அன்பின்
நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள்
அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன் வெளியிட்ட
யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன்
தொடங்கலாம் வாருங்கள்.
சவால் என்ற
வார்த்தைக்குள் தான் வாசல் எனும் வார்த்தை மறைந்திருக்கிறது; நாம் எதிர்கொள்ளும்
சவால்களிலேதான் நமக்கான வாசல்கள் திறக்கின்றன.
******
யாரிவள் - பகுதி ஒன்று
இங்கே! பகுதி இரண்டு இங்கே!
பகுதி மூன்று இங்கே! பகுதி நான்கு இங்கே!
பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!
பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!
பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!
பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!
பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே!
பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!
பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!
பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே!
பகுதி இருபத்தி
இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!
பகுதி இருபத்தி
நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே!
பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே!
பகுதி இருபத்தி
எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!
பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே!
பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே!
பகுதி முப்பத்தி
இரண்டு இங்கே! பகுதி முப்பத்தி
மூன்று இங்கே!
பகுதி முப்பத்தி
நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!
பகுதி முப்பத்தி ஆறு
இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே!
பகுதி முப்பத்தி
எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!
பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!
பகுதி நாற்பத்தி
இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று இங்கே!
பகுதி நாற்பத்தி
நான்கு இங்கே! பகுதி நாற்பத்தி ஐந்து இங்கே!
பகுதி நாற்பத்தி ஆறு
இங்கே! பகுதி நாற்பத்தி ஏழு இங்கே!
பகுதி நாற்பத்தி
எட்டு இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்பது இங்கே!
பகுதி ஐம்பது இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்று இங்கே!
பகுதி ஐம்பத்தி
இரண்டு இங்கே! பகுதி ஐம்பத்தி மூன்று இங்கே!
பகுதி ஐம்பத்தி
நான்கு இங்கே! பகுதி ஐம்பத்தி ஐந்து இங்கே!
பகுதி ஐம்பத்தி ஆறு இங்கே! பகுதி ஐம்பத்தி ஏழு இங்கே!
பகுதி ஐம்பத்தி
எட்டு இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்பது இங்கே!
பகுதி அறுபது இங்கே! பகுதி அறுபத்தி ஒன்று இங்கே!
பகுதி அறுபத்தி
இரண்டு இங்கே! பகுதி அறுபத்தி மூன்று இங்கே!
பகுதி அறுபத்தி
நான்கு இங்கே! பகுதி அறுபத்தி ஐந்து இங்கே!
பகுதி அறுபத்தி ஆறு இங்கே! பகுதி அறுபத்தி ஏழு இங்கே!
பகுதி அறுபத்தி
எட்டு இங்கே! பகுதி அறுபத்தி ஒன்பது இங்கே!
பகுதி எழுபது இங்கே! பகுதி எழுபத்தி ஒன்று இங்கே!
பகுதி எழுபத்தி
இரண்டு இங்கே! பகுதி எழுபத்தி மூன்று இங்கே!
பகுதி எழுபத்தி
நான்கு இங்கே! பகுதி எழுபத்தி ஐந்து இங்கே!
பகுதி எழுபத்தி ஆறு இங்கே! பகுதி எழுபத்தி ஏழு இங்கே!
பகுதி எழுபத்தி
எட்டு இங்கே! பகுதி எழுபத்தி ஒன்பது இங்கே!
பகுதி எண்பது இங்கே! பகுதி எண்பத்தி ஒன்று இங்கே!
பகுதி எண்பத்தி
இரண்டு இங்கே! பகுதி எண்பத்தி மூன்று இங்கே!
பகுதி எண்பத்தி
நான்கு இங்கே!
யாரிவள்! பகுதி
எண்பத்தி ஐந்து – அவளின் சவால்கள்!
குடும்பத்
தலைவியாகவும், சுட்டிக்குழந்தைக்கு தாயாகவும் பரிமாணம் கொண்டு செயல்படும் போது
அன்றாடம் எத்தனையோ குழப்பங்களும், சவால்களும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்! அதை
பதட்டப்படாமல் பொறுமையாகவும், திட்டமிட்டும் கையாள வேண்டும்!
குழந்தையையும்
சமாளிக்க வேண்டும்! அவளுக்கு அந்தந்த பருவத்துக்கேற்ற விஷயங்களை கற்றுக் கொடுக்க
வேண்டும்! கணவனின் தேவைகளுக்கு ஏற்றாற் போல் செயல்பட வேண்டும்! அலுவலகம் கிளம்பும்
போது அவருக்கு தேவையானதை எடுத்து வைப்பதும், மாலையில் திரும்பும் போது அவருடன்
சற்றுநேரம் செலவிடுவதும் என கடந்து செல்லும்!
ஒவ்வொரு நாளும்
அவளுக்கான இலக்குகளும், கடமைகளும், வேலைகளும் என நாட்கள் அதிவேகமாக கடந்து
கொண்டிருந்தது! எல்லோரையும் திருப்திப்படுத்துவது இயலாத காரியம்! ஆனால்
ஒவ்வொருவருக்காகவும் சற்றே மெனக்கெடுதலும், நேரம் செலவிடுதலும் அவர்களை
மகிழ்ச்சியடைய வைக்கும்!
அதேபோல் அவர்களும்
நம்மிடம் நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்க கூடாது! இவள் முதலில் சின்ன சின்ன
விஷயங்களுக்காக எதிர்பார்ப்பு வைத்துக் கொண்டிருந்தாள்! அது நிகழாத போது சற்றே
ஏமாற்றமாக இருக்கும்! ஆனால் அதை பெரிதாக மனதிற்கு எடுத்துச் செல்லாமல்
அடுத்தடுத்து செய்ய வேண்டிய வேலைகளில் மாற்றிக் கொள்வாள்!
வாழ்வின் ஓட்டத்தில்
தான் பல விஷயங்களை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது! மனதை பக்குவமடைய செய்தது!
பணத்தின் மீது ஈர்ப்பு இல்லாததால் கணவன் அதிகம் சம்பாதிக்க வேண்டும்! இதை வாங்க
வேண்டும்! இப்படி இருக்க வேண்டும்! போன்ற எண்ணங்கள் ஏதும் இல்லாமல் இருந்தாள்!
இவள் கலகலப்பான பெண்
அல்ல என்பதால் எங்கு சென்றாலும் மற்றவர் பேசுவதை மட்டும் கேட்டுக் கொண்டிருப்பாள்!
தன்னிடம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டும், மற்றவர்களின் செயல்களை
கவனித்துக் கொண்டும் நாட்கள் இனிமையாகச் சென்றது!
பண்டிகை நாட்களில்
ஆர்வமுடன் தன்னால் முயன்றதை சிறப்பாக செய்தாள்! அம்மாவை நினைத்துக் கொண்டாள்!
எவ்வளவு விஷயங்களை அதிவேகமாக செய்திடுவாள்! 'அவளின் மகள் நான் சிறிதேனும் செய்ய
வேண்டாமா!' 'அனாவசியமாக இழுத்து விட்டுக் கொள்ளாதே!' என்று கணவனே சொன்னாலும் அம்மாவை
நினைத்துக் கொண்டு செயலில் இறங்கி விடுவாள்!
இப்படியாகச் சென்றன
அவளுக்கான இனிமையான நாட்கள்! வாழ்க்கைப் பாதை என்றுமே ஒரே மாதிரி இருப்பதில்லை!
சட்டென்று சூழ்நிலைகளும் மாறிப் போகும்!
*****
இன்றைய பதிவு குறித்த
தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள்
அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
தொடர்கிறேன்.
பதிலளிநீக்குஅருமை... அனுபவமே சிறந்த பாடம்...
பதிலளிநீக்குதொடருங்கள்
பதிலளிநீக்குநன்று தொடர்ந்து வருகிறேன்...
பதிலளிநீக்குதொடர்கிறேன்
பதிலளிநீக்குஆமாம் தாயாக, மனைவியாப் பொறுப்புகள் கூடும் அதுவும் குழந்தை வளர வளர்....அனுபவங்கள் கற்றுத் தருவது போல - அந்த அனுபவங்களையும் நாம் புரிந்து கொண்டால்தான் - சிறந்த ஆசான் வேறு எதுவும் இல்லை.
பதிலளிநீக்குகீதா
சிறந்த குடும்பத்தினர் தலைவியாக செயல்பட்டு உள்ளீர்கள் .
பதிலளிநீக்கு