ஞாயிறு, 3 டிசம்பர், 2017

திருவையாறு கோவில் சிற்பங்கள் – புகைப்பட உலா



சமீபத்திய தமிழகப் பயணத்தின் போது விஜயவாடாவிலிருந்து வந்திருந்த நண்பர் குடும்பம், நான் மற்றும் பெரியம்மா ஒரு வாடகைக் கார் எடுத்துக் கொண்டு வரகூர் சென்ற போது அப்படியே திருவையாறு சென்று வந்தோம். அது பற்றி ஏற்கனவே ஒன்றிரண்டு பதிவுகள் எழுதி இருக்கிறேன்.

இந்த ஞாயிறில் திருவையாறு கோவிலில் எடுத்த சில படங்கள் – குறிப்பாக சிற்பங்களின் படங்கள் உங்கள் பார்வைக்கு!



சனி, 2 டிசம்பர், 2017

சாப்பிட வாங்க – தக்காளி தோசை [அ] அடை



தக்காளி தோசை

தக்காளி நிறைய இருந்ததால் தக்காளி தோசை செய்தேன். எப்போதும் செய்வது போல அல்லாது YouTube ல் Chitra murali's kitchen-ல் போய்ப்பார்த்து செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இவரைப் பற்றி மாத இதழில் ஒரு கட்டுரை வந்திருந்தது. ஆடம்பரம் இல்லாமல் இவருடைய கிச்சனிலேயே அன்றாடம் சமைப்பது போல் செய்து காட்டியுள்ளார்.

வெள்ளி, 1 டிசம்பர், 2017

சாப்பிட வாங்க – கொத்தமல்லி பொடி



வாரச்சந்தையில் நானும் தோழியும் காய்கறி வாங்கினோம். எல்லாம் வாங்கிய பின் அண்ணே!! கறிவேப்பிலை, கொத்தமல்லி குடுங்க என்றேன்.

வியாழன், 30 நவம்பர், 2017

ஜோத் என்றொரு மலைச்சிகரம் – அற்புத அனுபவம்



இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 14

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரண்டாம் தலைநகரம் என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


பனிபடர்ந்த மலைச்சிகரங்களும் இயற்கை எழிலும்...

புதன், 29 நவம்பர், 2017

இரண்டாம் நாள் – மலைச்சிகரம் நோக்கி – மாமா மருமான் உணவகம்


இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 13

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரண்டாம் தலைநகரம் என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


தங்குமிட ஜன்னல் வழியே தௌலாதார் மலைச்சிகரங்கள்....


வழியில் பார்த்த ஒரு ஆறு....
முதல் நாள் ஆட்டங்களில் கலந்து கொள்ளாத நானும் நண்பர் பிரமோத்-உம் காலையில் எழுந்து எங்கள் வேலைகளை முடித்துக் கொண்டு தயாரானோம். மற்ற அறையில் இருந்த மூன்று நண்பர்களும் ஒரு வழியாகத் தயாரானார்கள். முதல் நாள் எங்களுக்கு வாகனம் அளித்த சர்தார்ஜியிடம் பேசியதில் CHசம்பா மாவட்டத்தில் உள்ள இரண்டு மூன்று இடங்களைப் பற்றிச் சொல்லி அங்கே சென்று வாருங்கள் – மிக அழகிய இடம் என்று சொல்ல, அந்த இடங்களை நோக்கித் தான் எங்கள் இரண்டாம் நாள் பயணம் இருந்தது. மற்றவர்கள் தயாராகும் வரை அறையின் ஜன்னல் வழியே தெரியும் தரம்ஷாலா நகரின் பனிபடர்ந்த தௌலாதார் மலைகளையும், மலைகள் முழுவதும் கட்டியிருந்த வீடுகளையும் படம் பிடித்துக் கொண்டிருந்தேன். மலையே தெரியாத அளவிற்கு வீடுகள் கட்டி இருக்கிறார்கள்!