அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன் வெளியிட்ட யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
அனுபவங்கள் கற்றுத் தந்தது வாழ மட்டுமல்ல, வாழ்க்கையில் வந்து போகும் மாற்றங்களையும் மாறிச் செல்லும் மனித குணங்களையும் தான்.
******
யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே!
பகுதி மூன்று இங்கே! பகுதி நான்கு இங்கே!
பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!
பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!
பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!
பகுதி பன்னிரெண்டு இங்கே!
பகுதி பதிமூன்று இங்கே!
பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே!
பகுதி பதினாறு இங்கே!
பகுதி பதினேழு இங்கே!
பகுதி பதினெட்டு இங்கே!
பகுதி பத்தொன்பது இங்கே!
பகுதி இருபது இங்கே!
பகுதி இருபத்தி ஒன்று இங்கே!
பகுதி இருபத்தி இரண்டு இங்கே!
பகுதி இருபத்தி மூன்று இங்கே!
பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே!
பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே!
பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!
பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே!
பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே!
பகுதி முப்பத்தி இரண்டு இங்கே! பகுதி முப்பத்தி மூன்று இங்கே!
பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!
பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே!
பகுதி முப்பத்தி எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!
பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!
பகுதி நாற்பத்தி இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று இங்கே!
பகுதி நாற்பத்தி நான்கு இங்கே! பகுதி நாற்பத்தி ஐந்து இங்கே!
பகுதி நாற்பத்தி ஆறு இங்கே! பகுதி நாற்பத்தி ஏழு இங்கே!
பகுதி நாற்பத்தி எட்டு இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்பது இங்கே!
பகுதி ஐம்பது இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்று இங்கே!
பகுதி ஐம்பத்தி இரண்டு இங்கே! பகுதி ஐம்பத்தி மூன்று இங்கே!
பகுதி ஐம்பத்தி நான்கு இங்கே! பகுதி ஐம்பத்தி ஐந்து இங்கே!
யாரிவள்! பகுதி ஐம்பத்தி ஆறு – எளிதாக கடந்து விடலாம்!
அப்பா அம்மா இருவருமே சேமிப்பில் சிறந்தவர்கள்! மாதச் சம்பளம் வந்ததும் எதிர்வீட்டில் வாங்கியிருந்தேன் அதைக் குடுக்கணும் என்று ஒரு குறிப்பிட்ட தொகையை அப்பாவிடம் கேட்டு வாங்கிக் கொள்வாள் அம்மா. பெரும்பாலும் அது அம்மாவின் சேமிப்பாக தான் இருக்கும். சேமிப்பிலிருந்து எடுத்தது என்று சொல்லி விட்டால் திரும்ப வராது என்பதால் அம்மா அப்படிச் சொல்வாள்!
அப்பாவும் அப்படியே! உடன் பணிபுரிபவரிடம் கைமாத்தா வாங்கினேன் என்று சொல்வார்! சில நேரங்களில் உண்மையாகவே கடனாகவும் இருக்கும்! இப்படியிருக்க அம்மாவை செக்கப்பிறகு அழைத்துச் செல்லவும், இவளுக்கு இரண்டாம் வருடக் கல்லூரிக்கான செமஸ்டர் கட்டணம் செலுத்துவதற்கும் யாரிடமோ வாங்கி ஏற்பாடு செய்ததாக சொல்லி பீரோவில் வைத்தார் அல்லவா!
அந்தப் பணம் உண்மையிலேயே யாரிடமாவது கடனாக வாங்கியதா! அல்லது சேமிப்பா! என்று தெரியவில்லை! சேமிப்பாக இருக்கவும் வாய்ப்பில்லை! ஏனெனில் கடந்த ஒரு வருடமாக அம்மாவின் மருத்துவ செலவுகள் வேறு இருந்ததே! எதுவாக இருந்தாலும் அந்தப் பணத்தை அம்மா செலவு செய்யவே இல்லை! அப்பாவுக்கு எதுவுமே நினைவில் இல்லை! கேட்டுப் பார்த்தும் அவருக்கு அப்போது விளங்கவும் இல்லை!
ஒரு விஷயத்தைப் பற்றி இங்கு சொல்லியே ஆகணும்! அம்மா தன்னுடைய நோயை தெரிந்து கொண்டது, இப்போது அப்பாவுக்கு இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டது, அதை கடந்து வருவது என்று எல்லாவற்றையுமே திடமான மனதுடன் தைரியமாக எதிர் கொண்டாள்! அம்மா ஒருநாளும் கலங்கிப் போய் அடுத்து என்ன செய்வதென்று குழம்பியதே இல்லை! அம்மாவிடம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் இது! இரும்புப் பெண்மணி அவள்!
நினைவுகளை ஓரளவு மீட்டுக் கொண்டு விட்டதால் அப்பாவும் ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்குப் பின் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். சில நாட்களுக்குப் பின் அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்ற போது தம்பி தான் அப்பாவை அலுவலகத்துக்கு பேருந்தில் அழைத்துச் சென்று விட்டுவிட்டு உடன் பணிபுரிபவர்களிடம் சொல்லி விட்டு வந்தான்!
இப்படியாக அப்பா பழையபடி மாறிக் கொண்டே வந்ததால் இவளும் தன் கல்லூரிப்படிப்பின் இரண்டாம் ஆண்டில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள். இரண்டாம் ஆண்டு முதல் அரட்டை, கலாட்டா என்று நாட்கள் கடந்தது. தம்பியும் இப்போது பள்ளிப்படிப்பை முடித்து விட்டு கல்லூரியில் சேர்ந்து விட்டான். இவளைப் போலவே இயந்திரவியல் துறை தான். ஆனால் நான்கு ஆண்டுகள் படிப்பு! கோவையின் பிரபலமான கல்லூரியில்!
மனதில் நிம்மதி மட்டும் இருந்து விட்டால் செய்யும் செயல்களில் ஈடுபாடு கிடைத்து விடும்! அப்பாவும் அம்மாவும் ஆரோக்கியமாக கண் முன்னே இருந்து விட்டால் போதுமே! வேறு என்ன வேண்டும் உலகில்! எதையும் எளிதாக கடந்து விடலாம்! அவளுக்கும் இனி எந்த விதமான மனத்துயரங்களும் ஏற்படாது என்ற நம்பிக்கையில் கனவுப் பாதையில் பயணிக்கத் துவங்கினாள்!
இன்னும் என்னென்ன அனுபவங்கள் அவளுக்கு கிடைத்தது!! தொடர்ந்து பார்க்கலாம்!
*****
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
சமையலறையில் எந்த டப்பாவைத் திறந்தாலும் ஓரிரு ரூபாய்கள் கிடைக்கும். அல்லது சிலலறைகள் இருக்கும்! அம்மாக்களின் அஞ்சறைப்பெட்டி பேங்க்! என் அப்பா அம்மாவிடம் "கடனாக" பணம் பெற்றுக்கொள்வார். சம்பளம் வந்ததும் "கதித" (கடன் திருப்பித் தந்தது) என்று கணக்கு எழுதி நேர் செய்வார். ருப்பது தேதிக்குமேல் மறுபடி அம்மாவிடம் கடன் வாங்குவார்!
பதிலளிநீக்குதொடர் உங்களின் கடினமான அனுபவ நாட்களை சொல்கிறது.
அந்த நம்பிக்கை சிறப்பு...
பதிலளிநீக்குஅப்பா நலம் பெற்றதுவரை மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஅம்மாவிடம் நிறைய கற்றுக் கொண்டு இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குநம்பிக்கைதான் வாழ வைக்கிறது.
உங்கள் அம்மா அப்பாவின் சேமிப்பு நல்ல விஷயம். அதுவும் அம்மாவின் சேமிப்பு. நீங்களும் நிறைய கற்றுக் கொண்டிருக்கீங்க அம்மாகிட்டருந்து.
பதிலளிநீக்குசேமிப்பு இது எனக்கும் உண்டு. வங்கியில் அல்ல. நம் வீட்டில் நான் நிதி அமைச்சர் கிடையாது. எனவே என் கையில் பணம் இருக்காது. கேட்டுத்தான் பெற வேண்டும். ஊருக்குச் செல்லும் போது அலல்து கடைக்குச் செல்லும் போது பெறப்படும் பணத்தில் கொஞ்சத்தை, அல்லது சில்லறை வருவதை அடுக்களையிலோ அல்லது ஏதேனும் ஒரு பர்சிலோ போட்டு வைத்துவிட்டு மறந்துவிடுவேன். ஆனால் பல சமயங்களில் இது உதவும். இப்படி பல பர்ஸ், என் முதுகுப் பையின் உள்ளே இருக்கும் ஜிப் களில் செருகி வைத்துவிடும் வழக்கம் இப்போதும் தொடர்கிறது.
கீதா
பலவித அனுபவங்கள் உங்களை செதுக்கி உள்ளது.
பதிலளிநீக்கு