எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, April 6, 2016

ஹாலிடே நியூஸ் – சுற்றுலாவின் புதிய தேடல்


தமிழில் மாத இதழ்கள் நிறையவே இருக்கின்றன. பெரும்பாலானவை சினிமாவிற்கே நேர்ந்து விடப்பட்ட நிலையை நம்மால் காண முடிகிறது. பெண்களுக்கு என்றே பல மாத/வார இதழ்கள் வந்து கொண்டிருக்கின்றன. புதிது புதிதாய் புத்தகங்கள் வந்தாலும் தொடர்ந்து வரும் புத்தகங்கள், மக்கள் மனதில் இடம் பிடித்த புத்தகங்கள் மிகக் குறைவே. சுற்றுலா, பயணம் போன்ற விஷயங்கள் மட்டுமே இடம் பெரும் மாத இதழ் இருந்தால், அதுவும் நம் தாய் மொழியாம் தமிழில்  இருந்தால் எப்படி இருக்கும் என நம்மில் பலரும், குறிப்பாக சுற்றுலாப்பிரியர்களாக இருக்கும் என்போன்றவர்களும் நினைப்பதுண்டு.

ஆங்கிலத்தில் National Geographic Traveller India, Lonely Planet Magazine India, Outlook Traveller என சுற்றுலா சம்பந்தப்பட்ட ஆங்கில மாத இதழ்கள் இருந்தாலும், தமிழில் இப்படிப்பட்ட இதழ்கள் இல்லவே இல்லை என ஒரு குறை எனக்குண்டு.  அந்தக் குறையை மதுரையில் இருக்கும் வளர்தமிழ் பப்ளிகேஷன்ஸ் போக்கியிருக்கிறது. 


படம்:  நண்பர் சுரேஷ் குமார் அவர்களின் வலைப்பூவிலிருந்து...

இப்படி இருக்கையில் சுற்றுலாவுக்கென்றே ஒரு மாத இதழ், அதுவும் கண்களைக் கவரும் வண்ணப் படங்களுடன் பத்திரிகை வெளி வரும் பட்சத்தில், அதைப் படிப்பவர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி கிடைக்கும். ஹாலிடே நியூஸ் எனும் மாத இதழ் இப்பணியை கடந்த மூன்று வருடங்களாகச் செய்து வந்திருக்கிறது.  பெரிய பெரிய பத்திரிகைகளுக்கிடையே போட்டி போடுவது, ஏஜெண்டுகள் செய்யும் சதி போன்ற காரணங்களால் இதழினை நடத்த முடியாது போக சில மாதங்களுக்கு முன்னர் பத்திரிகை வெளி வருவது நின்றது.

இந்த மாத இதழ் பற்றி நான் முதலில் கேள்விப்பட்டது/படித்தது நண்பர் “கடல் பயணங்கள்” சுரேஷ் அவர்களின் வலைப்பூவில் தான். அவரது பயணக் கட்டுரைகள் “ஹாலிடே நியூஸ்” மாத இதழில் அக்டோபர் 2014 இதழிலிருந்து துவங்கியது என்பதை அவரது பதிவில் படித்த போதிலிருந்தே இதழை படிக்க வேண்டுமென்ற ஆசை உண்டு.  தமிழகத்தினை விட்டு தொலைவில், தலைநகர் தில்லியில், இருப்பதில் இருக்கும் சில குறைபாடுகளில் தமிழ் புத்தகங்கள் வாங்குவதில், தொடர்ந்து கிடைப்பதில் இருக்கும் சிக்கல்களும் ஒன்று. ஹாலிடே நியூஸ் படிக்க ஆசை இருந்தும் படிக்க முடியவில்லை. 


படம்:  நண்பர் செந்தில்குமார் அவர்களின் வலைப்பூவிலிருந்து...

சமீபத்தில் “ஹாலிடே நியூஸ்” மாத இதழின் இணை ஆசிரியர் நண்பர் “கூட்டாஞ்சோறு” செந்தில்குமார் அவர்களிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது.  “ஹாலிடே நியூஸ்” மாத இதழ் இந்த ஏப்ரல் மாதத்திலிருந்து மீண்டும் புத்தம்புது பொலிவோடு வெளி வர இருக்கிறது என்பது தான் அந்த மின்னஞ்சல் சொன்ன செய்தி! அதைப் படித்த போது எனக்கு மகிழ்ச்சி.  இம்முறை எப்படியும் இந்தப் புத்தகத்தினை படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். 


படம்:  நண்பர் செந்தில்குமார் அவர்களின் வலைப்பூவிலிருந்து...

சென்ற வாரத்தில் எனது தில்லி முகவரிக்கு புத்தகம் வந்து சேர்ந்தது.  அனுப்பி வைத்த நண்பர் செந்தில் குமார் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி.


படம்:  நண்பர் செந்தில்குமார் அவர்களின் வலைப்பூவிலிருந்து...

அட்டை 2 அட்டை வண்ணப் படங்கள் புத்தகத்தினைப் படிக்கும் நம் கண்களைக் கவர்கின்றன.  ஒரு பக்கத்தில் குளு குளு மணாலிக்கு அழைத்துச் சென்றால், இன்னுமொரு பக்கத்தில் வட கிழக்கு மாநிலத்தின் ஷில்லாங் நகரின் சிறப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள். உத்திராகண்ட் மாநிலத்தின் ஜிம் கார்பெட், சின்ன பெங்குயின்களின் செல்ல நடை, பாபநாசம் – பாவம் போக்கும் தலங்கள், பட்டதக்கல் – பார்க்க திகட்டாத கலைக்கோவில்கள் என ஒவ்வொரு கட்டுரையும் மனதைக் கவரும் விதமாக எழுதப்பட்டிருக்கிறன. அவற்றுக்கான படங்களும் அற்புதமாக வந்திருக்கிறன.  இந்தியா மட்டுமல்லாது வெளி நாடுகளில் இருக்கும் சுற்றுலாத் தலங்கள், கண்கவர் இடங்கள் பற்றிய தகவல்களும் உண்டு. 


 படம்:  நண்பர் செந்தில்குமார் அவர்களின் வலைப்பூவிலிருந்து...

ஹாலிடே நியூஸ் மாத இதழின் விலை ரூபாய் 50 மட்டுமே.  எப்படி இந்த இதழை உங்கள் இல்லம் தேடி வர வைப்பது, சந்தா உண்டா? போன்ற கேள்விகளுக்கு பதில் வேண்டுமெனில் 94435-71391 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.  உங்கள் பங்களிப்புகளையும் அனுப்பி வைக்கலாம்.  எனக்கு பயணக் கட்டுரை எழுதுவது முடியாத விஷயம், ஆனால் எங்கள் படங்களை மட்டும் அனுப்பி வைக்கிறோம் என்பவர்களும் அப்படங்களை myholidayphoto@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் புத்தகத்தில் அதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் ஒரு பக்கத்தில் வெளியிடப்படும்.


படம்:  நண்பர் செந்தில்குமார் அவர்களின் வலைப்பூவிலிருந்து...


தமிழில் இது மாதிரி சுற்றுலாவிற்கு என்றே ஒரு இதழ் வருவது மிகச் சிறப்பான விஷயம்.  தொடர்ந்து இந்த இதழ் வெளிவருவது வாசகர்களின் கையில்.  எனவே இந்த மாத இதழ் தொடர்ந்து வெளிவர நாமும் உதவுவோம்.  சுற்றுலா தகவல்களைப் படித்து மகிழ்வோம். 


படம்:  நண்பர் செந்தில்குமார் அவர்களின் வலைப்பூவிலிருந்து...

கடைசியாக ஒரு விஷயம் – அடியேனின் ஒரு கட்டுரையும் ஏப்ரல் மாத “ஹாலிடே நியூஸ்” இதழின் 54-55 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது. என்னுடைய வலைப்பூவில் சில நாட்களுக்கு முன்னர் எழுதிய “முதுகுச் சுமையோடு ஒரு பயணம் கட்டுரை தான்!  வரும் மாத இதழ்களிலும் என்னுடைய கட்டுரை வெளி வரலாம்….  என்னுடைய கட்டுரையை வெளியிட்ட மாத இதழ் ஆசிரியர்களுக்கு, குறிப்பாக நண்பர் செந்தில்குமார் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றி.

மாத இதழ் வாங்கிப் படித்து விட்டு உங்கள் கருத்துகளையும் சொல்லுங்கள் நண்பர்களே!

அடுத்த பதிவில் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி. 

34 comments:

 1. ’ஹாலிடே நியூஸ்’ மிகத்தரம் வாய்ந்த இதழாக உள்ளது. இதழின் வடிவமைப்பும், படங்களும் சும்மா ஜொலிக்கின்றன.

  தங்கள் கட்டுரை இடம் பெற்றுள்ள ஏப்ரல் 2016 இதழ் எனக்கும் அதன் இணை ஆசிரியரும் ’கூட்டாஞ்சோறு’ வலைப்பதிவருமான மதுரை திரு. எஸ்.பி. செந்தில்குமார் அவர்களால் கொடுக்கப்பட்டுள்ளது.

  பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள், ஜி.

  சுற்றுலாப் பிரியரான தங்களுக்கு மிகவும் ஏற்ற இதழ். தொடர்ந்து அதில் தங்கள் பயணக் கட்டுரைகள் இடம் பெறவும் வாழ்த்துகள். அன்புடன் VGK

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 2. நல்ல செய்தி. வாழ்த்துக்கள் ஹாலிடே நியூஸ் மாத இதழுக்கு.
  உங்கள் கட்டுரை அதில் இடம்பெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்.
  பத்திரிக்கை ஆசிரியர் செந்தில்குமார் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 3. நல்ல தகவல்.. சுற்றுலா ஆர்வலர்களுக்கு பயனுள்ள இதழ்..
  நிறைய செய்திகளை அறிந்து கொள்ள முடியும்..

  தங்களுடைய பதிவு கண்டு மகிழ்ச்சி..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 4. நல்லதொரு அறிமுகம். வெளியாகியிருக்கும் தங்கள் படைப்புக்கும் வெளிவர இருப்பவற்றுக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 5. வாழ்த்துக்கள். உங்கள் சுற்றுலாப் பயணம் தொடரட்டும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.....

   Delete
 6. /கடைசியாக ஒரு விஷயம் – அடியேனின் ஒரு கட்டுரையும் ஏப்ரல் மாத “ஹாலிடே நியூஸ்” இதழின் 54-55 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது. என்னுடைய வலைப்பூவில் சில நாட்களுக்கு முன்னர் எழுதிய “முதுகுச் சுமையோடு ஒரு பயணம் கட்டுரை தான்! வரும் மாத இதழ்களிலும் என்னுடைய கட்டுரை வெளிவரலாம்/ இத இதத்தான் எதிர்பார்த்தேன் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 7. Thank you so much for remembering me ! Yes, monthly I am writing a page on this with my wife's name. Australia Penguin parade mentioned above was me !!

  ReplyDelete
  Replies
  1. பெங்குயின் பற்றிய கட்டுரை உங்களுடையது என தெரியும் சுரேஷ். பதிவில் எழுத விடுபட்டுவிட்டது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ் குமார்.

   Delete
 8. மிக்க நன்றி நண்பரே,
  எங்களின் சுற்றுலா மாத இதழ் பற்றி அருமையான ஒரு பதிவை தந்ததற்கு..
  நண்பர் சுரேஷ்குமாரின் முதல் கட்டுரை வெளிவந்த இதழையும், தங்களின் முதல் கட்டுரை வெளிவந்த இதழையும் குறிப்பிட்டது மிக அருமை. இதழ் குறித்த தங்களின் விமர்சனமும் அருமை. தங்கள் பதிவின் மூலம் இதழ் பற்றிய தகவல் பலரையும் சென்றடையும் என்பதில் சந்தேகமில்லை.
  மீண்டும் எனது சார்பாகவும் எங்கள் நிறுவனம் சார்பாகவும் தங்களுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   Delete
 9. வாழ்த்துகள் ஜி தொடரட்டும் தங்களது சாதனைகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 10. மகிழ்வூட்டும் செய்தி
  தமிழில் ஒரு இதழ் பயணத்திற்காக
  இல்லாதிருந்தது ஒரு குறைதான்
  அவசியம் வாங்கத் துவங்கிவிடுவேன்
  அருமையாக அறிமுகம் செய்துள்ளீர்கள்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 11. ஆங்கில இதழ்களுக்கு இணையான தமிழ் பயண இதழ். உங்களது கருத்துக்களை நன்றாகவே சொல்லி இருந்தீர்கள். ‘ஹாலிடே நியூஸ்’ தொடர்ந்து பயணம் செய்திட வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   Delete
 12. நானும் படித்து ரசித்தேன் ஜி ,அதில் உங்கள் பதிவையும் :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 13. அருமையான இதழ் குறித்த ஒரு சிறந்த பதிவு! நண்பர் செந்தில் குமார் முந்தைய சந்திப்பில் இது பற்றிச் சொல்லியிருந்தார். விரைவில் கொண்டு வர இருக்கின்றோம் மீண்டும் என்று. அப்போதைய இதழும் கொடுத்தார். அட்டகாசமாக இருந்தது. நானும் மகனும் பயணம் மேற்கொள்வதில் எந்தப் பயணமும் அதுவும் சுற்றிப்பார்ப்பதில் மிகுந்த ஆர்வமுள்ளவர்கள் என்பதால் நானும் இதழ் பெறுவதாக இருக்கிறேன்.

  வாழ்த்துகள் செந்தில்!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete

 14. வாழ்த்துக்கள் உங்களுக்கும் திரு செந்தில்குமாருக்கும்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 15. பயனுள்ள இதழ்தான்.செந்தில்குமார் அவர்கள் வலை தளத்திலும் படித்தேன். உங்கள் கட்டுரைகளையும் அதில் எழுதுங்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 16. துளசி சார் தளத்திலும் படித்தேன்...
  அருமையான பகிர்வு அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 17. ஹாலிடே நியூஸ் இதழுக்கு என் தங்கை வீட்டில் சந்தாதாரர். இதன் மனதை மயக்கும் வடிவமைப்பு தமிழ் சிற்றதழ் வடிவமைப்புகளில் ஒரு மைல்கல். ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கையில் இரசனையின் முக்கியத்துவத்தைச் சொல்லும் இதழ்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜ்குமார் ரவி.

   என் வலைப்பூவிற்கு தங்களது முதல் வருகை என நினைக்கிறேன்..... மிக்க மகிழ்ச்சி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....