எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, October 29, 2017

புகைப்பட உலா – நவராத்ரி கொலுநீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த ஞாயிறில் ஒரு புகைப்பட உலா. நவராத்ரி சமயத்தில் நான் சென்ற வீடு/கோவில்களில் வைத்திருந்த கொலு பொம்மைகளை படம் எடுத்து பகிர்ந்து கொள்வதுண்டு. [புகைப்படம் எடுக்கச் செல்கிறேன் என்ற பெயரில் சுண்டல் சாப்பிடச் செல்வேன் என்று யாரும் தப்பாக புரிந்து கொள்ள வேண்டாம்! – யார்ப்பா அது, அது தான் உண்மை என்று குரல் கொடுப்பது!]. இந்த ஆண்டு நவராத்ரி சமயத்தில் தமிழகத்தில் தான் இருந்தேன் என்றாலும், கொலு பார்ப்பதற்கென்று சென்ற இடங்கள் ரொம்பவும் குறைவு – In Fact, ஒரே ஒரு வீட்டிற்குத் தான் என்னை அழைத்துச் சென்றார்கள்!! What a pity! வீட்டிலேயே கொலு வைத்திருந்ததால் அதற்கே நேரம் சரியாக இருந்தது [தினம் சுண்டல் உங்க கைவண்ணம் தானே என மதுரைத் தமிழனும், சகோதரி ராஜியும் கேட்டால் பதிலாக, நானில்லை என்று தான் சொல்லுவேன்!]


ஆனாலும் நடுநடுவே சில கோவில்கள்/கடைகள் சென்ற போது எடுத்த கொலு படங்கள் இந்த ஞாயிறில் புகைப்படப் பகிர்வாக! திருவரங்கம் கோவிலிலும் கொலு வைத்திருந்தார்கள். நானும் வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்தேன் – அவற்றை தனியாக பகிர்ந்து கொள்கிறேன்! [எடுக்கும்போதே, “யார் நீங்க, எதுக்கு எடுக்கறீங்க?” என்ற கேள்விகள் வந்தன? ஒரு சிலர் புகைப்படங்கள் எடுத்து, உரிமை கொண்டாடுவதாகச் சொன்னார் ஒருவர்.] அப்படங்கள் தனியாகவே வெளியிடுகிறேன்! இப்போதைக்கு எங்கள் வீட்டு கொலு படங்களும், திருச்சி மலைக்கோட்டை, மலைவாசலில் உள்ள பிள்ளையார் கோவில், திருவையாறு கோவில்களில் வைத்திருந்த கொலுவும் இப்பதிவில் இருக்கிறது.


எங்கள் வீட்டு கொலு.....


எங்கள் வீட்டில் இந்த வருட புது வரவு!.....


எங்கள் வீட்டு கொலு - மிகவும் பழமையான பொம்மைகள் - பெரியம்மா வீட்டிலிருந்து! இன்னமும் மினுக்கு குறையாமல்.....


எங்கள் வீட்டு கொலு - Heavy Weight மரப்பாச்சி பொம்மை - இதுவும் பெரியம்மா கொடுத்தது.....


திருவையாறு கோவிலில் வைத்திருந்த கொலு....


திருவையாறு கோவிலில் வைத்திருந்த கொலு....
இன்னுமொரு பக்கத்தில்!


ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பத்ம புஷ்கரிணி சேவை...
திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில்...நவநரசிம்மர் செட் பொம்மைகளில் இரண்டு மட்டும்....திருச்சி மலைவாசல் பிள்ளையார் கோவிலில் வைத்திருந்த கொலு....


நண்பர் வீட்டில் வைத்திருந்த கொலு....
இந்த வருடம் பார்த்த ஒரே ஒரு வீட்டு கொலு!விற்பனைக்கு - அஷ்ட லக்ஷ்மி பொம்மைகள்!விற்பனைக்கு - விஷ்ணுவின் விராட ரூபம்....


விற்பனைக்கு - ஆண்டாள்-ரங்கமன்னார் மண் பொம்மை

இந்த வருடம் கொலு பொம்மை புதியதாக வாங்கியது குறைவு. செட்டாக வாங்கலாம் எனக் கேட்டால் விலை நிறையவே சொல்கிறார்கள்! அவர்களுக்கு இப்போது மட்டும் தானே பிசினஸ்! அவர்களைச் சொல்லி குற்றமில்லை! நான் தமிழகம் செல்வதற்கு முன்னரே சாஸ்திரத்திற்கு ஒரு புதிய பொம்மை – ஆண்டாள்-ரங்கமன்னார் [பீங்கானில்] வாங்கி வைத்திருந்தார் இல்லத்தரசி! அதனால் வேறு பொம்மைகள் வாங்கவில்லை. தமிழக அரசின் ஒரு கடையில் “நவ நரசிம்மர்” பொம்மைகள் செட் வைத்திருந்தார்கள். ஆர்வக் கோளாறில் விசாரிக்க, 4000 ரூபாய், 10% தள்ளுபடி போக, 3600/- ரூபாய் என்று சொன்னார்! நல்லா இருக்கு எனச் சொல்லி, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு நகர்ந்து விட்டேன்!

திருவரங்கத்திலேயே இருக்கும் ஒரு கடையில் நிறைய பொம்மைகள் – அங்கேயும் விலை குறைவாகச் சொன்னாலும், பொம்மைகளின் முகத்தில் பொலிவு இல்லை! சரி இந்த வருடம் இவ்வளவு பொம்மை போதும், அடுத்த வருடம் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். ராஜகோபுரம் அருகே ஒரு கடை – விருத்தாஜலம் நகரிலிருந்து இங்கே வந்து கடை வைத்திருந்தார்கள். அவர்களிடம் மண் விளக்குகளும் அனைத்து காய்கறிகளும் பொம்மைகளாகக் கிடைத்தன. அவர்களிடமிருந்து சில காய்கறிகளின் பொம்மைகள் வாங்கினேன் – ஒவ்வொரு காயும் அசத்தலாக இருந்தது – ஒவ்வொரு காய்கறியும் விலை ஐந்து ரூபாய் மட்டும்! நான் வாங்கிக் கொண்டிருந்தபோது, ஒரு தெலுகு அம்மணி, என்னிடம் தெலுங்கில் விசாரித்தார் [ ஒரு வேளை நான் பார்க்க மனவாடு மாதிரி இருக்கேனோ? ஒரு மைல்ட் டவுட்! :) ]

ம்ம்ம்ம்.  சொல்ல மறக்கறதுக்கு முன்னாடி சொல்லிடறேன்! இந்த வருடம் கொலுவிற்கு ஒரு பழம் பெரும் பதிவரும் வந்திருந்தார்! அந்தப் பதிவர் யாருன்னு உங்களுக்கும் தெரிந்திருக்கும்! சில முகநூல் பிரபலங்களும் வந்திருந்தார்கள்!

Any ways, இப்போதைக்கு படங்களை ரசித்தீர்களா என்று சொல்லுங்கள்! மேலே சொன்னபடி, திருவரங்கம் கோவில் கொலு புகைப்படங்கள் தனிப்பதிவாக….

மீண்டும் ச[சி]ந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்

39 comments:

 1. பழம்பெரும் பதிவர்? அது யாராக இருக்கும்?!! கீதாக்கா இளம் பதிவராச்சே!!!!

  படங்களை ரசித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. மனதில் இளமை! இருந்தாலும் பழம் பெரும் பதிவர் தானே! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
  2. யார் அந்தப் பழம் பெரும் பதிவர்? நான் தான் ஒவ்வொரு வருஷமும் வரேனே! அப்புறம் யாரா இருக்கும்? :) மீ த சின்னஞ்சிறு பதிவர்!

   Delete
  3. சின்னஞ்சிறு பதிவர்! :)))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 2. படங்களை அதிகமாகவே ரசித்தேன். கும்பகோணத்தைச் சார்ந்தவன் என்ற நிலையில் இளம் வயது முதலே கொலுவில் அதிக ஆசை உண்டு எனக்கு.

  ReplyDelete
  Replies
  1. விதம் விதமாய் கொலு பார்க்க ஆசை எனக்கும் உண்டு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 3. ///ஒரே ஒரு வீட்டிற்குதான் அழைத்து சென்றார்கள்//

  நிச்சயம் அந்த வீட்டில் ஒரு வயசான மாமிதான் கொலு வைத்திருப்பார். அதனால்தான் அங்கு அழைத்து சென்றிருப்பார்கள்

  ReplyDelete
  Replies
  1. Good Guess! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete

 4. படங்கள் மிக அழகாக எடுக்கப்பட்டதும் அல்லாமல் மிக அழகாக சரியானை சைஸில் இங்கு பதியப்பட்டதும் பார்ப்பதற்க்கு மிகவும் கலர் புல்லாகவும் மங்களகராமகவும் இருக்கிறது பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. சரியானை சைஸ்! :) கொஞ்சம் பெரிய அளவு தான்! யானை என தவறாக வந்ததும் சரியாகத் தான் இருக்கு! :)))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 5. எங்காத்து மாமியின் சொந்த ஊருக்கு சென்று கோயிலில் உள்ள கொலுப் பொம்மைகளை மிக அழகாக படம் எடுத்து வந்திருக்கிறீர்கள் அதற்க்காக ஒரு எக்ஸ்ட்ரா சொட்டு பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. ஆஹா திருவையாறு உங்கள் இல்லத்தரசியின் ஊரா? மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 6. தினம் சுண்டல் உங்கள் கைவண்ணம் இல்லை என்று சொல்ல சொன்னது யாரு?

  ReplyDelete
  Replies
  1. நானே தான் சொல்றேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 7. போன பதிவின் கருத்திலே அந்த பழம் பெறும் பதிவர் யாருன்னு சொல்லீடிங்களே வெங்க்ட்ஜீ உங்க வீட்டு கொலுவிற்கு வந்து கீதாம்மா பூ பழம் வாங்கி சென்றால்தானே அவரை பழம் பெறும் பதிவர் என்று சொல்லி இருக்கீங்க..

  ReplyDelete
  Replies
  1. நேற்றைய பதிவின் கருத்திலே சொல்லி விட்டேன்! அவரே தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 8. படங்கள் அனைத்தும் இரசித்தேன் ஜி

  பழம்பெரும் பதிவர். திரு. வைகோ ஐயா,திரு. ரிஷபன் அவர்களா ?

  ReplyDelete
  Replies
  1. கீதாம்மா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
  2. அவரை சந்திக்கவில்லை என்று பதிவில் சொன்னதால்தான் அவர்களை நான் குறிப்பிடவில்லை.

   Delete
  3. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 9. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 10. அழகான கொலு..
  இந்த அழகையெல்லாம் பார்க்கப் பார்க்க ஆனந்தம்.. மகிழ்ச்சி தான்..

  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 11. ஶ்ரீரங்கம் கோயில் கொலுவை நானும் படங்கள் எடுத்தாலும் இங்கே உங்க படங்களைப் பார்த்ததும் அதை மேலும் பகிர்வதில் அர்த்தமே இல்லைனு நினைச்சுட்டேன்! :) நன்றாகப் படங்கள் வந்திருக்கின்றன.

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீரங்கம் கோவிலில் எடுத்த ஒரே ஒரு படம் மட்டுமே இங்கே வெளியிட்டு இருக்கிறேன். மற்றவை விரைவில். நீங்கள் எடுத்த படங்களும் பார்க்க ஆவல்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

   Delete
 12. படங்களே பதிவாக,சிறப்பு,

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விமலன் ஜி!

   Delete
 13. உங்களைவீ ட்டு கொலு சிம்பிளா அழகா இருந்தது. அரங்கநாதர்கோவில் கொலு மிக அழகா இருந்தது எல்லாவற்றயும் அழகா படம் எடுத்து பகிர்ந்து இருக்கீங்க ரசித்தேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூ விழி.

   Delete
 14. //புகைப்படம் எடுக்கச் செல்கிறேன் என்ற பெயரில் சுண்டல் சாப்பிடச் செல்வேன் என்று யாரும் தப்பாக புரிந்து கொள்ள வேண்டாம்//
  எங்கள் அப்பா குதிருக்குள் இல்லை என்பது போல் உள்ளதே! .

  கொலு படங்கள் அருமையாய் உள்ளன. பாராட்டுகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 15. அடிச்சுகூட கேப்போம். அப்பவும் ‘சுண்டல் செஞ்சது நீங்க இல்ல’ன்னுதான் சொல்லனும்..

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   Delete
 16. கொலுலாம் அசத்தல்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   Delete
 17. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. Anuradha Premkumar has left a new comment on your post "புகைப்பட உலா – நவராத்ரி கொலு":

   கொலு பொம்மைகள் எல்லாம் கலைநயம்...

   போன வருடம் ஸ்ரீரெங்கம் கொலுவில் படம் எடுக்க அனுமதி இல்லை...

   ஆனால் இந்த வருடம் அனுமதி உண்டு என்றார்கள் ..எங்களால் போக முடியல..

   இருந்தும் தம்பி எடுத்த படங்களை எனது தளத்தில் பதிவிட்டு விட்டேன்...

   Delete
  2. தவறுதலாக சில கருத்துகள் நீக்கப்பட்டன. மின்னஞ்சலிலிருந்து எடுத்து மீண்டும் பதிவு செய்திருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....