புதன், 28 பிப்ரவரி, 2018

சூரஜ்குண்ட் மேளா 2018 – புகைப்பட உலா – பகுதி - 3



கடந்த ஞாயிறன்றும் திங்கள் அன்றும், இந்த வருடத்தின் சூரஜ்குண்ட் மேளாவிற்குச் சென்றபோது எடுத்த புகைப்படங்களில் சிலவற்றை பகிர்ந்து கொண்டிருந்தது நினைவிருக்கலாம். பார்க்காதவர்கள் வசதிக்காக அந்த பதிவின் சுட்டி கீழே….



இந்த நாளில் மூன்றாம் பகுதியாக இன்னும் சில புகைப்படங்கள். புகைப்படங்கள் தவிர சில காணொளிகளும் எடுத்திருக்கிறேன் – அவற்றை அடுத்த பகுதியாக வெளியிடுகிறேன்.


படம்-1: ஒரு நாட்டியக் கலைஞர்

செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

குஜராத் போகலாம் வாங்க – பாலையில் ஒரு இரவு - கட்ச் இரவு உணவும் இன்னிசையும்



இரு மாநில பயணம் – பகுதி – 12

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!



வெண்பாலையிலிருந்து புறப்பட்ட எங்கள் வாகனம் அடுத்ததாக நின்ற இடம் எங்கள் தங்குமிடம் தான். காலையிலிருந்து வாகனம் ஓடிக்கொண்டே தான் இருக்கிறது. ஓட்டுனர் முகேஷுக்கும் ஓய்வு தேவை. எங்களுக்கும் தான். தங்குமிடம் வந்து ஒரு குளியல் போட்டு இளைப்பாறினோம்.  குளியல் என்றதும் இங்கே ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது – அது சாலைகள் போலவே குஜராத் மாநிலத்தில் இருக்கும் தண்ணீர் வசதி பற்றியது. கட்ச் பகுதி பாலைவனம் என்று உங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம். பாலைவனத்தில் தண்ணீர் கஷ்டம் இருக்கத்தானே செய்யும்.  ஆனால் நர்மதா ஆற்றின் தண்ணீரை கட்ச் பகுதி வரை குழாய் வழியே கொண்டு வந்திருக்கிறார்கள். அதனால் கிராம வாசிகளுக்கு தண்ணீர் கஷ்டமில்லை. நல்ல விஷயம் இது.

ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது தங்குமிட உரிமையாளர் வந்து இரவு உணவு எட்டு மணி முதல் ஒன்பது மணி வரை எப்போது வேண்டுமானாலும் வந்து சாப்பிடலாம் என்று தகவல் சொல்லிச் சென்றார். இந்த மாதிரி தங்குமிடங்களில் தங்குவதற்கான வாடகையோடு, மூன்று வேளை உணவுக்கும் சேர்த்தே காசு வாங்கிக் கொள்கிறார்கள். பெரிதாக உணவகங்கள் ஏதும் கிராமங்களில் இருக்காது என்பதால் இந்த ஏற்பாடு. இதுவும் ஒரு விதத்தில் நல்லதே.  பாரம்பரியமாக கட்ச் பகுதி கிராமங்களில் கிடைக்கும் உணவு வகைகளை அவர்கள் புதிதாகவும் சுவையுள்ளதாகவும் சமைத்துக் கொடுக்க, நாம் ருசித்து ரசித்து சாப்பிட முடிகிறது.

திங்கள், 26 பிப்ரவரி, 2018

சூரஜ்குண்ட் மேளா 2018 – புகைப்பட உலா – பகுதி - 2




கடந்த ஞாயிறன்று, இந்த வருடத்தின் சூரஜ்குண்ட் மேளாவிற்குச் சென்றபோது எடுத்த புகைப்படங்களில் சிலவற்றை பகிர்ந்து கொண்டிருந்தது நினைவிருக்கலாம். பார்க்காதவர்கள் வசதிக்காக அந்த பதிவின் சுட்டி கீழே….


இந்த நாளில் இரண்டாவது பகுதியாக இன்னும் சில புகைப்படங்கள். எடுத்த படங்கள் அதிகமாக இருப்பதால், இன்னும் சில படங்கள் அடுத்த பதிவாக வியாழன் அன்று வெளி வரும்!


படம் - 1: காலம் பறந்து போகும் எனச் சொல்லாமல் சொல்கிறதோ...

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

என்னன்னு சொல்லுங்க – புகைப்பட புதிர் விடைகள்




நேற்றைய பதிவில் மூன்றாவது புகைப்படப் புதிராக ஐந்து படங்களை வெளியிட்டு இருந்தேன். யார் யார் பதிலை சரியாச் சொன்னாங்கன்னு சொல்லப் போறதில்லை! ஆனா சரியான பதில்களை கீழே தந்திருக்கிறேன். வாங்க, நேற்று பகிர்ந்த படங்கள் என்னன்னு பார்க்கலாம்…


படம் – 1

சூரஜ்குண்ட் மேளா 2018 – புகைப்பட உலா – பகுதி - 1



ஹரியானாவின் சூரஜ்குண்ட் பகுதியில் ஒவ்வொரு வருடமும் சூரஜ்குண்ட் மேளா நடக்கும். வருடா வருடம் மேளாவிற்குச் செல்வது தொடர்கிறது. இந்த வருடமும் நானும் நண்பர் பத்மநாபனும் மேளாவிற்குச் சென்று வந்தோம்.  வருடா வருடம் ஏதாவது ஒரு மாநிலத்தினைச் சிறப்பு மாநிலமாக தேர்ந்தெடுத்து அங்கிருந்து கலைஞர்களையும் கலை விற்பன்னர்களையும் அழைப்பார்கள். இதற்கு முந்தைய வருடங்களில் நடந்த மேளாக்களில் நான் எடுத்த புகைப்படங்களை முன்னர் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அப்போது பார்க்காதவர்களின் வசதிக்காக, முந்தைய பதிவுகளின் சுட்டிகள் கீழே தந்திருக்கிறேன்.