அன்பின்
நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள்
அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன் வெளியிட்ட
யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன்
தொடங்கலாம் வாருங்கள்.
பாதை கடினமாக
இருந்தாலும் நம் வாழ்க்கை கண்டிப்பாக ஒரு நாள் ஒளிமயமானதாக மாறும் - நம்பிக்கை
தானே வாழ்க்கை.
******
யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே!
பகுதி மூன்று இங்கே! பகுதி நான்கு இங்கே!
பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!
பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!
பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!
பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!
பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே!
பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!
பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!
பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே!
பகுதி இருபத்தி
இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!
பகுதி இருபத்தி
நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே!
பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே!
பகுதி இருபத்தி
எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!
பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே!
பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே!
பகுதி முப்பத்தி
இரண்டு இங்கே! பகுதி முப்பத்தி
மூன்று இங்கே!
பகுதி முப்பத்தி
நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!
பகுதி முப்பத்தி ஆறு
இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே!
பகுதி முப்பத்தி
எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!
பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!
பகுதி நாற்பத்தி
இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று இங்கே!
பகுதி நாற்பத்தி
நான்கு இங்கே! பகுதி நாற்பத்தி ஐந்து இங்கே!
பகுதி நாற்பத்தி ஆறு
இங்கே! பகுதி நாற்பத்தி ஏழு இங்கே!
பகுதி நாற்பத்தி
எட்டு இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்பது இங்கே!
பகுதி ஐம்பது இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்று இங்கே!
பகுதி ஐம்பத்தி
இரண்டு இங்கே! பகுதி ஐம்பத்தி மூன்று இங்கே!
பகுதி ஐம்பத்தி
நான்கு இங்கே! பகுதி ஐம்பத்தி ஐந்து இங்கே!
பகுதி ஐம்பத்தி ஆறு இங்கே! பகுதி ஐம்பத்தி ஏழு இங்கே!
பகுதி ஐம்பத்தி
எட்டு இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்பது இங்கே!
பகுதி அறுபது இங்கே! பகுதி அறுபத்தி ஒன்று இங்கே!
பகுதி அறுபத்தி
இரண்டு இங்கே! பகுதி அறுபத்தி மூன்று இங்கே!
பகுதி அறுபத்தி
நான்கு இங்கே! பகுதி அறுபத்தி ஐந்து இங்கே!
பகுதி அறுபத்தி ஆறு இங்கே! பகுதி அறுபத்தி ஏழு இங்கே!
பகுதி அறுபத்தி
எட்டு இங்கே! பகுதி அறுபத்தி ஒன்பது இங்கே!
பகுதி எழுபது இங்கே! பகுதி எழுபத்தி ஒன்று இங்கே!
பகுதி எழுபத்தி
இரண்டு இங்கே! பகுதி எழுபத்தி மூன்று இங்கே!
பகுதி எழுபத்தி
நான்கு இங்கே!
யாரிவள்! பகுதி
எழுபத்தி ஐந்து – அப்பாவின் அழகான வீடு!
கிரஹப்பிரவேசத்திற்காக
ஊருக்கு வந்தவள் அப்பாவுடன் சில நாட்கள் இருக்கலாம் என முடிவு செய்தாள்! கணவனும்
'குழந்தையும் நீயும் இருந்துட்டு வாங்களேன்! அப்பாவுக்கும் சந்தோஷமா இருக்கும்'
என்றார். உண்மை தான்! புது வீட்டில் அப்பாவுக்கு தனியாக வசிக்க என்னவோ போல் தான்
இருக்கும்! தம்பியும் கோவையில் பணி செய்கிறான்!
திருச்சியில் அப்பாவின் வீடு மும்மூர்த்திகளின் ஸ்தலத்தில் அமைந்திருந்தது. பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவருக்கும் தனித்தனியே சன்னிதிகள் அமையப் பெற்ற கோவில் இது! வீட்டுக்கு எதிரே சிறிய பெருமாள் கோவில் ஒன்றும் இருந்தது! வீட்டைச் சுற்றி வேப்பமரங்கள் இருந்ததால் மின்விசிறி போட வேண்டிய தேவையே இருக்காது!
இயற்கையான காற்று
சிலுசிலுவென்று அடித்தது! அப்பாவின் வீட்டில் இவளுக்கு பிடித்த ஒன்றாக வாசலில்
இருந்த படிக்கட்டுகளைச் சொல்வாள்! காலையில் எழுந்தது முதல் இரவு வரை அவ்வப்போது
அதில் அமர்ந்து கொள்வாள்! வாசலில் ஒரு திண்ணையும் அமைத்திருந்தார் அப்பா! ஆனாலும்
இவள் படிக்கட்டில் தான் அமர்ந்திருப்பாள்!
அதிகாலையில் அந்தத்
தெருவில் உள்ள ஏதேனும் ஒரு வீட்டு வாசலில் சந்தையிலிருந்து கொண்டு வரும்
காய்கறிகளை கொட்டி வியாபாரம்
செய்வார்கள்! இவளும் அங்கிருந்து தேவையானவற்றை வாங்கி வந்து அப்பாவுக்கு
பிடித்தவாறு சமைத்து தந்தாள்! அப்பாவும் பேத்தியுடன் விளையாடுவதும் அவளுக்கு சத்தான திண்பண்டங்களை வாங்கி வந்து
தருவதுமாக இருந்தார்!
மாலை நேரத்தில் அருகே
உள்ள கோவிலுக்கும், வாரச்
சந்தைக்கும் அழைத்துச் சென்றார் அப்பா. வீட்டுக்குத் தேவையான பொருட்கள் சிலவற்றை
அப்பாவிடம் சொல்லி சந்தையில் வாங்கி வைத்தாள்! வீட்டைச் சுற்றி செடிகள்
வைப்பதற்கும், மாடியிலும் தோட்டம் போடலாம் என்றும் சொன்னாள்! ஏனோ அப்பா
அதிலெல்லாம் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை! அப்பாவின் சிந்தனைகள் வேறு எங்கோ
இருந்தது!
அம்மாவின் மறைவுக்குப்
பின் நிறைய கோவில்களுக்கு தான் சென்று வந்ததாகவும், அங்கே வாங்கிய புத்தகங்கள்,
ஸ்வாமிப் படங்கள் போன்றவற்றை இவளிடம் காண்பித்தார். நிறைய தத்துவங்களை இவளிடம்
பகிர்ந்து கொண்டார். அப்பாவுக்கு இறை சிந்தனையில் சற்றே நிம்மதி கிடைக்கட்டும்
என்றிவள் பிரார்த்தனை செய்து கொண்டாள்!
'கோவில்ல குங்குமம்
கொடுப்பா இல்லையா! நா வாங்கிக்கறதில்ல என்றார்' அப்பா! அதே மாதிரி வேஷ்டியிலும்
கலர் பார்டர் எல்லாம் கட்டறதில்லை! நெற்றியில் சந்தனமும், விபூதியும், கலர்
பார்டர் இல்லாத வெள்ளை வேஷ்டியும் தான் இனி என்னோட இருக்கணும்னு நானே முடிவு
பண்ணிட்டேன்! புருஷனை இழந்தவா எப்படியோ அப்படித்தான் நானும்! பொண்டாட்டிய
இழந்தவன்! என்றார்!
தனக்குத் தானே சில
நியதிகளை வகுத்துக் கொண்டும், இறை சிந்தனையில் மனத்துயரங்களை கடக்க முயற்சி செய்து
கொண்டும் நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தார் அப்பா! அப்பாவின் நிலையை எண்ணி மனம் கவலை
கொண்டது! துணையின் பிரிவும், தனிமையும் அப்பாவை இப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறது!
விரைவில் இந்த நிலை மாறட்டும்!
*****
இன்றைய பதிவு குறித்த
தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள்
அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
திண்ணை படிக்கட்டுகள் இருக்கும் வீடுகள் எனக்கும் பிடிக்கும். உங்கள் தந்தை பற்றி சொன்ன விஷயங்கள் படித்ததும் எனக்கும் என் தந்தை நினைவு வந்தது. அவர் அம்மாவின் புடைவையை லுங்கி போல தைத்து அணிந்து கொண்டார். நாங்கள் கேட்டுக்கொண்ட பிறகு சில வருடங்களுக்குப் பிறகு அவற்றை எல்லாம் விட்டார். அம்மா பெயரை தன் பெயருடன் இணைத்தே சொல்லி வந்தார். ஆனால் இறை நம்பிக்கைகளை விட்டுவிட்டார்.
பதிலளிநீக்குஅவரது எண்ணம் சிறப்பு...
பதிலளிநீக்குபடிக்கட்டு வீடு அழகு. எங்கள் ஊர் வீடும் வாசலில் திண்ணையுடன் இருக்கிறது.
பதிலளிநீக்குஇறை பக்தி அப்பாவின் மனதுக்கு ஆறுதலாக இருந்திருக்கும்.
வாசகம் அருமை.
பதிலளிநீக்குஅப்பா இறை சிந்தனையில் வாழ்ந்தது அப்பாவிற்கு ஆறுதல்.
அம்மாவின் நினைவில் அப்பா எடுத்த முடிவு சிறப்பு.
வீடு அருமையாக இருக்கிறது.
ஆதி, உங்கள் அப்பாவின் வீடு அருமையாக இருக்கும்னு தெரிகிறது உங்கள் வர்ணனையிலிருந்து. மூன்று வேப்பமரங்கள் ஆஹா!!!! அப்பா மாறியது பற்றி நீங்கள் சொன்னதை வாசித்ததும் உடனே நம் ஸ்ரீராமின் அப்பா தான் நினைவுக்கு வந்தார்.
பதிலளிநீக்குஉங்கள் அப்பாவின் மாற்றங்களை மிகவும் மதிக்கிறேன். அருமை.
இந்தப் புகைப்படத்தில் ரொம்பவே ஜாடை மாறியிருக்கிறார்.
ரோஷிணி அப்படியே வெங்கட்ஜிதான்!
கீதா
தனக்குத் தானே சில நியதிகளை வகுத்துக் கொண்டும்,,, அதீத அன்பின் வெளிப்பாடுகள் இவை,, தொடர்கிறேன்.
பதிலளிநீக்குசுய கட்டுப்பாடு மனிதனுக்கு இதுதான் வேண்டும்.
பதிலளிநீக்கு