எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, May 10, 2013

ஃப்ரூட் சாலட் 45 – திருச்சியில் மெரீனா – நேசம் - தங்கரதம்


இந்த வார செய்தி: கடந்த இரண்டு வருடங்களாக, கோடை விடுமுறை வந்ததுமே திருச்சி நகராட்சியினர் வறண்டு கிடக்கும் காவிரி ஆற்றின் கரையில்சம்மர் [B]பீச்என்று ஏற்பாடு செய்து தினமும் சில கலை நிகழ்ச்சிகள், கரையில் அமர்ந்து கொறிக்க ஏதுவாய் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் அமைத்திருக்கும் ஸ்டால்கள் என அமர்க்களமாக இருக்கிறது.

தினமும் மாலையில் மக்கள் கூட்டம் இந்த வறண்டிருக்கும் காவிரிக்கரைக்கும் வந்து கொண்டிருக்கிறது. சென்னை மெரீனாவில் அலைகளில் கால் நனைத்து விளையாடுவது போல, இங்கே செய்ய முடியாதுஏன் தண்ணீரில் கூட கால் நனைக்க முடியாதுதண்ணீர் இருந்தால் தானேமொத்த காவிரி ஆறும் பொட்டல் காடாக இருக்கிறது. தண்ணீர் பெயருக்குக் கூட இல்லை. எங்கே பார்த்தாலும் மணலும் ஆற்றின் நடுவே நாணல் புதர்களும் தான்.

சென்ற புதன் கிழமை அன்று நானும் குடும்பத்தினருடன் திருச்சியின் மெரீனா [B]பீச் சென்றிருந்தேன். வாகனங்களை நிறுத்த இலவச வசதியும் உண்டு. வெளியில் வாகனங்களை நிறுத்தி, உள்ளே ஆற்று மணலில் கால் புதைத்தபடி நடந்து உள்ளே சென்றால் மக்கள் அலைஅலையாக அங்கே வந்து கொண்டிருந்தார்கள்கடலலை இல்லாவிட்டால் என்ன என்று தோன்றியது! குழந்தைகளுக்குத் தான் கொண்டாட்டம் இங்கே. மணல்வெளியில் நிறைய குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது.

குழந்தைகளைக் கவரும் வண்ணம் நிறைய கடைகள்பலூன்கள், பந்துகள், சோப் தண்ணீர் வைத்து நீர்க்குமிழிகள் செய்ய வசதி, விதவிதமான கலர் பந்துகள், என நிறைய விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். சில குழந்தைகளுக்குக் கொம்பு வேறு முளைத்திருந்ததுசிவப்பு வண்ணத்தில் தலையில் மாட்டிக் கொள்ள அதில் விளக்கு வேறு எரிகிறது! ஒரு விதத்தில் கொஞ்சம் கஷ்டமாகவும் இருந்ததுஇவற்றை விற்பனை செய்து கொண்டிருந்ததில் பலர் சிறுவர்கள். தானும் அது போல விளையாட வேண்டிய வயதில் விற்பனை செய்து கொண்டிருந்ததை பார்க்கும் போது மனதிற்கு வருத்தம் தான் மிஞ்சியது.

மகளிர் சுய உதவிக் குழுவினரின் கடைகளில் சுடச்சுட சுண்டல், பஜ்ஜி, போண்டா, மீன் வருவல், சிக்கன் ஃப்ரை என கலந்து கட்டி விற்றுக் கொண்டிருந்தார்கள். இவர்களைத் தவிர கையில் ஒரு மூட்டை நிறைய பாப்கார்ன், டீ, சுண்டல், சமோசா, என தின்பண்டங்களும் விற்பனை ஜரூராக நடந்து கொண்டிருந்தது. மக்கள் கவலைகளை மறந்து பொழுது போக்குவதைப் பார்த்ததில் கொஞ்சம் நமக்கும் நிம்மதி. எல்லாரையும் விட கொஞ்சம் அதிகமாகவே இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தியது ஒரு பெரிய குடும்பம்.

கிட்டத்தட்ட 15 பெண்கள், ஒன்றிரண்டு சிறுவர்கள் என கும்பலாய் வந்திருந்தவர்கள், இரு குழுக்களாய் பிரிந்து ஆற்று மணலிலேயே கபடி விளையாடினார்கள். “கபடி கபடிஎன அரை மணி நேரத்திற்குக் கபடி விளையாட்டு. அது கொஞ்சம் சலித்தபின் கோகோ என மொத்தமாய் அனுபவித்தார்கள். எங்களுக்கும் நல்ல பொழுதுபோக்கு! மேடையில் இரவு எட்டு மணிக்கு மேல் யாரோ ஒருவர் வந்து யோகா சொல்லித் தர ஆரம்பிக்க வீட்டிற்குக் கிளம்பினோம்!

திருச்சியில் மெரீனா [B]பீச்நன்றாகத் தான் யோசிக்கிறார்கள்!

இந்த வார முகப்புத்தக இற்றை:

NO MATTER HOW MANY TIMES I BREAK DOWN, THERE IS ALWAYS A LITTLE PIECE OF ME, THAT SAYS “NO! YOU ARE NOT DONE YET, GET BACK UP!”.

இந்த வார குறுஞ்செய்தி:

BIG AND HEAVY DOORS SWING EASILY ON SMALL HINGES. SIMILARLY LITTLE GESTURES OF CARE AND CONCERN KEEP ALL RELATIONS ALIVE AND GROWING.

ரசித்த பாடல்:

”ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு” – தர்ம யுத்தம் படத்திலிருந்து மலேசியா வாசுதேவன் குரலில் நான் ரசித்த இப்பாடல் இதோ உங்களுக்காக….. 
ராஜா காது கழுதை காது: இம்முறை தில்லியிலிருந்து வந்து கொண்டிருந்தபோது, பக்கத்தில் இருந்த குடும்பத்தினர் வண்டியில் வந்த காபி வாங்கிக் குடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் ”காபி ரொம்ப தண்ணியா இருக்கே, பால்ல நிறைய தண்ணி கலந்துட்டான் போல!” என்று சொல்ல, தொடர்ந்து கேட்டது ஒரு பெண்ணின் குரல் – அட நீங்க வேற “பால் பாக்கெட்ட தண்ணி விட்டு அலம்பினதுல காபி போட்டு கொண்டு வந்திருக்கான்!” சரியாத் தான் சொன்னாங்க! ரயில் வண்டிகளில் வரும் காபி/டீ இப்படி கேவலமாத்தான் இருக்கு!

புகைப்படம்: [நான் எடுத்ததை நானே எப்படி ரசித்த படம் எனச் சொல்வது! ரசித்தீர்களா என நீங்களே சொல்லி விடுங்களேன்!]


படித்ததில் பிடித்தது:உடல் மிகவும் பலமிழந்த நேரத்தில் உங்களைத் தாங்கிப் பிடிக்கும் கைகளை கண்டுபிடியுங்கள். எல்லோரும் பார்க்க மறுக்கும் நேரத்தில் உங்களைப் பார்க்க விரும்பும் கண்களைக் கண்டுபிடியுங்கள். உங்களின் மோசமான நிலமையிலும் உங்களை நேசிக்கும் இதயத்தினைக் கண்டுபிடியுங்கள். இவைகளை நீங்கள் கண்டுபிடித்தான் நேசம் உங்களைக் கண்டுபிடித்திருக்கும்.

என்ன நண்பர்களே, இந்த வார பழக்கலவையைச் சுவைத்தீர்களா? மீண்டும் அடுத்த வாரம் வேறொரு பழக்கலவையோடு உங்களைச் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்
திருவரங்கத்திலிருந்து…..

44 comments:

 1. mmm...!

  nallaa irunthathu...!

  photo...
  arumai..
  pommai pola kaatchi thantathu..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 2. Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 3. //உடல் மிகவும் பலமிழந்த நேரத்தில் உங்களைத் தாங்கிப் பிடிக்கும் கைகளை கண்டுபிடியுங்கள். எல்லோரும் பார்க்க மறுக்கும் நேரத்தில் உங்களைப் பார்க்க விரும்பும் கண்களைக் கண்டுபிடியுங்கள். உங்களின் மோசமான நிலமையிலும் உங்களை நேசிக்கும் இதயத்தினைக் கண்டுபிடியுங்கள். இவைகளை நீங்கள் கண்டுபிடித்தால் நேசம் உங்களைக் கண்டுபிடித்திருக்கும்.//

  மிகவும் சிரமமான காரியம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 4. திருச்சியில் மெரீனா [B]பீச் – நன்றாகத் தான் யோசிக்கிறார்கள்!

  ரசிக்கவைத்த பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 5. இனிய வணக்கம் நண்பரே..
  பீச் போன்ற இடங்களுக்கு செல்கையில்..
  அந்த அழகை ரசிப்பதைவிட இதைப்போல..
  சில குடும்பங்கள் அந்த சூழலை எப்படி கொண்டாடுகிறார்கள்
  என்று பார்த்துக்கொண்டிருப்பதே மிகவும் அழகாக இருக்கும்.
  ===
  புகைப்படம் மிகவும் அழகாக இருந்தது நண்பரே..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

   Delete
 6. வெயிலுக்கு பழக் கலவை இதமாகவே இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 7. இனிமையான பாடல் உட்பட ஃப்ரூட் சாலட் அனைத்தும் அருமை...

  தமிழ்மணம் இணைத்துப் பார்த்தேன்... முடியவில்லை... கவனிக்கவும்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 8. இணைத்து விட்டீர்கள்... நன்றி... +1

  ReplyDelete
  Replies
  1. தமிழ்மணம் முதலாம் வாக்கிற்கு மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 9. அருமையான செய்திக்ளுட நல்லதொரு பதிவு.. பாராட்டுக்கள், வெங்கட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 10. திருச்சி பீச் - சிரிப்பதா வருந்துவதா?

  ReplyDelete
  Replies
  1. வருத்தம் தான்.... தண்ணீரே இல்லாத காவேரியைப் பார்த்து......

   Delete
 11. திருச்சியில் மெரினா நல்ல ஏற்பாடாக உள்ளது
  ரயில் நிலைய காபி வேறு வழியிலாமல் அந்த சுடு தண்ணியை குடிக்க வேண்டியுள்ளது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 12. உடல் மிகவும் பலமிழந்த நேரத்தில் உங்களைத் தாங்கிப் பிடிக்கும் கைகளை கண்டுபிடியுங்கள். எல்லோரும் பார்க்க மறுக்கும் நேரத்தில் உங்களைப் பார்க்க விரும்பும் கண்களைக் கண்டுபிடியுங்கள். உங்களின் மோசமான நிலமையிலும் உங்களை நேசிக்கும் இதயத்தினைக் கண்டுபிடியுங்கள். இவைகளை நீங்கள் கண்டுபிடித்தான் நேசம் உங்களைக் கண்டுபிடித்திருக்கும்.

  எம்மைப் பெற்ற தாய் தந்தையர்கள் இவர்களை வாழ்த்துவதிலும் இன்றும் ஓர் ஆனந்தம் எம் வாழ்வில் .வாழ்த்துக்கள் .மிக்க நன்றி சகோ
  பகிர்வுக்கு .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 13. காவேரியில் நீர் வற்றிவிட்டது என்று கேட்க மிகவும் வருத்தம்! சின்ன வயதில் பெரியவர்கள் இல்லாமல் கொள்ளிடத்திற்கு போவோம்; நீரும் குறைவாக இருக்கும்; அம்மா மண்டபம் பக்கம் போகவே கூடாது. நீர் அதிகம் என்பதால் அந்த இடம் இப்போது வற்றி போயிருக்கிறது என்றால் என்ன சொல்வது?
  பாடல் அருமை.
  நீங்கள் எடுத்த படத்தை நாங்களும் ரசித்தோம்.
  வயதான இருவரின் படமும் வாசகங்களும் நன்றாக இருக்கின்றன.
  ரயில்வே தரும் காபி டீ பற்றிய உண்மையான விமரிசனம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

   Delete
 14. உடல் மிகவும் பலமிழந்த நேரத்தில் உங்களைத் தாங்கிப் பிடிக்கும் கைகளை கண்டுபிடியுங்கள். எல்லோரும் பார்க்க மறுக்கும் நேரத்தில் உங்களைப் பார்க்க விரும்பும் கண்களைக் கண்டுபிடியுங்கள். உங்களின் மோசமான நிலமையிலும் உங்களை நேசிக்கும் இதயத்தினைக் கண்டுபிடியுங்கள். இவைகளை நீங்கள் கண்டுபிடித்தான் நேசம் உங்களைக் கண்டுபிடித்திருக்கும்//

  உண்மை.
  ஃப்ரூட் சாலட் எல்லாம் அருமை. நீங்கள் எடுத்த புகைபடம் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 15. இவ்வாண்டு கோடை விடுமுறை திருச்சியிலா அய்யா. மகிழ்ச்சி.
  படித்ததில் பிடித்தது அருமை அய்யா.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   Delete
 16. காவிரியில் தண்ணீர் இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது.
  மலேஷியா வாசுதேவனின் குரலில் ஒரு அற்புதமான பாடல் 'ஒரு தங்க ரதத்தில்...'
  புகைப்படம் நன்றாயிருக்கிறது.


  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 17. திருச்சியில் மெரீனா பீச்! ரசித்தேன். படித்ததில் பிடித்தது, என‌க்கும் படித்ததும் பிடித்தது! ஃப்ரூட் சாலட் இனிமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் ஜி!

   Delete
 18. காவிரியில் திடீரென்று முன்பெல்லாம்வெள்ளம் வரும் .இப்போது அறவே தண்ணீர் இல்லை என்கிறீர்கள். என்ன செய்ய. ஆனால் சென்னை வெயிலையே தாங்க முடியவில்லையே.
  திருச்சியில் மாலையிலும் சூடு இருக்கும் அல்லவா. ஆனால் வீட்டுக்குள் இருப்பதற்கு வெளியே வருவது அருமை எனத் தீர்மானித்துவிட்டர்கள் போலிருக்கிறது.
  பதிவு அருமை. படம் பிடித்துச் சொல்வது போலச் சொல்லிவிட்டீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   திருச்சியில் வெயில் கொஞ்சம் அதிகம் தான்.....

   Delete
 19. ஃப்ரூட் சால‌ட் சுவை அதிக‌ம். திருச்சி மெரீனா பீச் புது த‌கவ‌ல்.. நீங்க‌ள் எடுத்த‌ புகைப்ப‌ட‌மும் அருமை.. வாழ்த்துக‌ள் வெங்கட்!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தியானா.

   Delete
 20. கோடைக்கேற்ற குளுகுளு ப்ரூட் சாலட்.

  அந்தப் பூ ஆவாரம் பூவா சகோ... பாவாடையை விரித்திருக்கும் பார்பி டால் மாதிரியே இருக்கு. உங்க புகைப்படத் திறனுக்கு சொல்லவா வேண்டும்!

  அம்முதியோரின் சுருக்கங்களிடையே விரிந்திருக்கும் அன்பு வெகு இதம்.

  ReplyDelete
  Replies
  1. ஆவாரம் பூவா எனத் தெரியவில்லை. தில்லியின் ஒரு தோட்டத்தில் எடுத்தது சகோ.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 21. முதியோரின் படமும் வாசகமும் அருமை.

  காவிரி பொட்டல்காடு..... :(

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 22. கடைசிப்பத்தி அருமை. ரயிலில் எந்த உணவுமே வாங்கிச் சாப்பிட முடியாமல் இருக்கிறது. ராஜ்தானியிலேயே உணவு தரம் குறைவானது. கேட்டால் பதில் வருவதில்லை. புகார் எழுதிக் கொடுத்தால் வாங்கிக் கொள்வதோடு சரி! :(((( ராஜ்தானியை அறிமுகம் செய்த நாட்களில் அதில் பயணம் செய்திருக்கோம். அப்போல்லாம் உணவு நல்லாவே இருக்கும். ஷதாப்தியிலும் உணவின் தரம் அருமையா இருந்தது. அது ஒரு காலம்! இப்போ எதுவுமே நல்லா இல்லை. கல்கத்தா பயணத்தின் போது இதைச் சாப்பிட்டு ஒரு பெண்ணுக்கு சாப்பாடே விஷமாகி ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறதை தினசரியில் போட்டிருந்தாங்க.

  ReplyDelete
  Replies
  1. உண்மை. ஓரிரண்டு தினங்கள் முன்னர் கூட இப்படி கெட்டுப் போன உணவினைக் கொடுக்க நிறைய பிரச்சனைகள். ரயில் உணவு மஹா கேவலமாகவே இருக்கிறது. எங்கும் லஞ்சம்.... ஊழல். :(

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....