வெள்ளி, 16 செப்டம்பர், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி 94 – அவளின் சிந்தனைகள்!

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன் வெளியிட்ட யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

இன்று ஏற்பட்ட துன்பங்களுக்காக மனம் வருந்தத் தேவையில்லை; ஏனெனில் அது தான் வருங்காலத்தில் உங்களுக்கு எதையும் தாங்கும் இதயத்தைத் தரப் போகிறது.

 

******


 

யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே

 

பகுதி மூன்று இங்கேபகுதி நான்கு இங்கே

 

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

 

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

 

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

 

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

 

பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 

 

பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!

 

பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!

 

பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!

 

பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே! 

 

பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே! 

 

பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி இரண்டு இங்கே!  பகுதி முப்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே! 

 

பகுதி முப்பத்தி எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!

 

பகுதி நாற்பத்தி இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று  இங்கே!

 

பகுதி நாற்பத்தி நான்கு இங்கே! பகுதி நாற்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி நாற்பத்தி ஆறு இங்கே! பகுதி நாற்பத்தி ஏழு இங்கே!

 

பகுதி நாற்பத்தி எட்டு இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்பது இங்கே! 

 

பகுதி ஐம்பது இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி இரண்டு இங்கே! பகுதி ஐம்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி நான்கு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஐந்து  இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி ஆறு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஏழு  இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி எட்டு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்பது  இங்கே! 

 

பகுதி அறுபது இங்கே! பகுதி அறுபத்தி ஒன்று இங்கே!

 

பகுதி அறுபத்தி இரண்டு இங்கே! பகுதி அறுபத்தி மூன்று இங்கே!

 

பகுதி அறுபத்தி நான்கு இங்கே! பகுதி அறுபத்தி ஐந்து இங்கே!

 

பகுதி அறுபத்தி ஆறு இங்கே! பகுதி அறுபத்தி ஏழு இங்கே!

 

பகுதி அறுபத்தி எட்டு இங்கே! பகுதி அறுபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி எழுபது இங்கே! பகுதி எழுபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி எழுபத்தி இரண்டு இங்கே! பகுதி எழுபத்தி மூன்று இங்கே!

 

பகுதி எழுபத்தி நான்கு இங்கே! பகுதி எழுபத்தி ஐந்து இங்கே!

 

பகுதி எழுபத்தி ஆறு இங்கே! பகுதி எழுபத்தி ஏழு இங்கே!

 

பகுதி எழுபத்தி எட்டு இங்கே! பகுதி எழுபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி எண்பது  இங்கே! பகுதி எண்பத்தி ஒன்று  இங்கே! 

 

பகுதி எண்பத்தி இரண்டு இங்கே! பகுதி எண்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி எண்பத்தி நான்கு இங்கே! பகுதி எண்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி எண்பத்தி ஆறு இங்கே! பகுதி எண்பத்தி ஏழு இங்கே! 

 

பகுதி எண்பத்தி எட்டு இங்கே! பகுதி எண்பத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி 90 இங்கே! பகுதி 91 இங்கே! பகுதி 92 இங்கே! பகுதி 93 இங்கே!

 

யாரிவள்! பகுதி 94 அவளின் சிந்தனைகள்!




 

திருவரங்கம் வந்தது முதலாக ஒவ்வொரு நாளையும் அவள் புதிதாக தான் பார்த்தாள்! இங்கு சந்திக்கும் மனிதர்கள், அவர்களின் குணாதிசியங்கள், கிடைத்த நட்புகள், அவர்கள் இவளின் மீது கொண்ட அன்பும், அக்கறையும் என கற்றுக் கொள்ளவும், பெற்றுக் கொள்ளவும் நிறைய சங்கதிகள் இருந்தது!

 

மகளும் அப்பா வேண்டுமென்ற அழுகையை விட்டுவிட்டு அப்பாவின் வரவுக்காக இவளைப் போல் காத்திருப்பாள்! கணவர் பண்டிகையை ஒட்டி வருவது சாத்தியமில்லாமல் போகும் போது இவர்கள் இருவருக்கும் வருத்தம் உண்டாகும்! எல்லோரும் குடும்பத்துடன் குதூகலிக்கும் போது இவர்களின் முகத்தில் ஏக்கம் தென்படும்!

 

தினசரி நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மனதை மாற்றிக் கொள்வதும், தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைப்பதும், திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என எண்ணுவதுமாக அவளும் நாட்களை நகர்த்திக் கொண்டு வந்தாள்!  ஆரோக்கியத்தின் மீதும் கொஞ்சம்  கவனம் செலுத்தணும் என்ற அவ்வப்போது உணர வைத்தது!

 

திருவரங்கம் வந்தது முதலாக சுழற்சி வேறுவிதமாக மாறியது! இங்கு ஒரு மருத்துவரிடம் சென்று காண்பித்த பின் சுமார் ஆறு மாதங்களுக்கு சரியாக இருந்தது! பின்பு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தான் சுழற்சியே என்பது போல் ஆனது! அதன் விளைவாக மாதக்கணக்கில் வாட்டி வதைத்தது! உடலும் மனதும் சோர்வுற்று அவளை தவிக்க விட்டது!

 

அந்த மருத்துவர் பரிந்துரைத்த குறிப்பிட்ட மருந்து இவளின் உடலுக்கு ஒத்துக் கொள்ளாமல் போகவே, தொடரும் அவதிகளால் தோழி ஒருவர் மற்றொரு மருத்துவரிடம் இவளை அழைத்துச் செல்ல அவர் ஸ்கேன் செய்து கருப்பையின் தடிமன் அதிகமாக உள்ளதாகவும், படிந்துள்ளவற்றை  சுத்தம் செய்வது நலம் தரும் என்று சொன்னார்.

 

அதனால் மருத்துவமனையில் ஒருநாள் அட்மிட் ஆகி D&C, Hysterascopy இரண்டும் செய்து கொண்டாள்! அனஸ்தீஷியா கொடுத்த போது அவள் ஒரு பைக்கில் ஏறி மின்னல் வேகத்தில் சென்றதைப் போல உணர்ந்தாள்! அவளின் மனதும் அப்படித்தானே வேலை செய்கிறது! அடுத்து என்ன! என்ற சிந்தனையில்!

 

இதன் பின்னர் பிரச்சினை எதுவும் இல்லாமல் இருந்தால் அதுவே போதும் என நினைத்தாள்! மீண்டும் மீண்டும் வந்த சுழற்சி அவதியால் மனதில் ஒரு வெறுப்பு உண்டாயிற்று! டெல்லியில் துவங்கிய இந்த பிரச்சனையில் கூடிப் போன உடல் எடையை இப்போது குறைக்கும் முயற்சியில் இறங்கினாள்! 

 

இங்கே நடைப்பயிற்சியும் அதிகம்! எல்லாவற்றுக்கும் இவளே தான் அலையணும்! அதை கடமையாக எண்ணாமல் தன்னை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பு கிடைத்ததாக நினைத்தாள்! அன்றாடம் சந்திக்கும் சவால்களும், வேலைகளும் உடன் மனதுக்குள் தோன்றும் எண்ணங்களும் அவளுக்குள் மெல்ல மெல்ல மாற்றங்களை ஏற்படுத்தியது!

 

தன்னம்பிக்கையும், தைரியமும் உடனிருக்க மனம் பற்று அற்ற நிலைக்கு செல்லத் துவங்கியது! பிரச்சினைகள் உருவாகும் போது அந்த நேரத்தில் துவண்டு போனாலும் மீண்டும் செயல்படத் துவங்கினாள்!

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

9 கருத்துகள்:

  1. உடல்நிலை சீராக இருந்தால்தான் மனமும் கலகலவென்றிருக்கும்.

    பதிலளிநீக்கு
  2. உடல் உபாதைகள் பல வகையான மன அழுத்தங்களை உண்டாக்கும். எதிர்கொண்டால் சமாளிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  3. நன்னம்பிக்கைதான் கை கொடுக்கும் தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரி

    வாசகம் அருமை. பதிவில் தங்களுக்குள் வந்த தன்னம்பிக்கையை போற்றுகிறேன். உடல்நிலை நன்றாக இருந்தால்தான் மனதின் எண்ணங்களும் சீராக இருக்கும். இறைவன் துணையாக இருந்து அனைத்தையும் சுகமாகவே நடத்துவான். அந்த நம்பிக்கையே ஒரு மனபலம். தொடர்கிறேன் சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. வாசகம், உங்கள் பதிவும் அருமை.
    தன்னம்பிக்கை என்று கை கொடுக்கும்
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. இன்றைய வாசகம் அருமை. உடல் நலம் சரியில்லை என்றால் மனம் துவண்டுவிடும். ஆனால் அந்த உடலை மீண்டும் நல்ல முறையில் கொண்டு வர வேண்டும் என்றால் மனம் தான் முக்கியம். உங்கள் தன்னம்பிக்கைதான் பலம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. உங்கள் தன்னம்பிக்கையும் தைரியமும்தான் மனதை தளர விடாமல் காத்திருக்கிறது.


    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....