து
செல்லும்போது அந்த குருவிடம் நண்பர் அவரது kleptomania வைப்பற்றி விளக்கம்
கேட்டார். அவரும் சிரித்துக்கொண்டே சொன்னார். எந்த வகையிலும் குறையற்ற ஒருவர்தான்
குரு பதவியில் இருக்க முடியும் என்று சீடர்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டால் உயர்வை
நோக்கிய அவர்களது பயணம் ஆரம்ப கட்டத்திலேயே ஒரு மந்த நிலையை அடைந்து விடும்.
எப்படிப்பட்ட குறைகள் இருந்தாலும் ஒருவர் ஞான நிலையை அடைய முடியும் என்று
மறைமுகமாக, இப்படிப்பட்ட ஒரு பழக்கத்தை வேண்டுமென்றே வைத்துக்கொண்டே, அவர்களுக்கு
ஊக்கம் அளிக்கிறேன் என்றார்.
Shoe வை stand இல் வைக்காதது,
குளித்து விட்டு துண்டை table இன் மேலேயே போடுவது, வேலையை முடித்து விட்டு laptop
ஐ மீண்டும் bag இல் உடனே வைக்காதது போன்ற என் சில சிறு தவறுகளைப்பிடித்துக்கொண்டு,
இன்று காலை என் மனைவி என்னை பிடிபிடி என்று பிடித்துவிட்டாள். நானும், மேற்கூறிய
கதையைக்கூறி, எல்லாவற்றிலும் perfect ஆக இருந்தால்தான் என்னைப்போல
intelligent/wise ஆக இருக்கமுடியும் என்று அவளுக்குத் தாழ்வு மனப்பான்மை வந்து
விடக்கூடாதே என்ற ஒரே காரணத்தினால்தான், இது போன்ற சில imperfect செயல்களை
வேண்டுமென்றே செய்கிறேன் என்று விடாமூச்சுடன் வடிவேலு போல் வியாக்யானம் கொடுக்க,
அவளது 64 GB memory activate ஆகி எங்களது கல்யாணம் முதல் இன்று வரை என் குறைகளை folder,
folder ஆக பட்டியலிட, குபீரென்று வேர்க்க ஆரம்பித்து. WWF wrestler முன்
ஓமக்குச்சி நரசிம்மன் போல நின்றிருந்தேன். என் memory 1 KB கூட கிடையாது.
படக்கென்று உள்ளே ஓடி calendar ஐ எடுத்து என் ராசி பலன் பார்த்தேன். நுனி நாக்கில்
சனி, ஆதாரம் இல்லாமலேயே கூட சேதாரம் அதிகம் வரும் என்றிருந்தது. கண் கெட்ட பின்னே
சூரிய உதயம்!
- முரளி ரங்கநாதன்
இதே நாளில் – பின்னோக்கிப் பார்க்கலாம்:
சில வருடங்கள் முன்னர் இதே நாளில்
இந்த வலைப்பூவில் வெளியிட்ட பகிர்வு ஒன்று. பதிவினைப்
பார்க்காதவர்கள்/படிக்காதவர்கள் பார்க்கலாமே!
என்ன நண்பர்களே, இந்த வாரத்தின்
காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச்
சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
நட்புடன்
வெங்கட்
புது தில்லி
இன்றைய பெண்களிடம் சில ஆண்கள் மாட்டிக்கொள்வது நிறைய நடக்கிறது ஜி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
நீக்குகோலங்கள் அட்டகாசம்...
பதிலளிநீக்குபடித்ததில் பிடித்தது அருமை...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குகோலங்கள் எல்லாம் முகநூலில் பகிர்ந்தவை போல் இருக்கு! வாகனங்கள் எல்லாம் யாரும் இல்லாதபோது ஒன்றுக்கொன்று பேசிக்கொண்டால்? இப்படி ஒரு கற்பனையில் ஒரு கட்டுரை படித்த நினைவு! எதில்னு நினைவில் இல்லை. முரளி ரங்கநாதன் பற்றி முகநூலில் படித்த மாதிரி இருக்கு. இந்த வாரம் யாருமே சமைக்கலையா?
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
நீக்குபடித்ததில் பிடித்தது அருமை.
பதிலளிநீக்குஆதியின் கோலங்கள் மிக அருமை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்குகோலங்கள் அருமை..
பதிலளிநீக்குபயலுங்கக்கிட்ட பொண்ணுகூட தப்பிச்சிடும். பொண்ணுங்கக்கிட்ட மாட்டின பையன்?! செத்தாண்டா சேகரு கதைதான்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.
நீக்குநல்ல தொகுப்பு.
பதிலளிநீக்குகோலங்கள் மிக அழகு.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குகாணொளி மிகவும் அருமை.கதைகள் மற்றும் கோலங்கள் சிறப்பாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.
நீக்குகுட்மார்னிங் வெங்கட்... என்ன எடுத்த உடனேயே ராஜா காது வந்திருக்கிறது? இதோ படிக்கிறேன்.
பதிலளிநீக்குஅதெல்லாம் சும்மா ஜாலியாய் இருந்திருக்கும். பரிதாபம் இருக்காது!
ஹாஹா... அந்தப் பையன் பரிதாபமாகத் தான் முகத்தினை வைத்திருந்தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
முரளி ரங்கநாதனின் எழுத்துகள் ரசிக்க வைத்தன.
பதிலளிநீக்குபழைய பதிவில் என் கமெண்ட் இருக்கிறது...
ஸோ...
பார்த்திருக்கிறேன்...
ஹா.. ஹா... ஹா...
ஆமாம்... பழைய பதிவில் உங்கள் கமெண்ட் இருக்கிறது!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
எல்லாமே ஸ்வாரஸ்யமாக இருக்கின்றது. அந்தப் பையன் பாவம் தான். கோலங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன. முரளி ரங்கநாதன் அவர்களின் எழுத்தை ரசித்தோம்.
பதிலளிநீக்குதுளசிதரன்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.
நீக்குராகாககா ஹா ஹா ஹா மாட்டிக்கிட்டான் அந்தப் பையன்...
பதிலளிநீக்குகோலங்கள் வாவ்!! வைப்ரன்ட் கலர்ஸ். ஆதி பாராட்டுகள்! வெங்கட்ஜி சொல்லிடுங்க!
பெற்றோர் பார்க்க வேண்டிய காணொளி வாட்சப்பில் எங்கள் குடும்ப க்ரூப்பில் வந்தது...நல்ல காணொளி..
முரளி ரங்கநாதன்-பபி சூப்பர் சிரித்துவிட்டேன்...செமையா இருந்துச்சு அவரது எழுத்து...
ஃப்ளாஷ்பேக் போய் பார்க்கிறேன்....
கீதா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
நீக்கு