செவ்வாய், 17 நவம்பர், 2009

வாழ்க தமிழ்!

வேலை கிடைத்து நான் டில்லிக்கு வந்த போது இந்தியன் வங்கியில் பணி புரிந்த நண்பர் ஒருவருடன் தங்கி இருந்தேன். அந்த அறைக்கு நண்பரின் வங்கியில் பணி புரிந்த பல தோழர்கள் வந்து செல்வர். அதில் ஒருவர் சுரேஷ். நான் வருவதற்கு ஆறு வருடங்களுக்கு முன்பே தில்லி வந்தவர் என்றாலும் அவருக்கு ஹிந்தியில் பத்து-பதினைந்து வார்த்தைகளும் சில வாக்கியங்களுமே தெரியும். அதை வைத்தே சமாளித்து வந்தார்.

நாங்கள் தமிழர்களின் மெஸ் நிறைந்த கரோல் பாக் பகுதியில் இருந்ததால் சமைத்து சாப்பிட தேவைப்படவில்லை. தினமும் எல்லோரும் சேர்ந்து சென்று எதாவது ஒரு உணவகத்திலோ, "டாபா" என்று அழைக்கப்படும் தந்தூரி ஹோட்டலிலோ சாப்பிடுவது வழக்கம். அதற்க்கும் ஒரு மெனு வைத்திருந்தோம். காலையில் ராமானுஜம் மெஸ், மதியம்/இரவு உணவு "அமராவதி ரெஸ்டாரன்ட்" அல்லது "வைஷ்ணவ டாபா".

இப்படி ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கையில் திடீரென நண்பர் சுரேஷுக்கு ஓர் ஞானோதயம். " நாமே சமைத்தால் என்ன? " உடனே இந்த யோசனையை அமல் படுத்த கடைக்குச் சென்று தேவையான மளிகை பொருள்கள், பாத்திரங்கள், கேஸ் அடுப்பு என்று அதற்கு தேவையானவைகளை வாங்கி வந்து ஒரே வாரத்தில் சமைக்க ஆரம்பித்தோம். வேலைகளை எல்லோரும் பகிர்ந்து கொண்டு செய்ததால் சிரமம் தெரியாமல் இருந்தது.

நண்பர் சுரேஷுக்கு எங்களை விட ஹிந்தி அதிகம்[!] தெரியும் என்பதால் தேவையான பொருள்கள் மற்றும் காய்கறி வாங்கி வரும் வேலையை அவருக்கு கொடுத்தோம்.

ஒரு நாள் காய்கறி கடையில் அவர் வெண்டைக்காயை [ஹிந்தியில் "பிண்டி"] காண்பித்து கத்திரிக்காய் [ஹிந்தியில் "பேங்கன்"] என்ன விலை என்று ஹிந்தியில் கேட்டு இருக்கிறார். அதை கேட்டுக் கொண்டிருந்த பக்கத்துக் கடை காய்கறிகாரர் "சார் நானும் தமிழ் தான்! உங்களுக்கு என்ன காய்கறி வேணும்னாலும் என்கிட்டே வாங்குங்க!" என்று சொல்ல, சுரேஷும் அதன் பின்னர் அவரிடமே காய்கறிகள் வாங்கி வந்தார்.

வேறொரு நாள் அவருடன் நன்றாக ஹிந்தி பேச தெரிந்த மற்றொரு நண்பரும் காய்கறி வாங்க செல்ல நேரிட அப்போதுதான் எங்களுக்கு இவ்வளவு நாட்களாக நண்பர் சுரேஷ் எப்படி ஏமாந்து கொண்டு இருக்கிறார் என்பது தெரிய வந்தது. தமிழ் கறிகாய்காரரிடம் எல்லா கறிகாய்களும் பக்கத்து கடையை விட இரண்டு-மூன்று ரூபாய் அதிகம். ஒரு வேளை தமிழில் பேசுவதால் அதற்கும் சேர்த்து நண்பரிடம் அதிகமாக கறந்திருப்பாரோ?.

9 கருத்துகள்:

  1. தமிழனை தமிழனே ஏமாற்றுவதா? பாரதி இருந்திருந்தால் கொதித்து போய் கவிதை பாடியிருப்பார். அருமையான பதிவு.

    ரேகா ராகவன்.

    பதிலளிநீக்கு
  2. It seems like my story with a slight change. When I asked the rate of Onion (Pyaj)with Brinjal(Baingan)in hand,the vegetable vendor, Mr. Ashok (a North Indian)of Channa Market in Karol Bagh corrected the name of vegetable i.e. Venkayam & Kathirikai etc. etc. in Tamil. After that, I bacame a regular customer of him. Malarum Ninaivugalai thoondiyatharku Nantri.

    பதிலளிநீக்கு
  3. 'ரச'மான அனுபவம் தான்! -- கே.பி. ஜனா

    பதிலளிநீக்கு
  4. அட பாவி.. இப்படியா பண்ணுவான்.. :)

    பதிலளிநீக்கு
  5. ராமானுஜம் மெஸ்ஸில் சில மணி நேரம் தங்கியதன் மலரும் நினைவுகள் உங்கள் பதிவு படித்ததும் எனக்கும் இதே பிரச்னை மும்பையில் கல்யாணில் தங்கியபோது சொந்த அனுபவம் காரணமாக நன்றாக ரசிக்க முடிந்தது

    பதிலளிநீக்கு
  6. அட பாவி !! சோழியன் குடுமி சும்மா ஆடாதுங்கற பழமொழி ஞாபகம் வருது

    பதிலளிநீக்கு
  7. அருமையான பதிவு! அது சரி, ‘பிண்டி’ என்றால் வெண்டைக்காய் என்றால், ‘ராவல்பிண்டி’ என்றால் என்ன அர்த்தம்?

    பதிலளிநீக்கு
  8. Poor gentlemen! He has been losing unknowingly due to over confidence and enthusiasm."Yemaligal irukkumvarai, yematruvargal irukkathaan seyvaargal"

    Mandaveli Natarajan.

    பதிலளிநீக்கு
  9. இதைத்தான் சுண்டைக்காய் கா பணம் சுமைகூலி முக்காப்பணம் என்பார்களோ ?:)

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....