செவ்வாய், 20 செப்டம்பர், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி 95 – அவளின் கொள்கைகள்!

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன் வெளியிட்ட யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள் - விவேகாநந்தர்.

 

******


 

யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே

 

பகுதி மூன்று இங்கேபகுதி நான்கு இங்கே

 

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

 

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

 

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

 

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

 

பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 

 

பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!

 

பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!

 

பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!

 

பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே! 

 

பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே! 

 

பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி இரண்டு இங்கே!  பகுதி முப்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே! 

 

பகுதி முப்பத்தி எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!

 

பகுதி நாற்பத்தி இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று  இங்கே!

 

பகுதி நாற்பத்தி நான்கு இங்கே! பகுதி நாற்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி நாற்பத்தி ஆறு இங்கே! பகுதி நாற்பத்தி ஏழு இங்கே!

 

பகுதி நாற்பத்தி எட்டு இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்பது இங்கே! 

 

பகுதி ஐம்பது இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி இரண்டு இங்கே! பகுதி ஐம்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி நான்கு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஐந்து  இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி ஆறு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஏழு  இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி எட்டு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்பது  இங்கே! 

 

பகுதி அறுபது இங்கே! பகுதி அறுபத்தி ஒன்று இங்கே!

 

பகுதி அறுபத்தி இரண்டு இங்கே! பகுதி அறுபத்தி மூன்று இங்கே!

 

பகுதி அறுபத்தி நான்கு இங்கே! பகுதி அறுபத்தி ஐந்து இங்கே!

 

பகுதி அறுபத்தி ஆறு இங்கே! பகுதி அறுபத்தி ஏழு இங்கே!

 

பகுதி அறுபத்தி எட்டு இங்கே! பகுதி அறுபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி எழுபது இங்கே! பகுதி எழுபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி எழுபத்தி இரண்டு இங்கே! பகுதி எழுபத்தி மூன்று இங்கே!

 

பகுதி எழுபத்தி நான்கு இங்கே! பகுதி எழுபத்தி ஐந்து இங்கே!

 

பகுதி எழுபத்தி ஆறு இங்கே! பகுதி எழுபத்தி ஏழு இங்கே!

 

பகுதி எழுபத்தி எட்டு இங்கே! பகுதி எழுபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி எண்பது  இங்கே! பகுதி எண்பத்தி ஒன்று  இங்கே! 

 

பகுதி எண்பத்தி இரண்டு இங்கே! பகுதி எண்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி எண்பத்தி நான்கு இங்கே! பகுதி எண்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி எண்பத்தி ஆறு இங்கே! பகுதி எண்பத்தி ஏழு இங்கே! 

 

பகுதி எண்பத்தி எட்டு இங்கே! பகுதி எண்பத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி 90 இங்கே! பகுதி 91 இங்கே! பகுதி 92 இங்கே! பகுதி 93 இங்கே!

 

பகுதி 94 இங்கே!

 

யாரிவள்! பகுதி 95 அவளின் கொள்கைகள்!



 

மகளின் ஓவிய ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் அவளை ஓவியம் வரைதல் மற்றும் கைவேலை வகுப்பில் சேர்த்து விட்டாள்! வாரத்தில் இரண்டு நாட்கள் வகுப்பு. அவளை வகுப்பில் கொண்டு விட்டுவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவாள்! ஒரு மணிநேரம் கழிந்த பின்னர் மீண்டும் வகுப்புக்குச் சென்று அழைத்து வருவாள்!

 

அதில் ஒருநாள் இரண்டு வகுப்புகளுமே இருக்கும்! காலையில் ஓவிய வகுப்பும், மாலை பாட்டு வகுப்பும்! அன்று கூடுதலான நடையின் காரணமாக அசந்து போய்விடுவாள்! வீட்டு வேலைகளை நாளை செய்து கொள்ளலாம் என்று போட்டு விடுவாள்! இப்படி தன்னுடைய நேரங்களை திட்டமிட்டு செயல்படுத்துவாள்!

 

மாதம் பிறந்தவுடன் வீட்டுக்குத் தேவையான மளிகைப்பொருட்கள், அவசரத்தேவைக்கான மருந்துகள், வாரம் முழுவதற்கும் தேவையான காய்கறிகள், பழங்கள் என்று எல்லாவற்றையும் முன்பே வாங்கி வைத்துக் கொள்வாள்! அவளுக்கு யாரிடமும் வாங்கி வரச் சொல்லும் பழக்கமோ, அக்கம்பக்கத்தில் உள்ளோரிடம் வாங்கும் பழக்கமோ இல்லை! 

 

தன்னுடைய தேவைகளுக்கு தானே தான் கஷ்டப்படணும் என நினைத்தாள்! வாங்க வேண்டிய பொருட்களுக்கான சீட்டும் எழுதி வைத்திருப்பாள்! அந்தப்பக்கம் ஏதோ ஒரு வேலைக்காக செல்லும் போது வேண்டியவற்றை சீட்டைப் பார்த்து வாங்கிக் கொள்வாள்! இப்படியாக எப்போதுமே முன்னெச்சரிக்கை உணர்வுடன் வாங்கி வைத்துக் கொள்வாள்! பலநேரங்களில் அது பெரும் உதவியாக இருக்கும்!

 

மகளின் பள்ளியில் நடைபெறும் விழாக்கள், குடியிருப்பில் வசிப்போர் அல்லது நட்புவட்டத்தில் வரும் விழாக்களின் அழைப்பு என்று எங்கு சென்றாலும் அங்கே குடும்பத்தோடு வந்திருப்போரை பார்க்கும் போது தானும் இப்படியெல்லாம் கணவனின் கரம் பற்றி விழாக்களில் கலந்து கொண்டு சிரிப்பும், அரட்டையுமாக எப்போது இருப்போமா என்ற ஏக்கம் உண்டாகும்!

 

இப்படியே நாட்களும் மாதங்களும் கடந்து சென்றன. மகளும் அடுத்தடுத்த வகுப்புகளுக்குச் செல்வதும், அவளுக்கு அவ்வப்போது கிடைக்கும் பரிசுகளால் அடையும் மகிழ்ச்சியும் எனச் செல்ல, திருவரங்கத்து வாழ்வில் இவளுக்கென கிடைத்த அனுபவங்களால் பழக்கப்பட்டு அதிலேயே மூழ்கினாள்!

 

கணவன் இங்கு வரும் நாட்களில் அதற்கேற்றவாறும் மற்றைய நாட்களில் அதற்கேற்றவாறும் செயல்படுவாள்! எல்லாமும் பழகிப் போய்விட்டது அவளுக்கு! எதற்காகவும் கலங்காமல் இருக்க வேண்டும்! வாழ்க்கை என்றும் ஒரே மாதிரி இருக்கப் போவதில்லை! நிச்சயம் இந்த நிலை மாறும் என்ற நம்பிக்கையில் அவளின் வாழ்க்கைப் பாதையும் நகர்ந்து கொண்டிருந்தது!

 

டெல்லி வாழ்க்கை வேறு! இங்குள்ள வாழ்க்கை வேறு! என்று பலநேரங்களில் அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது! தனித்து செயல்பட்டாலும் சுதந்திரமாக இருக்க முடிந்ததா?? அடுத்தவரின் வாழ்வில் மூக்கை நுழைப்போரை என்ன செய்வது?? தொடர்ந்து பார்க்கலாம்!

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

7 கருத்துகள்:

  1. // இந்த நிலை மாறும் // எனும் நம்பிக்கை சிறப்பு...

    பதிலளிநீக்கு
  2. அடுத்தவரின் வாழ்வில் மூக்கை நுழைப்போரைத் துணிந்து புறந்தள்ளத்தான் வேண்டும். தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  3. வாழ்வில் எதுவும் நிரந்தரமில்லை...

    பதிலளிநீக்கு
  4. //நிச்சயம் இந்த நிலை மாறும் என்ற நம்பிக்கையில் அவளின் வாழ்க்கைப் பாதையும் நகர்ந்து கொண்டிருந்தது//

    நம்பிக்கை நம்மை வாழ வைக்கும்.

    அடுத்தவர் வாழ்க்கையில் மூக்கை நுழைப்போரை பற்றி கவலை படாமல் இருப்பதே நல்லது.

    பதிலளிநீக்கு
  5. ஒவ்வொரு நாளையும் தள்ள ரொட்டீனாக திட்டமிட்ட வேலைகள்.. அப்படியும் கனக்கும்  சில கணங்கள்...  சீக்கிரம் நிலை மாறி மகிழ்ச்சி நிலவவேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. நம்மைச் சுற்றி இருப்போரில் சிலர் அடுத்தவர் வாழ்க்கையில் மூக்கை நுழைப்பவர்கள் உண்டுதான் அதைக் கண்டு கொள்ளாமல் செல்ல வேண்டியதுதான் கூடியவரை தள்ளி இருத்தல்...மனதளவிலேனும்.

    அந்த நாளும் வந்திடாதோ என்று ஏங்கிடும் அந்த நாளும் வந்திடும். மகிழ்ச்சி பிறக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. நம்பிக்கையும் பொசிட்டிவ் எண்ணங்களும்தானே வாழ்க்கை. மனம்போல் அமையட்டும்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....