எங்களுக்குத் தாய் மொழி தெலுங்கு என்றாலும், பிறந்து
வளர்ந்தது எல்லாம் தமிழ் நாட்டில் தான். எனவே தெலுங்கு எழுதவோ, படிக்கவோ தெரியாது.
பேசுவதும் தமிழ் கலந்த தெலுங்கில் தான் பேசுவோம். எங்கள் குழந்தைகள் இருவருமே
தில்லியிலேயே வளர்ந்தவர்கள். பள்ளியில் தமிழ் மொழியை மூன்றாவது மொழியாக எடுத்துப்
படித்தார்கள். மேலும், தமிழ் பேசும்
நண்பர்களும் நிறையவே இருந்தார்கள். தலைநகரில் வளர்ந்த மற்ற தமிழ்க் குழந்தைகளைப்
போல, பெரும்பாலும் ஹிந்தியில் தான் பேசுவார்கள். ஓரளவிற்குத் தமிழ் பேச வரும். ஆனால்
எங்கள் மொழியான தெலுங்கில் பேசும் போது, தமிழ், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என நான்கு
மொழிகள் கலந்து அடித்து விடுவார்கள்.
ஒரு நாள் நான், கணவர் மற்றும் மகள் மூவரும் எங்கள்
வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தோம். மகள் கையில் அலைபேசியில் எதையோ பார்த்துக்
கொண்டிருந்தாள். அப்போது கல்லூரியில் பயின்று கொண்டிருந்த நாட்கள். கணவருக்கு என்ன
டென்ஷனோ தெரியாது, மகளுக்கு அர்ச்சனை [திட்டு] கிடைக்க ஆரம்பித்தது. “எப்பப் பார்த்தாலும் இப்படி மொபைலை பார்த்துக்
கொண்டிருக்காதே” என்று ஆரம்பித்து, படிப்பு பற்றி வந்தது. படிப்பு ரொம்பவே
முக்கியம், படிக்கிற வயதில் படிக்காவிட்டால் பின்பு இந்த இளம்வயது திரும்பக்
கிடைக்காது. இந்தக் காலம் திரும்ப வராது என்ற ரீதியில் தெலுங்கில் சொல்லிக் கொண்டே
வந்தார். அப்படித் தெலுங்கில் சொன்ன ஒரு வாக்கியம் – “சதுவு தான் கூடு வேசுனு”
என்பது – அதாவது படிப்பு தான் நமக்கு சோறு போடும் என்ற அர்த்தம்.
நாங்கள் பேசும் தெலுங்கில் சோற்றை “கூடு” என்று தான்
சொல்வோம். அவர் சொல்லிக் கொண்டே இருக்கையில், மகள் என்ன செய்கிறாள் எனப்
பார்த்தேன். அவள் வெளியே வேடிக்கைப் பார்த்தபடியே வந்தாள். அவளுக்கு என்னவர்
பேசுவது புரிகிறதா இல்லையா எதுவும் தெரியவில்லை. நான் அவளிடம், அப்பா தெலுங்கில்
“சதுவு தான் கூடு வேசுனு” என்று சொன்னாரே, ஏம்மா இந்த ‘கூடு’ன்னு சொன்னாரே, அப்படின்னா
என்னம்மான்னு தெலுங்கில் மகளிடம் கேட்டேன். அவள் மிகவும் கூலாகச் சொன்ன பதில்....
‘கூடு’ன்னா Nest-மா என்றாள்.
எனக்கு ஒரு பக்கம் சிரிப்பு. ஆனாலும், விடாமல், மகளிடம்,
“ஏம்மா படிப்புக்கும் Nest-க்கும் என்னம்மா சம்பந்தம்?” என்று விடாமல் கேட்டேன்.
“ஏதோ தெரியலம்மா... அப்பாவுக்கு ஏதோ டென்ஷன். அதனால என்னமோ
திட்டறார். திட்டட்டும் விடு!” என்றாள்.
அவள் சொன்னதைக் கேட்டு நான் மட்டும் அல்ல, டென்ஷனில் இருந்த
கணவரும் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தார். மகள், மகன் இவருக்குமே, பேசும் எல்லா
வாக்கியங்களிலும் இப்படி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என நான்கு மொழிகளையும்
கலந்து தான் பேச வருகிறது! பல சமயங்களில் இப்படிச் சின்னச் சின்ன விஷயங்கள் தான் நமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன அல்லவா?
வேறு ஒரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை....
நட்புடன்
சுதா த்வாரகநாதன்
புது தில்லி.
இனிய காலை வணக்கம் சுதா, ஆதி அண்ட் வெங்கட்ஜி!
பதிலளிநீக்குதலைப்பே வித்தியாசமா அழகா இருக்கே
கீதா
இனிய காலை வணக்கம் கீதாஜி.
நீக்குஹா ஹா ஹா இப்படி அரைகுறையாகத் தெரிந்திருப்பதும் ஒரு வகையில் நல்லதுதானே!! பாருங்க திட்டறது தெரியலை...அதுவும் ஏதோ டென்ஷன் திட்டறாருனு......கூல்!!!!!!!
பதிலளிநீக்கு//“சதுவு தான் கூடு வேசுனு”// புதுசா தெலுங்கு வாக்கியம் கற்றுக் கொண்டாச்சு!!!!
கீதா
ஹாஹா.... அரைகுறையாக இப்படி தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது தான்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
எங்க வீட்டுலயும் இந்த மொழிப் பிரச்சனை முதலில் இருந்தது. என் தாய் மொழி தமிழ்தான் என்றாலும் பிறந்து வளர்ந்தது நாகர்கோவில் என்பதால் என் பேச்சுத் தமிழ் மலையாளம் கலந்த தமிழ், மற்றும் நாகர்கோவில் வட்டார வழக்குச் சொற்கள்....
பதிலளிநீக்குபுகுந்த வீட்டில் முதலில் பல வார்த்தைகள் கன்ஃப்யூஷன் ஏற்பட்டது...பச்சடி, கிச்சடி என்பதெல்லாம்...என் தமிழில் "ஆக்கும்" நிறைய இருக்கும்...ஹா ஹா ஹா
கீதா
எங்கள் வீட்டில் கோவை வட்டார வழக்கு! ஆதி பேசும் நிறைய வார்த்தைகள் புதியது. நாங்கள் பேசுவது புரியாமல் திண்டாட்டம்... :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
குட்மார்னிங். மொழிக்குழப்பத்தால் விளைந்த சுவாரஸ்யங்களில் ஒன்றா?
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.
நீக்குஆமாம்.... அதே தான்.
என் மகன்கள் கூட நான் எப்போதாவது கோபப்பட்டால் பெரிதாக மதிக்க மாட்டார்கள். சிரித்துக் கொண்டிருப்பார்கள். நான் என்னென்ன வார்த்தைகள் சொல்வேன் என்று முன்னாலேயே சொல்லத்தொடங்குவார்கள். இதை எதிர்பார்த்து நான் என் பாணியை மாற்ற வேண்டியதிருக்கும். அப்படியே கோபம் பறந்து / மறந்து போய்விடும்!
பதிலளிநீக்குகோபம் பறந்து/மறந்து போகும்.... ஹாஹா.... இங்கே மகள் நான் கோபப்பட்டால் கூல் கூல் என்கிறாள்..... :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
ஹிஹி, ஒரே மொழி பேசினாலும் எனக்கும் எங்க புகுந்த வீட்டுக்கும் கூட மொழிப் பிரச்னை உண்டு. அவங்க பங்டு என்பாங்க. என்னனே புரியாது. பின்னால் புரிந்து கொண்டது எல்லாவற்றையும் ஒழுங்கு செய்வதைச் சொல்றாங்க என்பது. அதே போல் "பள்டம்" என்பார்கள். கல்யாணம் ஆன புதுசில் மைத்துனர்கள் இருவரும் பள்ளி திறந்ததும் பள்ளிக்குப் போயிருக்காங்க. நான் அவங்க எங்கே என என் சின்ன நாத்தனாரிடம் கேட்டதில் "பள்டம்" போயிருக்காங்க என்றார். நானும் தெரிந்த மாதிரித் தலையை ஆட்டிக் கொண்டேன். அப்புறமாத் தான் நம்மவரிடம் "பள்டம்" என்னும் ஊர் எங்கே இருக்குனு கேட்டதுக்கு அவருக்கு ஒரே சிரிப்பு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். பின்னர் விளக்கினார். இது போல் நிறைய! அதிலும் என் மாமியார், "அவடத்திலே" "இவடத்திலே" என்றெல்லாம் சொல்லுவாங்க! ஒண்ணுமே புரியாது. சாப்பிடும் தட்டைத் தாம்பாளம் என்பாங்க! தாம்பாளத்தை அலம்பிப் போடுனதும் நான் நிஜம்மாவே ஆச்சரியப்பட்டேன், அதிலேயா சாப்பிடுவாங்கனு! அதே போல் அளவை முறைகளும். நம்ம ஒரு படி தஞ்சை மாவட்டக்காரங்களுக்கு 2 படி! ஒரே குழப்பமா இருக்கும்.
பதிலளிநீக்குபள்டம் நானும் கேட்டிருக்கிறேன். :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
ஹா... ஹா...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குசுவாரஸ்யம் ரசித்தேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குசுவாரஸ்யமான பதிவு. ஒவ்வொரு ஊரில் வசித்தாலும், அதே மொழியாயிருந்தாலும், வார்த்தைகளுக்குள் நிறைய வித்தியாசங்கள். அதனால்,மொழியில் தடுமாற்றங்கள். சகோதரி கூறியதையும் ரசித்தேன். அவர் மகள் கூறியதும் சுவாரஸ்யமாக இருந்தது. பொதுவாகவே எந்த மொழியையும், பாகனே சதவ லேதுந்தே கஸ்டந்தான். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குநிறைய மொழி தெரிந்தாலும் கஷ்டம்தான் போலும்.
பதிலளிநீக்குபடிப்பு தான் நமக்கு சோறு போடும் என்பதற்கு தெலுங்கில் என்ன என்பது தெரிந்து விட்டது.
தெலுங்கு மொழி பேசும் குழந்தைகளிடம் இதை சொல்லிப் பார்க்க வேண்டும்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்குஎனக்கு மொழி பிரச்சனை எல்லாம் இராடாம் பேரன்வந்தபி தான் நாந்தமிழில் பேசினால் புரிந்து கொள்வான் ஆனால் ஐயா மட்டும் எப்போதுமே ஆங்கிலதான் அதுவும் செமஸ்பீட்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
நீக்குஅப்ப மொழிக்குழப்பம் நல்லதுன்னு சொல்லுங்க
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.
நீக்குஇந்த மாதிரி அட்வைஸ் சமயத்தில் பசங்க கூலாக இருக்க இருக்க அப்பாக்களின் டென்ஷன் இன்னும் எகிறும். ஆனால் அதில் தானே வாழ்க்கையின் சுவாரஸ்யமே உள்ளது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.
நீக்குதிருச்சியில் பிறந்து வளர்ந்த தஞ்சாவூர்க்காரியான நான் பாலக்காட்டுகாரரை மணந்து கொண்டதால் இந்த மொழிப்பிரச்சனை நிறைய உண்டு. என்னை, "ஓ! இவள் பச்சத்தமிழ் பேசுவாள்" என்பார்கள்.
பதிலளிநீக்குதிருமணத்திற்கு முன் விகடனில் பி.வி.ஆர். பாலக்காட்டை நிலைக் களனாக கொண்டு எழுதிய ஒரு கதையில் ஓர்மை, தெறக்கு, மனசிலாச்சு, மத்தன்,இளவன், மடி போன்ற பாலக்காட்டு வழக்குச் சொற்கள் நிறைய வரும். அதற்கான பொருள் பின்னர்தான் புரிந்தது.
மஸ்கட்டில் குழந்தைகள், "aunty is calling over phone என்பதை அம்மா, ஆன்டி போன் மேல கூப்பிடுறாங்க" என்று ஆங்கிலத்தை அப்படியே தமிழில் மொழி பெயர்த்து பேசுவது கேட்க சிரிப்பாக இருக்கும்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானும்மா.
நீக்குWow Sudha very nice n interesting. I could visualize all three of you!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதங்கி ஜி.
நீக்கு