அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன் வெளியிட்ட யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
வாழ்க்கையில் இரண்டு விஷயங்களை விட்டுவிடால் போதும் - எப்போதும் நமக்கு வெற்றிதான்; 1) மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்ப்பது 2) மற்றவர்களிடம் எதிர்பார்ப்பது.
******
யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே!
பகுதி மூன்று இங்கே! பகுதி நான்கு இங்கே!
பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!
பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!
பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!
பகுதி பன்னிரெண்டு இங்கே!
பகுதி பதிமூன்று இங்கே!
பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே!
பகுதி பதினாறு இங்கே!
பகுதி பதினேழு இங்கே!
பகுதி பதினெட்டு இங்கே!
பகுதி பத்தொன்பது இங்கே!
பகுதி இருபது இங்கே!
பகுதி இருபத்தி ஒன்று இங்கே!
பகுதி இருபத்தி இரண்டு இங்கே!
பகுதி இருபத்தி மூன்று இங்கே!
பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே!
பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே!
பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!
பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே!
பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே!
பகுதி முப்பத்தி இரண்டு இங்கே! பகுதி முப்பத்தி மூன்று இங்கே!
பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!
பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே!
பகுதி முப்பத்தி எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!
பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!
பகுதி நாற்பத்தி இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று இங்கே!
பகுதி நாற்பத்தி நான்கு இங்கே! பகுதி நாற்பத்தி ஐந்து இங்கே!
பகுதி நாற்பத்தி ஆறு இங்கே! பகுதி நாற்பத்தி ஏழு இங்கே!
பகுதி நாற்பத்தி எட்டு இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்பது இங்கே!
பகுதி ஐம்பது இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்று இங்கே!
பகுதி ஐம்பத்தி இரண்டு இங்கே! பகுதி ஐம்பத்தி மூன்று இங்கே!
பகுதி ஐம்பத்தி நான்கு இங்கே! பகுதி ஐம்பத்தி ஐந்து இங்கே!
பகுதி ஐம்பத்தி ஆறு இங்கே! பகுதி ஐம்பத்தி ஏழு இங்கே!
பகுதி ஐம்பத்தி எட்டு இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்பது இங்கே!
பகுதி அறுபது இங்கே! பகுதி அறுபத்தி ஒன்று இங்கே!
பகுதி அறுபத்தி இரண்டு இங்கே! பகுதி அறுபத்தி மூன்று இங்கே!
பகுதி அறுபத்தி நான்கு இங்கே! பகுதி அறுபத்தி ஐந்து இங்கே!
பகுதி அறுபத்தி ஆறு இங்கே! பகுதி அறுபத்தி ஏழு இங்கே!
பகுதி அறுபத்தி எட்டு இங்கே! பகுதி அறுபத்தி ஒன்பது இங்கே!
பகுதி எழுபது இங்கே! பகுதி எழுபத்தி ஒன்று இங்கே!
பகுதி எழுபத்தி இரண்டு இங்கே! பகுதி எழுபத்தி மூன்று இங்கே!
பகுதி எழுபத்தி நான்கு இங்கே! பகுதி எழுபத்தி ஐந்து இங்கே!
பகுதி எழுபத்தி ஆறு இங்கே! பகுதி எழுபத்தி ஏழு இங்கே!
பகுதி எழுபத்தி எட்டு இங்கே! பகுதி எழுபத்தி ஒன்பது இங்கே!
பகுதி எண்பது இங்கே! பகுதி எண்பத்தி ஒன்று இங்கே!
பகுதி எண்பத்தி இரண்டு இங்கே! பகுதி எண்பத்தி மூன்று இங்கே!
பகுதி எண்பத்தி நான்கு இங்கே! பகுதி எண்பத்தி ஐந்து இங்கே!
பகுதி எண்பத்தி ஆறு இங்கே! பகுதி எண்பத்தி ஏழு இங்கே!
பகுதி எண்பத்தி எட்டு இங்கே! பகுதி எண்பத்தி ஒன்பது இங்கே!
பகுதி 90 இங்கே! பகுதி 91 இங்கே!
யாரிவள்! பகுதி 92 – வாழ்வில் வேறுவிதம்!
திருவரங்க வாழ்வில் சிறு சிறு விஷயங்களும் இங்கே பெரிதாக பார்க்கப்பட்டன! பேசப்பட்டன! ஒவ்வொரு முறையும் தன்னுடைய நிலையை அவள் எடுத்துச் சொல்ல வேண்டியிருந்தது! நிரூபிக்க வேண்டியிருந்தது! அவளுக்கு இதெல்லாம் புதிதாகத் தெரிந்தன! ஒவ்வொரு அனுபவமும் அவளை பலமுறை சிந்திக்க வைத்தது!
தாமரை இலைத் தண்ணீராய் இருக்க அவள் பக்குவப்படணும்! எதையும் தள்ளி வைத்துப் பார்க்க அவள் கற்றுக் கொள்ளணும்! இதுவரை வாழ்வில் அவளுக்கு கிடைத்த அனுபவங்கள் வேறுவிதம்! இப்போது கிடைத்துக் கொண்டிருக்கும் அனுபவங்கள் முற்றிலும் வேறுவிதம்! இதற்கு அவள் தயார் செய்து கொள்ள வேண்டும்!
அவள் தனது அன்றாடக் கடமைகளை செய்து கொண்டும், மகளுக்கு நல்லது கெட்டதை எடுத்து சொல்லித் தந்து கொண்டும் நாட்களை கடத்தி வந்தாள்! அவ்வப்போது விடுமுறை எடுத்துக் கொண்டு இவர்களைக் காண ஓடி வரும் கணவனுக்கு வேண்டியதை செய்து தந்து, அவரிடம் வாய் ஓயாமல் பல கதைகளை பேசிக் கொண்டு இனிமையான நேரங்களை செலவிடுவாள்!
அப்பாவைக் கண்டதும் அம்மாவை விட்டுவிட்டு அப்பாவுடன் கூட்டு சேர்ந்து கொண்டு கலாய்க்கும் மகளிடம் சிறுபிள்ளை போல் சண்டை போடுவாள் இவள்! டெல்லியில் இருந்தவரை கணவனின் கரம் பற்றிக் கொண்டு ஊர் சுற்றும் இவளுக்கு இங்கே அப்படியிருக்க ஏனோ தயக்கமாக இருந்தது! யாரும் எதுவும் சொல்லப் போவதில்லை என்றாலும் சகஜமாக இருக்க முடியவில்லை!
அங்கே தனக்கு எல்லா விதத்திலும் உதவியாக இருந்த கணவன் இங்கே அப்படியிருந்தால் அக்கம் பக்கத்தவர்களோ, உறவினர்களோ ஏதேனும் கிண்டல் செய்யக் கூடுமோ! அல்லது இவளைக் குறித்த எண்ணங்கள் மாறிவிடுமோ! என்றெல்லாம் அவளுக்குத் தோன்றியது! டெல்லி வாழ்க்கை வேறு! இங்குள்ள வாழ்க்கை வேறு! என்று புரியத் தொடங்கியது!
தனது உடல்நிலையின் காரணத்தால் தான் இங்கே வசிக்கும் படியாகி விட்டது என்று சொன்னாலும் ஒவ்வொருவரும் இவளை புரிந்து கொண்டது ஒவ்வொரு கோணத்தில்! அவ்வப்போது இங்கு வரும் கணவனைப் பார்த்த போதிலும் அவர்களின் எண்ணங்கள் மாறவில்லை! கேள்விகள் தொடர்ந்து கொண்டு தான் இருந்தன!
யாருடனாவது இணைத்து கதையாக திரித்து விடுவார்களோ என்ற எண்ணமெல்லாம் கூட தோன்றி அவளை கவலையும் பயமும் கொள்ள வைத்தது! பொதுவாக கலகலப்பான பெண்ணல்ல இவள் என்பதால் பெரிதாக யாருடனும் பேசிக் கொண்டிருக்க மாட்டாள்! தன் வேலைகளை கவனித்துக் கொண்டு அனாவசியமாக யாருக்கும் இடம் கொடுக்காமல் நாட்களை கடத்தினாள்!
இந்த நிலை நிச்சயமாக மாறும்! எல்லாமே சரியாகி விடும்! எல்லோரும் ஒன்றாக வசிக்கும் நாளும் வந்து விடும்! நம்பிக்கையை மனதுக்குள் விதைத்து அதை ஒரு வேள்வி போல் மனமொன்றி வளர்த்துக் கொண்டு வந்தாள்!
*****
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
தொடர்கிறேன்.
பதிலளிநீக்குநலமே விளையும் தொடர்கிறேன்...
பதிலளிநீக்குஇதுவும் கடந்து போகும்...
பதிலளிநீக்குவணக்கம் சகோதரி
பதிலளிநீக்குவாசகம் அருமை. தங்கள் எண்ணங்கள் நியாயமானதுதான்.. வீண் சஞ்சலங்கள் நம் வாழ்வில் பெரும் மன பயத்தையே உண்டாக்கி விடும் என்பதும் உண்மைதான். நீங்கள் அனைவரும் சேர்ந்திருக்கும் பயமற்ற காலங்கள் விரைவில் உண்டாகட்டும். . அதற்காக நானும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாசகமும், பதிவும் அருமை. நம்பிக்கை விரைவில் பலிக்க வேண்டும் என்ற பிரார்த்தனைகளும்.
பதிலளிநீக்குவாசகம் அருமை.
பதிலளிநீக்குஆதி உங்கள் உணர்வுகள் யதார்த்தமானவை. அதுவும் நீங்கள் இருக்கும் ஊர். இப்போது மாறியிருக்கும்.
உங்கள் நம்பிக்கை நடக்கும் ஆதி.
கீதா
உங்கள் எண்ணம்போல் வாழ்க்கை அமையட்டும்.
பதிலளிநீக்கு