அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன் வெளியிட்ட யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
வாழ்க்கை என்பது ஊஞ்சலில் உட்கார்ந்து ஊசலாடுவது அல்ல; புயலுக்கு நடுவே படகைச் செலுத்துவது போன்றது.
******
யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே!
பகுதி மூன்று இங்கே! பகுதி நான்கு இங்கே!
பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!
பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!
பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!
பகுதி பன்னிரெண்டு இங்கே!
பகுதி பதிமூன்று இங்கே!
பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே!
பகுதி பதினாறு இங்கே!
பகுதி பதினேழு இங்கே!
பகுதி பதினெட்டு இங்கே!
பகுதி பத்தொன்பது இங்கே!
பகுதி இருபது இங்கே!
பகுதி இருபத்தி ஒன்று இங்கே!
பகுதி இருபத்தி இரண்டு இங்கே!
பகுதி இருபத்தி மூன்று இங்கே!
பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே!
பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே!
பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!
பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே!
பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே!
பகுதி முப்பத்தி இரண்டு இங்கே! பகுதி முப்பத்தி மூன்று இங்கே!
பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!
பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே!
பகுதி முப்பத்தி எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!
பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!
பகுதி நாற்பத்தி இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று இங்கே!
பகுதி நாற்பத்தி நான்கு இங்கே! பகுதி நாற்பத்தி ஐந்து இங்கே!
பகுதி நாற்பத்தி ஆறு இங்கே! பகுதி நாற்பத்தி ஏழு இங்கே!
பகுதி நாற்பத்தி எட்டு இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்பது இங்கே!
பகுதி ஐம்பது இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்று இங்கே!
பகுதி ஐம்பத்தி இரண்டு இங்கே! பகுதி ஐம்பத்தி மூன்று இங்கே!
பகுதி ஐம்பத்தி நான்கு இங்கே! பகுதி ஐம்பத்தி ஐந்து இங்கே!
பகுதி ஐம்பத்தி ஆறு இங்கே! பகுதி ஐம்பத்தி ஏழு இங்கே!
பகுதி ஐம்பத்தி எட்டு இங்கே!
யாரிவள்! பகுதி ஐம்பத்தி ஒன்பது – வாழ்க்கைப் பயணம்!
கல்லூரிப் பருவம் எல்லோரின் வாழ்விலும் மறக்க இயலாதது! முதலாம் ஆண்டில் அவளுக்கு எல்லாமே புதிதாகத் தெரிந்தது. இரண்டாம் ஆண்டும், மூன்றாம் ஆண்டும் படிப்பு ஒருபுறம் என்றாலும் கலாட்டாவுக்கு பஞ்சமில்லாத நாட்களாக கடந்தது. அந்த பருவத்தில் இவள் கற்றுக் கொண்ட விஷயங்களும் ஏராளம்!
குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த இன்னல்களுக்கு நடுவே ட்யூஷன் எதுவும் செல்லாமல் யாரின் துணையின்றியும் தானே படித்து இறுதியாண்டில் இவளால் 71% மதிப்பெண்கள் தான் எடுக்க முடிந்தது! அடுத்து என்ன செய்வது என்று யோசித்து வைத்திருந்தாள்! தன் துறை சம்பந்தப்பட்ட கோர்ஸ் ஒன்றில் சேர்ந்து கற்றால் எதிர்காலத்துக்கு உதவியாக இருக்கும் என்று!
கல்லூரி முடித்ததும் தம்பி படிக்கும் பிரபலக் கல்லூரியில் மெஷின் டிசைனிங் கோர்ஸ் சேர்ந்தாள். கணினியில் இயந்திரங்களின் பகுதிகளை டிசைன் செய்து அதை 3D ஆக மாற்றிப் பார்க்க ஆர்வமாக இருந்தது. இங்கு வெளிநாட்டவர்களுடன் கற்கும் வாய்ப்பும் அவளுக்கு கிடைத்தது! அந்த கோர்ஸின் நான்கு நிலைகளையும் கற்றுத் தேர்ந்தாள். சான்றிதழ்களும் பெற்றாள்!
அதன் பின் சென்னைக்கு சென்று தூரத்து உறவினர் ஒருவர் நடத்திய சென்டரில் இயந்திரவியல் துறை சம்பந்தமான ஒரு அட்வான்ஸ்டு கோர்ஸும் முடித்தாள். அப்பா அம்மாவை விட்டு அங்கேயே தங்கி கற்றதன் மூலம் கிடைத்த அனுபவங்களால் வாழ்க்கைப் பாடமும், பக்குவமும் அவளுக்கு கிடைத்தது! கோர்ஸை நல்லமுறையில் முடித்து சான்றிதழும் பெற்றாள்.
சென்னையிலேயே தொடர்ந்து மாமா வீட்டில் ஆறு மாதங்கள் போல தங்கியிருந்து பல வேலைகளுக்கும் விண்ணப்பித்தாள்! எதுவும் எதிர்பார்த்த வகையில் கிடைக்கவில்லை! வாழ்வின் நெளிவு சுளிவுகளை இந்த அனுபவங்கள் மூலம் கற்றுக் கொண்டு மீண்டும் கோவைக்கு வந்தாள்.
கோவையில் அப்பா அம்மாவுக்கு ஒத்தாசையாக இருந்து கொண்டு மீண்டும் வேலைக்கு முயற்சி செய்தாள். ஒரு சில இடங்களில் பணியாற்றவும் வாய்ப்பு கிடைத்தது. இப்படித் தான் என் வாழ்க்கை இருக்கப் போகிறதோ! அடுத்து நல்லதொரு வேலை கிடைக்கணும். அதுவும் என்னுடைய துறையிலேயே கிடைக்கணும் என்று நினைத்துக் கொண்டிருந்தாள்!
வாழ்க்கை சற்று அமைதியாகவும் நல்லதொரு எதிர்காலம் அமையும் என்று நம்பிக்கையில் சென்று கொண்டிருந்த நேரத்தில் தான் அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த தம்பிக்கு பெரும் விபத்து ஒன்று ஏற்பட்டது! அப்பா ஊரில் இல்லாத நேரம் வேறு! சூழ்நிலையை கையாள வேண்டிய பொறுப்பு இவளுக்கு உண்டானது!
அப்பா எவ்வாறு சுயநினைவின்றி கிடந்தாரோ! அதே நிலை தான் தம்பிக்கும் இப்போது! ஒரு மாதம் போல மருத்துவமனைக்கும் வீட்டுக்குமாக அலைச்சல்! தம்பிக்கும் எல்லாவற்றையும் கற்றுத் தந்து மீட்டுக் கொண்டு வர வேண்டிய அவசியம் உண்டானது! உற்றாரும், நட்புவட்டமும் தான் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் உடனிருந்து உதவி செய்தார்கள்!
இறைவன் அருளால் எல்லாவற்றையும் கடந்து மீண்டும் வாழ்க்கைப் படகு சுமூகமாக பயணிக்கத் தொடங்கியது. சில மாதங்களில் இவளே எதிர்பாராத விதமாக இவளின் வாழ்க்கைப் பாதையும் மாறப் போகிறது என்று அவளுக்கு அப்போது தெரிய வாய்ப்பில்லை!
*****
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
அப்பா, அம்மாவை தொடர்ந்து தம்பியும் ஆபத்தில் சிக்கிக் கொண்டது சோகம். சோதனை மேல் சோதனை.
பதிலளிநீக்குகோர் சப்ஜெக்ட் என்று படித்த படிப்புக்கே வேலை தேடினால் பெரும்பாலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
தொடரும் சோதனைகள். வேதனை
பதிலளிநீக்குசோதனை மேல் சோதனை.
பதிலளிநீக்குஎதிர்ப்பாராததை எதிர்பாருங்கள் என இதனால்தான் அறிஞர்கள் சொல்கிறார்கள் போலும்.
அடுத்து தம்பிக்கு சோதனையான ?
பதிலளிநீக்குயப்பா... எத்தனை இன்னல்கள்...
பதிலளிநீக்குஆதி இதில் நீங்கள் சொல்லியிருப்பது நன்றாக நினைவிருக்கிறது, உங்கள் நானும் அவரும் தொடரில் சொல்லியிருப்பீங்க இல்லையா....சென்னையில் தங்கியிருந்தது அவர்கள் தங்குவதற்குத் தந்த இடம்....வேலை செய்தது அதில் கற்ற பாடங்கள் என்று.
பதிலளிநீக்குதம்பியின் விபத்தும் நீங்கள் எதிலோ சொன்ன நினைவிருக்கிறது...ஒவ்வொரு சோதனையாக வந்து...கடந்து வந்திருக்கீங்க...
கீதா
வாசகம் பொருத்தம்
பதிலளிநீக்குகீதா
வாழ்க்கையின் சோதனையான கட்டங்கள்.
பதிலளிநீக்கு