செவ்வாய், 13 அக்டோபர், 2009

தேங்காய் முற்றியதா, இளசா என்று பார்ப்பது எப்படி?

தில்லியில் உள்ள தமிழர்களின் குழந்தைகளின் தமிழ் பேசும் அழகே அழகு. ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் போன்ற எல்லா பாஷையும் கலந்து பேசுவார்கள். அவர்கள் பேசுவதை கேட்கும் போது ஏதோ ஒரு புரியாத மொழி கேட்பது போல் இருக்கும். தமிழ் தொலைக்காட்சிகளில் தற்போது உள்ள தொகுப்பாளர்கள்/தொகுப்பாளினிகள் பேசுவதைக் காட்டிலும் சற்று அதிகமாகவே தமிழ் புலமையோடு பேசுகிறார்கள் தில்லி வாழ் தமிழ் குழந்தைகள்.

ஒரு முறை நண்பர் வீட்டுக்கு சென்று இருந்தேன். அங்கு சில தமிழ் குழந்தைகள் விளையாடிக் கொண்டு இருந்தனர். அவர்களுக்குள் நடக்கும் விவாதம் எல்லாமே பல மொழிகள் கலந்த ஒரு பாஷையில் இருந்தது. ஒரு சிறுவன் அப்போது தேங்காய் முற்றியதா, இளசா என்று பார்ப்பது எப்படி என்பது பற்றி விளக்கிக் கொண்டு இருந்தான். விவரம் கீழே:

"நாரியலை எடுத்து அதை உங்கிளியால் தட்டி பார்க்கணும். தட்டும் போது நல்ல ஆவாஜ் வந்தால் அது பக்கா தேங்காய், வரலைன்னா அது கச்சா தேங்கா!" .

என்ன ஒன்றும் விளங்க வில்லையா? விஷயம் இது தான். "தேங்காயை எடுத்து விரலால் தட்டி பார்த்து நல்ல சத்தம் வந்தால் அது முற்றிய காய். இல்லையெனில் அது இளசு!" என்பதைத் தான் அந்த தில்லி தமிழ்ச் சிறுவன் அப்படி சொல்லிக் கொண்டு இருந்தான்.

அப்பாடா ஒரு வழியா தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தம் வந்து விட்டது!

4 கருத்துகள்:

 1. அருமை வெங்கட். சரளமான நடை. நான் கூட அந்த பையன் தேங்காய் பற்றி சொன்னதை படிக்க ஆரம்பித்ததும் என்னடா ஒன்னும் புரியல்லியேன்னு அடுத்த பாராவுக்கு போனால் அவன் ஹிந்தியும் தமிழும் கலந்து அப்படி பேசியிருக்கிறான் என்று புரிந்தது. நல்ல பதிவு.

  ரேகா ராகவன்.

  பதிலளிநீக்கு
 2. வெங்கட், எனது பழைய டெல்லி வாழ்க்கை நினைவுகளை தூண்டியது. உங்கள் எழுத்து நடை நன்றாக உள்ளது.

  அப்துல்
  துபாய்

  பதிலளிநீக்கு
 3. @@ ரேகா ராகவன்
  @@ அப்துல், துபாய்

  எனது பதிவினை படித்து, தங்களது மேலான கருத்தினை எழுதியதற்கும் நன்றி.

  வெங்கட்

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....