அன்பின் நண்பர்களுக்கு,
இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும்
சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன் வெளியிட்ட
யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன்
தொடங்கலாம் வாருங்கள்.
நாம் எதிர்பார்த்த போது
கிடைக்காத ஒன்றும், நாம் எதிர்பார்த்த போது நடக்காத ஒன்றும் எப்போதும் நம்
மனக்குமுறலுக்குக் காரணமாக இருக்கிறது. எதையும் எதிர்பார்க்காமல் இருப்பது
எப்போதும் நலம்!
******
யாரிவள் - பகுதி ஒன்று
இங்கே! பகுதி இரண்டு இங்கே!
பகுதி மூன்று இங்கே! பகுதி நான்கு இங்கே!
பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!
பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!
பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!
பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!
பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே!
பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!
பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!
பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே!
பகுதி இருபத்தி
இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!
பகுதி இருபத்தி
நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே!
பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே!
பகுதி இருபத்தி
எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!
பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே!
பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே!
பகுதி முப்பத்தி
இரண்டு இங்கே! பகுதி முப்பத்தி
மூன்று இங்கே!
பகுதி முப்பத்தி
நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!
பகுதி முப்பத்தி ஆறு
இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே!
பகுதி முப்பத்தி
எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!
பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!
பகுதி நாற்பத்தி
இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று இங்கே!
பகுதி நாற்பத்தி
நான்கு இங்கே! பகுதி நாற்பத்தி ஐந்து இங்கே!
பகுதி நாற்பத்தி ஆறு
இங்கே! பகுதி நாற்பத்தி ஏழு இங்கே!
பகுதி நாற்பத்தி
எட்டு இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்பது இங்கே!
பகுதி ஐம்பது இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்று இங்கே!
பகுதி ஐம்பத்தி
இரண்டு இங்கே! பகுதி ஐம்பத்தி மூன்று இங்கே!
பகுதி ஐம்பத்தி
நான்கு இங்கே! பகுதி ஐம்பத்தி ஐந்து இங்கே!
பகுதி ஐம்பத்தி ஆறு இங்கே! பகுதி ஐம்பத்தி ஏழு இங்கே!
பகுதி ஐம்பத்தி
எட்டு இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்பது இங்கே!
பகுதி அறுபது இங்கே! பகுதி அறுபத்தி ஒன்று இங்கே!
பகுதி அறுபத்தி
இரண்டு இங்கே! பகுதி அறுபத்தி மூன்று இங்கே!
பகுதி அறுபத்தி
நான்கு இங்கே! பகுதி அறுபத்தி ஐந்து இங்கே!
பகுதி அறுபத்தி ஆறு இங்கே! பகுதி அறுபத்தி ஏழு இங்கே!
பகுதி அறுபத்தி
எட்டு இங்கே! பகுதி அறுபத்தி ஒன்பது இங்கே!
பகுதி எழுபது இங்கே! பகுதி எழுபத்தி ஒன்று இங்கே!
பகுதி எழுபத்தி
இரண்டு இங்கே! பகுதி எழுபத்தி மூன்று இங்கே!
பகுதி எழுபத்தி
நான்கு இங்கே! பகுதி எழுபத்தி ஐந்து இங்கே!
பகுதி எழுபத்தி ஆறு இங்கே! பகுதி எழுபத்தி ஏழு இங்கே!
பகுதி எழுபத்தி
எட்டு இங்கே! பகுதி எழுபத்தி ஒன்பது இங்கே!
பகுதி எண்பது இங்கே! பகுதி எண்பத்தி ஒன்று இங்கே!
பகுதி எண்பத்தி
இரண்டு இங்கே!
யாரிவள்! பகுதி
எண்பத்தி மூன்று – தெற்கு நோக்கிய மனம்!
அன்றாட வாழ்வில்
தன்னுடைய கடமைகளை செய்து கொண்டும், மகளுக்கு வேண்டிய பாடங்களையும், இற்றைகளையும் சொல்லித்
தந்து கொண்டும் நாட்கள் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது! பெற்றோரின் நினைவுகள்
அவளின் மனதில் அழுத்தினாலும் கணவனின் அன்பில் அவற்றை கடந்து வந்தாள்!
தம்பதிகள் இருவரும்
ஒத்த கருத்து கொண்டவர்களாகவும், புரிதலும், பெருந்தன்மையும், பணத்தின் மேல்
ஈர்ப்பு இல்லாதவர்களாகவும் இருந்தனர். எளிமையான வாழ்வில் இனிமை கண்டார்கள்!
அப்பாவைப் போலவே குணம் கொண்ட கணவர் அமைந்தது வாழ்வில் அவளுக்கு கிடைத்த
பெரும்பேறாக நினைத்தாள்!
அவளுக்கு சமையலில்
மிகுந்த ஆர்வம் இருந்ததால் வார இதழ்களில் பார்க்கும் ரெசிபிக்களை கத்தரித்து
ஃபைலாக போட்டு வைத்துக் கொள்வாள்! சமையல் புத்தகங்களும் வாங்கி வைத்துக் கொண்டு
அவ்வப்போது புதிது புதிதாக ரெசிபிக்களை செய்து பார்ப்பதும் கணவனுக்கு அவற்றைத்
தந்து அவரின் கருத்துகளை எதிர்பார்ப்பதுமாக இருந்தாள்!
அவரோ எதையுமே
வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார்! அவருக்கு பாராட்டவோ, ஊக்கப்படுத்தவோ தெரியாது! அவரிடம் எதிர்பார்ப்பு
வைத்துக் கொண்டிருந்தவளுக்கு அது சற்று
ஏமாற்றத்தைத் தந்து கொண்டிருந்தது! காலையில் அலுவலகத்துக்கு கிளம்பிச் சென்றால்
மாலையில் திரும்பவும் அவர், அதன் பின் பொதுக் காரியங்களில் தன்னை ஈடுபடுத்திக்
கொள்வார்!
அப்போதெல்லாம்
வீட்டில் குழந்தையும் இவளும் தனித்திருக்கும் நேரங்கள் அதிகமானது! சுட்டிப்
பெண்ணாக வளர்ந்த சூழலில் தனியே ஒரு அறையில் கூட அவள் இருந்ததில்லை! இருட்டும்,
தனிமையும் மிகுந்த பயம் அவளுக்கு! காலம் இவளை தனியே வாழவும் வைத்து விடுமா!!!!
வடக்கில் திருமண
வாழ்வை துவக்கியது முதல் அவளுக்கு கிடைத்த பலவிதமான அனுபவங்களும், கிடைத்த நண்பர்களும்,
உறவுகளை விட்டு தள்ளி இருப்பதால் தவிர்க்கப்பட்ட சிக்கல்களும் என அந்த சூழலுக்கு
ஏற்றாற் போல் தன்னை பழக்கிக் கொண்டு விட்டாலும், ஏனோ மனம் முழுவதும் தெற்கை
நோக்கியே இருந்தது!
இங்கிருந்தது போதும்!
'நாம அங்கேயே சென்று விடலாம்'! என்று கணவனிடம் அடிக்கடி சொல்லத் துவங்கினாள்!
வேலையில் மாற்றல் கிடைத்து விட்டால் நாம ஊருக்கு போய் செட்டிலாயிடலாம்! எனவும்
சொல்லிக் கொண்டிருந்தாள்! அவளின் எண்ணம் போல் செல்ல முடிந்ததா!!
எண்ண அலைகளுக்கு
தடையில்லாததால் ஓய்வின்றி கரையை கடந்து கொண்டிருந்தது! எண்ணம் போல் வாழ்வு அமைவது
இறைவனின் செயல்!
*****
இன்றைய பதிவு குறித்த
தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள்
அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
இதைப் படித்தபின் வெங்கட் சமையல் பற்றி அபிப்ராயங்கள் சொல்ல ஆரம்பித்திருப்பர் என்று நம்புகிறேன்!! :))
பதிலளிநீக்குஹாஹாஹாஹா ஸ்ரீராம் அப்படின்றீங்க!!!! எனக்குத் தோணலை!!!!!!!
நீக்குகீதா
என் மகன் சொல்றாப்ல,,,,,,குத்தம் சொல்லாம சாப்பிட்டாலே...அதுவே பாராட்டுதான்!!!
நீக்குகீதா
டெல்லி இன்று வரையில் விடவில்லையே...
பதிலளிநீக்குவிரைவில் எண்ணம் நிறைவேறட்டும்...
பதிலளிநீக்குவிரைவில் உங்கள் எண்ணம் போல எல்லோரும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
ஆதி எத்தனை வருடங்கள் ஜி அங்கும் நீங்களும் குழந்தையும் இங்குமாக....இனியாவது எல்லோரும் சேர்ந்திருக்க வேண்டும். வெங்கட்ஜி சமையல் பற்றி அபிப்ராயம் சொல்வதில்லை என்று முன்பும் நீங்கள் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது.
பதிலளிநீக்குஇது பல ஆண்களுக்கும் பொருந்துமோ?!!!! நம் வீட்டிலும் உண்டு. அதனாலேயே மகனிடம் சொல்லிக் கொண்டே இருப்பேன். என்னிடம் சொல்லலைனாலும் பரவால்ல, வேற வீடுகளில் நட்பு வீடுகளில் சாப்பிட நேரும் போது அவர்களைப் பாராட்டக் கத்துக்கணும்னு....நீகல்யாணம் செய்துகொண்டால் அவளையும் பாராட்டணும்னு சொல்லுவேன். பாராட்டினால்தான் ஊக்கம் கிடைத்து அப்புறம் இப்படி இருந்தா நல்லாருக்கும்னு சொல்லும் போதும், அவளுக்கு அதை ஏற்கும் மனமும் வரும்.
அதனாலதான் நான் எதுவும் சொல்றதில்லை....குத்தம் சொல்லாம சாப்பிடறேன்ல அதை பாராட்டும்மா என்பான்!!!!!!!
கீதா
புதுதில்லி விடாது
பதிலளிநீக்குஎப்பொழுதும் பிறந்த இடம் மனதுக்கு மகிழ்ச்சி தரும்.
பதிலளிநீக்கு