அன்பின்
நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள்
அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன் வெளியிட்ட
யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன்
தொடங்கலாம் வாருங்கள்.
பழுக்கக் காய்ச்சிய
இரும்பு தான் பட்டை ஆகிறது; பட்டுத் தேறிய மனது தான் பக்குவப்படுகிறது.
******
யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே!
பகுதி மூன்று இங்கே! பகுதி நான்கு இங்கே!
பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!
பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!
பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!
பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!
பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே!
பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!
பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!
பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே!
பகுதி இருபத்தி
இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!
பகுதி இருபத்தி
நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே!
பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே!
பகுதி இருபத்தி
எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!
பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே!
பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே!
பகுதி முப்பத்தி
இரண்டு இங்கே! பகுதி முப்பத்தி
மூன்று இங்கே!
பகுதி முப்பத்தி
நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!
பகுதி முப்பத்தி ஆறு
இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே!
பகுதி முப்பத்தி
எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!
பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!
பகுதி நாற்பத்தி
இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று இங்கே!
பகுதி நாற்பத்தி
நான்கு இங்கே! பகுதி நாற்பத்தி ஐந்து இங்கே!
பகுதி நாற்பத்தி ஆறு
இங்கே! பகுதி நாற்பத்தி ஏழு இங்கே!
பகுதி நாற்பத்தி
எட்டு இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்பது இங்கே!
பகுதி ஐம்பது இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்று இங்கே!
பகுதி ஐம்பத்தி
இரண்டு இங்கே! பகுதி ஐம்பத்தி மூன்று இங்கே!
பகுதி ஐம்பத்தி
நான்கு இங்கே! பகுதி ஐம்பத்தி ஐந்து இங்கே!
பகுதி ஐம்பத்தி ஆறு இங்கே! பகுதி ஐம்பத்தி ஏழு இங்கே!
பகுதி ஐம்பத்தி
எட்டு இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்பது இங்கே!
பகுதி அறுபது இங்கே! பகுதி அறுபத்தி ஒன்று இங்கே!
பகுதி அறுபத்தி
இரண்டு இங்கே! பகுதி அறுபத்தி மூன்று இங்கே!
பகுதி அறுபத்தி
நான்கு இங்கே! பகுதி அறுபத்தி ஐந்து இங்கே!
பகுதி அறுபத்தி ஆறு இங்கே! பகுதி அறுபத்தி ஏழு இங்கே!
பகுதி அறுபத்தி எட்டு
இங்கே! பகுதி அறுபத்தி ஒன்பது இங்கே!
பகுதி எழுபது இங்கே! பகுதி எழுபத்தி ஒன்று இங்கே!
பகுதி எழுபத்தி
இரண்டு இங்கே! பகுதி எழுபத்தி மூன்று இங்கே!
பகுதி எழுபத்தி
நான்கு இங்கே! பகுதி எழுபத்தி ஐந்து இங்கே!
பகுதி எழுபத்தி ஆறு இங்கே! பகுதி எழுபத்தி ஏழு இங்கே!
பகுதி எழுபத்தி
எட்டு இங்கே!
யாரிவள்! பகுதி
எழுபத்தி ஒன்பது – மரத்துப் போன மனசு!
அப்பா எல்லாவற்றிலுமே
perfect என்று சொல்வது மிகச்சரியே! ஏனென்றால் தனது மறைவுக்குப் பின்னும்
யாருக்கும் எந்தவித சிக்கலும் இருக்கக்கூடாது என்று நினைத்து வங்கி
பரிவர்த்தனைகள், அலுவலக விஷயங்கள் என்று அரசாங்க சம்பந்தப்பட்ட விஷயங்கள்
எல்லாவற்றையுமே சரியாக செய்து வைத்திருந்தார். அதனால் இவர்களுக்கு பெரிதாக
அலைச்சல் இல்லாமல் வேலைகளை எளிதாக முடிக்க முடிந்தது! இது எல்லோருமே பின்பற்ற
வேண்டிய விஷயம்!
அப்பாவும், அம்மாவும்
இல்லாததால் தம்பியும் உன்னுடனேயே டெல்லிக்கு வந்து விடுகிறேன் என்று சொன்னதாலும்,
அப்பாவின் மறைவுக்குப் பின் அந்த வீட்டிற்குச் செல்ல மனம் ஒப்பாததாலும் அப்பாவின்
அழகான வீட்டை கொடுத்து விட்டார்கள்! கண்கள் குளமாக அப்பாவுடன் 20 நாட்கள் இருந்த
பசுமையான நினைவுகளோடு அந்த சாலையைக் கடந்தவள் தான், அதன் பின் அங்கு செல்ல இவளுக்கு
துணிவு ஏற்படவில்லை!
சிறுவயதிலேயே இவளுக்கு
கிடைத்த அனுபவங்கள் இவள் மனதை புரட்டி போட்டது! மரத்துப் போகச் செய்தது! எதன்
மீதும் பற்று இல்லாமலிருக்க செய்தது! பெற்றோரை விட இவ்வுலகில் உயர்ந்த உறவு வேறு
இல்லை! அவர்களே மடிந்து விட்ட பிறகு இனி யார் இருந்தால் என்ன! இல்லாவிட்டால் என்ன!
என்பது போலெல்லாம் தோன்றி விட்டது!
15 வயது வரை தான்
எல்லோரையும் போன்று கவலைகளும், பொறுப்புகளும் இல்லா பருவத்தை கடந்து வந்தாள்! அதன்
பின்பு இவள் கடந்து வந்த அனுபவங்கள் தான் எத்தனை! எத்தனை! அம்மாவுக்காக 20 வயதில்
திருமணம் செய்து கொண்டாள்! அம்மா மறைந்த போது இவளின் வயது 22! இதோ நான்கே வருடங்களில்
அப்பாவும் மறைந்து விட்டார்! 26 வயதுக்குள் வாழ்க்கை இவளை அனலில் புடம் போட்ட
இரும்பை போன்று மாற்றி விட்டது!
திருமணமான பெண்கள்
அம்மா வீட்டிற்கு செல்வதென்றால் ஆனந்தத்தோடு செல்வார்கள்! கணவனிடம் பிணக்கு
கொண்டாலும் செல்லுமிடம் அம்மா வீடு தான்! அம்மாவின் கைமணமும், அம்மா
அப்பாவிடமிருந்து கிடைக்கும் அன்பும் அந்தப் பெண்ணின் மனதிற்கு பெரிய ஆறுதலைத்
தரும்!
ஆனால் இவள்
திருமணத்திற்கு பிறகு அம்மா வீட்டிற்கு என்று சென்றதெல்லாமே ஆனந்தமாய் இருந்து
விட்டு வருவதற்காக இல்லையே! இனி! அம்மா வீடு என்ற பேச்சுக்கும் இடமில்லை! காலம்
தான் இவளை மீட்டுக் கொண்டு வரணும்! அப்பா அம்மாவின் ஆசிகள் தான் இவளுடன் இருந்து
அவளை வழிநடத்தணும்!
இனி! இவளின் வாழ்வில்
அப்பாவும் அம்மாவும் ஏற்படுத்திக் கொடுத்த உன்னதமான உறவாக கணவன் இருக்கிறார். அவள்
சுமந்து பெற்றெடுத்த அழகிய செல்வமான குழந்தை இருக்கிறாள்! அவர்களே அவளின்
எல்லாமுமாக இனி உடனிருக்கணும்! அன்பால் அவளை அரவணைக்கணும்!
அவளும் இதுவரை கடந்து
வந்த கடினமான பாதைகளைப் போன்று இதையும் கடந்து வந்து விடுவாள் என்று நம்பிக்கை
கொள்வோம்! செல்லும் வழித்தடத்துக்கு ஏற்றாற் போல் ஆற்று நீரும் வளைந்தும்
நெளிந்தும் செல்வதைப் போன்று பெண் என்பவளும் வளைந்து கொடுத்து முன்னேறிடுவாள்!
*****
இன்றைய பதிவு குறித்த
தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள்
அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
அப்பா என்ன அரசு வழக்கங்களில் முன்னேற்பாடுகள் செய்து விட்டு போயிருந்தார் என்று சொல்லி இருக்கலாமோ...
பதிலளிநீக்குஎன் பாஸ் அவர் பெற்றோருக்கு\ ஒரே பெண். எங்கள் திருமணம் முடிந்த நான்கு வருடங்களில் அவர் துண்டாகி மறைந்து விட, தாயை எங்களுடன் அழைத்து வந்து விட்டோம். அவருக்கும் ஒரு சுக துக்கம் என்று செல்ல பிறந்த வீடு ஒன்று என்றில்லை என்று அடிக்கடி வருத்தப்படுவார்.
எவ்வளவு வயதானால் என்ன... நமக்கென்று செல்ல பிறந்தவீடு இல்லை என்பது பெரிய மனக்குறைதான். என்னைச் சுற்றி உள்ளவர்கள், பெற்றோர் உட்பட, என் காலத்துக்குப் பிறகுதான் மறையணும்னு நினைத்துக்கொள்வேன். அப்படியா நடக்கிறது?
நீக்குஎனக்கும் அதேதான். பல வருடங்களாக. அதனாலேயே, ஒன்றாக வளர்ந்த (கஸின்ஸ் தான் என்றாலும் நான் தங்கைகள் என்றுதான் சொல்லுவேன்) தங்கைகள் எங்களுக்குள் ஒருவருக்கொருவர் பிறந்த வீடு என்று சொல்லிக் கொண்டு ஒருவருக்கொருவர் இருந்து வருகிறோம். ஆனால் சென்று தங்கவும் கூட முடியவில்லை.
நீக்குகீதா
நெல்லை.. ஆண்களாகிய நமக்கும் அந்த உணர்வு இருக்கிறது எனபது உங்கள் கமெண்ட் படித்ததும் எனக்கும் தோன்றியது.
நீக்குசிலருக்கு கொடுப்பினை இவ்வளவுதான் என்று இறைவனே துணையென வாழவேண்டும்.
பதிலளிநீக்குஇந்த நிலை இந்த வயதில் யாருக்கும் ஏற்படக் கூடாது...
பதிலளிநீக்கு//அம்மா அப்பாவிடமிருந்து கிடைக்கும் அன்பும் அந்தப் பெண்ணின் மனதிற்கு பெரிய ஆறுதலைத் தரும்! //
பதிலளிநீக்குஆமாம். எத்தனை வயதானாலும்
பிறந்தவீடு ஒன்று போய் வர முடியவில்லை என்றால் மனது பாரமாக இருக்கும்.
பெற்றோரின் பிரிவு பெரும் வேதனைதான்
பதிலளிநீக்குஆதி உங்கள் வரிகளை அப்படியே வழி மொழிகிறேன். எனக்கும் இந்த ஆதங்கம் உண்டு ரொம்பவே. பிறந்த வீடு என்று இல்லையே என்று.
பதிலளிநீக்குஉங்கள் அப்பாவைப் போன்று எல்லா அப்பாக்களும் இருந்துவிட்டால் பிரச்சனையே இல்லைதான்.
கீதா
பெற்றோரின் பிரிவு மிகுந்த கவலைதான். பிறந்த வீடு இருப்பது செல்லும்போது மனதுக்கு ஆறுதல் தரும் .
பதிலளிநீக்கு