புதன், 9 மார்ச், 2011

பாம்பு பீ[பே]தி!


நெய்வேலியில் இருந்த போது எங்கள் வீட்டைச் சுற்றி மரம், செடி, கொடிகள் இருந்ததால் நிறைய ஜந்துக்களை நாங்கள் பார்த்திருக்கிறோம். தென்னை மர வண்டிலிருந்து, தேள், பூரான், போன்ற எல்லாமும் தைரியமாய் வளைய வரும். அவ்வப்போது பாம்புகளும் எங்கள் கண்ணில் தென்படும். நெய்வேலியிலிருந்த பெரும்பாலான தனி வீடுகளுக்கு இது பொருந்தும்.

“பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்”னு சொல்லுவாங்க. ஒரு பெரிய படையே நடுங்கும்போது நாமெல்லாம் எம்மாத்திரம்? ஒரு முறை எனது அம்மாவின் அத்தை, இரவு எல்லா வேலையையும் முடித்து விட்டு வந்து பார்த்தால், தூங்கிக்கொண்டிருக்கும் எனது தங்கையின் தலைமாட்டில் ஒரு பாம்பு படமெடுத்துக்கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்திருக்கிறது.

இந்தக் காட்சியைப் பார்த்த அத்தைப்பாட்டி, தூங்கிக்கொண்டு இருந்த மற்றவர்களை எழுப்பக் கூட குரல் வராமல் சிறிது நேரம் “பா….பா....” என்றே சொல்லிக்கொண்டு இருந்திருக்கிறார். அதற்குள் ஆள் அரவம் கேட்ட பாம்பு, தானாகவே கதவின் கீழ் இருந்த சந்தின் வழியே வெளியே சென்று விட்டிருக்கிறது. அதன்பின் குரல் கொடுத்து எல்லோரையும் எழுப்பி, நடந்ததைச் சொன்னார். தலைமாட்டில் படமெடுத்தப் பாம்பு பற்றி இப்போதும் கூட என் அம்மா சொல்லிக்கொண்டிருப்பார்.

இதில் ஒன்றுமே இல்லாதது போல வேறு ஒரு முறை நடந்த நிகழ்ச்சிதான் மிகவும் சுவாரசியமானது. ஒரு நாள் நான் முற்றத்தில் குளித்துக்கொண்டிருந்தபோது தோட்டத்துக் கதவு வழியே, ஒரு பாம்பு உள்ளே வந்து விட்டது. உள்ளே வந்த அதுக்கு “ஒன் பாத்ரூம்” வந்து விட்டதோ என்னமோ, நேராக கழிப்பறையினுள் சென்று விட்டது. தோட்டத்திலிருந்து ஒரு குச்சியை எடுத்து வந்து அதை அடிக்கப் போக, அதற்கு வாகுவாக இல்லாமல் உள்ளே சென்று சுருண்டு படுத்துவிட்டது.

எவ்வளவு முயன்றும் வெளியே வராமல் அழிச்சாட்டியம் பண்ண அந்த பாம்பினை, ஜலசமாதி செய்துவிடும் எண்ணத்தோடு, பக்கெட் பக்கெட்டாக தண்ணீர் எடுத்து கழிப்பறையில் விட்டுக்கொண்டிருந்தோம். வீட்டின் பின்னே இருக்கும் பாதாள சாக்கடையின் மூடியைத் திறந்து பாம்பு வருகிறதா என்று ஒரு கூட்டமே ஆவலுடன் கூடிய திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்தது.

தொட்டியில் இருந்த தண்ணீர் முழுதும் தீர்ந்த பிறகு ஒரு விதக் கலக்கத்துடன் எட்டிப் பார்த்தால், கழிப்பறையின் உள்ளே பாம்பாரைக் காணவில்லை. வெளியேயும் வரவில்லை.

மூலைமுக்கு விடாமல் தேடி விட்டோம். அது எங்குமே இல்லை. சரி போய் விட்டது என்ற தீர்மானத்தில் வெளியாட்கள் எல்லோரும் சென்றுவிட்டனர். ஆனாலும் இரண்டு மூன்று நாட்கள் வரை வீட்டில் உள்ள அனைவருமே அந்தக் கழிப்பறைக்குள் செல்லத் தயங்கியது அக்மார்க் உண்மை. அந்த பாம்பு எங்கே சென்றது என்ற குழப்பம் இன்றுவரை தீரவில்லை. பாம்புக்கு ஆயுள் எத்தனை வருடங்கள் என்று யாருக்காவது தெரியுமா?

மீண்டும் சந்திப்போம்!


வெங்கட் நாகராஜ்



35 கருத்துகள்:

  1. :))

    ஆயுள் எதுக்கு கேக்கறீங்க. ? இன்னுமா அங்கயே இருக்கும் ..:)

    பதிலளிநீக்கு
  2. சுவாரஸ்யமாகவும், பயமாகவும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. பாம்புக்கு ஆயுள் எத்தனையோ ஆனால் பாம்பு கடிச்சா நமக்கு அவ்வளவுதான்.

    திகிலூட்டும் பதிவு.

    ஆனாலும் எங்கள் வீட்டைச் சுற்றிலும் நிறையப் பாம்புகளோடு நாட்கள் கழிவதால் பாம்பின் மீது இருந்த பயம் போய்விட்டது வெங்கட்.

    பதிலளிநீக்கு
  4. பாம்புக்கும் கொசுவத்தி...

    ரைட்டு :))

    பதிலளிநீக்கு
  5. பாம்பைக் கண்டால் நடுங்குறவரா நீங்க? ஓடுற பாம்பைப்பிடிக்கிறவர்னில்லே நினைச்சிட்டிருக்கேன்...?

    என்னாது...பா..பாம்..பாம்பா...எங்கே...ஐயோ..ஐயோ...!

    சேட்டை, வுடு ஜூட்டு!

    பதிலளிநீக்கு
  6. ஐயோ..............
    பயத்துலே...... வர்றதும் வந்துருக்காதே:(

    கஷ்டத்தோடு கஷ்டமா............

    என் தோழி ஒருத்தர் நெய்வேலிக்காரி.

    உங்க லிங்கை அனுப்பிவைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  7. பிடிபட்டால் பாம்புக்கு ஆயுசு அவ்வளவுதான்
    கடிபட்டால் நமக்கு ஆயுசு அவ்வளவுதான்
    இதில வருஷ கணக்கு எப்படிப் பார்க்கிறது?

    பதிலளிநீக்கு
  8. மாட்டினா அன்னிக்கே காலி இல்லாட்டி நெறைய

    பதிலளிநீக்கு
  9. பாம்புக்கு உங்களை எல்லாம் பார்த்து பேதியாக பின்ன பாதியாகி காணம போச்சு என்னவோ?

    பதிலளிநீக்கு
  10. நல்லா கிளப்பிட்டீங்க பீதியை! அந்த படம் பார்த்தாலே எப்படியோ இருக்குது...

    பதிலளிநீக்கு
  11. வித்தியாசமான போட்டோ.
    பாம்பு படம் எடுத்து நிற்பதைப் படித்ததும் சிவகாமியின் சபதம் நினைவுக்கு வந்தது. நாகநந்தி பாம்பை அடித்து ஹீரோவைக் காப்பாற்றும் அத்தியாயம். தலைமாட்டில் பாம்பு படம் எடுத்தால் அதிர்ஷ்டம் என்று ஒரு நம்பிக்கை உண்டு.

    பதிலளிநீக்கு
  12. நாங்க சந்த்ரபூரில் 15 வருஷம்
    இருந்தோம். வீட்டைச்சுற்றி நிறைய
    மரம் செடி கொடிகள் எல்லாம் உண்டு.
    மழை காலம் வந்தா தொலைஞ்சோம்.
    தவளை, நத்தை, அதைச்சாப்பிட
    பாம்பு என்று எல்லாமேவரும். முதல்
    ஒருவருடம் மட்டும் பயம்தான். பிறகு
    பழகி விட்டது.

    பதிலளிநீக்கு
  13. இதைப் படித்ததும் எனக்கே இப்போ எங்க வீட்டு பாத்ரூமுக்குள் போகவே பயமா இருக்குது.

    எந்தப் புத்துல (எந்த பாத் ரூமுல) எந்த பாம்பு இருக்குமோ?

    பயங்கரமான பதிவு தான்.

    [நல்ல பாம்பு ஒன்று செய்யாது சார், நாம் எதற்கும் பாலை ஊற்றி விட்டு, பிறகு பாத் ரூம் போவோம் - ஃப்ரிட்ஜிலிருந்து பால் பாக்கெட்டை கையில் எடுத்து விட்டேன் - வரட்டுமா.....]

    பதிலளிநீக்கு
  14. இந்த போட்டோவை பாத்தாலே பயம்ம்ம்மா இருக்கு :-))))

    பதிலளிநீக்கு
  15. கிராமத்தில் முற்றத்தில் பாம்புகள் போகும். சாரைப்பாம்பு,கோடரிப்பாம்பு கடிக்காது என்று சொல்வார்கள்.

    நல்ல காலம் வீட்டிற்குள் வந்ததில்லை.

    இப்போது நினைத்தால் பா..ம்....பாதான்.

    பதிலளிநீக்கு
  16. //பிடிபட்டால் பாம்புக்கு ஆயுசு அவ்வளவுதான்
    கடிபட்டால் நமக்கு ஆயுசு அவ்வளவுதான்
    இதில வருஷ கணக்கு எப்படிப் பார்க்கிறது? //
    அற்புதம்...

    வாழும் பாம்பா நினைச்சு பாலும் முட்டையும் கொடுத்து வீட்டோட வச்சுக்கலாமே.. ;-))

    பதிலளிநீக்கு
  17. என்னதான் பாம்பு இந்த இடத்திலதான்
    இருந்துச்சுன்னாலும் பதிவோட ஆரம்பத்திலேயே
    இந்த ஃபோட்டோவா?

    //சுந்தர்ஜி said...

    ஆனாலும் எங்கள் வீட்டைச் சுற்றிலும் நிறையப் பாம்புகளோடு நாட்கள் கழிவதால் பாம்பின் மீது இருந்த பயம் போய்விட்டது வெங்கட்.//

    நாங்கள்லாம் உங்க வீட்டுப் பக்கம் ஏன் வரோம்?
    இல்லையா வெங்கட் சார்?

    பதிலளிநீக்கு
  18. அடப்பாவமே! போட்டுச்சுன்னா வைத்தியரிடம் சட்டுன்னு காட்டக் கூட முடியாதே!

    பதிலளிநீக்கு
  19. ஐயோ! பயத்தைக் கிளப்பி விட்டீர்கள்! இரன்டு நாளைக்கு கனவில் பாம்பு வரப்போகிறது!
    திகிலான பதிவு!

    பதிலளிநீக்கு
  20. @@ மோகன் குமார்: பயம் தான்! நன்றி மோகன்.

    ## முத்துலெட்சுமி: பாம்புக்கு ஆயுள் தெரிஞ்சிக்கலாமேன்னு ஆர்வக்கோளாறு தான்.! வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    @@ வேடந்தாங்கல் கருண்: நன்றி நண்பரே.

    ## சுந்தர்ஜி: நெய்வேலியிலும் நிறைய பாம்பு நடமாட்டம் உண்டு. அதனால் பாம்பைக்கண்டு அவ்வளவு பயந்ததில்லை! வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    @@ புதுகைத்தென்றல்: இது கொசு வத்தி அல்ல! பாம்புவத்தி!!! :) வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    ## சேட்டைக்காரன்: பாம்பு கண்டு பயமில்லை! அது இருந்த இடமே பயத்தினை அதிகப்படுத்தியது :) வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    @@ துளசி கோபால்: “வரதும் வந்திருக்காதே!” இப்போது நினைத்தால் காமெடிதான். உங்கள் தோழிக்கு அனுப்பியதற்கு மிக்க நன்றி.

    ## ரமணி: நல்ல கருத்துரை. மிக்க நன்றி.

    @@ எல்.கே.: நன்றி கார்த்திக்.

    ## உயிரோடை: சொல்லாம கொள்ளாம எங்கே போனது என்று தெரியவில்லை! வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    @@ சித்ரா: வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    ## அமுதா கிருஷ்ணா: கூகிள் ஆண்டவரிடம் இருந்து சுட்ட படம்! வருகைக்கு நன்றி.

    @@ ரிஷபன்: நாகநந்தி! என்ன ஒரு கேரக்டரைசேஷன்! கடைசி வரை யார் என்றே தெரியாமல் ஒரு சஸ்பென்ஸ் இருக்கும்! திரும்ப படிக்க வேண்டுமென தோன்றிவிட்டது.

    ## லக்ஷ்மி: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா.

    @@ வை. கோபாலகிருஷ்ணன்: தைரியமாக போங்க!

    ## கரடிமடை ஆனந்தன்: தங்களது முதல் வருகைக்கு நன்றி!

    @@ அமைதிச்சாரல்: ஓ! பாம்பு கொஞ்சமாகத் தானே தெரியுது :)

    ## கலாநேசன்: மிக்க நன்றி நண்பரே.

    @@ மாதேவி: பா…ம்பா!!! நான் எடுக்கிறேன் ஓட்டம்ம்ம்ம்…. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    ## ஆர்.வி.எஸ்.: எங்க வீட்டில் இடமில்லை என்றுதான் அது டாய்லெட்டிலேயே இருந்து விட்டது போல! நன்றி நண்பரே!

    @@ சே. குமார்: மிக்க நன்றி.

    ## சங்கவி: நன்றி நண்பரே.

    @@ ராஜி: ஓ! தொடக்கத்தில் போட்டது பிடிக்கவில்லையா!

    //ஆனாலும் எங்கள் வீட்டைச் சுற்றிலும் நிறையப் பாம்புகளோடு நாட்கள் கழிவதால் பாம்பின் மீது இருந்த பயம் போய்விட்டது வெங்கட்.//

    நாங்கள்லாம் உங்க வீட்டுப் பக்கம் ஏன் வரோம்?
    இல்லையா வெங்கட் சார்?//

    அதானே வீடு சுத்தி பாம்பு இருந்தா கஷ்டம் தான். வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    ## ஈஸ்வரன்: அண்ணாச்சி உங்க குறும்புக்கு ஒரு அளவே இல்லையா!

    @@ மனோ சாமிநாதன்: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    இண்ட்லி மற்றும் தமிழ்மணத்தில் வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  21. இப்படியெல்லாம் பதிவு போட்டு மக்களைப் பயங்காட்டக்கூடாது. அளுகுணி ஆட்டம் !

    பதிலளிநீக்கு
  22. @@ DrPKandaswamyPhD: அச்சச்சோ! பயமா போச்சா! அதுவும் அளுகுணி ஆட்டம்னு சொல்ற அளவுக்கு! சரி அடுத்த பகிர்வு நல்லாவே போட்டுடலாம்! வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  23. பதிவில பக்கத்தில ஓடுற clock பாம்பு மாதிரி பயமுறுத்துது.

    பதிலளிநீக்கு
  24. @@ சிவகுமாரன்: அந்த கடிகாரத்தை கிளிக் பண்ணி பாருங்க! பாம்பு மாதிரி தெரியாது :) வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    ## லக்ஷ்மிநாராயணன்: அடாடா! இந்த படம் எல்லோரையும் தொந்தரவு பண்ணிடுச்சே! எடுத்துடவா? வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  25. Venkat, this reminds me of Thambikku Entha Ooru (College cut adichittu paartha padam, hi hi hi...)

    பதிலளிநீக்கு
  26. பாம்பைப் பார்த்தாலே 'பாத்ரூம்' போயிடுவாங்க சில பேர்..... பாம்பே பாத்ரூம் போனா....!!! :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....