அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன் வெளியிட்ட யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
எண்ணங்கள் அழகானால் வாழ்க்கையும் அழகாகும்.
******
யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே!
பகுதி மூன்று இங்கே! பகுதி நான்கு இங்கே!
பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!
பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!
பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!
பகுதி பன்னிரெண்டு இங்கே!
பகுதி பதிமூன்று இங்கே!
பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே!
பகுதி பதினாறு இங்கே!
பகுதி பதினேழு இங்கே!
பகுதி பதினெட்டு இங்கே!
பகுதி பத்தொன்பது இங்கே!
பகுதி இருபது இங்கே!
பகுதி இருபத்தி ஒன்று இங்கே!
பகுதி இருபத்தி இரண்டு இங்கே!
பகுதி இருபத்தி மூன்று இங்கே!
பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே!
பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே!
பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!
பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே!
பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே!
பகுதி முப்பத்தி இரண்டு இங்கே! பகுதி முப்பத்தி மூன்று இங்கே!
பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!
பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே!
பகுதி முப்பத்தி எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!
பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!
பகுதி நாற்பத்தி இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று இங்கே!
பகுதி நாற்பத்தி நான்கு இங்கே! பகுதி நாற்பத்தி ஐந்து இங்கே!
பகுதி நாற்பத்தி ஆறு இங்கே! பகுதி நாற்பத்தி ஏழு இங்கே!
பகுதி நாற்பத்தி எட்டு இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்பது இங்கே!
பகுதி ஐம்பது இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்று இங்கே!
பகுதி ஐம்பத்தி இரண்டு இங்கே! பகுதி ஐம்பத்தி மூன்று இங்கே!
பகுதி ஐம்பத்தி நான்கு இங்கே! பகுதி ஐம்பத்தி ஐந்து இங்கே!
பகுதி ஐம்பத்தி ஆறு இங்கே! பகுதி ஐம்பத்தி ஏழு இங்கே!
பகுதி ஐம்பத்தி எட்டு இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்பது இங்கே!
பகுதி அறுபது இங்கே! பகுதி அறுபத்தி ஒன்று இங்கே!
பகுதி அறுபத்தி இரண்டு இங்கே! பகுதி அறுபத்தி மூன்று இங்கே!
பகுதி அறுபத்தி நான்கு இங்கே! பகுதி அறுபத்தி ஐந்து இங்கே!
யாரிவள்! பகுதி அறுபத்தி ஆறு – வார்த்தைக்கு கட்டுப்படுதல்!
ஒருவரின் வார்த்தைக்கு மற்றவர் கட்டுப்படுவது, அவர் நம் நன்மைக்கு தான் சொல்கிறார் என எடுத்துக் கொண்டு அவரின் வார்த்தையை மீறி செயல்படாதது! எத்தனை வயதானாலும் இவை அவருக்கு நாம் தரும் மரியாதை என்று எடுத்துக் கொள்ளலாம்! குடும்ப அமைப்பில் உள்ள ஒரு அம்சம் இது! குடும்பம் என்னும் அமைப்பை சிதிலமடையாமல் காக்க இந்த விஷயம் உதவும்!
அம்மாவுக்கு மகளின் குடித்தனம் செய்யும் அழகை வந்து பார்க்க கொள்ளை ஆசை ஒருபுறம் என்றால், தன் உடல் நலனைக் காரணமாய்க் கொண்டு அவள் மாப்பிள்ளையை விட்டுவிட்டு பிறந்த வீட்டில் அவ்வப்போது வந்து இருப்பது ஒன்றும் சரியில்லையே! நாமும் சென்று அவளை அங்கே விட்டுவிட்டு வந்து விடுவோம் என முடிவு செய்திருக்கிறாள் அம்மா!
மருத்துவரிடம் அம்மாவின் ஆசையை சொல்லிக் கேட்டதில் மருந்துகளையும், ரிப்போர்ட்ஸையும் எடுத்துக் கொண்டு போகும்படி சொல்லி விட்டார். ஏதாவது எமர்ஜென்சின்னா டெல்லி எய்ம்ஸில் காண்பிக்கும் படியும் சொல்லி விட்டார். ஆனால் அம்மாவுக்கு இதில் ஒரு தயக்கமும் இருந்தது.
தன் அண்ணாவிடம் இதைச் சொன்னால் என்ன சொல்வாரோ! உடம்பு முடியாமல் அவ்வளவு தூரம் ஏன் பிரயாணம் செய்யணும்னு கேட்டா என்ன சொல்றதுன்னு யோசனை! இதை இவளிடம் சொல்லிக் கொண்டிருந்தார். தன் அண்ணனிடம் அம்மாவுக்கு மிகுந்த மரியாதை உண்டு! அவர் பேச்சுக்கு மறுபேச்சு கிடையாது!
அம்மாவின் இந்த வருத்தத்தை பார்த்த இவள் ஒரு உபாயத்தைச் சொன்னாள்! 'உனக்கு அங்க வரணும்னு ஆசையாயிருக்கு! ஆனா மாமாவிடம் சொல்லிண்டு போகவும் பயமாயிருக்கு! சொல்லாமயும் கிளம்ப முடியாது! அப்ப ஒண்ணு பண்ணலாம்! பக்கத்து பப்ளிக் பூத்ல இருந்து நான் மாமாவுக்கு கால் பண்ணித் தரேன்! அண்ணா நான் டெல்லி போயிட்டு ஒரே வாரத்துல பத்திரமா வந்துடுவேன்னு சொல்லிட்டு வெச்சுடு! என்ன!' என்றாள்.
அம்மாவும் குழந்தையைப் போன்று கிளிப்பிள்ளையாய் மாறி இவள் சொன்னபடியே அப்படியே சொல்லிட்டு வைத்து விட்டாள்! சற்றே நிம்மதியாயிருந்தது அம்மாவுக்கு! எப்படியோ நான் அண்ணாட்ட சொல்லிட்டு தான் கிளம்பப் போறேன்! என தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்!
எல்லோருக்கும் அம்மாவின் நிலையைப் பற்றித் தெரியும்! இனி யாரும் எதுவும் சொல்வதற்கில்லையே! எத்தனை பத்திரப்படுத்தினாலும் அம்மாவின் காலம் முடிவடைய தான் போகிறது! அதற்குள் அவளின் ஆசை நிறைவேறட்டும் என நினைத்து பயணத்துக்கான ஏற்பாடு செய்தாள் இவள்!
சரியாக ஒரு வாரகாலம் அம்மாவையும் அப்பாவையும் அங்கு அழைத்துச் சென்று, அம்மாவின் உடல்நலனை கருத்தினில் கொண்டு முக்கியமான ஒரு சில இடங்களை மட்டும் சுற்றிக் காண்பித்தார்கள். அம்மாவுக்கு மகளின் வாழ்க்கையை நல்லபடியாக அமைத்துக் கொடுத்ததில் மனங்கொள்ளா ஆனந்தமும், நிம்மதியும்!
அங்கிருந்து கிளம்பும் போது இவளும் தங்களுடன் வந்துவிடுவாளோ என நினைத்து பயந்து நாங்களே போய்க்கிறோம்! என சொல்லி ஞாபகமாக இவளை அங்கேயே விட்டுவிட்டு கிளம்பி விட்டார்கள்!
*****
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
நெகிழ்ச்சி. பெரியவர்களுக்கு எப்படி மரியாதை கொடுத்திருக்கிறார் உங்கள் அம்மா..
பதிலளிநீக்குஎப்படியோ அம்மா டெல்லியை பார்த்ததில் மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஅருமை...
பதிலளிநீக்குஅம்மாவும் அப்பாவும் உங்களுடன் வந்து அங்கு உங்கள் வாழ்க்கையைக் கண்ட திருப்தி அம்மாவுக்கும் இருந்திருக்கும் என்பது நெகிழ்வான தருணங்கள்.
பதிலளிநீக்குஎன் அம்மாவும் அவள் அண்ணாக்களை மீறி எதுவும் செய்ய மாட்டாள். மாமாக்களுக்கு என் அம்மா ஒரே குட்டித் தங்கை என்பதால் ரொம்ப பாசம் செல்லம். நினைவுகள் பல எழுகின்றன
கீதா
அம்மாவுக்கு மாமாவிடமிருந்த பாசமும், மதிப்பும் மரியாதையும் படிக்கும் போதே மகிழ்ச்சியை தருகிறது.
பதிலளிநீக்குஅம்மா, அப்பாவுக்கு மகிழ்ச்சியை கொடுத்து விட்டீர்கள்.
படிக்கும் போது அவர்களின் நிம்மதியை உணர முடிகிறது.
மகளின் இனிய வாழ்க்கையை கண்டு மகிழ்ந்து திரும்பிய பெற்றோர்கள். உங்கள் இருவருடைய மனமும் நிறைந்திருக்கும்.
பதிலளிநீக்கு