செவ்வாய், 10 நவம்பர், 2009

Paranthe Waali Gali



பழைய தில்லி என்பதும் நினைவுக்கு வரும் இடங்கள் முகலாய பேரரசர் ஷாஜகானால் கட்டுவிக்கப்பட்ட லால் கிலாவும்[1638-1648], ஜும்மா மஸ்ஜிதும் [1656] தான். இந்த வரலாற்றுப் புகழ் மிக்க இடங்களுக்கு அருகில் உள்ள இடம் சாந்த்னி சௌக். இது முகலாய சாம்ராஜ்யத்தின் மிகப்பெரிய வியாபார ஸ்தலங்களில் ஒன்று. தற்போதும் இங்குள்ள துணி மற்றும் நகைக்கடைகள் மிகவும் பிரபலம்.

இந்த இடத்தில் உள்ள ஒரு பிரபலமான தெருவின் பெயர் தான் "Paranthe Waali Gali". 1870-களில் இங்கு இருபதிற்கும் மேற்பட்ட பரோட்டா கடைகள் ஆரம்பிக்கப்பட்டன. தமிழகம் மற்றும் கேரளாவில் கிடைக்கும் புரோட்டா போல மைதாவில் செய்யப்படுவது அல்ல இது. இது கோதுமை மாவில் செய்யப்படுவது. இந்த சுத்தமான சைவ உணவகங்களில் உருளை, முள்ளங்கி, கேரட், முந்திரி, பனீர், சீஸ், புதினா, கீரை போன்ற முப்பதிற்கும் மேற்பட்ட வித விதமான பரோட்டா வகைகள் கிடைக்கின்றன.

பரோட்டாவிற்கு தொட்டுக்கொள்ள காய்கறி ஊறுகாய், புதினா சட்னி, ஸ்வீட் சட்னி,தயிர் போன்ற பல வகை சைடு டிஷும் உண்டு. நெய் சொட்டச் சொட்ட இங்கு கிடைக்கும் சூடான பரோட்டா மக்களின் நாசியை கவர்ந்து இழுக்கும். ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, வாஜ்பாய் போன்ற பல பிரபலங்கள் உணவு அருந்திய இடம் இது.

ஆனால் ஒரு சிறிய சந்தில் இருக்கும் இந்த உணவகங்களுக்கு தற்போது அவ்வளவாக ஆதரவு கொடுப்பவர்கள் இல்லை. இத்தனை காலத்திற்குப் பிறகு தற்போது இங்கு இருப்பது மூன்று நான்கு கடைகள் மட்டுமே.

இங்கு கடை வைத்திருந்த பலர் தற்போது தில்லியின் மற்ற பகுதிகளில் கடைகளை திறந்து இந்த சுவை மிகுந்த உணவினை மக்களுக்கு அளித்து வருகிறார்கள். ஆனாலும் அந்த பழைய "Paranthe Waali Gali"-யில் உள்ள சிறிய கடைகளில் சாப்பிடும் ஆனந்தம் கிடைப்பதில்லை.

அடுத்த பதிவுகளில் சில வித பரோட்டா செய்வது எப்படி என எழுதலாம் [கல்யாணத்திற்கு முன் தில்லியில் தனியாக இருந்த போது ஐயாவின் நளபாகம் தான்!] என இருக்கிறேன். ருசியான ஆலு பரோட்டா பதிவில் சந்திக்கும் வரை.... மேலுள்ள படத்தைப் பார்த்துக்கொண்டு திருப்தி பட வேண்டியது தான்.

4 கருத்துகள்:

  1. oh my god annaaaaa... U ROCK... yenna delhi-ya anubhavichu yeluthirukinga.. athuvum antha paratha panratha pathi..wow.. mouth-watering.. btw when came there..u never took us to this gali.. diary-la note pannikaraen.. varuvenla delhi-ku appo pathukaraen..

    Also ur next blog on how to do paratha.. sollunga sollunga.. naanum kathukaraen.. kathukittu yen paiyanukku senju podaraen.. ;-) Anyways i know abt ur nalabagam..

    பதிலளிநீக்கு
  2. கோதுமை மாவில் பரோட்டாவா? முன்பு எப்போதோ கோயம்பத்தூர் பி.பி. ஹோட்டலில் சாப்பிட்ட நினைவு. ஏக்கம் இன்னும் மனதில். எப்படி செய்வது, சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

      என்னுடைய ஆரம்ப கால பதிவொன்றினை நீங்கள் படித்திருப்பது மகிழ்ச்சி தந்தது...

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....