ஞாயிறு, 11 ஜூன், 2017

துப்புவது எங்கள் உரிமை! - சின்னச் சின்னதாய்!


இரண்டு பதிவுகள் வெளியிட்ட பிறகு மீண்டும் ஒரு இடைவெளி! இன்னமும் பழையபடி தொடர்ந்து பதிவுகள் எழுதும் நிலை வரவில்லை! வேலைகள், வேலைகள் ஏதேதோ வேலைகள்! – விசாரித்து வந்த மின்னஞ்சலுக்குக் கூட நீண்ட நேரம் கழித்தே பதில் அனுப்பமுடிந்தது! என்ன செய்ய முடியும்! சரி இன்றைய பதிவுக்கு வருவோம்! பொதுவாக ஞாயிறன்று, நான் எடுத்த புகைப்படங்கள் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்வது வழக்கம். இன்றைக்கும் அப்படி சில புகைப்படங்கள் – கூடவே சில சிந்தனைகள் – சின்னச் சின்னதாய்!

 
புகைப்படம்-1:  உத்யோக்G Bபவன் அருகே உள்ள பேருந்து நிறுத்தம் – சில உழைப்பாளிகள்…. – துப்புவது எங்கள் உரிமை!

நேற்று மாலை அலுவலகத்திலிருந்து புறப்படும்போது மாலை ஆறு மணி! சரி வீட்டுக்குச் செல்வதற்கு முன்னர் நண்பர் பத்மநாபனைச் சந்தித்து வருவோம் என ஆர்.கே. புரம் நோக்கிச் செல்ல பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன். சில உழைப்பாளிகள் அன்றைய வேலையை முடித்துக் கொண்டு பேருந்து நிலையத்திற்கு வந்து கீழே அமர்ந்தார்கள். வழக்கம் போல கைனி எனப்படும் புகையிலை அல்லது Gகுட்கா அவர்களது வாயில் போட்டு இருந்தார்கள். சில நொடிகளுக்கு ஒரு முறை வாயிலிருந்து உமிழ்நீரை துப்பிக் கொண்டே இருந்தார்கள். சில அவர்களது மீதே தெறிக்க, பக்கத்தில் நின்றிருந்த நான் கொஞ்சம் தள்ளியே நிற்கலாம் என நகர்ந்தேன்.  சில நிமிடங்களில் அந்த இடமே குட்கா கலந்த உமிழ்நீர் வாடை!

நன்கு படித்த, மகிழ்வுந்துகளில் வலம் வருபவர்கள் கண்ணாடியை இறக்கி சாலையில் துப்பி விட்டு போகும் ஊரல்லவா! இவர்களைச் சொல்லி என்ன செய்ய!  துப்புவது அவர்கள் உரிமை! தொடர்ந்து துப்பட்டும்!  இதோ நான் செல்ல வேண்டிய பேருந்து! நான் செல்கிறேன் நண்பரின் வீடு நோக்கி….

புகைப்படம்-2: Power Centre in sun set!இந்தப் புகைப்படமும் நேற்று மாலை எடுத்த படம் தான். பேருந்துக்குக் காத்திருந்த போது மாலை ஆறு மணி எனச் சொன்னேன். அந்த நேரத்தில் சூரிய அஸ்தமனம் ஆகிக் கொண்டிருக்க, அந்த நேரத்தில் மரங்கள் சூழ்ந்த North Block, South Block – படத்தில் South Block மட்டுமே ஒரு இடத்தில் தெரிகிறது – அலைபேசியில் கிளிக்கினேன்.  ராஜபாட்டையான Rajpath நடுவே நின்று பலர் புகைப்படங்கள் எடுப்பதைப் பார்ப்பதுண்டு. ஒரு நாள் அப்படி நின்று புகைப்படம் எடுக்க வேண்டும்! கேமரா எடுத்துக் கொண்டு ஒரு மாலை வேளையில் சென்று எடுக்க நினைத்திருக்கிறேன்! பார்க்கலாம் எப்போது நேரம் கிடைக்கிறது என!

புகைப்படம்-3: கோவிலில் பூச்சை! – பூஜை என்பதை தப்பாக பூச்சை என எழுதவில்லை! இது பூச்சை என மலையாளத்தில் அழைக்கப்படும் பூனையைப் பற்றிய சிந்தனை!நண்பர் வீட்டுக்குச் சென்று ஒரு கட்டஞ்சாயும் கொஞ்சம் நொறுக்ஸ் சாப்பிட்ட பிறகு எங்கே செல்லலாம் என கலந்தாலோசித்து, மலாய் மந்திர் என இவ்வூர் மக்கள் அழைக்கும் மலை மந்திர் – முருகன் கோவிலுக்குச் சென்றோம்! சற்றே இறைவனோடு அளவளாவிய பிறகு, இதமாய் காற்று வீசிக்கொண்டிருக்க மலைப்படிகளில் அமர்ந்து காற்று வாங்கினோம் – கூடவே பேசிக்கொண்டும், செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த பக்தஜனங்களைப் பார்த்துக் கொண்டும் இருந்தோம். செல்ஃபி எடுக்கும்போது முகத்தினை ஏன் அஷ்டகோணலாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற பெரும் சந்தேகம் நண்பர் பத்மநாபனுக்கு! சந்தேகத்திற்கு விடை என்னிடமும் இல்லை!  

பேசிக்கொண்டிருந்த போது முதுகுப் பக்கத்தில் மியாவ் சத்தம்! என்னடா என திரும்பிப் பார்த்தால் பூச்சையார் படுத்துக் கொண்டு என் முதுகைப் பார்த்தபடி இருக்கிறார்! ”ஏன் என்னை ஃபோட்டோ எடுக்க மாட்டியா?” என்று கேட்டது போல இருந்தது அதன் இரண்டாவது மியாவ் சத்தம்! ”சரி எதை எதையோ எடுக்கறேன், உன்னை ஒரு ஃபோட்டோ எடுக்க மாட்டேனா?” என்று அதனிடம் சொல்லி எடுத்த க்ளிக்!

புகைப்படம்-4: உங்க ஃபோன்ல செலுஃபி எடுக்க முடியுமா?ராஜபாட்டையில் எந்த நேரத்தில் பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் சாரிசாரியாக வந்த வண்ணமே இருக்கிறார்கள். எத்தனை புகைப்படங்கள் அங்கே எடுக்கப்பட்டிருக்கும் எனக் கணக்குப் பார்க்க முடிந்தால், நிச்சயம் கோடிக்கணக்கில் இருக்கும்! அந்த இடங்களும் கோடிகளுக்குப் புகழ்பெற்றவை தானே! இரண்டு நாட்கள் முன்னர் அலுவலகத்திலிருந்து வீடு தீரும்பும் வேளையில் அப்படி நிறைய பேர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள் – அதில் பலர் செலுஃபி பிள்ளைகள் தான்! அடுத்தவர்களை நிற்க வைத்து புகைப்படம் எடுப்பவர்களை விட செல்ஃபி எடுத்துக் கொள்பவர்கள் தான் இப்போதெல்லாம் அதிகம் பார்க்க முடிகிறது!

செல்ஃபி எடுப்பதில் அப்படி என்னதான் பலன்? மகிழ்ச்சியாக இருக்குமோ? என்று நண்பர் கேட்க, அவரும் நானும் ஒரு செல்ஃபி எடுத்துப் பார்த்துக் கொண்டோம்! அப்படி ஒன்றும் பெரிதாக மகிழ்ச்சி இல்லை! புகைப்படத்திலும் ஒரு சீரியஸ்நெஸ்! கொஞ்சம் சிரிக்கக் கூடாதா என புகைப்படம் பார்க்கும் நீங்களும் சொல்லக் கூடும்!

தொடர்ந்து ச[சி]ந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

44 கருத்துகள்:

 1. கண்ட இடத்தில் துப்பும் இதே ஆட்கள், கடுமையான தண்டனை உள்ள நாடுகள் செல்லும்போது நல்லவனாய் நடந்துகொள்கிறார்கள். நம் நாட்டில் எங்கும், எதுவும் செய்யலாம் என்ற எண்ணம்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பிரசாத் ஜி.

   நீக்கு
 2. படங்களும், தகவல்களும் சுவாரஸ்யம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் ஜி.

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்....

   நீக்கு
 4. எல்லாப் படங்களும் நல்லாத்தான் இருக்கு. 'கண்ட இடங்களிலும் துப்பற' ஆட்கள் மேல் இரக்கப்படவே கூடாது. இவர்களெல்லாம் இந்தியாவில் இருந்தால் என்ன போனால் என்ன. இதற்கு படிப்பறிவு இல்லாதது காரணம் என்று நினைக்கக்கூடாது. ஏன் அவர்கள் குழந்தைகளின் மூஞ்சிகளில் துப்புவதில்லை?


  விரைவில் பிரயாணக் கட்டுரைகளை ஆரம்பியுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

   பிரயாணக் கட்டுரைகள் ஆரம்பிக்க வேண்டும்...

   நீக்கு
 5. கண்ட இடத்திலும் எச்சில் - பான் பராக் - துப்புபவர்களை என்ன செய்யலாம்?..
  மின் தூக்கிக்குள் கூட அக்கிரமம் செய்கின்றார்கள்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜு ஜீ.

   நீக்கு
 6. பொது இடங்களில் அசுத்தம் செய்பவர்கள் கண்டனத்திற்கு உரியவர்கள் ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி.

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி.

   நீக்கு
 8. விடுமுறைஉலாவில் எடுத்த படங்களும் தகவல்கள் பகிர்வும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 9. //செல்ஃபி எடுக்கும்போது முகத்தினை ஏன் அஷ்டகோணலாக வைத்துக் கொள்ள வேண்டும்//
  ஒழுங்கா எடுத்தாலே மூஞ்சி அஷ்ட இல்லன்னா ஷஷ்ட கோணலாக, மொத்தத்தில் கஷ்ட கோணலாக வருது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கஷ்ட கோணல்..... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   நீக்கு
 10. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 11. டெல்லி சென்றிருந்தபோது எடுத்த புகைப்படங்களை விட வீடியோவே அதிகம் அவற்றை பதிவிடத்தெரியவில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யூட்யூப் பக்கத்தில் தரவேற்றம் செய்து பகிரலாமே.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B.ஐயா.

   நீக்கு
 12. பதில்கள்
  1. உண்மை. தயாரிப்பதை நிறுத்தினால் நல்லது. ஆனால் அது நடக்காது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   நீக்கு
  2. பாங்குட்கா மட்டுமா கஸ்தூரி....எச்சலையும், உமிழ் நீர்/சளி/கோழயையும் கூட காரித் துப்புகிறார்களே! அது பொதுநல சுகாதாரத்திற்கு இன்னும் கேடல்லவா. கேரளத்தில் இந்த வகை துப்பல்கள் அதிகம் அதே போல அங்கு டிபியும் கூடுதல்.

   கீதா

   நீக்கு
  3. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 13. உண்மையைச் சொல்லப் போனால் நானும் காணாமல் போய்விடுவேன் அடிக்கடி..

  இப்போது பதிவுகள் தொடர்ந்து வருவது ஷெட்யூல் செய்த விஷயம்...

  ஒரு நாள் விட்டு ஒருநாள் வீதம் வரும் இருபதாம் தேதி வரை ...

  பிறகு மேலும் தொடர வேண்டும்..

  பணிச் சுமைதான் .. வேறு ஒன்றும் இல்லை ...

  விடுங்கள் அடுத்தமுறை பதிவுகள் வாரவில்லை என்றால் பதாகை வைத்துவிடுகிறேன் ...

  (இந்த லிஸ்டில் இப்போது இருப்பது சகோ கிரேஸ்தான் ..)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதாகை! :) நன்றி மது.

   பணிச் சுமை, இணையத்தில் பிரச்சனை என, இப்போதும் இடைவெளி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   நீக்கு
 14. படங்களும், தகவல்களும் அருமை நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மொஹம்மத் அல்தாஃப்.

   நீக்கு
 15. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி.

   நீக்கு
 16. படங்கள் அருமை. நீங்கள் சிரிக்கவில்லையென்றாலும் உங்கள் முகத்தில் ஒரு கம்பீரம் தெரிகிறதே. அதற்கு ஒரு ஷொட்டு !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 17. கடந்த 10 நாள்களுக்கும் மேலாக சொந்த மற்றும் ஆய்வுப்பணியாக வெளியூர் சென்றிருந்தேன். தற்போதுதான் வலைப்பக்கம் வரமுடிந்தது. தொடர்ந்து பதிவுகள் மூலமாகச் சந்திப்போம். /// பூச்சை என்றால் மலையாளத்தில் பூனை? இப்போதுதான் அறிந்துகொண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 18. பொது இடத்தில் துப்புவது அவர்களது உரிமை என்றால் அபராதம் விதிப்பது அரசின் உரிமையாக வேண்டும் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 19. ஜி பயணத்தில் இருக்கின்றீர்களோ.?
  பதிவுகளை காணோமே...

  பதிலளிநீக்கு
 20. இல்லை நண்பரே... தலைநகரில் தான் இருக்கிறேன். பதிவுல வர இயலாத சூழல். இப்பதில் கூட அலைபேசியிலிருந்து தான்... விரைவில் திரும்ப வேண்டும். பார்க்கலாம்.... தங்கள் அன்பிற்கு நன்றி கில்லர்ஜி.

  பதிலளிநீக்கு
 21. நல்ல தொகுப்பு. பொது இடத்தை சுத்தமாக வைக்க வேண்டுமென்கிற எண்ணம் நம் மக்களுக்கு எப்போது வருமோ? பூச்சையார் நன்றாக போஸ் கொடுத்திருக்கிறார்:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 22. pan parag parthu enakkum kovam varum. north indiavai piditha saabam. hmm

  padangkalum seithigalum super. selfie supero super :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை சகோ.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....