அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
நாட்கள் எத்தனை வேகமாக நகர்கின்றன. இன்றைக்கு தான் ஆண்டு (2025) துவங்கியது போல இருந்தது என்றாலும் ஆண்டு முடிந்து அடுத்த ஆண்டான 2026-இல் நுழைந்து விட்டோம். கடந்த ஆண்டில் நடந்தவை குறித்து இனிமேல் சிந்தித்து எந்த வித பலனும் இல்லை. புதிதாகப் பிறந்திருக்கும் இந்த 2026-ஆம் ஆண்டில் அனைவரும் நலமாகவும், உற்சாகவும் இருக்கவும், எடுக்கும் அத்தனை முயற்சிகளில் வெற்றி பெறவும் எங்கள் அனைவரின் சார்பிலும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். நல்லதே நடக்கட்டும்…. நல்லதே நடக்கும்… நம்பிக்கையுடன் இந்த புத்தாண்டை தொடங்குவோம் நண்பர்களே…
May 2026 brings clarity to our mind, devotion to our heart, balance to our emotions, and purpose to our actions. May Radha Krishna’s grace guide every step of our journey.
✨ Happy New Year 2026! ✨
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
ஆதி வெங்கட்
ரோஷ்ணி வெங்கட்
திருவரங்கம்
1 ஜனவரி 2026


வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய வாசகமும் மிக அருமையாக உள்ளது.
ஆம் வந்த புது வருடத்தில் அனைவருக்கும் அனைத்தும் நல்லவையாக நடக்க நானும் இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மலர்ந்த 2026ஆம் ஆங்கில ஆண்டின் இனிய புது வருட நல்வாழ்த்துகள். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
புத்தாண்டு வாழ்த்துகள் வெங்கட்ஜி, ஆதி மற்றும் ரோஷ்ணி!
பதிலளிநீக்குகீதா
வாசகம் அருமை
பதிலளிநீக்குகீதா
தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகள் ஜி
பதிலளிநீக்குவாசகம் அருமை.
பதிலளிநீக்குபுத்தாண்டு பதிவு அருமை.
//நல்லதே நடக்கட்டும்…. நல்லதே நடக்கும்… நம்பிக்கையுடன் இந்த புத்தாண்டை தொடங்குவோம் நண்பர்களே…//
ஆமாம் , நல்லதே நடக்கும் எனற நம்பிக்கையோடு புத்தாண்டை தொடங்குவோம்.
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்