எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, January 17, 2012

சொல்ல வந்ததைச் சொல்லி விடுவோம்...
ஒரு கிராமத்தில் ஏழ்மையான நிலையில் ஒரு சொற்பொழிவாளர் இருந்தாராம்.  பிரசங்கங்கள் செய்து அதன் மூலம் கிடைக்கும் சொற்ப பணம் கொண்டுதான் அவரது பிழைப்பு ஓடிக்கொண்டு இருந்தது.  வாரத்தில் இரண்டொரு பிரசங்கங்கள் செய்வார். 

ஒரு நாள் பக்கத்து கிராமத்தில் மூன்று வீடுகளில் வெவ்வேறு தலைப்பில் சொற்பொழிவாற்ற அவருக்கு அழைப்பு கிடைத்தது.  மாலையில் அந்த கிராமத்திற்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்தபோது அவருடைய இளமைக்கால நண்பரொருவர் வந்துவிட்டார். “அடடே, என்ன விஷயம்…  திடீரென வந்திருக்கிறாயே?” என்று வந்தவரைக்  கேட்க, அவரோ ”உங்களுடன் சில விஷயங்கள் பேசலாம் என்பதற்காக வந்தேன்" என்றாராம்.

”அடடா,  இன்று எனக்கு மூன்று பிரசங்கங்கள் இருக்கின்றன.  நான் சென்று வரும் வரை, முடிந்தால் நீங்கள் இங்கே காத்திருங்களேன்.” என்றார் இவர்.

“உங்கள் பிரசங்கம் பற்றி நானும் கேள்விப் பட்டிருக்கிறேன், நேரில் கேட்க இன்று வாய்ப்பு அமைந்திருக்கிறது. அதனால் நானும் உங்களுடன் வருகிறேன்” என்று சொல்லிவிட்டார் அவர். 

பார்த்தார் பிரசங்கி… ”என்னடா இது, தானும் வருகிறேன் எனச் சொல்லி விட்டாரே…  இவர் அணிந்திருக்கும் சட்டை ரொம்பவும் அசிங்கமாக, ஆங்காங்கே கிழிசலுடன் இருக்கிறதே, இவரை நம் நண்பர் என்று அறிமுகம் செய்தால் நன்றாக இருக்காதே.  என்ன செய்யலாம்?” என யோசித்து, அவருடைய சட்டைகளில் ஒன்றை நண்பருக்குக் கொடுத்து அதை அணிந்து கொண்டு வரச் சொன்னார்.  மறுத்த நண்பரை வற்புறுத்தி அணிய வைத்தபின் பார்த்தால், பிரசங்கிக்கு ஆச்சரியம். “என்னடா இது, நான் கொடுத்த சட்டையைப் போட்டபின், என்னை விட அழகாக, அம்சமாக இருக்கிறானே இவன்!” என்று நினைத்தார்..  இருப்பினும் ஒன்றும் சொல்லவில்லை. பக்கத்துக்கு கிராமத்திற்குக் கிளம்பினார்கள்.
முதல் வீட்டில் பிரசங்க ஆரம்பத்திலேயே தன்னுடைய நண்பரை இப்படி அறிமுகம் செய்தார் – “இவர் என்னுடைய இளமைக்கால நண்பர். நிறைய புத்தகங்கள் எழுதியிருக்கிறார்... அதைவிட எண்ணிலடங்கா புத்தகங்கள் படித்திருக்கிறார்…. நல்ல அறிவாளி…'' என்றெல்லாம் சொல்லிவிட்டு கடைசியில், ’'இவர் போட்டிருக்கும் சட்டை மட்டும் என்னுடையது,’” என்றாராம்.  சொன்னபின்  நண்பருக்கு மட்டுமல்ல அவருக்கும் அதிர்ச்சி,  இப்படி சொல்லிவிட்டோமே என்று.  நண்பரிடம் தனிமையில் மன்னிப்பு கேட்டுவிட்டு, அடுத்த வீட்டிற்குச் சென்றார்கள்.

இரண்டாம் வீடு, அங்கேயும் நண்பரைப் பற்றி முதல் வீட்டில் பேசியவாறே அறிமுகப்படுத்திவிட்டு கடைசியில், '’இவர் போட்டிருக்கும் சட்டை பற்றி எனக்குத் தெரியாது,’” என்றாராம்.  நண்பருக்கோ தர்மசங்கடமாகிவிட்டது நிலைமை.  ''நான் உங்கள் வீட்டிற்குச் சென்று காத்திருக்கிறேன் – நீங்கள் உங்களது கடைசி பிரசங்கத்தினை முடித்து விட்டு வாருங்கள்,'' எனச் சொல்ல, பிரசங்கி, ”இல்லை இல்லை, நான் வாக்குறுதி அளிக்கிறேன் – மூன்றாவது வீட்டில் இதுபோல நடக்காது,” என்று சொல்லி அழைத்துச் சென்றார். 

மூன்றாவது வீடு – மீண்டும் அதே அறிமுகத்தை சொல்லி, கடைசியில், '’இவர் போட்டிருக்கும் சட்டை பற்றி ஒன்றும் சொல்ல மாட்டேன் என வாக்குறுதி அளித்திருக்கிறேன்!’”  என்று சொல்ல நண்பரோ ஒன்றும் பேசாமல் அங்கிருந்து திரும்பி சென்று விட்டார்.

பிறகுதான் பிரசங்கிக்குத் தோன்றியதாம் – சட்டையைக் கொடுத்து அவர் போட்டுக்கொண்டதுமே நண்பரிடம், 'நீ இப்போ என்னை விட அழகாக, அம்சமாக இருக்கிறாய்!' என்று சொல்லியிருந்தால், அவரும் சட்டையை கழட்டியிருப்பார். தான் அப்படி செய்யாததால்  பிரசங்கத்துக்குரிய விஷயத்தினை விட்டுவிட்டு தன் மனம் முழுதும் சட்டையிலேயே இருந்துவிட்டதே என்று  எண்ணி வேதனைப்பட்டாராம்…..

இது எப்படி இருக்கு!  அதுனால எதையும் மனசுல வச்சிக்காதீங்க!  சொல்ல வந்ததைச் சொல்லிடுங்க...  இல்லைன்னா அநாவசியமா கஷ்டம்தான்…. 

மீண்டும் சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்.

60 comments:

 1. @ எல்.கே.: இங்கே வட இந்தியாவில் பல காலங்களாகச் சொல்லும் ஒரு கதை இது.... படையப்பாவில் சொல்லப்பட்ட ஜோக் இதை வைத்து வந்ததா என்பது எனக்குத் தெரியாது கார்த்தி!

  தங்களது உடனடி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கார்த்திக்....

  ReplyDelete
 2. செந்தில் பெண்பார்க்க ரஜினியின் உடைகளை அணிந்து கொண்டு செல்லும்போது, ரஜினி தன் எதிரே வருபவர்களிடமெல்லாம் சொல்வாரே அதே ஜோக் போலவே உள்ளது, இதுவும்.

  ReplyDelete
 3. @ வை. கோபாலகிருஷ்ணன்: இது வட இந்தியாவில் சொல்லப்படும் கதை.... சொல்ல வந்த நல்ல விஷயம் மாறிப்போய் ஜோக் ஆக மாறிவிட்டது படையப்பா படத்தில்.....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி....

  ReplyDelete
 4. நீங்கள் சொல்ல வந்த விஷயம் சரி தான் வெங்கட் !!

  ReplyDelete
 5. எதையும் மனசுல வச்சிக்காதீங்க! சொல்ல வந்ததைச் சொல்லிடுங்க... இல்லைன்னா அநாவசியமா கஷ்டம்தான்….

  nice

  ReplyDelete
 6. //அதுனால எதையும் மனசுல வச்சிக்காதீங்க! சொல்ல வந்ததைச் சொல்லிடுங்க... இல்லைன்னா அநாவசியமா கஷ்டம்தான்….//

  அதென்னவோ உண்மைதான். ஆனா, பக்குவமா சொல்லத் தெரியலைன்னா இன்னும் கஷ்டம் :-))

  ReplyDelete
 7. மனிதனுடைய மனம் எப்படியெல்லாம் யோசிக்கிறது?

  சொல்ல நினைப்பதையெல்லாம் சொல்லிவிட முடியாது. சொல்லவும் கூடாது. அதனால்தான் பெரியவர்கள் "இடம், பொருள், ஏவல்" அறிந்து பேசவேண்டும் என்று சொல்லிப் போயிருக்கிறார்கள்.

  ReplyDelete
 8. சிந்திக்கவும் மற்றும் சிரிக்கவும் செய்கிறது.
  நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 9. சட்டையை 'சட்டை'யே செய்யக்கூடாதுன்றதுதான் படிப்பினை போல!!!!!!

  இதுலே ஒரு சின்ன விஷயம்கூட இருக்கு. இந்த உடல் நமக்கு ஒரு சட்டை மாதிரி.

  சட்டையைக் கழட்டிப்போடும் லகுவில் ஆன்மா பயணப்படத் தயாரா இருக்கணுமுன்னும் சொல்லுவாங்க 'ஞானி'கள்!

  ReplyDelete
 10. பாஸ் இதைத்தானே படையப்பா படத்தில் ஜோக்காக வைத்திருப்பார்கள்

  த.ம.6

  ReplyDelete
 11. எதையும் மனசுல வச்சிக்காதீங்க! சொல்ல வந்ததைச் சொல்லிடுங்க... இல்லைன்னா அநாவசியமா கஷ்டம்தான்….

  சொல்ல்வந்ததையும் சரியா சொல்ல்த்தெரிந்திருக்கவேனுமே.

  ReplyDelete
 12. அதுனால எதையும் மனசுல வச்சிக்காதீங்க! சொல்ல வந்ததைச் சொல்லிடுங்க... இல்லைன்னா அநாவசியமா கஷ்டம்தான்….//

  சில நேரம் சொன்னலும் கஷ்டம் தான்.
  பிறர் மனம் நோகாமல் நம் மனதில் உள்ளதை சொல்வது ஒரு கலைதான்.

  ReplyDelete
 13. கடைசி ஓட்டு என்னுது.

  ReplyDelete
 14. பிரசங்கி அதிகமாக பேசி அதிகப்பிரசங்கி ஆகிவிட்டார்.

  ReplyDelete
 15. :) நினைச்சதை சரியாக தெரியப்படுத்தத்தெரிஞ்சா கஷ்டமே இல்ல..தூக்கி செமக்கவேண்டாம்..

  ReplyDelete
 16. சில இடங்களில் சொல்ல வந்ததையும், சொல்ல நினைத்ததையும் சொன்னோம்னு வச்சுக்குங்க,கேட்டவங்க திருப்பிச் சொன்னதையும், நம்ம முதுகில் பின்னினதையும் வெளியே சொல்ல முடியாமல் போகவும் வாய்ப்புண்டு. என்ன நான் சொல்றது சரிதானே!

  ReplyDelete
 17. சிந்தனையை தூண்டும் அழகிய நகைச்சுவைப் பதிவு நண்பரே.

  த.ம.8

  ReplyDelete
 18. நல்லவேளை.. நான் உங்கள் வீட்டிக்கு வந்து பொது நல்ல (!) சட்டை போட்டிருந்தேன்.

  :-)

  ReplyDelete
 19. அருமையான கருத்துள்ள கதையை கவிதையாக சொன்ன விதம் மனதை கவர்ந்தது நண்பரே.......

  ReplyDelete
 20. சொல்லிடுவோம் :))))

  ReplyDelete
 21. எதையும் மனசுல வச்சிக்காதீங்க...//சிந்தனையை தூண்டும் நகைச்சுவைப் பதிவு நண்பரே...

  ReplyDelete
 22. @ மோகன் குமார்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மோகன்.....

  ReplyDelete
 23. @ இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி....

  ReplyDelete
 24. @ அமைதிச்சாரல்: //ஆனா, பக்குவமா சொல்லத் தெரியலைன்னா இன்னும் கஷ்டம் :-))// சரியாச் சொன்னீங்க....

  தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சாரல்...

  ReplyDelete
 25. @ பழனி. கந்தசாமி: //மனிதனுடைய மனம் எப்படியெல்லாம் யோசிக்கிறது?// இதற்கு எல்லையே இல்லையே.... :)

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 26. @ புலவர் சா. இராமாநுசம்: தங்களது தொடர்ந்த வருகைக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி புலவரே....

  ReplyDelete
 27. @ துளசி கோபால்: //சட்டையை 'சட்டை'யே செய்யக்கூடாதுன்றதுதான் படிப்பினை போல!!!!!!

  இதுலே ஒரு சின்ன விஷயம்கூட இருக்கு. இந்த உடல் நமக்கு ஒரு சட்டை மாதிரி.

  சட்டையைக் கழட்டிப்போடும் லகுவில் ஆன்மா பயணப்படத் தயாரா இருக்கணுமுன்னும் சொல்லுவாங்க 'ஞானி'கள்!// மிகவும் சரியான தத்துவம்....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 28. @ K.s.s. Rajh: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே....

  ReplyDelete
 29. @ லக்ஷ்மி: //சொல்லவந்ததையும் சரியா சொல்லத்தெரிந்திருக்கவேணுமே.// அதானே முக்கியம்....

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிம்மா.....

  ReplyDelete
 30. @ கோமதி அரசு: //பிறர் மனம் நோகாமல் நம் மனதில் உள்ளதை சொல்வது ஒரு கலைதான்.// ஆமாம் அம்மா...

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 31. @ செந்தழல் ரவி: தங்களது முதல் வருகைக்கும் தமிழ்மண வாக்கிற்கும் மிக்க நன்றி நண்பரே....

  ReplyDelete
 32. @ ராம்வி: //பிரசங்கி அதிகமாக பேசி அதிகப்பிரசங்கி ஆகிவிட்டார்.// :) உண்மை....

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.....

  ReplyDelete
 33. @ முத்துலெட்சுமி: // நினைச்சதை சரியாக தெரியப்படுத்தத்தெரிஞ்சா கஷ்டமே இல்ல..தூக்கி செமக்கவேண்டாம்..// உண்மை தான் முத்துலெட்சுமி....

  உங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி.....

  ReplyDelete
 34. @ ஈஸ்வரன்: //நம்ம முதுகில் பின்னினதையும் வெளியே சொல்ல முடியாமல் போகவும் வாய்ப்புண்டு. என்ன நான் சொல்றது சரிதானே!// என்ன அண்ணாச்சி எதாவது வாங்கிட்டீங்களா அப்படி :)

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அண்ணாச்சி.....

  ReplyDelete
 35. @ மகேந்திரன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.....

  ReplyDelete
 36. @ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: //நல்லவேளை.. நான் உங்கள் வீட்டிக்கு வந்து பொது நல்ல (!) சட்டை போட்டிருந்தேன்.//

  நல்லவேளை.... நான் பார்க்கவேயில்லை :))))

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதவன்....

  ReplyDelete
 37. @ A.R. ராஜகோபாலன்:

  //அருமையான கருத்துள்ள கதையை கவிதையாக சொன்ன விதம் மனதை கவர்ந்தது நண்பரே.......//

  தங்களது வருகைக்கும் தொடர்ந்த ஆதரவிற்கும் மிக்க நன்றி நண்பரே....

  ReplyDelete
 38. @ மாதேவி: சரி...

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ....

  ReplyDelete
 39. @ ரெவெரி: தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே....

  ReplyDelete
 40. நண்பருக்கு வணக்கம்!

  மனம் திறந்து பேச வேண்டும்! மனதிற் பட்டதையெல்லாம் பேசக் கூடாது-சிலர் புரிந்துகொள்வர்-பலர் பிரிந்துசெல்வர்

  எப்போதோ படித்தது நினைவிற்கு வருகிறது!

  நல்ல பதிவு! வாழ்த்துக்கள்!

  -காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
 41. @ கே. பி. ஜனா: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 42. @ சேஷாத்ரி.ஈ.எஸ்.: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே....

  ReplyDelete
 43. @ ஆர்.வி.எஸ்.: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மன்னை மைனரே...

  ReplyDelete
 44. எதையும் சட்டை செய்யக்கூடாது..

  ReplyDelete
 45. @ ரிஷபன்: //எதையும் சட்டை செய்யக்கூடாது...// அதான்...

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்.

  ReplyDelete
 46. சுவாரசியமான குட்டிக்கதை. பயணக் கட்டுரைப் பதிவுகளினூடே நல்ல இடைவேளை வெங்கட்.

  ReplyDelete
 47. அதுனால எதையும் மனசுல வச்சிக்காதீங்க! சொல்ல வந்ததைச் சொல்லிடுங்க... இல்லைன்னா அநாவசியமா கஷ்டம்தான்….
  >>>
  எல்லாவற்றையும் சொல்லிவிட முடியாது சகோ

  ReplyDelete
 48. @ அப்பாதுரை: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்....

  ரிஷபன் - அவரது பகிர்வும், கருத்தும் எப்போதுமே அருமைதான்.....

  ReplyDelete
 49. @ ராஜி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி ராஜி...

  ReplyDelete
 50. மிகச் சரி கலர் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு
  நிறங்கள் குறித்து ஆராய்தல் போல
  மனதில் ஒரு போராட்டத்தை வைத்துக் கொண்டு சொல்ல நினைப்பதை
  மிகச் சரியாக சொல்ல முடிவது சிரமமே
  அருமையான பதிவு
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 51. @ ரமணி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் மிக்க நன்றி....

  ReplyDelete
 52. அருமை நண்பரே வாழ்த்துகள்.

  ReplyDelete
 53. எங்கேயோ பார்த்த வாசனை வருதே

  ReplyDelete
 54. @ தனசேகரன்.எஸ்.: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 55. @ ராஜன்: தங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராஜன்....

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....