எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, July 5, 2010

ஒன்றல்ல இரண்டு பிறந்த நாள் பரிசுகள்.

என் பிறந்த நாளை முன்னிட்டு எனக்கு இரண்டு பரிசுகள் கிடைத்தது. இரண்டுமே மிக முக்கியமான நபர்களிடமிருந்து கிடைத்த பரிசுகள்.

முதலாவது எனது மகள் தானே ஒரு படம் வரைந்து அதை பரிசாக எனக்குக் கொடுத்தது. எனக்கு அவள் பூக்கள் கொடுப்பது போன்ற ஒரு படம்.

அதில் அவளாகவே மேலே தனது பெயரை எழுதிய பின் அம்மாவிடம் சொல்லி, “HAPPY BIRTHDAY APPA” என்று அவள் சொல்வது போலவும் நான் அதற்கு “THANK YOU CHELLAM” என்று பதிலளிப்பது போலவும் எழுதிவாங்கி எனக்குக் கொடுத்தாள்.
இன்னொரு பரிசும் இந்தப் பிறந்த நாளுக்கு எனக்குக் கிடைத்தது. அதுவும் சந்தோஷமளிக்கும் மிக முக்கியமான ஒரு பரிசு.

அது எனது தந்தையிடமிருந்து வந்த ஒரு காசோலை. மற்ற காசோலைகளைப் போல அது எத்தனை ரூபாய்க்கு என்பதை வைத்து அதன் மதிப்பை அளவிட முடியாது.

நாம் என்னதான் ஆயிரம் சம்பாதித்தாலும், நம் தந்தை நம்முடைய பிறந்த நாளுக்காகக் கொடுக்கும் காசு என்னும்போது அதன் மதிப்பு பல மடங்கு அதிகமாகிவிடுகிறது என்பதை நாம் மறுப்பதிற்கில்லை.

அந்த வகையில் எனது இந்த பிறந்த நாள், எனது மகள் எனக்குக் கொடுத்த ஓவிய பரிசாலும், என் தந்தை எனக்கு அனுப்பிய பரிசினாலும் மறக்கமுடியாத ஒன்றாக அமைந்துவிட்டது.

எனது பிறந்த நாளைப் பற்றி நானே சொல்லிக்கொள்ள ஆசைப்படாவிட்டாலும் [!] இவ்விரு பரிசுகளும் என்னை இந்த இடுகை எழுத வைத்து விட்டது.

எல்லாம் வல்ல அந்த இறைவன் இவ்விருவருக்கும் நீண்ட ஆயுளையும் சந்தோஷத்தையும் அளிக்கட்டும்.

24 comments:

 1. belated birthday wisehs venkat

  ReplyDelete
 2. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வெங்கட். அப்பா- மகள் இருவரிடமிருந்தும் அன்பை, பரிசை பெற்றுள்ளீர்கள். மறக்க முடியாத பிறந்த நாளாக இருக்கும்

  ReplyDelete
 3. தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள்

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

  அப்பாவுக்கு செல்ல மகளின் அழகான பரிசு... ஓவியம்! இதை விட பெரியதாக வேறு என்ன சந்தோஷம் வேண்டும்!

  ReplyDelete
 7. பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.. உங்கள் சந்தோஷங்கள் தொடரட்டும். உங்கள் எழுத்தால் எங்களுக்குக் கிடைக்கும் சந்தோஷமும் தொடரட்டும்.

  ReplyDelete
 8. வெங்கட், என்னிக்குப் பிறந்த நாள்... மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

  இரண்டு பரிசுகளும் நெகிழ்வானவை.

  ReplyDelete
 9. அன்புள்ள வெங்கட் அய்யா,

  மிகச்சிறந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். தாங்களும் வளர்ந்து, எங்களுக்கு, தங்கள் "ப்ளாக்" மூலம் சுவைபட நல்லறிவு ஊட்டும் திண்மையும் வளம்பெற வேண்டும் என இச்சந்தர்பத்தில் வாழ்த்துகிறேன் .
  தங்கள் வரைந்த ஒவியமே, தங்களுக்கு ஒரு ஓவியம் கொடுத்து ஒரு மாபெரும் காவியம் படைத்திட்டாள் என்னும்போது மனதுக்கு இதமாக இருந்தது. நமது வாழ்வுக்கு ஆதாரமாக விளங்கும் தந்தையிடமிருந்து பெற்ற பிறந்த நாள் பரிசின் மதிப்பினை அளவிட்டுக் கூற , ஆயிரம் நாவு படைத்த அந்த ஆதி சேஷனாலும் முடியாது என்பது ஒரு மறுக்க முடியாத உண்மை."

  மந்தவெளி நடராஜன்.

  ReplyDelete
 10. ஒன்றல்ல இரண்டு எதிர்பார்க்காத பிறந்தநாள் பரிசுகள் கிடைத்த உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்

  பா.ஜெய்ஷங்கர்

  ReplyDelete
 11. முகம் தெரியாத் உறவு இருப்பினும் வாழ்த்துகிறேன். நூறாண்டு காலம் நோய் நொடியின்றி வாழ்க. வாழ்த்துக்கள் மகிழ்வானவை. பரிசு பெறுமதியில் அல்ல தரும் உள்ளங்களை பொறுத்தது. பரிசளிக்கும் எண்ணம் கோடிபெறும். என்றும் குடும்பத்துடன் நல்வாழ்வு வாழ் என் வாழ்த்துக்கள். நட்புடன் நிலாமதி அக்கா

  ReplyDelete
 12. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...இரண்டு பரிசுகளுமே விலை மதிப்பிடமுடியாதது....வாழ்த்துகள்...

  ReplyDelete
 13. நீங்களும் ஜூலையா? வாழ்த்துக்கள்ங்க... முந்தின தலைமுறையும் அடுத்த தலைமுறையும் குடுத்த பரிசு அழகு தான் நிச்சியமாய்

  ReplyDelete
 14. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. அன்பின் வெங்கட்,
  பலநலனும் பெற்றுப்பல்லாண்டு வாழ உளமார வாழ்த்துகிறேன்.
  எம்.ஏ.சுசீலா

  ReplyDelete
 17. தங்களை பெற்றவரிடமிருந்து ஆசிர்வாதம், தங்களின் வாரிசிடமிருந்து வாழ்த்து அட்டை. நெகிழ்வாக இருக்கிறது. தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. வாங்க எல்.கே. உங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி. :)

  ReplyDelete
 19. உங்களுடைய பதிவுகளை இன்றுதான் முழுமையாகப் பார்த்தேன். உங்கள் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள். லேட்தான். இருந்தாலும் Better late than never என்ற வசனப்படி செய்திருக்கிறேன்.

  உங்கள் பதிவுகளை அவ்வப்போது படித்திருந்தாலும் முறையாக பின்னூட்டம் இடவில்லை என்பது இப்போதுதான் மனதில் உறைக்கிறது.

  நல்ல கருத்துக்களைப் பிவட்டிருக்கிறீர்கள். பாராட்டுகள்.

  ReplyDelete
 20. தாமதமா பார்த்தாலும் ஏனோ உங்களுக்கு இன்றும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்ல வைக்கிறது உங்களின் இடுகை தோழரே...


  - பிறந்த நாள் வாழ்த்துக்கள் -

  உங்களுக்கு கிடைத்த இரண்டுமே பொக்கிஷம்தான் - பத்திரம்.

  ReplyDelete
 21. வாங்க மோகன்குமார், நிஜமாவே மறக்கமுடியாத பிறந்த நாள்தான். நன்றி.

  வாங்க லாவண்யா [உயிரோடை], எட்வின், பத்மநாபன் [ஈஸ்வரன்] - வாழ்த்துக்களுக்கு நன்றி.

  வாங்க ப்ரியா, வரவுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  வாங்க ரிஷபன் சார். உங்களைப் போன்றவர்களின் வாழ்த்துக்கள் எப்போதும் எனக்குத் தேவை. நன்றி.

  வாங்க விக்னேஷ்வரி, 27.06 - அன்றே எனது பிறந்த நாள். வாழ்த்துக்களுக்கு நன்றி.

  வாங்க ராம்ஜி-யாஹூ, பிஷங்கர்ஜி - வாழ்த்துக்களுக்கு நன்றி.

  வாங்க நிலாமதி அக்கா, சகோதரியின் பிறந்த நாள் வாழ்த்து என்னை மகிழ்வித்தது.

  ReplyDelete
 22. வாங்க கீதா ஆச்சல் மேடம், உண்மைதான். வாழ்த்துக்களுக்கு நன்றி.

  வாங்க அப்பாவி தங்கமணி, நான் ஜூலை இல்ல, ஜூன். [27.06]. வாழ்த்துக்களுக்கு நன்றி.

  வாங்க கந்தசுவாமி சார், உங்களது இரு கருத்துரைகளும் என்னை மகிழ்வித்தன. உங்கள் போன்றவர்களின் வாழ்த்துக்கள் என் போன்றவர்களுக்கு நிச்சயம் தேவை.

  வாங்க வி.கே.என். - உங்களது கருத்துரை என்னை மிகவும் மகிழ்வித்தது. பொன்னான கருத்துகளை தெரிவித்ததற்கு நன்றி.

  வாங்க சுசீலா அம்மா, வாழ்த்துக்களுக்கு நன்றி.

  ReplyDelete
 23. வாங்க புதுகைத்தென்றல் மேடம். வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  வாங்க கமலேஷ், லேட்டா சொன்னாலும் பரவாயில்லை, உங்களது வாழ்த்துக்கள் என்னை மகிழ்வித்தது, அதுவே முக்கியம். நன்றி.

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....