எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, January 30, 2012

ஓடு கண்ணா ஓடு...


தலைப்பைப் பார்த்தவுடன் படிக்காம ஓடிடாதீங்க மக்களே நிச்சயம் நல்ல விஷயம் உங்களுக்குக் கிடைக்கும். முழுதும் படிங்க!

ஒரு மாத காலம் பயிற்சி எனவும் அதில் ஐயா ரொம்ப கவனம் செலுத்துவதாகவும் கொஞ்சம் அதிகமாகவே முன்பு கொட்டியது உங்களுக்கு நினைவிருக்கும்இந்தப் பயிற்சியில் என்னுடன் பயின்ற மாணவர் மிகவும் பிரபலமான ஒருவர்ஓடியே சாதித்தவர்.   அவரைப் பற்றிய பகிர்வு தான் இது.


நம்மில் யாரையாவது ஓடச் சொன்னால் ஒரு நாளில் எத்தனை கிலோ மீட்டர் தூரம் ஓட முடியும்அதிகபட்சம் 2 முதல் 5 கி.மீ ஓடுவோமா? திரு அருண் பரத்வாஜ்ஒவ்வொரு நாளும் ஒரு நெடுந்தொலை ஓட்டம் [மாரத்தான்] அதாவது 42.195 கி.மீ சர்வ சாதாரணமாக ஓடிவிடுவார். இந்தியாவின் திட்டக் கமிஷனில் [Planning Commission] வேலை செய்யும் அருண், 41-வயது இளைஞர்.

மூன்று குழந்தைகளுக்குத் தகப்பன்மூன்றாவது குழந்தை பிறந்த பிறகு, அதாவது அவரது முப்பதாவது வயதில். தான் மாரத்தான் ஓட்டம் ஓட ஆரம்பித்தது, தனது பெண் குழந்தைக்கு ஒரு நல்ல உதாரணமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் என்று சொல்கிறார்.   அதற்கு முன்னர், சதுரங்கம், பளுதூக்குதல் என்று முயன்று பிறகுதான் ஓட்டத்தில் மனதையும் காலையும் பதித்து இருக்கிறார்அதை சோதித்துப் பார்க்க, ஹரித்வார் நகரிலிருந்துபா[B]க்பத் நகருக்கு ஒரே நாளில், அதாவது 24 மணி நேரத்தில், ஓடியே செல்வது என முடிவு செய்திருக்கிறார்.

ஹரித்வார்-பா[B]க்பத் இடையே இருக்கும் 180 கி.மீ தொலைவினை 23 மணி 25 நிமிடங்களில் கடந்து முடித்த அருண் அவர்கள் தனது வாழ்க்கையின் முக்கிய குறிக்கோளாக மாரத்தான் ஓட்டத்தினை தேர்ந்து எடுத்த பின் திரும்பிப் பார்க்கவே இல்லைபயிற்சி..பயிற்சி.. மேலும் கடினமான பயிற்சிதான்.

மாரத்தான் ஓட்டம் என்பதே கடினம் என நினைக்கும் பலர் உண்டு. ஆனால் அருண் அப்படி இல்லை.  Ultra Marathon என்று சொல்லப்படும் ஓட்டம் அதைவிட அதிக தூரத்தினை தொடர்ந்து ஓடும், அதாவது சில நாட்கள் வரை தொடர்ந்து ஓடி கடக்கும் தூரங்கள் இதில் உண்டு. இந்தியாவின் ஒரே Ultramarathon ஓடுபவர் அருண் தான்பயிற்சியாக தினம் தினம் 40 கி.மீ தூரத்தினை சர்வசாதாரணமாக ஓடிக்கொண்டிருக்கிறார்.

இவரது விடாமுயற்சியை நிச்சயம் பாராட்டியே தீர இன்னும் ஒரு காரணமும் இருக்கிறதுபடிக்கும் காலத்தில் அதாவது 8-ஆவது முதல் 10-ஆவது படிக்கும்வரை கழுத்தில் புற்று கட்டி வந்து அதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டு இப்போது முற்றிலும் குணம் பெற்றுவிட்டவர் தொடர்ந்து ஓடிக்கொண்டு, இந்தியாவிற்கு பல நெடுந்தொலை ஓட்டப்போட்டிகளில் பெருமை சேர்த்துக் கொண்டு வருகிறார்.

இதுவரை பல நாடுகளில் நடந்த Ultramarathon ஓட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுடிருக்கிறார்ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று சொல்வது போல ஒரு உதாரணம் மட்டும் சொல்ல விழைகிறேன்.Badwater Ultramarathon உலகத்தின் மிகக் கடினமான ஓட்டம். கடக்க வேண்டிய மொத்த தூரம் 217 கி.மீகடல்மட்டத்திலிருந்து 282 அடி கீழே இருக்கும் Badwater Basin [கலிஃபோர்னியா] என்ற இடத்திலிருந்து கடல் மட்டத்திலிருந்து 8360 அடி மேலிருக்கும் Whitney Portal [கடினம் தானே அதுவும் கடினமான வெயில் 49 டிகிரி இருக்கும் இடத்தில் இருந்து 10 டிகிரி குளிர் பிரதேசம் வரை] என்ற இடம் வரை ஓட வேண்டிய இந்த ஓட்டத்தில் சென்ற வருடம் 41 மணி 6 நிமிடத்தில் வெற்றிகரமாக ஓடி முடித்திருக்கிறார்அவரது இந்த ஓட்டம் பற்றிய டைரிக்குறிப்பு  இங்கே படிக்கலாம்.


அருண் அவர்களிடம் இந்த ஒரு மாதப் பயிற்சி காலத்தில் பேசிக்கொண்டிருந்தபோது அவரது விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் என்னை பிரமிக்கச் செய்ததுஅவரது உணவு முறைகளைப் பற்றிக் கேட்ட போது இன்னும் ஒரு விஷயத்தினையும் சொன்னார்அது அவர் ஒரு சைவ உணவு உண்பவர் என்பதுவெளி நாடுகளுக்கு  செல்லும்போது அங்கு கிடைக்கும் அசைவ உணவுகளை சாப்பிடாமல் அரிசி, பீன்ஸ், காய்கறிகள், பழங்கள் எனத் தேடித் தேடி சாப்பிடுவாராம்.

நிச்சயம் இந்தக் கட்டுரை படித்தபின் நம்மில் சிலருக்காவது, அடுத்த தெருவில் இருக்கும் கடைக்குச் செல்வதானால் கூட, வண்டியை நாடுவது குறைந்தால், நிச்சயம் மகிழ்ச்சி தான்.

நான் கூட இனி தினமும் கொஞ்சம் ஓட ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்நீங்க என்ன சொல்றீங்க? அட இருங்க நானும் வர்ரேன் ஓட என்கிறீர்களா?

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

டிஸ்கி: ஒரு மாத பயிற்சி வெற்றிகரமாக முடிந்தது. இப்போது திரும்பவும் அலுவலகம் செல்லப் போவதை  நினைத்தால் சற்று   வருத்தம் தான். பதிவுகள் பொருத்தவரை இனித் தொடர்ந்து வரும் என்று மகிழ்வுடன் சொல்லிக்கறேன் மக்களே :)

39 comments:

 1. நல்ல பதிவு. நானும் இப்போது ஓட ஆரம்பிக்கிறேன்.

  ReplyDelete
 2. @ வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி....

  ReplyDelete
 3. நம்மால் ஆகாதய்யா ஓட!
  ஏதோ தினம் அரைமணி நேரம் நடை!
  அவ்வளவே!
  அம் மாமனிதருக்கும் அறிமுகப் படுத்திய
  தங்களுக்கும் நன்றி!
  சா இராமாநுசம்

  ReplyDelete
 4. இவரின் விடாமுயற்சி எல்லோருக்கும் ஒரு பாடம்......... நல்ல பகிர்வு நண்பரே வாழ்த்துக்கள் தொடருங்கள்.

  ReplyDelete
 5. அட! அருமையான மனிதர் அருண்!!!! தகவல் பகிர்வுக்கு நன்றி. நானும் இனிமேல் தினமும் அரைக்கிலோமீட்டர் ஓடணும்:(

  ReplyDelete
 6. இந்தியாவின் ஒரே Ultramarathon ஓடுபவர் அருண் தான். பயிற்சியாக தினம் தினம் 40 கி.மீ தூரத்தினை சர்வசாதாரணமாக ஓடிக்கொண்டிருக்கிறார்.

  வியப்பு மனதில் ஓடுகிறது.. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 7. பாதிப்பேர் குடும்பப் பாரம் தாங்க முடியாம ஓட்டமா ஓடற காலத்தில தனது குழந்தைக்கு முன்னுதாரணமாக இருக்க ஓடுகிறார் பாருங்கள்! இங்குதான் அவர் நிற்கிறார்.

  (நானும் ஓடலாம்னு திட்டம் போட்டேன். எங்க ஏரியாவில் ‘கேட்ரினா, ராணி முகர்ஜி, பிபாஷா’ இன்னும் பலரும் கூடவே ஓடி வந்ததால் கைவிட்டு விட்டேன். (‘கேட்ரினா, ராணி முகர்ஜி, பிபாஷா’ - இதெல்லாம் எங்க ஏரியா பால் பூத்காரர் எங்க ஏரியா தெரு நாய்களுக்கு வைத்திருக்கும் பெயர்கள்)

  ReplyDelete
 8. அருணுக்கு என் வாழ்த்துக்களைச் சொல்லிடுங்க.

  நானும் ஓடலாம்னு திட்டம் போட்டேன். எங்க ஏரியாவில் ‘கேட்ரினா, ராணி முகர்ஜி, பிபாஷா’ இன்னும் பலரும் கூடவே ஓடி வந்ததால் கைவிட்டு விட்டேன். (‘கேட்ரினா, ராணி முகர்ஜி, பிபாஷா’ - இதெல்லாம் எங்க ஏரியா பால் பூத்காரர் எங்க ஏரியா தெரு நாய்களுக்கு வைத்திருக்கும் பெயர்கள்) //

  ஹா ஹா சூப்பர் கமெண்ட்.

  ReplyDelete
 9. தெரியாத நல்ல அருமையான தகவல்.பகிர்வுக்கு நன்றி சார்

  ReplyDelete
 10. கொஞ்சம் இருங்க ஓடிட்டு வரேன்..
  நல்ல பதிவு.

  ReplyDelete
 11. // ஓட ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். //

  Mrs. Venkat madam.. do you hear this.. plz. take care..

  ReplyDelete
 12. @ புலவர் சா இராமாநுசம்: //ஏதோ தினம் அரைமணி நேரம் நடை! அவ்வளவே!//

  உங்கள் வயதிற்கு அதுவே ரொம்ப நல்ல விஷயம்....

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவரே...

  ReplyDelete
 13. @ இடி முழக்கம்: தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் மிக்க நன்றி நண்பரே....

  ReplyDelete
 14. @ துளசி கோபால்: அரை கிலோ மீட்டர்? ஓடுங்க....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி டீச்சர்....

  ReplyDelete
 15. @ இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 16. @ ஈஸ்வரன்: //நானும் ஓடலாம்னு திட்டம் போட்டேன். எங்க ஏரியாவில் ‘கேட்ரினா, ராணி முகர்ஜி, பிபாஷா’ இன்னும் பலரும் கூடவே ஓடி வந்ததால் கைவிட்டு விட்டேன். // உங்க ஏரியா பால் பூத் காரர் ரொம்ப ரசனைக்காரரா இருக்காரே...

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அண்ணாச்சி....

  ReplyDelete
 17. @ புதுகைத் தென்றல்: நிச்சயம் உங்கள் வாழ்த்துகளைச் சொல்லிடறேன் சகோ....

  உங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 18. @ ஜிஜி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி காயத்ரி....

  ReplyDelete
 19. @ ரிஷபன்: //கொஞ்சம் இருங்க ஓடிட்டு வரேன்..// நீங்க ஓடிட்டு வாங்க... நான் காத்திருக்கிறேன்....

  தங்களது வருகைக்கும் சுவையான கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 20. @ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: அட நீங்க வேற.... ஏற்கனவே அவங்க பார்த்துட்டு தான் இருக்காங்க! :)))

  உங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!!!

  ReplyDelete
 21. தலைப்பும் முதல் வரியும் நல்ல நகைச்சுவை.
  அருணுக்கு வாழ்த்துக்கள். ஓடுவது எளிதேயல்ல.

  ReplyDelete
 22. படிக்க ஆச்சரியமாக இருந்தது
  ஒரு நல்ல சாதனையாளரை
  அறிமுகம் செய்தமைக்கு நன்றி
  தங்கள் மாணவரின் சாதனைகள் தொடர
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 23. சாதனை வீரருக்குப் பாராட்டுக்கள்.

  ஓட்டமா ஓடிடுறேன் :)))

  ReplyDelete
 24. @ அப்பாதுரை: //ஓடுவது எளிதேயல்ல// ஆமாம்... ரொம்ப கஷ்டம்....

  தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்து பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 25. @ ரமணி: தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி. நிச்சயம் தங்களது வாழ்த்துகளை நண்பர் அருண் அவர்களுக்குச் சொல்லி விடுகிறேன்...

  ReplyDelete
 26. @ மாதேவி: ஓட்டமா ஓடிடறேன்... எங்கே?

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 27. ஓடலாம்னு தான் பார்க்கிறேன்..ம்...ம்....

  ReplyDelete
 28. அவர் நிச்சியம் கிரேட் தான்... கொஞ்ச தூரம் நடந்தாலே டயர்ட்னு சொல்ற நம்ம மக்கள் படிக்க வேண்டிய பதிவு... நன்றி

  ReplyDelete
 29. @ ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி: சரி சார். பார்த்துட்டே இருந்துடாதீங்க... கொஞ்சம் ஓடவும் ஓடுங்க...

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 30. @ அப்பாவி தங்கமணி: நிச்சயம் க்ரேட் ஆளுதான். சர்வசாதாரணமா இருக்கார்... எந்த பந்தாவும் இல்லாம....

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அ.த.

  ReplyDelete
 31. மிக அசுர சாதனை செய்து வ‌ரும் உங்கள் நண்பர் திரு.அருண் பரத்வாஜ் நிச்சயம் அளவு கடந்த பாராட்டுக்குரியவர். நல்லதொரு பதிவு!!

  ReplyDelete
 32. திரு. அருண் ப‌ர‌த்வாஜ் அவ‌ர்க‌ளுக்கு எங்க‌ள் ம‌ன‌ம் க‌னிந்த‌ வாழ்த்துக‌ள்! அவ‌ரைப் ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல்க‌ள் நிச்ச‌ய‌ம் ந‌ம‌க்கெல்லாம் ஒரு கிரியா ஊக்கிதான் சகோ...

  ReplyDelete
 33. அருண் அவர்களுக்கு வாழ்த்துகளும்,பாராட்டுக்களும் சொல்லிடுங்க.

  ReplyDelete
 34. அவர் ஓடுவது ஒரு ஆச்சர்யம் என்றால்,அதை எடுத்துச் சொல்லத் தோன்றித்தே உங்களுக்கு.அதுக்கும் பாராட்டுகள்.
  நினைக்கவே திகாஇப்பாக இருக்கிறது.

  ReplyDelete
 35. @ மனோ சாமிநாதன்: உண்மையில் அசுர சாதனை தான் இந்த விஷயம்....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 36. @ நிலாமகள்: இப்படி திறமையானவர்கள் நம் நாட்டில் அதிகம்... ஆனால் அவர்களுக்கு வேண்டிய உதவிகள் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ....

  ReplyDelete
 37. @ திருமதி பி.எஸ்.ஸ்ரீதர்: உங்கள் பாராட்டுகளை நிச்சயம் சொல்லி விடுகிறேன் ஆச்சி...

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 38. @ வல்லி சிம்ஹன்: முதலில் அவர் பற்றி கேள்விப்பட்டதுமே இது சாத்தியமா என எனக்கும் திகைப்பாகத்தான் இருந்தது. ஆனால் தொடர்ந்த சந்திப்புகளுக்குப் பிறகு சாத்தியம் என்று புரிந்தது - அவரின் தீவிரமான உழைப்பு பார்த்த பிறகு...

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.....

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....