வெள்ளி, 13 நவம்பர், 2009

ஆலு [உருளைக்கிழங்கு] பரோட்டாசென்ற பதிவான "Paranthe Waali Gali" பதிவில் சொன்னது போல இந்த பதிவில் ஆலு [உருளைக்கிழங்கு] பரோட்டா எப்படி செய்வது என்பதை பற்றி கொடுத்துள்ளேன். செய்து பார்த்து சாப்பிட்டு பின்னூட்டம் செய்ய வேண்டுகிறேன்.

தேவையான பொருள்கள்:

கோதுமை மாவு: மூன்று கப்.
உருளைக்கிழங்கு: ஆறு [வேகவைத்தது].
மிளகாப்பொடி: அரை ஸ்பூன்.
தனியாப்பொடி: ஒரு ஸ்பூன்.
மஞ்சள் பொடி: ஒரு சிட்டிகை.
கரம் மசாலா: அரை ஸ்பூன்.
உப்பு: தேவையான அளவு.
எண்ணெய்/நெய்: தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவினை தண்ணீர் விட்டு சப்பாத்திக்கு பிசைவது போல நன்றாக பிசைந்து அதில் நெய் அல்லது எண்ணெய் சிறிது விட்டு பிசைந்து வைத்துக்கொள்ளவும்.

வேக வைத்த உருளைக்கிழங்கை தோலினை உரித்த பின் நன்றாக மசித்து அதில் மிளகாய், தனியா, மஞ்சள், கரம் மசாலா பொடிகளையும் தேவையான அளவு உப்பையும் போட்டு நன்றாகக் கலந்து கொள்ளவும். இந்த கலவையை சிறு உருண்டைகளாக [ஒரு சிறிய எலுமிச்சை அளவு] உருட்டி வைத்துக்கொள்ளவும்.

பிசைந்து வைத்த கோதுமை மாவினையும் சப்பாத்திக்கு செய்வது போல உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும். ஒரு உருண்டை கோதுமை மாவினை எடுத்து குழவியால் பூரி அளவில் இடவும். அதன் மேல் ஒரு உருளைக்கிழங்கு உருண்டையை வைத்து அதனை சப்பாத்தி மாவினால் மூடவும் [கொழுக்கட்டையில் பூரணம் வைத்து மூடுவது போல]. பின்னர் அந்த மூடிய உருண்டையை சப்பாத்திக்கல்லில் வைத்து குழவியால் மெதுவாக இடவும். சிறிது பொறுமையாக செய்தால் உள்ளே உள்ள Stuffing வெளியே வராது. இல்லையெனில் ஒரு சப்பாத்தி இட்டு அதன் மேல் உருளைக்கிழங்கு கலவையை ஸ்ப்ரெட் செய்யவும். பிறகு மேலும் ஒரு சப்பாத்தி இட்டு அதன் ஸ்ப்ரெட் செய்த சப்பாத்தி மேல் போட்டு மெதுவாக குழவியால் இடவும்.

இப்படி செய்த பரோட்டாவை சூடான தோசைக்கல்லில் போட்டு நெய் அல்லது எண்ணெய் விட்டு வேக வைக்கவும். ஒரு பக்கம் நன்கு வெந்ததும் திருப்பிப்போட்டு மறுபடியும் நெய் அல்லது எண்ணெய் விடவும். பொன்னிறமாக வந்ததும் தோசைக்கல்லில் இருந்து எடுக்கவும். இந்த ஆலு பரோட்டாவுடன் ஊறுகாய் மற்றும் தயிர் வைத்து சுடச்சுட சாப்பிட, "ஆஹா என்ன ஆனந்தம்!"

9 கருத்துகள்:

 1. @@ சகோதரி மேனகா சாத்தியா
  @@ சகோதரி கீதா ஆச்சல்
  @@ சகோதரி தெய்வசுகந்தி மற்றும்
  @@ சகோதரி ப்ரியா

  அவர்களுக்கு, எனது வலைப்பூவினை வாசித்து கருத்துக்களை சொன்னதற்கு நன்றி.

  எனது பதிவிற்கு தமிலிஷ்-ல் வாக்களித்த எல்லா நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

  என்றென்றும் அன்புடன்
  வெங்கட், புது தில்லி

  பதிலளிநீக்கு
 2. பதில்கள்
  1. செஞ்சு பாருங்க...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   நீக்கு
 3. அட! உங்களுக்கு சமைக்க எல்லாம் தெரியுமா? பரவாயில்லை ஆதி மேடம் கொடுத்து வைத்தவர்கள் தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்....

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....