புதன், 23 ஜனவரி, 2019

நான் மஞ்சு பேசுகிறேன்....




பரபரப்பான காலை நேரம். ஒரு பக்கம் அடுப்பில் ரொட்டியும் சப்ஜியும் தயாராக, இன்னும் ஒரு பக்கம், மெஷினில் துணி துவைக்கும் வேலை. அலைபேசியில் ஓடிக்கொண்டிருக்கும் பாடலைக் கேட்ட படியே வேலை நடக்கிறது. பாட்டு நின்று என்னுடைய அலைபேசியில் அழைப்பு. காலை நேரங்களில் அழைப்பு வந்தால் பொதுவாக எடுப்பதில்லை. அதுவும் தெரியாத எண் என்றால் எடுப்பதில்லை. அன்றைய காலை என்னவோ, ஒரு தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வரவே, மனதுக்குள் திட்டியபடியே அலைபேசியை எடுத்துக் காதில் வைத்தேன். 

“ஹலோ, நான் மஞ்சு பேசறேன். அபராஜித் அம்மா மஞ்சு பேசறேன்”

நான்: ஹலோ யார் பேசறீங்க.... 

ஹலோ, நான் மஞ்சு... உங்க குரல் ஒழுங்கா கேட்கல...

மஞ்சு என்ற பெயரில் எனக்கு இரண்டு பேரைத் தெரியும். ஒன்று தலைநகர் வாசி. ஆனால் தமிழில் பேச மாட்டார். கன்னடத்தில் ஹேளுவார் இல்லை என்றால் தெலுங்கில் மாட்லாடுவார்! இவரோ தமிழ் பேசுகிறார்.  ஒரு வேளை நம்ம வலைப்பதிவர் மஞ்சுபாஷினி பேசுகிறாரோ என்றால் அவர் குரல் மாதிரி இல்லையே... சரி நம் குரல் கேட்கவில்லை என்று சொல்கிறாரே, நாமே அழைத்து விடலாம் என அவரிடம், “சரி Call Cut பண்ணுங்க.. நானே அழைக்கிறேன் எனச் சொல்லி மீண்டும் அழைத்தேன். 

நான்: “ஹலோ, சொல்லுங்க, நீங்க எந்த மஞ்சு?”

ஹலோ, நான் அபராஜித் அம்மா மஞ்சு பேசறேன். 

எனக்குத் தெரிந்த அபராஜித் அம்மா பேரு இந்து தானே... இவங்க மஞ்சுன்னு சொல்றாங்களே என்ற குழப்பத்துடன், “ஹலோ நீங்க யாருன்னு எனக்குத் தெரியல” என்று சொல்ல, மறுபக்கத்திலிருந்து குரல் வந்தது. “ஹலோ நான் மஞ்சு.....  அபராஜித் அம்மா.... நீங்க வெற்றிவேல் தானே?” 

நான் ஞே.... என விழித்து, இல்லைம்மா நான் வெங்கட், புது தில்லியிலிருந்து பேசுகிறேன் எனச்சொல்ல, “சாரி சார். சாரி சார்... என்று சாரி கேட்டு அழைப்பைத் துண்டித்தார். 

வேலைகள் அனைத்தும் முடித்து அலுவலகம் சென்று சேர்ந்து வேலைகளில் மூழ்கினேன். அப்போது ஒரு அழைப்பு. அலைபேசியில் சேமிக்காத எண்ணிலிருந்து என்பதால் எடுக்க வில்லை. தொடர்ந்து அழைப்பு வரவே, எடுத்து, “ஹலோ”வ, மறுபக்கத்திலிருந்து ஒரு பெண் குரல்....  

“ஏன் எடுத்தீங்க.... நீங்க கூப்பிடுங்களேன்.....” என்ற கொஞ்சும் குரல்!

இன்றைக்கு என்னடா இது சோதனை....  என்று நினைத்தவாறே...  “ஹலோ, நீ யாருன்னே எனக்குத் தெரியாது.... நான் எதுக்கும்மா உனக்கு ஃபோன் பண்ணனும்....” என்று அதட்டும் குரலில் பேச, அந்தக் கொஞ்சும் குரலோ, எதையும் கேட்பதாக இல்லை...  “நீங்க கூப்பிடுங்களேன், நான் உங்க கிட்ட பேசணும்.....” என்ற கொஞ்சும் குரல்!” பேசும் மொழிலிருந்து பீஹார் பெண்மணி என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. 

இது ஒண்ணும் சரியாய் படவில்லையே, என அழைப்பைத் துண்டித்தேன். தொடர்ந்து அந்த மிஸ் [அ] மிஸஸ் அழைத்துக் கொண்டே இருந்தார். நான் எடுக்கவே இல்லை. அலுவலகத்தில் இருக்கும்போது இப்படி தொடர்ந்து அழைப்பு வந்து எடுக்காமல் இருப்பது அடுத்தவர்களுக்குத் தொந்தரவாக இருக்கும். அதனால் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பீஹார் பெண்மணியிடம் அலைபேசியைக் கொடுத்து, அந்த எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் எடுத்துப் பேசச் சொன்னேன். அழைப்பு வர, அவர் எடுத்து, “ஹலோ, யாரும்மா நீ, யார் கிட்ட பேசணும்” எனக் கேட்க, அந்தப் பெண் அழைப்பைத் துண்டித்து விட்டார்.  

மாலை நேரம், வேறு ஒரு எண்ணிலிருந்து அழைப்பு – “சலாம் சாப், கைசே ஹே ஜனாப்....” ....  அட போங்கய்யா.....  நான் இந்த விளையாட்டுக்கு வரல.... என அழைப்பைத் துண்டித்தேன். 

அன்றைய நாள் முழுவதும் இப்படி அழைப்புகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. இன்னும் ஒரு அழைப்பு – “சார் நீங்க வெங்கட் தானே, நான் ____ வங்கியில் இருந்து பேசறேன்.  வாழ்த்துகள் சார். உங்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் பெர்சனல் லோன் Sanction ஆயிருக்கு சார். நீங்க ம்நு மட்டும் சொன்னா போதும், உங்க கணக்குல ஐந்து லட்சம் கிரெடிட் ஆயிடும்........”

டேய்... எங்கே இருந்துடா இப்படி கிளம்பிட்டே இருக்கீங்க.... என மனது துடித்தது. 

பொறுமையாக பதில் சொன்னேன்.... “திருப்பித் தர வேண்டாம்னு கண்டிஷனோட அந்த பணம் கிரெடிட் பண்ண முடியுமா? வட்டியும் வேண்டாம், திரும்பவும் தர வேண்டாம்னு கண்டிஷன் இருந்தால் சொல்லுங்க என்று சீரியசாகக் கேட்க, அந்தப் பக்கத்திலிருந்து இடிச் சிரிப்பு.  அப்படி கிடைச்சா உங்களுக்கு எதுக்கு கொடுக்கணும்... நானே வாங்கிக் கொள்வேன்.... என்று அழைப்பைத் துண்டித்தார். 

அன்றைய தினம் முழுவதும் இப்படியாகவே அழைப்புகள். என்னிடம் இருக்கும் இரண்டு எண்களிலும் இப்படியான அழைப்புகள். இரண்டு அலைபேசிகளையும் தூக்கி எறிந்துவிடலாம் எனத் தோன்றுகிறது. நீங்க என்ன சொல்றீங்க.... 

உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.  

மீண்டும் சிந்திப்போம்... சிந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

48 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

    தலைப்பு பார்த்தால் கதை போல இருக்கே...அப்புறம் வரேன்...இன்றும் எழுவதற்கு லேட்டு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. குட்மார்னிங் வெங்கட். ராங் கால் மகாத்மியமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. அவர்கள் கேட்டாலே நான் யார் என்ற என் விவரங்களை சொல்ல மாட்டேன். நீங்கள் நீங்களாகவே சொல்லி இருக்கிறீர்களே...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே ஸ்ரீராம். நானும் எந்த இன்ஃபோவும் கொடுப்பதில்லை. என் பெயர் உட்பட. சிலப்போ அவர்களே என் பெயரைச் சொல்லி கேட்பார்கள். என்ன வேனும் என்று கேட்பேன். எனக்குத் தொடர்புடைய ஒன்று என்றால் மட்டுமெ பதில். இல்லை என்றால் "நான் அவளில்லை" என்று சொல்லி கட் தான்.

      கீதா

      நீக்கு
    2. பொதுவாக நானும் விவரங்கள் சொல்வது இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    3. நான் அவளில்லை! ஹாஹா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  4. முதல் அழைப்புக்கு பின்னர் தொடர்ந்த பீஹார் உள்ளிட்ட அழைப்புகளுக்கும் தொடர்பிருக்குமா? இந்தக் காலத்தில் யாரையுமே நம்ப முடியவில்லை. உதவி செய்யப்போய் உபாத்திரவத்தில் மாட்டிக்கொள்ளும் ஒருகாணொளியை கீதா ரெங்கன் அனுப்பி இருந்தார் அது நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்பு இருப்பதாக தெரியவில்லை.

      காணொளி நான் பார்த்த நினைவு இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. இப்படி அழைப்புகளை தடைசெய்ய மூன்று வியாழக்கிழமை தெட்சிணாமூர்த்திக்கு விரதம் இருந்தால் தோஷம் நீங்கும் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரதம்..... ஹாஹா.... நல்ல யோசனை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  6. நான் பதியாத எண்ணாக இருந்தால் எடுக்காத பாலிஸியைத் தொடர்கிறேன்.ஆனால் அதனால் எதையாவது முக்கியமான கால்களை தவற விட சாத்தியம் உண்டு என்கிற அச்சம் இருந்தபொதிலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில சமயம் தெரிந்தவர்கள் அழைப்பது விடுபட வாய்ப்பு உள்ளது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணிஜி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  8. இப்போ புரியுதா நம்முடைய விவரங்கள் எப்படி பரவுது, யார் யாரோ தெரிந்துகொள்கிறார்கள் என்பது.
    எல்லாம் இந்த KYC என்ற சின்ன சமாச்சாரம் செய்யும் வேலை. ஒரு போன் நம்பர், பேங்க் அக்கௌன்ட், ஆதார் நம்பர், கூகிள் அக்கௌன்ட், வாட்சப் அக்கௌன்ட் என்று பல இடங்களில் பரவிக்கிடக்க வேலையற்றவர்கள் மேய்ந்து தொந்தரவு செய்கிறார்கள்.
    சில சமயங்களில் இது நமக்கு பாதகமாகவும் முடியக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஒரு கிரிமினல் நமக்கு ஒரு கால் போட்டால் போதும். போலீஸ் நம்மை மற்றொறு தேசத்துரோகி ஆக்கிவிடும்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜேகே அண்ணா இப்படி பயமுறுத்தறீங்களே!!!! கிரிமினல் அது இது என்று...ஆஆஆஆ வெங்கட்ஜி பாவம்...

      கீதா

      நீக்கு
    2. ஆமாங்க. அப்படித்தான் நம்பி நாராயணன் ISRO SPY CASE தொடங்கிச்சுங்க. நம்பி நாராயணன் போன் நம்பர் மரியம் ரஷீதா என்ற மாலத்தீவு பெண் வைத்திருந்தார் என்று தொடங்கி நாட்டை விலைக்கு விற்றவன் என்ற வழக்கு வரை சென்று விட்டது. அதை நீக்க அவர் பட்ட பாடு.
      நான் ISRO வில் இருந்து ஒய்வு பெற்றவன்.
      Jayakumar​​

      நீக்கு
    3. KYC எனும் விஷயம் misuse ஆவது நடக்கும். நல்லது கெட்டது இரண்டும் இங்கே கலந்தே இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
    4. பயமுறுத்தும் வகையில் சொல்வது நல்லது! :) இப்படியும் நடக்கலாம் என்று சொல்வது சரிதானே....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
    5. இஸ்ரோ வழக்கு.... இதில் நிறைய அரசியலும் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
    6. இந்த KYC எல்லாம் சமீபத்தில் கேட்பதால் சொல்றீங்க. ஆனால் இதெல்லாம் கேட்கும் முன்னரே நாங்க சென்னையில் இருந்தப்போ இம்மாதிரிப் பல அழைப்புகள் எங்களுக்கு வந்திருக்கின்றன. நானும் அது குறித்து எழுதி இருக்கேன். சில ஆண்டுகள் முன்னரே! இத்தனைக்கும் பிஎஸ் என் எல் மூலம் வீட்டுக்கு வாங்கிய எண். தொலைபேசி டைரக்டரியில் இருந்து நம்பர்களை எடுத்து அழைப்பாங்க! நிறையப் புகார்கள் கொடுத்திருக்கோம். அலைபேசி வாங்கிய புதிசில் தெரிந்தவர்களுக்கு மட்டுமே நம்பர் கொடுத்திருக்கத் தெரியாத இடங்களில் இருந்தெல்லாம் அழைப்பு வரும். அந்த நடிகரோடு டின்னருக்கு உங்க நம்பரைத் தேர்வு செய்திருக்கோம். நீங்க இத்தனை பணம் கட்டினால் போதும். அவரோடு டின்னர் சாப்பிடலாம் என்றெல்லாம் வரும்! ஆகவே இதுக்கும் கேஒய்சிக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை.

      நீக்கு
    7. நம்பிநாராயணன் வழக்கு இப்போப் புதுசா வந்ததும் இல்லை. பல ஆண்டுகளாக அவர் மேல் குறி வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் நம்பர் அலுவலகம் மூலம் மற்றவர்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டு. அதோடு அலுவலகத்திலும் தொலைபேசி தருவாங்களே! அப்படியும் போயிருக்கலாம். நம்பி நாராயணன் வழக்கில் மாட்டிக்கொண்ட சமயம் கேஒய்சி இருந்ததா? இல்லைனே நினைக்கிறேன். இதை இப்போது அறிமுகம் செய்ததின் காரணமே தனி! இதன் மூலம் யாரேனும் ஏமாற்ற நினைத்தாலோ தேசதுரோக நடத்தையில் ஈடுபட்டிருந்தாலோ கண்டுபிடிக்கலாம் என்பது தான்! இன்னும் விளக்கமாக எழுத நேரம் இல்லை. எழுதவும் தயக்கம். :(

      நீக்கு
    8. இந்த மாதிரி தொல்லைகள் நிறைய உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
    9. சில பிரச்சனைகளை விரிவாக எழுத முடிவதில்லை....

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  9. “ஏன் எடுத்தீங்க.... நீங்க கூப்பிடுங்களேன்.....” என்ற கொஞ்சும் குரல்!//

    ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சும் குரல்.... ஹாஹா.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  10. இந்த ஹலொ மைடியர் ராங்க் நம்பர் கொடுக்கும் தொல்லைகள் ரொம்பவே வெங்கட்ஜி.

    அந்த 5 லட்சத்துக்கு உங்க பதிலை ரொம்ப ரசித்தேன் ஜி. எனக்கும் அப்படிக் கால்கள் வரும். இனி உங்க பதில்தான் கொடுக்கப் போறேன்....தாங்கஸ் ஜி!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐந்து லட்சம் பதில்..... :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  11. தெரியாத நம்பரிலிருந்து போன் வந்தால் எடுப்பது இல்லை.
    அது ஒன்றுதான் நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  13. பொழுது போகவில்லை என்றால் பேசிப்பொழுதைக்கழிக்கலாமே ஸ்வீட் நத்திங்ஸ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி எம் பி சார்... வெங்கட்டுக்குக் கொடுக்கும் அட்வைஸா? அவரை மாட்டிவிட்டுடுவீங்க போலிருக்கே...

      இன்னொன்று, அந்த சைடுல பேசறவங்க எதை ரெகார்ட் பண்ணுவாங்கன்னு தெரியாது. இது இன்னும் பெரிய பிரச்சனை.

      நீக்கு
    2. ஹாஹா. பொழுது போகாமல் இல்லை. இருக்கும் பொழுது போதவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
    3. பதிவு செய்வது நிறைய நடக்கிறது. அது இன்னும் தொல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  14. பொதுவாகத் தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தால் எடுப்பதில்லை. அதிலும் ரஜினி, விஜய் படங்கள் வெளியாகும் சமயங்களில் அவங்களோடு டின்னர், இவங்களோடு நடனம், பார்ட்டி, உங்க எண் தேர்வாகி இருக்கு! 25,000/- கட்டுங்க என்றெல்லாம் வரும். இன்னும் சிலர் உங்களுக்கு லக்கி எண்ணாகப் பணம் வந்திருக்கு! உங்க அக்கவுன்ட் விபரம் கொடுத்தால் க்ரெடிட் செய்வோம் என்பார்கள். என்னிடம் வங்கிக்கணக்கே இல்லைனு சொல்லிடுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வங்கி கணக்கு இல்லை..... :) நல்ல வழி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  15. எங்க மொபைலுக்கே பல சமயங்களில் யாத்ரா.காம் க்ரெடிட், அமேசான்.காம் கிஃப்ட் என்றெல்லாம் வருது. அதை எல்லாம் க்ளிக் செய்வதும் இல்லை; போய்ப் பார்ப்பதும் இல்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மின்னஞ்சல் மூலம் இப்படி நிறைய வருகிறது. எல்லாம் ஸ்பேம்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  16. இது மாதிரி நிறைய அழைப்பு வரும் ..நான் unknown பிரைவேட் நம்பர்ஸ் என்றால் எடுப்பதில்லை.
    ஆனா எப்படித்தான் நம்ம நம்பர்ஸ் இத்தனை இன்சூரன்ஸ் காரங்களுக்கு தெரிந்ததோ ..ஒரு நாளைக்கு 10 அழைப்பு வரும் .அப்புறமா எல்லா எண்களையும் பிளாக் செஞ்சி வச்சிருக்கேன் ..தெரியாத எண்ணாக இருந்தால் அட்லீஸ்ட் வாய்ஸ் மெசேஜ் வச்சாத்தான் நானா எடுப்பேன் மறுபடியும் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே வாய்ஸ் மெசேஜ் அவ்வளவாக புழக்கத்தில் இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏஞ்சல்.

      நீக்கு
  17. தைப்பூசம் அதனாலே வெற்றிவேல் - ன்னு கூப்பிட்டுருப்பாங்களோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெற்றிவேல் - நல்லா யோசிக்கறீங்க!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  18. நேற்று எனக்கு பாகிஸ்தானிலிருந்து ஒரு கால் வந்தது. அவன், நீங்க ஜியோ தானே வச்சிருக்கீங்க என்று கட கடன்னு ஹிந்தில பேசினான். நான் அவனிடம், எனக்கு உருது மட்டும்தான் தெரியும்னு சொன்னேன் (ஹா ஹா). அவன் யாரோடயோ பேசிட்டு என்னிடம், எனக்கு 25 லட்ச ரூபாய் விழுந்திருக்குன்னான். பரவாயில்லை.. நீயே வச்சுக்க என்று சொல்லிட்டேன். போனை கட் பண்ணிட்டான்.

    எனக்கு ஏர்டெல் கால் செண்டர்லேர்ந்து, இந்த சானல் ஃப்ரீ அந்த சானல் ஒரு மாதம் ஃப்ரீன்னு கால் வரும். நான் கன்னா பின்னான்னு திட்டிடுவேன். அப்புறம் அவங்களே சாரின்னு சொல்லிடுவாங்க. இது ஜென்யூவின் காலாக இருந்தாலும் நான் தேவையில்லாத எந்த காலையும் எடுக்க மாட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாகிஸ்தான் அழைப்பு வந்தால் எடுப்பது இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....