காஃபி வித் கிட்டு – பகுதி – 17
குளிருதா, ஜெயிலுக்குப் போவோம்:
தலைநகரில் குளிர் அதிகமானால்
தலைநகரின் திஹார் ஜெயிலில் அங்கு வரும் ஆட்களின் எண்ணிக்கை அதிகம் ஆகிவிடுகிறது
என்று சொல்கிறது ஒரு அறிக்கை. ஜெயிலில் கிட்டத்தட்ட 10000 பேரை மட்டுமே சிறை வைக்க
வசதி இருக்கிறது. ஆனால் தில்லியின் குளிர் மாதங்களில் இங்கே சிறை வைக்கப்பட்டு
இருப்பவர்களின் எண்ணிக்கை 16000 வரை ஆகிவிடுகிறதாம். என்ன காரணம்? இதன் பின்னே ஒரு
சூட்சுமம் இருக்கிறது என்று கண்டு பிடித்திருக்கிறார்கள். தலைநகர் தில்லியில்
நடைபாதைகளில் வசிக்கும் பலர் சின்னச் சின்ன குற்றங்களைப் புரிந்து ஜெயிலுக்கு
வந்து விடுவதை விரும்புகிறார்களாம். நடைபாதையில் குளிர் காலத்தில் இருப்பது
கடினமான விஷயம். சின்னதொரு குற்றம் புரிந்து ஜெயிலுக்கு வந்து விட்டால் சில
மாதங்களுக்கு குளிருக்கு இதமான கட்டிடத்தில் இருக்க முடியும் என்கிறார்களாம்
இவர்கள்.
பிக் பாக்கெட் அடிப்பது, தகறாறு
செய்வது, கத்தி போன்ற ஆயுதங்களுடன் பிடிபடுவது, சின்னச் சின்ன திருடுகள் செய்வது –
அதுவும் பிடிபட வேண்டும் என்ற நோக்கத்துடன் திருட்டு நடத்துவது என இருக்கிறார்கள்
சிலர். இவர்கள் குளிர்காலத்தில் மட்டுமே இப்படிச் செய்வார்களாம். ஒருவர்
இப்படித்தான் கடந்த ஐந்து வருடங்களாகச் செய்து வருவதாகச் சொல்லி இருக்கிறார்.
சிறைச்சாலையில் உணவு, இருக்க இடம், குளிருக்கு இதமாக கம்பளி என அனைத்தும்
கிடைப்பதோடு, சிறைச்சாலையின் உள்ளே இருக்கும் தொழிற்சாலையில் வேலை செய்வதால்
கிடைக்கும் சம்பளமும் அவர்களுக்குப் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது! இந்த மாதிரி
வசதிகள் கிடைப்பதால், குளிர் காலத்தில் மட்டும் சின்னச் சின்னத் தவறுகள் புரிந்து
திஹார் சிறைச்சாலைக்கு வருவது அதிகரித்து இருக்கிறது என்று சொல்கிறார்கள்!
எப்படியெல்லாம் யோசிக்கறாங்கய்யா!
சாப்பிட வாங்க – புத்தாண்டு ஸ்பெஷல்:
எங்கள் பகுதியில் இருக்கும்
நண்பர்கள் அனைவருமாகச் சேர்ந்து 31-ஆம் தேதி இரவு புத்தாண்டினை நண்பர் வீட்டில்
வரவேற்றோம். ஒவ்வொருவர் வீட்டிலிருந்தும் ஒரு உணவுப் பண்டம் தயாராகி வந்தது.
நண்பர் வீட்டிலேயே அனைவரும் குழுமி, அரட்டைக் கச்சேரி – கூடவே உணவும். என்ன மெனு
எனக் கேட்காவிட்டாலும் சொல்ல வேண்டியது எனது கடமை – சப்பாத்தி, கடாய் பனீர்,
குருமா, ஜீரா ஆலு, தால், புலாவ். கடைசியாக
இனிப்புக்கு – கேரட் ஹல்வா! இரவு பன்னிரெண்டு மணிக்கு சற்று முன்னராகவே
புத்தாண்டினை வரவேற்க ஒரு கேக்! குழுவில் இருப்பதிலேயே மூத்தவரும் அவரது
மனைவியுமாக, கேக் வெட்ட அதையும் பகிர்ந்து உண்டுவிட்டோம். புத்தாண்டு உற்சாகமாக
துவங்கி இருக்கிறது! எல்லாம் நல்லபடியாகவே நடக்கட்டும்.
இந்த வாரத்தில்… –
முகநூலில் இருந்து:
வாகனத்தில் பயணிக்கும்போது
விளக்குகளை முழு அளவில் உபயோகப்படுத்துபவரா நீங்கள்…. அது எவ்வளவு தவறு என்பதை,
இந்தக் காணொளி விளக்கலாம்!
ரசித்த பாடல்:
இந்த வாரத்தின் ரசித்த பாடலாக ஒரு
மலையாளப் பாடல். பாடல் மட்டுமல்ல காட்சிகளும் நன்றாகவே இருக்கின்றன. நீங்களும்
ரசிக்கலாமே….
படித்ததில் பிடித்தது – தத்துவம்:
வாழ்க்கைல ஒரு துன்பத்தை
ஒண்ணுமில்லாம தூசாக்கி, இதெல்லாம் ஒரு பிரச்சனையான்னு கடந்து போக வைக்க, இன்னொரு
துன்பத்தால தான் முடியும்!
இந்த வாரத்தின் பிறந்த நாள் 6 ஜனவரி 2018:
பதிவுலகத்தில் இவரைத் தெரியாதவர்
யாருமே இருக்க முடியாது என்பதை என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒரு டிடி என்றால் பதிவுலகிலும் ஒரு டிடி – அனைவருக்கும் தெரிந்த நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் 6 ஜனவரி அன்று பிறந்தவர். நாளை அவரது பிறந்த நாள். நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு உங்கள் சார்பிலும் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள். அவரது அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறட்டும்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒரு டிடி என்றால் பதிவுலகிலும் ஒரு டிடி – அனைவருக்கும் தெரிந்த நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் 6 ஜனவரி அன்று பிறந்தவர். நாளை அவரது பிறந்த நாள். நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு உங்கள் சார்பிலும் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள். அவரது அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறட்டும்.
ஊஞ்சலாடிய பேய்:
இதே நாளில் 2011-ஆம் வருடம் எழுதிய
ஒரு பதிவு – மனச் சுரங்கத்திலிருந்து… என ஒரு தொகுப்பு எழுதியதில் ஒரு பகிர்வாக
இந்தப் பதிவும் எழுதி இருக்கிறேன். இப்பதிவு வெளியிட்ட போது, கருத்துரைத்த பல
பதிவர்கள் இப்போது பதிவுகளே எழுதுவதில்லை, நண்பர்களது பதிவுகளுக்கு வருவதும் இல்லை
என்பது சோகம்! படிக்காத நண்பர்கள் படித்து உங்கள் கருத்துகளை அப்பதிவிலும்
சொல்லலாம்!
என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
நட்புடன்
வெங்கட்
புது தில்லி
இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!!
பதிலளிநீக்குஇன்னிக்கும் சாப்பாடுதான் கண்ணுல படுது முதல்ல ஹா ஹா ஹா ஹா
கீதா
இனிய காலை வணக்கம் 🙏 கீதாஜி.
நீக்குஇன்னிக்கும் சாப்பாடு தான் முதல்ல கண்ணுல படுது.... ஹாஹா... மகிழ்ச்சி தானே...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
முதலில் டிடி அவர்களுக்கு மகிழ்வான பிறந்த நாள் வாழ்த்துகள்!! பல்லாண்டு மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகள்!
பதிலளிநீக்குகீதா
மகிழ்ச்சி. அனைவருடைய வாழ்த்துகளும் அவருக்குக் கிடைத்திடட்டும்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
குளிருக்காக சிறை என்பது ஒரு வகையில் பாவம் இவர்கள் என்ற வருத்தம் வந்தாலும் அதே சமயம் சிறிய குற்றம் என்றாலும் அதுவும் நல்லதில்லையே. அரசு இதைக் கவனித்து அவர்களும் பிழைத்து வாழ ஏதேனும் செய்யலாமோ...சிறைக்குள் வேலை என்றால் அதையே வெளியிலும் செய்யலாமோ...
பதிலளிநீக்குகீதா
செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய உண்டு
நீக்குஅரசாங்கம் செய்ய நினைத்தாலும் சிலர் விடுவதில்லை. மக்களில் சிலரும் இப்படி இருப்பதையெ விரும்புவதாக சொல்கிறார்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
ஆஹா புத்தாண்டு மெனு ஈர்க்குதே...பாட்லக் டின்னர் போல!! சூப்பர்...
பதிலளிநீக்குபுத்தாண்டு எல்லா நன்மைகளையும் எல்லோருக்கும் கொடுக்கட்டும் மகிழ்ச்சியாக வைத்திருக்கட்டும்...
கீதா
நல்ல மெனுதான். அன்றைய தினம் சிறப்பாக அமைந்தது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
அருமையான காணொளி...ஆனால் மனதை என்னவோ செய்தது...
பதிலளிநீக்குஆமாம் ஜி காரிலும் சரி பைக்கிலும் சரி பீம் லைட் போடும் போது ஹையாக போட்டுத்தான் ஓட்டுகிறார்கள். அது ஆக்சுவலாகப் போடக் கூடாது சட்டம் உண்டு. எதிரில் வரும் கார்கள் தெரியாமல் கண்ணை மறைக்கும் ஹைவேயிலும் சரி ஊடுக்குள்ளும் சரி போட்டு ஓட்டுகிறார்கள். லோ பீம் தான் போட வேண்டும். ஆனால் யாரும் ஃபாளோ செய்வதில்லை.
கீதா
பலரும் ஹை பீம் தான் பயன்படுத்துகிறார்கள். ரொம்பவும் தப்பானது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
ஆஹா ஒடியன்....இது த்ரில்லர் என்று கேள்விப்பட்டேன். பார்க்கணும் என்று நினைத்துருக்கேன் பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. த்ரில்லர் என்றால் பிடிக்கும் என்பதால்..
பதிலளிநீக்குமோஹன்லாலா அது என்று தோன்றியது...மஞ்சுவாரியார் நல்ல நடிகை...
பாட்டு நன்றாக இருக்கிறது இப்போதுதான் கேட்கிறேன் ஜி
கீதா
ஆஹா... நீங்கள் கேட்டிராத பாடலா? உங்களுக்கு பாடல் பிடித்ததில் மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
தத்துவம் இரு கோடுகள் தத்துவம்!!
பதிலளிநீக்குபேய்க்கதை படித்துவிட்டு வரேன் ஜி...
கீதா
பேய்க்கதை படித்து பின்னர் உங்கள் கருத்தை சொல்லுங்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
குட்மார்னிங். சிறைச்சாலைக்கு வரும் எல்லோரும் உண்மையான குற்றவாளிகள் இல்லை!!! புத்திசாலி வாளிகளும் இருக்கிறார்கள்!
பதிலளிநீக்குபுத்திசாலிகளும் இருக்கிறார்கள்! :) உண்மை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
புத்தாண்டு இரவில் சாப்பிட்ட மெனுவில் நீங்கள் செய்து கொண்டு போனது எது என்பதை நீங்கள் சொல்லல விட்டாலும் கேட்பது எங்கள் கடமை!!!!!
பதிலளிநீக்குநான் என்ன செய்து வர வேண்டும் எனக் கேட்டதற்கு, நீங்கள் வந்து சாப்பிட்டாலே போதும் எனச் சொல்லிவிட்டார்கள் - நல்ல நண்பர்கள்! :) காலி வயிறுடன் சென்று, உணவை உண்டு வந்தது மட்டுமே என் வேலை!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
ராத்திரிகாலங்களில் டிம் வச்சு பழகுவோம். காணொளியை ரசித்தேன். பாடலும் கேட்டேன். செம துல்லிய ரெக்கார்டிங்.
பதிலளிநீக்குபாடல் மற்றும் காணொளி உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
படித்ததில் பிடித்தது - இரு கோடுகள் தத்துவம்.
பதிலளிநீக்குஅடடே... திண்டுக்கல் தனபாலனுக்கு எங்கள் இனிய, மிக இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
இரு கோடுகள் தத்துவம்! அதே அதே - நீங்களும் கீதாஜியும் ஒரே மாதிரி சிந்தனை செய்திருக்கிறீர்கள்...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
பேய்க்கதை படித்துச் சிரித்தேன், ரசித்தேன்.
பதிலளிநீக்குபழைய பதிவிலும் கருத்து கண்டேன். மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
திண்டுக்கல் ஜி அவர்களுக்கு நாளை மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குசிறை மேட்டர் நன்றாக இருக்கிறதே...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
நீக்குசிறை செய்தி மிகவும் வருத்தமாய் இருக்கிறது.
பதிலளிநீக்குபுத்தாண்டு உற்சாகம் தொடர வாழ்த்துக்கள்.
திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன்.
முதல் காணொளி சொல்லும் செய்தி கடைபிடிக்கவேண்டியது கட்டாயம்.
இரண்டாவது காணொளி பாடல் நன்றாக இருக்கிறது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்குடிடி அண்ணாக்கு அட்வான்ஸ் ஹாப்பி பர்த்டே..
பதிலளிநீக்குகாணொளி அருமை. தினமும் அதிகாலை 5 மணிக்கு பெரியவளை ஆபீச் அனுப்ப வண்டியில் கூட்டிப்போவது என் வேலை. எதிரில் வரும் வாகன வெளிச்சம் எத்தனை பாதிக்கும்ன்னு எனக்கு தெரியும். அதிலும் தூக்கக்கலக்கத்தில் பயந்துக்கிட்டுதான் போவேன்.
புத்தாண்டு கேக் அழகா இருக்கு.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.
நீக்குதிண்டுக்கல் தனபாலனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அதுசரி காஃபி வித் கிட்டுவில் காஃபி கிடையாதா
பதிலளிநீக்குவாரா வாரம் இத்தலைப்பில் ஒர் பதிவு எழுதுகிறேன். கதம்பப் பகிர்வு.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
ஓ இப்படியும் நடக்கிறதா தலைநகரில்! குளிருக்காக குற்றம் புரிந்து சிறைக்குச் செல்வது...ஆச்சரியம்தான்..ஆனால் நடைமுறையில் நினைத்துப் பார்க்க பாவம் என்றும் வேதனையாகவும் தோன்றுகிறது..
பதிலளிநீக்குகாணொளி நல்ல செய்தி.
ஒடியன் படம் பார்க்க முடியாமல் போனது.
எல்லாமே அருமை ஜி
துளசிதரன்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.
நீக்குநன்றி... மிக்க நன்றி ஜி...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
பதிலளிநீக்குகாணொளி பின்னர் தான் பார்க்கணும். பேய்க்கதை படிச்சுடுவோம். தத்துவம் தெரிந்ததுதான், எல்லோரும் சொல்லிட்டாங்க. டிடியின் பிறந்த நாள் என்பதை தாமதமாக அறிந்தேன். புத்தாண்டு டின்னர் அருமை! உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் தாமதமான புத்தாண்டு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
நீக்குதெருவோரத்தில் படுப்பவர்களுக்கெனத் தனியாக ஏதேனும் ஏற்பாடு செய்து தரலாம். மத்திய, மாநில அரசுகள் தயவில்.
பதிலளிநீக்குஇரவு நேர தங்குமிட வசதி தில்லியில் இருக்கிறது. பயன்படுத்த முடியும். ஆனால் சிலர் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.