அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன் வெளியிட்ட யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
எல்லாம் அழிவதை பார்த்துக்கொண்டே, தன் வாழ்வு மட்டும் நிலையானது என்று எண்ணி மனித மனம் துன்பத்திற்கு உள்ளாகிறது - புத்தர்.
******
யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே!
பகுதி மூன்று இங்கே! பகுதி நான்கு இங்கே!
பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!
பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!
பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!
பகுதி பன்னிரெண்டு இங்கே!
பகுதி பதிமூன்று இங்கே!
பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே!
பகுதி பதினாறு இங்கே!
பகுதி பதினேழு இங்கே!
பகுதி பதினெட்டு இங்கே!
பகுதி பத்தொன்பது இங்கே!
பகுதி இருபது இங்கே!
பகுதி இருபத்தி ஒன்று இங்கே!
பகுதி இருபத்தி இரண்டு இங்கே!
பகுதி இருபத்தி மூன்று இங்கே!
பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே!
பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே!
பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!
பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே!
பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே!
பகுதி முப்பத்தி இரண்டு இங்கே! பகுதி முப்பத்தி மூன்று இங்கே!
பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!
பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே!
பகுதி முப்பத்தி எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!
பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!
பகுதி நாற்பத்தி இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று இங்கே!
பகுதி நாற்பத்தி நான்கு இங்கே! பகுதி நாற்பத்தி ஐந்து இங்கே!
பகுதி நாற்பத்தி ஆறு இங்கே! பகுதி நாற்பத்தி ஏழு இங்கே!
பகுதி நாற்பத்தி எட்டு இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்பது இங்கே!
பகுதி ஐம்பது இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்று இங்கே!
பகுதி ஐம்பத்தி இரண்டு இங்கே! பகுதி ஐம்பத்தி மூன்று இங்கே!
பகுதி ஐம்பத்தி நான்கு இங்கே! பகுதி ஐம்பத்தி ஐந்து இங்கே!
பகுதி ஐம்பத்தி ஆறு இங்கே! பகுதி ஐம்பத்தி ஏழு இங்கே!
பகுதி ஐம்பத்தி எட்டு இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்பது இங்கே!
பகுதி அறுபது இங்கே! பகுதி அறுபத்தி ஒன்று இங்கே!
பகுதி அறுபத்தி இரண்டு இங்கே! பகுதி அறுபத்தி மூன்று இங்கே!
பகுதி அறுபத்தி நான்கு இங்கே! பகுதி அறுபத்தி ஐந்து இங்கே!
பகுதி அறுபத்தி ஆறு இங்கே! பகுதி அறுபத்தி ஏழு இங்கே!
பகுதி அறுபத்தி எட்டு இங்கே! பகுதி அறுபத்தி ஒன்பது இங்கே!
பகுதி எழுபது இங்கே! பகுதி எழுபத்தி ஒன்று இங்கே!
பகுதி எழுபத்தி இரண்டு இங்கே! பகுதி எழுபத்தி மூன்று இங்கே!
பகுதி எழுபத்தி நான்கு இங்கே! பகுதி எழுபத்தி ஐந்து இங்கே!
பகுதி எழுபத்தி ஆறு இங்கே! பகுதி எழுபத்தி ஏழு இங்கே!
பகுதி எழுபத்தி எட்டு இங்கே! பகுதி எழுபத்தி ஒன்பது இங்கே!
பகுதி எண்பது இங்கே! பகுதி எண்பத்தி ஒன்று இங்கே!
பகுதி எண்பத்தி இரண்டு இங்கே! பகுதி எண்பத்தி மூன்று இங்கே!
பகுதி எண்பத்தி நான்கு இங்கே! பகுதி எண்பத்தி ஐந்து இங்கே!
யாரிவள்! பகுதி எண்பத்தி ஆறு – மனதிற்கான மாற்றம்!
தனக்கு கிடைக்கும் அனுபவங்களும், அவமானங்களும் தான் ஒருவரின் மனதை பக்குவமடைய வைக்கும்! சூழலை கடந்து வரச் செய்யும்! இவளுக்கும் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் சந்தித்த நிகழ்வுகளின் மூலமும், பலவிதமான மனிதர்களாலும் மனதை திடப்படுத்திக் கொள்வதற்கு சந்தர்ப்பங்கள் அமைந்தது!
எதிர்பார்ப்பு இல்லா வாழ்வு ஏமாற்றங்களைத் தராது என்று அவள் கணவன் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார்! உண்மை தான்! எதற்காகவும் யார் மீதும் எதிர்பார்ப்பு வைத்துக் கொண்டிருக்காமல் நம் கடமைகளை மட்டும் அடுத்தடுத்த நிலைகளுக்கு கடத்திச் சென்றால் காலம் நமக்கான பக்குவத்தை தந்து கொண்டிருக்கும்!
வருடங்கள் செல்லச் செல்ல இவளும் மற்றவர்கள் தன்னைப் பற்றிய குறைகள் காண்பதையும், மன வருத்தங்கள் கொள்வதையும் மனதிற்கு கொண்டு போவது கலங்குவது என இல்லாமல் தன் கடமைகளை மட்டும் செய்து கொண்டிருந்தாள்! எல்லோருக்கும் நல்லவளாக இருப்பது கடினம் என்பது அவளுக்கு மெல்லப் புரிந்தது!
இயல்பாக சென்று கொண்டிருந்த வாழ்வில் திடீரென ஏற்பட்ட உடல்நலமின்மை அவளை வாட்டி வதைத்தது! வாழ்க்கைப் பாதை மாறிப் போனது போல் ஏனோ மாதாந்திர சுழற்சியும் மாறிப் போனது! பிரசவத்திற்கு பிறகு சில முறை நாட்கள் தள்ளிப் போவதும் மருத்துவர் அது குழந்தையாக இருக்குமென சோதித்துப் பார்ப்பதும் இல்லையென தெரிந்த பிறகு மருந்துகள் எழுதித் தருவதுமாக சென்று கொண்டிருந்தது!
ஒருமுறை ஏற்பட்ட சுழற்சி தொடர்கதையாகிப் போனது! மருத்துவரிடம் சென்று காண்பிப்பதும் அப்போதைக்கு தீர்வு கிடைப்பதும் பின் மீண்டும் தொடர்வதுமாக ஒரு வருடம் முழுவதும் இதே நிலை தான் என்றானது! இந்த சூழலை கடக்க என்ன செய்வதென்றே தெரியவில்லை அவளுக்கு!
எதன் மீதும் பிடிப்பில்லாமல் எந்த வேலையும் செய்ய முடியாமல் சோர்ந்து போனாள்! ஆத்திரம், வெறுப்பு, கவலை, பயம், அழுகை என்று எல்லாம் கலந்த உணர்வுடன் காணப்பட்டாள்! மீண்டும் பழைய நிலைக்கு வருவோமா?? என்ற யோசனையுடனேயே இருந்தாள்! இந்த சுழற்சி மாற்றத்தால் ஏற்பட்ட மன அழுத்தம் தான் அவளுக்கு!
குடும்பத்தில் உள்ளவர்கள் தான் இந்த மாதிரி சமயத்தில் ஒரு பெண்ணுக்கு ஆறுதலாகவும், உதவிகரமாகவும் இருக்கணும்! கணவனும், மகளும் தான் அவளுக்கு பெரும் ஆறுதலாக இருந்தார்கள்! ஓராண்டுக்குப் பிறகு மெல்ல மெல்ல அவளும் இந்த நிலையில் இருந்து சற்று மீண்டு வந்தாள்!
இடப்பெயர்ச்சி மனதிற்கும் ஒரு மாற்றத்தைத் தரும்! அவளும் மனதிற்கான மாற்றத்தை தேடிக் கொண்டாள்! தொடர்ந்து பார்க்கலாம்!
*****
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
எதிர்பாராத சிரமங்கள்.
பதிலளிநீக்குநல்லதொரு மாற்றம் உண்டாக்கட்டும்...
பதிலளிநீக்குதொடர்கிறேன் நலமே விளைக...
பதிலளிநீக்குஉடல் மாற்றங்கள் மனதுக்கு அழுத்தத்தை தந்திருக்கின்றன.
பதிலளிநீக்குஆதி உங்கள் பிரச்சனை புரிகிறது. என் அம்மாவிற்கு இதே பிரச்சனை வந்தது அதனால் மன அழுத்தம்....
பதிலளிநீக்குநீங்கள் திருச்சி/ஸ்ரீரங்கம் இடம் மாற்றம்?
கீதா
எல்லோருக்கும் நல்லவளாக இருப்பது கடினம் என்பது அவளுக்கு மெல்லப் புரிந்தது!//
பதிலளிநீக்குஎல்லோருக்கும் நல்லவளாக இருப்பது மிக மிக கடினம் ஆதி.
இதுவும் கடந்து போகும் என்று மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வந்து இருக்கும் உங்களுக்கு.
புத்தரின் வரிகள் அருமை
பதிலளிநீக்குதுன்பங்களின் துரத்தலில் நீங்களும் தத்தளித்து சமாளித்து வந்திருக்கிறீர்கள் என்பது தெரிகிறது.
எல்லோருக்கும் நல்லவராக இருப்பது என்பது கடினம். அப்படி என்றால் நாம் எங்கோ நடிக்கிறோம்
துளசிதரன்
புத்தரின் வரிகள் மாகாபாரதத்தில் யக்ஷன் கேள்விகளுக்குத் தர்மர் பதில் சொல்வதில் வரும்
பதிலளிநீக்குகீதா