புதன், 31 ஆகஸ்ட், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி எண்பத்தி இரண்டு – விட முடியாத பந்தம்!

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன் வெளியிட்ட யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

யாருக்காகவும் யாரும் தேவையில்லை என்பதற்குக் கூட, எல்லோருக்கும் எல்லோரும் தேவைப்படுகிறார்கள். 

 

******


 

யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே! 

 

பகுதி மூன்று இங்கே!  பகுதி நான்கு இங்கே! 

 

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

 

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

 

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

 

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

 

பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 

 

பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!

 

பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!

 

பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!

 

பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே! 

 

பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே! 

 

பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி இரண்டு இங்கே!  பகுதி முப்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே! 

 

பகுதி முப்பத்தி எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!

 

பகுதி நாற்பத்தி இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று  இங்கே!

 

பகுதி நாற்பத்தி நான்கு இங்கே! பகுதி நாற்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி நாற்பத்தி ஆறு இங்கே! பகுதி நாற்பத்தி ஏழு இங்கே!

 

பகுதி நாற்பத்தி எட்டு இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்பது இங்கே! 

 

பகுதி ஐம்பது இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி இரண்டு இங்கே! பகுதி ஐம்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி நான்கு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஐந்து  இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி ஆறு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஏழு  இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி எட்டு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்பது  இங்கே! 

 

பகுதி அறுபது இங்கே! பகுதி அறுபத்தி ஒன்று இங்கே!

 

பகுதி அறுபத்தி இரண்டு இங்கே! பகுதி அறுபத்தி மூன்று இங்கே!

 

பகுதி அறுபத்தி நான்கு இங்கே! பகுதி அறுபத்தி ஐந்து இங்கே!

 

பகுதி அறுபத்தி ஆறு இங்கே! பகுதி அறுபத்தி ஏழு இங்கே!

 

பகுதி அறுபத்தி எட்டு இங்கே! பகுதி அறுபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி எழுபது இங்கே! பகுதி எழுபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி எழுபத்தி இரண்டு இங்கே! பகுதி எழுபத்தி மூன்று இங்கே!

 

பகுதி எழுபத்தி நான்கு இங்கே! பகுதி எழுபத்தி ஐந்து இங்கே!

 

பகுதி எழுபத்தி ஆறு இங்கே! பகுதி எழுபத்தி ஏழு இங்கே!

 

பகுதி எழுபத்தி எட்டு இங்கே! பகுதி எழுபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி எண்பது  இங்கே! பகுதி எண்பத்தி ஒன்று  இங்கே! 

 

யாரிவள்! பகுதி எண்பத்தி இரண்டு – விட முடியாத பந்தம்!




 

அப்பா அம்மாவுக்குப் பின் அவளுக்கென்று ஒரு உறவு என்றால் அது உடன்பிறந்தவன் தான்! தம்பி சிறுவயதிலிருந்தே விளையாட்டுப் பிள்ளையாகவே இருந்து விட்டான்! இவளுக்கு இருந்த பொறுப்புணர்வு அவனிடம் இல்லை! சிக்கனம், சேமிப்பு, திட்டமிடுதல் என்றெல்லாம் அவனுக்கு தெரியவில்லை! வாழ்க்கையின் ஓட்டத்தில் தான் அவன் கற்றுக் கொள்ள வேண்டும்!

 

இவளுடன் டெல்லிக்கு வந்துவிடுகிறேன் என்று வந்தவன் அங்கு சில வேலைகளுக்கு முயற்சித்தான். அது எதுவும் சரியாக வராததால் மீண்டும் கோவைக்கே சென்று விட்டான்! அங்கும் சில மாதங்கள் பணி செய்த பின் வேறு வேலைக்கு மாறினான். தொடர்ந்து அவனாகவே வேலையை விடுவதும் பின்பு தேடிக் கொள்வதுமாக இருந்தான்!

 

சில வருடங்கள் மேன்ஷனிலும் பின்பு தனியே வீடு எடுத்து சமைத்து சாப்பிட்டுக் கொண்டும், வெளியே சாப்பிட்டுக் கொண்டும் என அவனின் வாழ்க்கைப் பாதை சென்று கொண்டிருந்தது! இவளும் அவனுக்கு அறிவுரைகளை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தாள்! கோபப்பட்டாலும் , திட்டினாலும் விட்டுவிட முடியாத பந்தமல்லவா! 

 

நம் கைகளில் உள்ள விரல்கள் ஒன்று போல் இருப்பதில்லையே! இவளுக்கு இயல்பாகவே இருந்த பொறுப்புணர்வு அவனுக்கு வாழ்க்கையின் போக்கில் தான் வர வேண்டுமென விதி இருக்கிறது! இருவரின் வாழ்க்கைப் பாதையும் மாறி விட்டதால் ஒருவரின் வாழ்வில் மற்றொருவர் முழுதாக தலையிட முடியாது!

 

உரிமையுடன் எடுத்துச் சொல்லலாம்! தன்னால் முடிந்த அளவு உதவி செய்யலாம்! அவ்வளவு தான்! அவரவரின் தலையெழுத்து எப்படியோ! அப்படித்தான் வாழ்க்கை இருக்கும்! இருவரின் பாதையும் மாறி வாழ்வின் நெளிவு சுளிவுகளுக்கு ஏற்றாற் போல் பயணித்துக் கொண்டிருந்தது!

 

தனக்கான அடையாளத்தை தேடிக் கொண்டிருந்த இவளுக்கு பணம் சம்பாதிப்பது என்பது இலக்கல்ல! எளிமையான வாழ்க்கை! அதில் மன நிறைவு கொண்டவள்! அவளின் எண்ணங்களாக தன்னால் இயன்றதை இந்த சமூகத்துக்குச் செய்யணும்! தன்னை அதில் ஆழ்த்திக் கொண்டு அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்! 

 

அவ்வப்போது எழுந்த எண்ணங்களுக்கு சமாதானம் சொல்லிக் கொண்டும், கேள்விகள் கேட்டுக் கொண்டும் நாட்களை கடத்திக் கொண்டிருந்தாள்! வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்று கேட்டு விட்டால் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக மீண்டும் தலைதூக்கி விடும் எண்ண அலைகள்!!!

 

அவளின் எண்ணங்களுக்கு வடிவம் கிடைத்ததா??? தொடர்ந்து பார்க்கலாம்!

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

7 கருத்துகள்:

  1. தம்பியின் வாழ்க்கைக்கு நீங்கள் ஒருவர் மட்டுமே பொருப்பு.

    பதிலளிநீக்கு
  2. உங்கள் ஆதங்கம் சரிதான்....

    //வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்று கேட்டு விட்டால் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக மீண்டும் தலைதூக்கி விடும் எண்ண அலைகள்!!!//

    சேம் போட். இதுவும் புரிந்து கொள்ள முடிகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. //அவளின் எண்ணங்களாக தன்னால் இயன்றதை இந்த சமூகத்துக்குச் செய்யணும்! தன்னை அதில் ஆழ்த்திக் கொண்டு அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்! //
    இரண்டுமே செய்து கொண்டு இருக்கிறீர்கள்,

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....